இன்னா நக்கலுப்பா நாராயணனுக்கு
உருப்படாத நாராயணன் நக்கல் நையாண்டியோடு சமூக அவலங்களையும் அதிகார பீடத்தையும் எழுத்தால் துகில் உரிப்பவர், திமுக வின் ஓராண்டு ஆட்சியை முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0 என்று கலாய்த்தவர், கில்லிக்காக எலக்கியசம் (அ) என் பெயர் கோவாலு என்று எழுதியதை படித்து ரசித்து சிரித்தேன்... நக்கல் நையாண்டியோடு அறிவுசீவி போலித்தனம் செய்பவர்களை சுளுக்கெடுத்திருப்பார் நாராயணனன்....
முதலில் டிஸ்கெள்யமர்: இந்த கட்டுரையில் வரும் மனிதர்கள், விஷயங்கள் எல்லாமே கற்பனையே. யாரையும் தனிப்பட்டு குறிப்பிடுவன அல்ல
தேசாங்கி தெரியுமா உங்களுக்கு ? தெரியாதா. அப்போது நீங்கள் தமிழில் வரும் எந்த பத்திரிக்கையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. காலச்சுவடிலிருந்து குமுதம் வரை தமிழில் வரும் எல்லா இதழ்களிலும் தேசாங்கியின் கதை, கட்டுரை, கவிதைகள் இடம்பெறும். தமிழின் முண்ணணி எழுத்தாளர்களில் ஒருவர். சூரிச்சில் நடந்த 37வது உலக தமிழ் மாநாட்டில் தமிழகத்தில் இருக்கும் 10 தமிழ் ஐகான்களில் விஷாலுக்கு பிறகு தேசாங்கிக்குதான் இரண்டாம் இடம்.
தேசாங்கியின் கட்டுரைகளில் பொறி பறக்கும். கவிதைகளில் காதலும், காமமும் மயக்கும். கதைகளில் நையாண்டி தெறிக்கும். எல்லாரையும் படிக்க சொல்லும் மனிதநேயம் மிதக்கும். தமிழ் சினிமாவில் இளங்கோவிற்கு பிறகு நறுக்கென வசனங்கள் எழுதியது தேசாங்கி மட்டுமே. தேசாங்கியின் “பிஞ்சமட்ட” நாவல் முன்னொரு காலத்தில் வைரமுத்து என்கிற கவிஞன் எழுதி, பில்ட்-அப் கொடுத்து கவியரசு வாங்கியதை விட, செம பில்ட்-அப்பான கவி-கதை-கட்டுரை. புலிட்சர் விருதினை தவிர வேறெந்த விருதையும் வாங்க மாட்டேன் [யாரும் தரமாட்டார்கள் ] என்கிற வைராக்கியதோடு இருக்கும் தன்மான தமிழ்சிங்கம் தேசாங்கி. தமிழ்நாட்டில் எங்கே கூட்டம் நடந்தாலும், தேசாங்கியின் பாதச்சுவடுகள் இன்றி எதுவும் நடக்காது. தமிழகத்தின் அரசியல்வாதிகள், சினிமா, இலக்கியம், நவீனம், வகையறா, வகையறா எல்லாவற்றிலும் தேசாங்கி இருக்கிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் கலைஞர் டிவியின் சமையல் சமையல் நிகழ்ச்சியில் கூட தேசாங்கியின் வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சமையல் குறிப்புகள் நேயர்களுக்கு ஸ்பெஷல் போனாஸாக அறிவிக்கப்பட்டன. தேசாங்கியினை பற்றிய பாடங்கள் வருங்கால தமிழ் வரலாற்றில் இருக்கவேண்டும் என்று கலாச்சார துறை அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். இவ்வளவு சொன்னாலும், இந்த கட்டுரை தேசாங்கியினை பற்றியது அல்ல.
கோவாலு.
நாயே.
டவுசரு.
குமாங்கி.
தவுடு பார்ட்டி.
ஜூமாகா.
பண்டலு.
பொறை மச்சான்.
தேங்காநாய்.
சிலுக்கான்.
விலாயி.
மேலே சொன்னவை ஒரு அட்டெண்டஸ் ரிஜிஸ்டர் எழுதுமளவுக்கு இருந்ததிலிருந்து பொறுக்கியெடுத்த கோவாலுவின் பெயர்கள். உங்களுக்கு இஷ்டப்பட்ட பெயரில் நீங்கள் கோவாலுவினை அழைக்கலாம், நான் கோவாலு என்று தான் கூப்பிடப்போகிறேன். மீதியை அவர் பதிவில் படித்துக்கொள்ளுங்கள்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment