வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸின் அரை லூசு பேட்டியும் சில எதிர்வினைகளும்

புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம் என்று கீற்றில் வெளியான "புதிய புத்தகம் பேசுது" இதழில் ஒரு செவ்வி வழங்கியிருக்கிறார் அ.மார்க்ஸ்.

பேட்டி முழுக்க தம் இலக்கிய சகா "ஷோபா சக்தி"யை போல முழுக்க பேசியிருப்பது புலிகளின் மீதான விமரசனங்கள் மட்டுமே, காங்கிரஸ்காரர்களும் புலி எதிர்ப்பாளர்களும், திடீரென ஞானோதயம் பெற்ற திருவாளர் மு.கருணாநிதி யும் அவரவர்கள் பாணியில் செய்யும் புலியெதிர்ப்பு என்பதன் ஊடக தமிழர் போராட்டங்களை சிறுமைபடுத்தும் வேலையை இங்கே அ.மார்க்ஸ் தம் அறிவுஜீவி பாணியில் செய்திருக்கிறார்.

வித்தியாசங்களின் அரசியல் பேசியவர் அ.மார்க்ஸ், இன்னமும் கேட்டால் அ.மார்க்ஸ் என்னை கவர்ந்த இடம் அவரின் "வித்தியாசங்களின் அரசியல்" பற்றிய எழுத்துகளுக்கு பின் தான்.... ஆனால் அந்த வித்தியாசங்களின் அரசியலை வக்கனையாக பேசிவிட்டு, தமிழ் - சிங்கள இன வித்தியாசம், தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையான முரண்பாடுகள், சிங்கள இனம் தமிழினத்தின் மீதான அழிப்பு என கடும் முரண்களோடு இருக்கும் தமிழ்-சிங்கள இன முரண்பாடும், கிழக்கு-வடக்கு மற்றும் மலையக தமிழர்களுக்கிடையேயான வேறுபாடுகள், யாழ்மேலாதிக்கம் பற்றி பேசுதல் என்பதும் ஒன்றா? நிச்சயமாக இல்லை, இந்த இரண்டு வித்தியாசங்களும், முரண்களும் வெவ்வேறான தாக்கங்கள், வெவ்வேறான சீரியஸ்னஸ் உள்ள பிரச்சினைகள்... ஆனால் வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸ் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையையும் தமிழர்களுக்கிடையேயான பிரதேச வாதப்பிரச்சினையையும் ஒன்று போல காட்ட முயலுகிறார். மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே? கிழக்கு-வடக்கு-மலையக தமிழர்களுக்கிடையேயான பிரச்சினைகள் சென்னை-மதுரை பிரச்சினை மாதிரியானது, வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்களே சிலர், அம்மாதிரியான பிரச்சினை(வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவும் கூடுதலாகவும் இருக்கலாம்) ஆனால் அ.மார்க்ஸ்க்கு தமிழ்-சிங்கள இன பிரச்சினையும் தமிழர்களுக்குள்ளான பிரச்சினையும் ஒன்றோ? மேலும் அரசியல் பிரச்சினைகளில் Priority Politics என்பதுவே மற்ற எதையும் விட முக்கியமானதில்லையா? Priority Politics படி இந்த இரண்டு பிரச்சினைகளில் எவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதும் அழிவை ஏற்படுத்துவதுமானது? எவை எல்லாவற்றிற்கும் முன்பாக தீர்க்கப்படவேண்டியது.. இல்லை இல்லை இரண்டும் சமமென சொல்வாரா அ.மார்க்ஸ்? இரண்டும் சமமென சொன்னால் பிறகென்ன வித்தியாச அரசியல்?

அதிலும் குறிப்பாக "வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை." என்று கூறும் அ.மார்க்ஸ் குறைந்த பட்சம் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக இல்லை, இருந்தும் ஏன் இன்னும் முஸ்லீம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேற்றப்பட வைக்கப்படவில்லை? அதன் பின்னுள்ள அரசியல் என்ன? என்ற கேள்வி எழவில்லையா இந்த அறிவுஜீவி அ.மார்க்ஸ்க்கு

அடுத்ததாக தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை புலிமுகவர்கள் என்று சிறுமை படுத்தி முத்திரை குத்துவது, அப்போ புலியை விமர்சிப்பவர்கள் எல்லாம் சிங்கள ராஜபக்சே முகவர்கள் என்று முத்திரை குத்தலாமா? அப்போ அ.மார்க்ஸ் சிங்கள முகவரா?

அடுத்ததாக கம்யூனிச இயக்கங்களுக்கு தன் ஜால்ராவை ஓங்கி ஒலிக்க தட்டும் போது "இரு தரப்பிலும் இடதுசாரிகள் தான் ஓரளவு நடுநிலையுடன் இனவெறிகளுக்கு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை அணுகி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் சொல்ல மறக்கக் கூடாது. சமீபத்தில் தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்துப் பேசிய இலங்கையில் உள்ள ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிரீதுங்க ஜெயசூர்யாவின் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே." என்று சொல்லும் அ.மார்க்ஸ்க்கு சிரீதுங்க ஜெயசூர்யாவை ஞாபகம் வைத்தும் சொல்லும் அ.மார்க்ஸ்க்கு இடதுசாரி ஜேவிபியின் தமிழர்களுக்கு எதிரான அகோர கொலைவெறி எதிர்ப்பை மறந்துவிட்டாரோ...

