பாவம் தமிழ்மண நிர்வாகிகள்

ஒரு குறிப்பிட்ட சாதியினரை மொத்தமாக வார்த்தைகளால் அவமதித்த விடாது கருப்பிவின் பதிவின் ஆட்சேபகரமான வார்த்தைகளுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

என்ன பாவம்யா செய்தாங்க தமிழ்மண நிர்வாகிகள், எதற்கெடுத்தாலும் அவர்கள் தலை உருள்கின்றது, விடாதுகருப்புவின் பதிவிற்கு மனவருத்தத்துடன் உஷா அவர்கள் எழுதிய பதிவில் பின்வருமாறு எழுதியுள்ளார் உஷா...

இதை கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுக் கேட்டு இப்பொழுதும் தமிழ் மண நிர்வாகிகள் பேசாமல் இருக்கலாம் அல்லது இதைக் கேட்டது தவறு என்று நினைத்து என் பதிவை தடை செய்யலாம் !

இதன் மூலம் தமிழ்மணத்தின் நிர்வாகிகள் பற்றி என்ன சொல்ல விழைகிறார்


ஏற்கனவே பலமுறை தமிழ்மண நிர்வாகிகள் விளக்கியும், ஆட்சேபகரமான பதிவுகள் இருந்தால் அதை தமிழ்மணத்திற்கு தெரிவிக்க ஒவ்வொரு பதிவின் அருகிலும் முக்கோன வடிவில் இது மாதிரி இருக்கும், அதில் அழுத்தி பதிவு தொடர்பான கருத்துகளை ஆட்சேபங்களை தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம், அதன் பின் நியாயமான அவகாசம் அளித்து அதன் பிறகு கருத்து சொல்லலாம், நம்மை போலவே தமிழ்மண நிர்வாகிகளுக்கும் வேலை, தூக்கம், சாப்பாடு, குடும்பம், பொழுதுபோக்கு என அத்தனையும் இருக்கும் அவர்கள் 24 மணி நேரம் யார் என்ன பதிகின்றனர்? என்ன பின்னூட்டமிடுகின்றனர் என பார்க்க இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து தமிழ்மணத்தை குழப்பாதீர்கள், உஷா அவர் பதிவில் முதல் இருபத்திகளில் சொன்னது போல் நாம் எல்லோரும் தின்பது தமிழ்மண நிர்வாகிகளின் நேரத்தையும் உழைப்பையும்.

தமிழ்மணம் தொடர்பாக உஷா பதிவில் இட்ட பின்னூட்டங்கள்

//இதை கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுக் கேட்டு இப்பொழுதும் தமிழ் மண நிர்வாகிகள் பேசாமல் இருக்கலாம் அல்லது இதைக் கேட்டது தவறு என்று நினைத்து என் பதிவை தடை செய்யலாம்//

கடைசியாக ஒன்றே ஒன்று, நீங்கள் எழுதிய இந்த வரிகளை வைத்து, சந்தடி சாக்கில் தமிழ்மணம் மீது நீங்கள் சேறு வீசுவதாக கருத எனக்கு இடமுள்ளது எனொபதை

சே மனசு கேட்க மாட்டேங்குதே இருந்தாலும் இன்னொன்று, பதிவைப்பற்றி தமிழ்மண நிர்வாகத்திடம் கருத்து சொல்ல பதிவின் பக்கத்திலேயே ஒரு முக்கோணவடிவில் இருக்கின்றதே, அதை பயன்படுத்தி தமிழ்மண நிர்வாகிகளிடம் கூறினீர்களா? (அப்படி கூறியதாக உங்கள் பதிவில் எதுவும் இல்லை) அதை செய்து அதன் பிறகு ஒத்துக்கொள்ளத்தகுந்த அவகாசம் அளித்து பின் தமிழ்மணத்தை சந்திக்கு இழுத்திருக்கலாம்.... இத்தோட நான் முடிச்சிக்கிறேன், போற போக்கில் மூஞ்சில் துப்புபவர்கள் தாராளமாக துப்பலாம், அதான் ஏற்கனவே கெளம்பிட்டாங்களேங்குறிங்களா அதும் சரிதான்.

மற்ற என் பின்னூட்டங்களை இந்த பின்னூட்ட சேமிப்பு பதிவில் காணலாம்

29 பின்னூட்டங்கள்:

said...

குழலி ஐயா,

தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி.

இந்த முக்கோண எச்சரிக்கை / வார்னிங் லிங்க் முதலில் பதிவு இடப்படும்போது மட்டும் தமிழ்மணம் முகப்பில் தெரிகிறது.

பின்னூட்டங்களால் மட்டுரைக்கப்படும் போது அது தெரிவதில்லையே!

பிறகு அந்த பதிவில் சென்றாலும், இந்த முக்கோணத்தை காணோம்.

முதலில் பதிவு இடப்படும் போது மட்டும் அது இருந்தால் அதிகம் பிரயோஜனம் இல்லை. சில நிமிடங்களில் அது காணாமல் போகும்.

ஒவ்வொரு முறையும் எல்லா பதிவின் முதல் தடவை பதிந்த லிங்கை தேடி முக்கோணத்தை நோண்டி எடுப்பது என்பது சாத்தியமாவது போல தெரியவில்லையே?

இதை எப்படி முக்கோணத்தை எடுத்து பதிவது.

தயவு செய்து சொல்லுங்கள்.

தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

நன்றி

நன்றி

said...

ஐய்யா,

நான் துப்ப வரலை சாமி...ச்சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்...

உஷா என்னைக்கூட தப்பா நெனச்சாங்க..நான் விளக்கியவுடன் பெருந்தன்மையாக மன்னிப்பு எல்லாம் கேட்டார்கள்.ஆகவே அவர் நோக்கம் சரிதான்...ஆனால் கொஞ்சம் பொறுமையாக விசாரித்து சில விஷங்கள் எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.

said...

//பின்னூட்டங்களால் மட்டுரைக்கப்படும் போது அது தெரிவதில்லையே!

பிறகு அந்த பதிவில் சென்றாலும், இந்த முக்கோணத்தை காணோம்.
//

ஜயராமன்,
இடுகைகள்னு ஒரு டாப்(tab) இருக்கு பாருங்க.. அதைப் பிடிச்சிப்போய்ப் பார்த்தீங்கன்னா, இந்த முக்கோணம் தெரியுது.. என்னிக்கு வேணாலும் இதை நீங்க தட்டலாம், உங்க எதிர்ப்பைப் பதிவு பண்ணலாம்.

said...

முக்கோணம் பிரச்சனையா ? :)

said...

//முக்கோணம் பிரச்சனையா ? :)
//
கல்யாணம் ஆனவங்க வந்து பதில் சொல்லுங்கப்பா :-))

said...

//முத்துகுமரன் said...
கல்யாணம் ஆனவங்க வந்து பதில் சொல்லுங்கப்பா :-)) //
முத்துகுமரன் ... அது தலைகீழ் சிகப்பு முக்கோணம். இந்த முக்கோணம் மறுமொழி இடுகையில் வரவில்லை/தெரியவில்லை என்பது தான் பிரச்சனை.
அப்படியே நீங்கள் அந்த முக்கோணம் பற்றிக் கேட்டாலும் ... சாரி கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும் தான் :))))

said...

குழலி ஐயா,

விளக்கத்துக்கு நன்றி. இது ஒன்றும் சுலபமாக தெரியவில்லை. இதைப்பற்றி விவரம் தெரிந்தவர்களும், அதை செயல்படுத்துவர்களும் ரொம்ப குறைச்சல் ஏன் என்று இப்போது புரிகிறது.

விளக்கியதற்கு நன்றி

said...

My comments:

http://poar-parai.blogspot.com/2006/07/blog-post.html

said...

தனது அனுவங்கள் தொடரில் காசி எழுதுவதை படித்த பிறகு தான் அவரின் சிக்கல்கள் தெரிய வருகிறது. இந்த மாதிரி ஆள் ஆளுக்கு போட்டு வதைக்கிறதால தான் காசி ஓடி போகிறாரோ?
தமிழ்மணம் என்பது திரட்டி மட்டுமே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்று பாவம் கத்தறார் புரியாம தமிழ்மணம் வலைப்பூவை கட்டுப்படுத்தனும் என்று சொல்வது தவறு. அவரின் அனுபங்கள் பதிவை படிங்கப்பா...

வலைப்பூவோட வசதியே நாம் நினைத்ததை ( சரியோ தவறோ) விருப்பம் போல் எழுதலாம் என்பதே இங்கு அது நடக்கிறது.

said...

குழலி,
இது மட்டுமல்ல!ஏதோ அத்தனை பதிவர்களும் தனிப்பட்ட முறையில் தங்கள் விவரங்களை கொடுத்து விட்டு அன்னானிமஸ் பின்னூட்ட முறையை எடுத்து விட்டால் பிரச்சனைகள் முடிந்து விடும் என்பது போலவும் ,பதிவுகளில் எந்தெந்த பதிவர்கள் பின்னூட்டமிட முடியும் என்பதை தமிழ்மணம் கட்டுப்படுத்தலாம் என்பது போலவும் எழுதியிருந்தார் .அது பற்றி நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் .ஆனால் அவர் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை .விவாதம் வேறெங்கோ சென்றது .நானும் என்னுடைய பின்னூட்டத்தை அழித்து விட்டேன்.

இவ்வளவு நாட்கள் பயன்பாட்டுக்குப் பின்னரும் பலருக்கு தமிழ்மணம் வலைப்பதிவை நேரடியாக கட்டுப்படுத்த முடியாது என்பது கூட தெரியவில்லை என்றால் என்ன செய்வது .தமிழ்மண நிர்வாகிகள் விளக்கம் சொல்லியே ஓஞ்சு போக வேண்டியது தான்.

said...

அபாரம், அற்புதம், சூப்பர்..

விடாதீங்க புடிங்க கற்பை.. ச்சே கறுப்புவை... கட்டுங்க மரத்தில்.. ஆளாளுக்கு தர்ம அடி கொடுப்போம்.

ஊருக்கு இளிச்சவாயன் புள்ளையார் கோயில் ஆண்டி!!!

said...

அதர் ஆப்ஷனை மட்டும் எடுக்க முடியாதபடிக்கு அதை அனானி ஆப்ஷனுடன் சேர்த்து வைத்தது பிளாக்கரின் தவறு. மற்றப்படி அனானி தெரிவில் பாதகம் இல்லை, ஏனெனில் அது அனானி என்பது தெரிந்து விடுகிறது. ஆனால் அதர் ஆப்ஷன் தேவையில்லாத அக்யூரசியை கொடுக்கிறது என்பதை பற்றி நான் ஒரு தனிப்பதிவே போட்டுள்ளேன். ஆகவேதான் அதை எடுத்தாக வேண்டியுள்ளது. கூடவே அனானி ஆப்ஷன் போவது தவிர்க்க முடியாததே.

உதாரணத்துக்கு குழலி அவரகளின் இப்பதிவிலேயே அது இருக்கிறது. இருந்தாலும் அவருக்கு போலி பதிவுகளை கண்டறியும் திறமையும் உள்ளது, பயன்படுத்தவும் செய்கிறார் என்பது வெள்ளிடை மலை. ஆகவே அவரைப் போன்ற விஷயம் தெரிந்தவர்கள் வைத்துக் கொள்வதால் ஒன்றும் பாதகம் இல்லைதான்.

ஆனால் எலிக்குட்டியை பற்றிய அறிவு கூட இல்லாது, அதர் ஆப்ஷனில் போட்டோ வராது என்ற அறிவு கூட இல்லாது செயல்படுபவர்கள் (உதாரணம் செந்தழல் ரவி அவர்கள்) பேசாமல் நான் கூறிய ஆலோசனைபடி நடந்து கொண்டால் பிரச்சினையை தவிர்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

///இருந்தாலும் அவருக்கு போலி பதிவுகளை கண்டறியும் திறமையும் உள்ளது, பயன்படுத்தவும் செய்கிறார் என்பது வெள்ளிடை மலை. ஆகவே அவரைப் போன்ற விஷயம் தெரிந்தவர்கள் வைத்துக் கொள்வதால் ஒன்றும் பாதகம் இல்லைதான்.

ஆனால் எலிக்குட்டியை பற்றிய அறிவு கூட இல்லாது, அதர் ஆப்ஷனில் போட்டோ வராது என்ற அறிவு கூட இல்லாது செயல்படுபவர்கள் (உதாரணம் செந்தழல் ரவி அவர்கள்) பேசாமல் நான் கூறிய ஆலோசனைபடி நடந்து கொண்டால் பிரச்சினையை தவிர்க்கலாம்./////

மன்னிக்கவும் டோண்டுராகவன் சார் அவர்களே!

சில நாட்களுக்கு முன் நீங்கள் அனுமதித்த முனா கூனா என்பவரின் பின்னூட்டம் எனக்கு உங்கள் மேல் சந்தேகம் ஏற்படுத்தி இருக்கிறது..... அந்த பின்னூட்டத்தை இட்டவரின் வலைப்பூ poliyan.blogspot.com

எலிக்குட்டி, புலிக்குட்டி பற்றியெல்லாம் ரொம்பவும் தெரிந்த, அதன் அவசியத்தை எல்லோருக்கும் எடுத்துரைக்கும் நீங்களே அப்படி ஒரு கேவலமான வலைப்பூ வைத்திருப்பரின் பின்னூட்டத்தை எப்படி வெளியிட்டீர்கள்? தெரிந்தே வெளியிட்டீர்களா? இல்லை செந்தழல் ரவி மாதிரி அறிவு கூட இல்லாமல் செயல்பட்டு வெளியிட்டீர்களா?

விளக்கம் ப்ளீஸ்....

(செந்தழல் ரவி கோபித்துக் கொள்ள வேண்டாம்.... டோண்டு சார் பயன்படுத்திய வார்த்தையையே பயன்படுத்தி இருக்கிறேன்.... உங்களைப் பற்றிய என் மதிப்பீடு அல்ல அது)

said...

லக்கிலுக்கு அவர்களுடையது நியாயமான கேள்வி.

பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டையடிப்பவர்கள்.

said...

என் பெயரில் போலி பதிவு என ராபின்ஹீட் பதிவிட்டுள்ளார், அந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கே
------------------
தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்மடல் அனுப்புங்கள், அல்லது தமிழ்மண குழுமத்தில் முறையிடுங்கள்.... தமிழ்மணம் தானியங்கி முறையில் இயங்குவது... வெறும் பதிவு மட்டும் போதாது என நினைக்கின்றேன்

said...

//சில நாட்களுக்கு முன் நீங்கள் அனுமதித்த முனா கூனா என்பவரின் பின்னூட்டம் எனக்கு உங்கள் மேல் சந்தேகம் ஏற்படுத்தி இருக்கிறது..... அந்த பின்னூட்டத்தை இட்டவரின் வலைப்பூ poliyan.blogspot.com
//

இதில் மூனாகூனா என்பது வேறொரு பதிவரின் பெயரைக் குறிக்கிறதா? அப்படிக் குறித்தால் அதை வெளியிட்டது தவறுதான். ஆனால் அது வேறொரு வலைப்பதிவரைக் குறிக்காத பட்சத்தில் ஒரு பிரச்சினையுமில்லையே? (அவரது வலைப்பதிவு ஆபாசமாக இருந்தால், அது வேறு பிரச்சினை. போலியை இனங்காண்பதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. மேலும் அப்பின்னூட்டத்தை வெளியிடுவது தமிழ்மணத்திரட்டியின் எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இது அடங்காது)
நானும் அனாமதேயங்களுக்குரிய வசதிகளை விட்டு வைத்திருக்கிறேன். போலிகளை இனங்கண்டு தடுத்து வருகிறேன்.

said...

தமிழ்மணம் பற்றி 20 அக்டோபர் 2005 நான் எழுதியது இது. பெட்டிக்கடை

புதியவர்களுக்கு ஒரு புரிதலைத் தரக்கூடும் என்று நினைப்பதால் இந்த விளம்பரம்.

said...

நம்ம தலை உருளுது போல இருக்கு.....டோண்டு அவர்களே..என்னை அறிவில்லாதவன் என்று சொன்னதை நான் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..உங்களை பற்றி தெரியும்..

ஆனால் அந்த பின்னூட்டம் வெளியிடவேண்டும் என்று விரும்பி வெளியிடவில்லை...

நீங்கள் நம்புவது அவர் அந்த பின்னூட்டம் போடவில்லை என்பது...ஆனால் நான் நம்புவது அவர்தான் போட்டார் என்பது...இதில் வித்தியாசம் நமக்கு இடையில் உள்ள நம்பிக்கைகள்தான்...

அதர் ஆப்ஷன் உபயோகம் செய்து போலி பின்னூட்டம் இடலாம் என்ற அறிவு எனக்கு உள்ளது என்றே நினைக்கிறேன்...

