யார் பெத்த மகனடா நீ? (எச்சரிக்கை படங்கள் கோரமானவை)


எச்சரிக்கை படங்கள் கோரமானவை....

நெஞ்சம் பதைக்குதே
உன் ரத்த நெஞ்சு காண

உயிரை உலுக்குதே
உன் ரத்த முகம் காண

செஞ்சோலை சிதைந்தபோது
பதிலுக்கங்கொரு
செஞ்சோலை சிதைய

வங்காலை வன்முறைக்கு
பதிலுக்கங்கொரு
வங்காலை வன்முறை

கேட்டதடா
ஆத்திர மனசு

ஆனால்
உன் ரத்த சகதி
உடல் பார்க்க
உரமில்லை மனசுக்கு

செஞ்சோலையும்
வங்காலையும்
வலுவாக இயக்கியது
அவர்களை

உன்னை எதடா
இயக்கியது?
பேரினவாதமா?
தேசபக்தியா?
கடமையா?
உன்னை எதடா
இயக்கியது?

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டே
மறந்தாயடா?

செஞ்சோலையும்
வங்காலையும்
நெஞ்சிலே இருந்தாலும்

உன் உதிரமும்
உயிரை உலுக்குதேடா

உன் உதிரமும்
உயிரை உலுக்குதேடா

யார் பெத்த மகனடா
நீ....

உன் உதிரமும்
உயிரை உலுக்குதே..........

7 பின்னூட்டங்கள்:

We The People said...

//

உன் உதிரமும்
உயிரை உலுக்குதேடா
//

இதற்கு முடிவில்லை குழலி.

இருவரையும் ஒன்று சேர்க்க பாலமில்லை. அவர்களுக்கு கூட்டாய் வாழ எண்ணமும் இல்லை.

இது ஒரு இனத்தின் அழிவிலே தான் அடங்கும் என்றே என்க்கு தோன்றுகிறது!

நம் பிள்ளைகளும் இது போன்ற இன்னொரு சம்பவத்துக்கு கவிதை எழுதுவார்கள்.

இது ரத்தவெறி யுகம்!!!

bala said...

//இது ஒரு இனத்தின் அழிவிலே தான் அடங்கும் என்றே என்க்கு தோன்றுகிறது!

நம் பிள்ளைகளும் இது போன்ற இன்னொரு சம்பவத்துக்கு கவிதை எழுதுவார்கள்.

இது ரத்தவெறி யுகம்//

என்ன மனிதர்கள், எதைத் தேடி இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்கள் ?

எப்படி இந்த பிரச்சனைகள் தீரும்?
பல சமயம் மலைப்பாகவும்.கையாலாகதத்தனைத்து நினைத்து அவமானமாகவும் இருக்கிறது..

இன்றைக்கு உறக்கம் இல்லை,
குழலி அய்யா.

கனத்த மனத்துடன்,

பாலா

enRenRum-anbudan.BALA said...

Kuzhali,
Heartrending really,

I am not sure about the 2 happenings other than sencholai, I think I missed reading about those.

ஈழபாரதி said...

கவிதை நன்றாக வந்திருக்கிரது, மனம் ஒப்பவில்லை என்றால் மணமுறிவுதான் நல்லமருந்து, மனஒப்புமில்லாமல்,மணமுறிவுமில்லாமால் இருந்தால் மரணம்தான் முடிவு.

Anonymous said...

//செஞ்சோலையும்
வங்காலையும்
நெஞ்சிலே இருந்தாலும்//

நெஞ்சுருகும் கவிதை அப்போது வரவில்லை.

//உன் உதிரமும்
உயிரை உலுக்குதேடா//

இப்போது முகமாலையில் இரத்தத்தைக் கண்டவுடன் உருகிவிட்டீர்களே!!

குழலி / Kuzhali said...

//நெஞ்சுருகும் கவிதை அப்போது வரவில்லை.
//
எல்லா நேரங்களிலும் எழுத மனம் இடம் கொடுத்தாலும் சில நேரங்களில் நேரம் இடமளிப்பதில்லை, என் பணி முழுநேர எழுத்துப்பணியல்ல, இந்த மாதம் வேலை செய்து சம்பளம் வாங்கினால் தான் அடுத்த மாதம் சாப்பாடு என்ற நிலைதான், ஜீவி படங்களை எடுத்து வைத்திருந்தேன், பாலஸ்தீன சிறுவன் அடிப்பட்ட படத்தையும் எடுத்து தான் வைத்திருந்தேன், கட்டுரைகள் யோசித்து எழுதுவது போல கவிதைகளை யோசித்து எழுதுவதில்லை, அந்த கண நேரத்தில் தோன்றும் உணர்ச்சிகளைத் தான் வடிக்கின்றேன்.

//இப்போது முகமாலையில் இரத்தத்தைக் கண்டவுடன் உருகிவிட்டீர்களே!! //
இதில் என் சார்பு நிலை என்னவென்று என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும்.

Anonymous said...

In the Name of Buddha they Kill Tamil Children. In the Name Gandhi
India help to SRILANKA ARMY.
Why do you worry?