மறைமுக பார்ப்பன போலி கம்யூனிச இயக்கமான மகஇகவை குறிப்பிட்டு சொல்லும் போது "ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர்" என்று கூறுகிறார், அ.மார்க்ஸ் அண்ணே ம.க.இ.கவையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும் இணைக்கும் சங்கிலி "ரோ ரோ ரோ ரோட்டில் கட்டுண்டு கிடக்குதாமே? அது பற்றி எதுவும் உங்கள் நக்சல் தோழர்களிடம் விசாரிச்சி சொல்லுங்களேன்...

சந்தடி சாக்கில் தமிழ் தேசிய கருட்துடையவர்களை பார்ப்பன ஆதரவாளர்கள் போன்ற தொரு தோற்றம் தரவைக்கும் முயற்சி, "திராவிட" பார்ப்பனிய எதிர்ப்பையும் திராவிடத்தையும் மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டிய சூழல் உள்ளது, நன்றாக ஆய்ந்து பார்த்தால் தமிழனை கெடுத்தது பார்ப்பனர்கள் மட்டுமா அல்லது அடுத்தவனும்(அதாவது அடுத்துள்ளவனும் அதவாது பக்கத்தில் இருக்கும் தேசிய இனங்களும் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தெலுங்கர்களும், கன்னடர்களு, மலையாளிகளும்) சேர்ந்து கெடுத்தானா என்று ஆராயவேண்டியுள்ளது.


முற்போக்கு கருத்துகள், சிந்தனைகள் என்பவைகள் எல்லாம் இவர்களுக்கு இடத்துக்கு இடம் மாறும் போல....

ஈழம் இன்னும் எத்தனை பேரின் முகமூடியையும் முற்போக்கு வேசங்களையும் கலைக்கப்போகிறதோ தெரியலையே!!!

6 பின்னூட்டங்கள்:

said...

மாற்றுக்கருத்து வைத்திருப்பதாலேயே அ.மார்க்ஸை அரை லூசு என்று வர்ணிப்பதும் ஒரு வகை பாசிசம் என்பேன்.

இந்த பதிவின் உள்ளடக்கதை பற்றி பிறகு பேசலாம் என்றாலும் இந்த தலைப்பை கண்டிக்கிறேன்...

said...

//மாற்றுக்கருத்து வைத்திருப்பதாலேயே அ.மார்க்ஸை அரை லூசு என்று வர்ணிப்பதும் ஒரு வகை பாசிசம் என்பேன்.
//
மைடியர் ரவி, வேறெங்கேயாவது மாற்று கருத்துள்ளவர்களை இப்படி நான் சொல்லி பார்த்திருக்கிறாயா? பெரும்பாலும் இருக்காது... அ.மார்க்ஸ் க்கு மட்டும் ஏனிந்த ஸ்பெஷல் கவனிப்பு என்றால்... அ.மார்க்ஸ் என்றவுடன் நம் நினைவில் முன்னால் துருத்திக்கொண்டு வந்து நிற்பது அவர் ஒரு அறிவுஜீவி என்ற பிம்பம்... அந்த பிம்பத்தோடே தான் உள்ளே செல்வோம்... அந்த பிம்பத்தோடே தான் பார்ப்போம், படிப்போம், அப்படி செய்யும் போது எதுவும் லூசுத்தனமாக உளறியிருந்தாலும் கூட அதன் பின் ஏதோ ஒரு அறிவுஜீவி காரணம் இருக்கும் என்ற ஒரு நினைப்பும் வந்து தொலைந்து நம்மை கொஞ்சம் மூர்க்கமாக குட்டுவதையை சரியாக சிந்திப்பதையோ தடுக்கும்...

அவருடைய பேட்டி முழுக்க படித்து பார்த்தால் சங்கர் படம் மாதிரியே இருக்கும், சரியாத்தானேயா இருக்கு சரியாத்தானேயா சொல்லியிருக்காரு என்பது போல... ஆனால் நோண்ட நோண்ட தான் உள்ளே உள்ள குப்பையும் உள் அரசியல்களும் புரியும்...

அதனால் தான் முதலில் அ.மார்க்ஸை அரைலூசு என்றேன்... இது கூட பெரியார் புள்ளையாரை செருப்பால் அடித்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் மாதிரின்னு வச்சிக்குங்களேன்...

said...

அ.மார்க்சின் நேர்காணலில் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருககின்றன. ஆனால் தங்கள் பதிவு பேசும் நோக்கில் அல்ல.
முதலாவதாக 'வித்தியாசங்களின் அரசியல்" குறித்துப் பேசுவதாலேயே அ.மா தேசிய அடையாளங்களிலிருந்து முரண்பட்டு நிற்கும் (அ) விலக்கி வைக்கப்பட்டிருக்கும் மலையகத்தமிழர்கள், முஸ்லீம்கள், தலித்துகள் ஆகியவர்கள் குறித்துப் பேசுகிறார். மேலும் நீங்கள் குறிப்பிடும் priority politics என்பதுவும் ஒரு பெருங்கதையாடலே. ''இந்தியாவிற்குச் சுயராச்சியம் வந்தால் போதும், சாதிப்பிரச்சினைகளை அப்புறம் பார்க்கலாம்"" என்று காந்தியும் திலகரும் பேசியது கூட priority politicsதான். ஆனால் அதற்கு மாறாக முரணியவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்.

/மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே??

ஆக மொத்தம் "கற்பழிப்பு"தான் உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான அளவுகோலா? பார்ப்பனர்கள் யாரும் தலித் பெண்களைக் 'கற்பழிக்கவில்லை". எனவே பார்ப்பனர்கள் தலித்துகள் நண்பர்கள் என்று கூட ஒரு சூத்திரம் போடலாமே!

/கிழக்கு-வடக்கு-மலையக தமிழர்களுக்கிடையேயான பிரச்சினைகள் சென்னை-மதுரை பிரச்சினை மாதிரியானது, வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்களே சிலர், அம்மாதிரியான பிரச்சினை(வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவும் கூடுதலாகவும் இருக்கலாம்)?

((‍‍- அது என்ன கொஞ்சம் சீரியஸ் என்று விளக்க முடியுமா?

/மறைமுக பார்ப்பன போலி கம்யூனிச இயக்கமான மகஇகவை குறிப்பிட்டு சொல்லும் போது "ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர்" என்று கூறுகிறார், அ.மார்க்ஸ் அண்ணே ம.க.இ.கவையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும் இணைக்கும் சங்கிலி "ரோ ரோ ரோ ரோட்டில் கட்டுண்டு கிடக்குதாமே? அது பற்றி எதுவும் உங்கள் நக்சல் தோழர்களிடம் விசாரிச்சி சொல்லுங்களேன்...?

இதில் ம.க.இ.க மீதான உங்கள் காழ்ப்புணர்வு தெரிகிறதே தவிர வேறொன்றுமில்லை.


/"திராவிட" பார்ப்பனிய எதிர்ப்பையும் திராவிடத்தையும் மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டிய சூழல் உள்ளது, நன்றாக ஆய்ந்து பார்த்தால் தமிழனை கெடுத்தது பார்ப்பனர்கள் மட்டுமா அல்லது அடுத்தவனும்(அதாவது அடுத்துள்ளவனும் அதவாது பக்கத்தில் இருக்கும் தேசிய இனங்களும் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தெலுங்கர்களும், கன்னடர்களு, மலையாளிகளும்) சேர்ந்து கெடுத்தானா என்று ஆராயவேண்டியுள்ளது./

வாழ்க குணா!

said...

//அடுத்ததாக தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை புலிமுகவர்கள் என்று சிறுமை படுத்தி முத்திரை குத்துவது, அப்போ புலியை விமர்சிப்பவர்கள் எல்லாம் சிங்கள ராஜபக்சே முகவர்கள் என்று முத்திரை குத்தலாமா? அப்போ அ.மார்க்ஸ் சிங்கள முகவரா?//

தல, புலிகளை ஆதரிப்பவர்களைத் தான் புலி முகவர் என்று சொல்கிறார்கள். ராஜ பக்‌ஷேவை எதிர்ப்பவர்கள் எல்லாரையும் அல்ல. அதனால் ராஜ பக்‌ஷேவை ஆதரிப்பவர்களை வேண்டுமானால் தாராளமாக ராஜபக்‌ஷே முகவர்கள் என்று சொல்லலா. புலிகளை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அப்படி சொல்ல முடியாது. புலிப்பாசம் கண்ணை மறைக்குதோ? ;))

///மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே??

ஆக மொத்தம் "கற்பழிப்பு"தான் உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான அளவுகோலா? பார்ப்பனர்கள் யாரும் தலித் பெண்களைக் 'கற்பழிக்கவில்லை". எனவே பார்ப்பனர்கள் தலித்துகள் நண்பர்கள் என்று கூட ஒரு சூத்திரம் போடலாமே!//

சுகுணா அருமையா சொல்லி இருக்கார்.

said...

//அடுத்ததாக தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை புலிமுகவர்கள் என்று சிறுமை படுத்தி முத்திரை குத்துவது, அப்போ புலியை விமர்சிப்பவர்கள் எல்லாம் சிங்கள ராஜபக்சே முகவர்கள் என்று முத்திரை குத்தலாமா? அப்போ அ.மார்க்ஸ் சிங்கள முகவரா?//

பிராமணர்கள் என்றாலே தமிழ் / தமிழின விரோதிகள் என்று சில அரை லூசுகள் பிதற்றுவதில்லையா? அது போலத் தான் இதுவும்.

said...

ஐயையோ, நேற்றைக்கு போட்ட என்னோட பின்னூட்டம் எங்கே? வாழ்க கருத்து சொதந்திரம்.