நான் இப்போது ஈடுபட்டிருக்கும் முயற்ச்சி வெற்றிபெற்றால் - அது முடிந்தவுடன் சொல்கிறேனே...பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்...

said...

/////இதில் மூனாகூனா என்பது வேறொரு பதிவரின் பெயரைக் குறிக்கிறதா? அப்படிக் குறித்தால் அதை வெளியிட்டது தவறுதான். ஆனால் அது வேறொரு வலைப்பதிவரைக் குறிக்காத பட்சத்தில் ஒரு பிரச்சினையுமில்லையே?/////

வசந்தன் பிரச்சினை தெரியாமல் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.... மூனாகூனா அவர்களின் Poliyan.blogspot.com போய் பார்த்தீர்களா? இல்லையா? அது ஒரு ஆபாச வலைப்பூத்தளம்....

இதுபோன்ற தளங்களை எலிக்குட்டி/புலிக்குட்டி துணை கொண்டு எதிர்த்துவரும் டோண்டு சார் அவர்களே அதுபோன்ற ஒரு ஆபாச மனிதரின் பின்னூட்டத்தை அனுமதிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?

சரி.... அப்படித்தான் அனுமதிப்போம் என்று அவர் சொன்னால்.... நான், செந்தழல் ரவி போன்றோர் சிலநேரங்களில் ஆபாசம் இல்லை என்ற அடிப்படையில் சிலரின் பின்னூட்டங்களை அனுமதிப்பதை எப்படி கேள்வி கேட்க முடியும்?

said...

என்னை தியாகி ஆக்கிய வசந்தன் இதற்க்கு என்ன மழுப்பப்போகிறாரோ தெரியவில்லை...

said...

லக்கிலுக்,
பிரச்சினை புரியாமலிருப்பது நானில்லை.
பிரச்சினை ஆபாசப் பதிவைப் பற்றியதில்லை.
என் பின்னூட்டத்திலேயே ஆபாசப் பதிவு பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
டோண்டு சொல்ல வந்தது அதையில்லை. இன்னொருவரின் பெயரில் பின்னூட்டமிடுவதைப் பற்றி. அதைத்தான் செயற்படுத்துவதில் பலர் விடுத் தவறைச் சொல்கிறார். Other தெரிவு மூலம் இன்னொருவரின் பெயரில் போலிகள் பின்னூட்டமிட முடியுமென்பதையும், அப்படியான போலிகளைக் கண்டறியும் முறைகளையும் (எலிக்குட்டி பிடித்துப் பார்ப்பது) தெரியாமல் சிலர் விடும் தவறுகளைக் குறித்தே டோண்டுவின் ஆதங்கம். மூனாகூனா வேறொருவரின் பெயரில் எழுதவில்லையென்பதால் அப்பின்னூட்டத்தை வெளியிட்டதில் எந்தத் தவறுமில்லை. (அவர் ஆபாச வலைப்பதிவராய் இருந்தபோதும்).

பின்னூட்டம் வாதத்துடன் சம்பந்தமுள்ளதாயும் போலியற்றதாகவும் இருக்கும்பட்சத்தில் அதை வெளியிடுவதில் எந்த்த தவறுமில்லை. எந்தக் களவிதியையும் மீறுவதுவமன்று.
அதை வெளியிடுவதா இல்லையா என்பது சம்பந்தப்பட்ட வலைப்பதிவர் எடுக்கும் முடிவே.

said...

வசந்தன் அவர்களே!

இதுபோல ஏடாகூடமாகப் பேசினால் என்னத்தைச் சொல்வது?

நம்முடைய நோக்கம் ஆபாச வலைப்பூக்கள் இருக்கக்கூடாது என்பது தானே? அது போலி முகவரியில் இருந்தால் என்ன ஒரிஜினல் முகவரியில் இருந்தால் என்ன?

உங்கள் வழிக்கே வருகிறேன்.... வேறொருவரின் பெயரில் ஒரு போலி நம் பதிவில் நாகரிகமான கமெண்ட் இட்டார் என்றால் அதை ஏன் தடுக்க வேண்டும்.... அந்த கமெண்ட் நாகரிகமாக இருக்கும் பட்சத்தில் மெனக்கெட்டு எலிக்குட்டி/புலிக்குட்டி சோதனை எல்லாம் ஏன் செய்ய வேண்டும்? அந்த கமெண்டை வெளியிடுவதன் மூலம் அவரது ஆபாச பிளாக்குக்கு நாம் விளம்பரம் அளிக்கிறோம் என்பது தானே அடிப்படை பிரச்சினை?

