புதுப்பேட்டை-பின் நவீனத்துவம்-சாரு

புதுப்பேட்டை பின் நவீனத்துவம் என்ற தலைப்பில் புதுப்பேட்டை படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன், கில்லியில் கூட கேட்டிருந்தார்கள் இந்தப் படத்துக்கும், பின் நவீனத்துவத்துக்கும் என்ன சம்மந்தம்? என்று சாருவின் புதுப்பேட்டை படத்தின் பதிவை படித்து பாருங்கள், படத்தில் சாரு ரசித்தவற்றில் பெரும்பாலானவற்றை நானும் ரசித்திருந்தாலும் அவர் எழுதிய அளவிற்கு முழுவதும் எழுதுவது அந்த நேரத்தில் முடியாததாலும், அப்போது முழுபடத்தையும் சொல்வதென்பதாலும் என்னால் முடியவில்லை, ஹீரோயிச போதையிலுள்ள தமிழ் திரைப்பட சூழலில் புதுப்பேட்டை போன்ற படங்கள் வருவது அபூர்வம்.

http://www.charuonline.com/kp216.html

5 பின்னூட்டங்கள்:

பூனைக்குட்டி said...

padiththEn kuzhali,

chaaruvaannu irunththathu... muthalil pinnar padamum paarththirunththathaal chaaru solvathai purinththu koLLa??? mudinththathu.

thanks

பாலசந்தர் கணேசன். said...

புதுப்பேட்டை படம் வழக்கத்துக்கு மாறான கதை என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. படத்தின் ஒரு சில காட்சிகள் மிக அழுத்தமானவை. முக்கியமாக தனுஷ் கத்தி எடுத்து காட்டி விட்டு, அவமானபட்டு திரும்பும் காட்சி. "பயப்படுறியா குமார்" என்று தனுஷின் ஆள் தனுஷிடம் கேட்பது. கதையின் மையமானவன் சுயநலவாதி, கொடுரமான மூர்க்க குணம் கொண்டவன் என்பது , கதாநாயகன் எந்த ரோல் செய்தாலும் , நல்ல குணங்களை, டெமான்ஸ்ட்ரேட் செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புக்கு மாறாக முடிகிறது. ஆனாலும் இந்த விஷயங்கள் மட்டுமே ஒரு திரைப்படத்தை ஒரு நல்ல படமாக்கி விடாது. புதுப்பேட்டை வித்தியாசமான, ப்ராக்டிகலான ஆனால் கோர்வையான சம்பங்கள் எதுவும் இல்லாத, வீரியம் இல்லாத படம். தனுஷ் போன்ற ஒல்லியான உடல் வாகு கொண்டவர்கள் தாதாவாக இருப்பார்களா என்று கேள்வி கேட்டவர்கள் நிஜவாழ்க்கையில் ரவுடிகளை பார்க்க வேண்டும்.

சீமாச்சு.. said...

அன்பின் குழலி,
இதனாலத்தான் நம்ம கும்பகோணம் கோவாலு உங்களை சாரு தம்பி மாதிரி இருக்கீங்க-னு அன்னிக்கே சொன்னாரு..

ஒரு நிரூபணம் மாதிரியும் இருக்கு பாருங்க!!
உஷா பதிவில் குழலியின் போட்டோ பார்த்து நம்ம
கும்பகோணம் கோவாலுவின் கமெண்ட்

//At 4:49 PM, கும்பகோணம் கோவாலு சொல்வது...
அந்த ஜீன்ஸ் போட்டவர பார்த்தா சாருவோட தம்பி மாதிரி இருக்காரே!
//

அன்புடன்,
சீமாச்சு

Boston Bala said...

Thirai - Pudhupettai : Indhiya Karuppargalin Thiraippadam | Kalachuvadu |

பாலசந்தர் கணேசன். said...

கலக்கலாத்தான் இருக்கார் குழலி.