நான் விளக்கம் கேட்டது டோண்டு சாரிடம்.... சம்பந்தம் இல்லாமல் நீங்கள் ஏன் விளக்கம் கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை....

அதாவது உங்கள் பெயரில் ஆபாச வலைப்பதிவு ஏற்படுத்தாமல் ஒரிஜினல் பெயரிலேயே எவனாவது ஆபாசமாக எழுதினால் ஏற்றுக் கொள்ளலாம் என்கிறீர்கள்.... சரியா?

said...

லக்கி லுக். நான் எழுதும் தமிழ் உங்களுக்குப் புரிகிறதா இல்லையா? உங்களுக்கு மட்டுமில்லை செந்தழல் ரவியையும் தான் கேட்கிறேன்.
//அதாவது உங்கள் பெயரில் ஆபாச வலைப்பதிவு ஏற்படுத்தாமல் ஒரிஜினல் பெயரிலேயே எவனாவது ஆபாசமாக எழுதினால் ஏற்றுக் கொள்ளலாம் என்கிறீர்கள்.... சரியா?//
எங்காவது ஆபாசப் பின்னூட்டத்தை அனுமதிக்கும்படி கூறியிருக்கிறேனா? மற்றவன் ஆபாசமாக வலைப்பூ வைத்திருப்பதை ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது யாரின் கையில் இருக்கிறது? நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதன் அர்த்தம் என்ன? ஏற்றுக்கொள்ளவில்லை என்பதன் அர்த்தம் என்ன?
//உங்கள் வழிக்கே வருகிறேன்.... வேறொருவரின் பெயரில் ஒரு போலி நம் பதிவில் நாகரிகமான கமெண்ட் இட்டார் என்றால் அதை ஏன் தடுக்க வேண்டும்.... அந்த கமெண்ட் நாகரிகமாக இருக்கும் பட்சத்தில் மெனக்கெட்டு எலிக்குட்டி/புலிக்குட்டி சோதனை எல்லாம் ஏன் செய்ய வேண்டும்? அந்த கமெண்டை வெளியிடுவதன் மூலம் அவரது ஆபாச பிளாக்குக்கு நாம் விளம்பரம் அளிக்கிறோம் என்பது தானே அடிப்படை பிரச்சினை?//

இன்னும் பிரச்சினை தெரியாமல்தான் இருக்கிறீர்கள். ஒருவரின் பெயரில் அபாசப்பின்னூட்டம் இடுவது மட்டுத்தான் போலிப் பிரச்சினையில்லை. வலைப்பதிவுகளில் போலிப்பிரச்சினை தொடங்கியது ஆபாசத்தை வைத்து அல்ல. ஆபாசப்பின்னூட்டப் பிரச்சினை சமீபத்தில்தான் வந்தது. டோண்டுவும் நானும் கதைப்பது மற்றவரின் பெயரில் போலியாகப் பின்னூட்டமிடுவதைப் பற்றி. அப்படிப் பின்னூட்டமிடுவது அபாசமாக இல்லாவிட்டாலும் பிழைதானே? வலைப்பதிவுகளில் போலிப்பின்னூட்டப் பிரச்சினை வந்தபோது ஆபாசப்பிரச்சினை வரவில்லை. முதலில் றோசா வசந் உட்பட போலிப்பின்னூட்டங்களால் பலர் பாதிக்கப்பட்டனர். ஆனால் ஆபாசப்பின்னூட்டங்களால் அல்ல. இப்போதும் ஆபாசமில்லாமல் போலிப்பின்னூட்டப் பிரச்சினை நிறைய இருக்கிறதல்லவா? ஏன் ஆபாசத்தை மட்டும் போலிப்பிரச்சினையில் கொண்டுவந்து நுழைக்கிறீர்கள்? அது பிறகு வந்த பிரச்சினை.
ஒருவரின் பெயரில் இன்னொருவர் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டுச் செல்ல குறிப்பிட்ட வலைப்பதிவாளரே அந்தக் கருத்தை எதிர்கொள்ள வேண்டி வந்தது.
//நம்முடைய நோக்கம் ஆபாச வலைப்பூக்கள் இருக்கக்கூடாது என்பது தானே? அது போலி முகவரியில் இருந்தால் என்ன ஒரிஜினல் முகவரியில் இருந்தால் என்ன?//
ஐயையோ!!!
யாரையா சொன்னது அப்படி? எனக்கு அந்த நோக்கமில்லை. அப்படி யாரும் புறப்படவும் முடியாது. உங்கள் அந்த நோக்கில் நான் பங்காளியல்லன். அதுசரி எப்படி ஆபாச வலைப்பூக்களை நிறுத்துவீர்கள்? (முதலில் அவற்றை நிறுத்த வேண்டுமென்பதே சர்ச்சைக்குரிய விசயமாக இருக்கும்.)
//நான் விளக்கம் கேட்டது டோண்டு சாரிடம்.... சம்பந்தம் இல்லாமல் நீங்கள் ஏன் விளக்கம் கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை....//
இதற்குத் தெளிவாக முந்தைய பின்னூட்டத்தில் பதிலளித்துள்ளேன். இதற்கு மேல் முடியாது.
//அவரது ஆபாச பிளாக்குக்கு நாம் விளம்பரம் அளிக்கிறோம் என்பது தானே அடிப்படை பிரச்சினை?//
எப்படி?
பின்னூட்டத்திலுள்ள அவரது பெயரைச் சொடுக்கி அவரது வலைப்பதிவுக்குப் போய் அங்குள்ளவற்றை வாசிக்கப் போகிறார்கள். அப்படித்தானே?
___________________________________
மீண்டும் அடிப்படைப் பிரச்சினைக்கு வருகிறேன்.
எலிக்குட்டி சொடுக்கி ஒருவர் போலியா இல்லையா என்பதை அறியும் ஆற்றல் இல்லாத தன்மையை விமர்சிக்க வந்த இடத்தில், போலியில்லாத ஒருவரின் பின்னூட்டத்தை வெளியிட்டதை எதிர்க்கேள்வி கேட்டது சரியன்று என்பதையே நான் சொல்ல வந்தது. ஆபாச வலைப்பதிவு வைத்திருக்கும் ஒருவரின் நியாயமான பின்னூட்டத்தை வெளியிடலாமா இல்லையா என்பதைத் தனியாக வேண்டுமானால் விவாதிக்கலாம்.

சரி, ஆபாசமான வலைப்பதிவை வைத்திருக்கும் ஒருவரின் ஆபாசமற்ற பின்னூட்டத்தை வெளியிட்டது தவறென்றே வைத்துக்கொள்வோம். போலியைப் பரிசோதிக்கும் முறையால் எப்படி அதை உணரமுடியும்? இந்த இடத்தில் டோண்டுவின் தவறென்ன?

இன்னும் தெளிவாகச் சொன்னால்,
"போலியற்ற ஒருவரின் பின்னூட்டத்தை வெளியிட்ட உன்னால் போலியை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்" என்பது தானே நீங்கள் கேட்டது? இது எவ்விதத்தில் பொருத்தம்?


மொட்டந்தலை - முழங்கால் ஞாபகம் வருகிறது.

said...

மேலும் இது தனியே டோண்டுவுடையதோ அல்லது வசந்தனுடையதோ பிரச்சினை மட்டுமன்று. இங்கே சத்தம் போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோரினதும் தான். டோண்டுவும் வசந்தனும் ஒரே நபரல்லர். (அப்படியும் அடுத்த பிரச்சினை எழும்பக்கூடும்)
நாளைக்கு நாங்களும் இப்படியொரு பின்னூட்டத்தை வெளியிடும்போது கூக்குரல்கள் வரும் போலத்தான் கிடக்கிறது.

சரி. ஆபாச வலைப்பதிவு வைத்திருக்கும் ஒருவரின் பின்னூட்டத்தை வெளியிடக்கூடாதென்று (விவாதத்தோடு சம்பந்தப்பட்டதாயினும்) நினைக்கும் வலைப்பதிவர்களுக்கு இந்த இடத்தில் எதைச் சொல்ல நினைக்கிறீர்கள்?
வலைப்பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்ட இன்றைய நிலையில் ஒவ்வொருவருக்கும் சில பெயர்கள் இதுவரை அறியாதனவாகவே உள்ளன. வரும் எல்லாப் பின்னூட்டங்களுக்கும் அவர்களின் profile சென்று அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று முழுப்பதிவுகளும் படித்தபின்பா அவரது பின்னூட்டத்தை வெளியிடுவதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும்?
அந்த வழிமுறையையா பரிந்துரைக்கிறீர்கள்?

டோண்டு அந்த இடத்தில் செய்திருக்க வேண்டியதும், அவரது வலைப்பதிவுக்குப் போய் அவர் என்ன எழுதுகிறார் என்று பதிவுகள் படித்து உறுதிப்படுத்தியபின் பின்னூட்டத்தை வெளியிட்டிருக்க வேண்டுமென்பதா?

said...

Luckylook,

As for Moona koona, it was careless of me to have allowed that comment and it was removed without any trace including my reply, the moment my attention was drwn to it.

As I already mentioned in Selvaraj's blog post about such comments. And I apologized without any reservation. By the way it was in that post only you raised that objection about my having allowed the comment.

As Vasanthan pointed out, is there any other moonaa koonaa?

Regards,
Dondu N.Raghavan

said...

//ராபின்ஹீட்//
ராபின்ஹீட் இல்லீங்க. ராபின்ஹூட்.

நான் எப்பவுமே சூடாவது இல்லீங்க.

ஆனா தமிழ்மணம் ஏதத்துக்கும் சூடாகிப்போய் கிடக்கு.

ஒரு வாளி பச்சைத் தண்ணி எடுத்து வச்சுட்டு தமிழ்மணத்தை ஒரு ரவுண்டு வந்தா தண்ணி சுடுதண்ணியா மாறிடுது.
கரண்டு செலவு இல்லாம சுடுதண்ணியில் குளிச்சிடலாம் போல.

said...

/////As for Moona koona, it was careless of me to have allowed that comment and it was removed without any trace including my reply, the moment my attention was drwn to it.

As I already mentioned in Selvaraj's blog post about such comments. And I apologized without any reservation./////

நன்றி டோண்டு சார்....

உங்கள் விளக்கம் எனக்கு முழுத் திருப்தி.... பிரச்சினை முடிந்தது....

எதற்கு வசந்தன் வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறாரோ தெரியவில்லை...

ஆபாசமான வலைப்பூக்கள் அருவருப்பானது என்பது என் எண்ணம்.... அது யாரோ ஒருவருடைய பெயரில் போலியாக இருந்தாலும் சரி.... ஒரு தனிமனிதனின் வக்கிர வலைப்பூவாக இருந்தாலும் சரி.... தவிர்க்கப்பட வேண்டியதே.... மூனா கூனா என்பது போலி டோண்டுவின் போலி என்பது அந்த வலைப்பூவை போய்ப் பார்த்தவுடன் தெரிந்தது.... போலிக்கே சவால் விட இன்னொரு போலி.... திருநெல்வேலிக்கே அல்வா.... சபாஷ்... சரியான போட்டி!!!!!

said...

வசந்தன்,
தர்க்கத்தில் பெரிய்ய ஆளய்யா நீர் :)
நீங்கள் சொல்ல வந்ததை முழுமையாக புரிந்து கொண்டேன் ! உடன்படுகிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா

said...

Life is for peace and happiness.
அது கிடைக்காதவர்களுக்கு அதை வாங்கித்தரும் தளமல்ல தமிழ்மணம்
அது தெரியாமல் தெருச்சண்டை போடும் மன நிலை உள்ளவர்களையெல்லாம் தமிழ்மணத்தில் எழுதுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
வலைப்பூ பதிவர்களுக்கு விமர்சனங்களை வடிகட்டும், துடைத்தெறியும் வசதி வழங்கப்பட்டு இருப்பதைபோலவே
தவறான பதிவுகளை வாசகர்கள் நிர்வாகிகளின் பார்வைக்குக் கொண்டு போவதற்கும் - அப்படித் தங்கள் பர்வைக்கு வருவதை மட்டும் படித்து, அவர்கள் அதை வலையில் இருந்து நீக்கும் வசதியைத் தமிழ் மணம் நிர்வாகிகள் உடனடியாகச் செய்தல் நன்று.
- தேவகோட்டை சுப்பையா