நான்காம் நாளாக தொடரும் பழ.நெடுமாறன் அவர்களின் உண்ணாநோன்பு போராட்டம்

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து வரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் போராட்டம் இன்று நான்காம் நாளாக தொடர்கின்றது.

நேற்றே உடல் சோர்வடைந்த அய்யா நெடுமாறன் அவர்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்படுவதாகவும் பல்ஸ் குறைந்து கொண்டிருப்பதாகவும் மன உறுதியினாலேயே நலமாக இருப்பதாக நெடுமாறன் அய்யா அவர்கள் சொல்லிக்கொண்டு போராட்டத்தை கைவிட மறுப்பதாகவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்கள்...

இலங்கைக்கு எம் தமிழின மக்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசின் இராணுவத்திற்கு ராடார் மற்றும் ஆயுதங்கள் அளித்த மானங்கெட்ட மத்திய அரசும், இப்பிரச்சினையில் பாராமுகமாக இருக்கும் மானங்கெட்ட தமிழக அரசுக்கும் எம் கண்டனங்கள்...

அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் போராட்டம் வெற்றிகாண வாழ்த்துகிறேன்...

போராட்டம் தொடர்பான தட்ஸ்டமில்.காம் இன் செய்தி இங்கே

6 பின்னூட்டங்கள்:

said...

அய்யாவின் போராட்டம் வெல்லட்டும். தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு உதவி பொருட்களை செஞ்சுலுவை சங்கம் வழியாக தவிக்கும் ஈழத்தமிழர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். அய்யாவை சென்ற ஆண்டு நேரில் சந்தித்த போதே தளர்வாகத்தான் இருந்தார். அவரின் மன உறுதியை தமிழுணர்வாளர்கள் அறிவார்கள். அவரின் அறப்போராட்டம் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதே என் அவா.

said...

அவரின் அறப்போராட்டம் நல்லபடியாக முடிய வேண்டும்

said...

உண்மையான போராளி அவர்கள் போராட்டம் வெற்றி அடைய பிராத்திக்கிறேன்!!

said...

தமிழகம் இந்தியாவின் அங்கமாக இருப்பதால் , பெரும்பான்மையான தமிழக மக்களின் உணர்வுகளுக்கு இந்திய நடுவண் அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன்.

said...

what would have happened if nedumaran haven't been arrested in Nagapattinam...?

said...

மேதா பட்கரின் தீவிர உண்ணா நோன்புக்கு என்ன நேர்ந்தது அரசாங்கத்திடமிருந்து. இத்தகு சாத்வீக போராட்டத்தின் வலு தீலிபனுடன் முடிந்து விட்டது . (சமீபத்தில் கனிமொழி கூட ஈழத்து நண்பர்களுக்கா போராட்டத்தை முன்னின்று நட்தியது ஈழத்து நண்பர்களின் வாழ்வாதாரத்துக்கு அல்ல என்று என்ன தோன்றுகிறது (கனிமொழியின் வாழ்வாதாரத்திற்காக இருக்ககூடும்) அதே நேரத்தில் அய்யா அவர்களின் அர்பணிப்பு தான் இன்னும் ஒரு சிலரையாவது மனிததுடன் நடமாவிட்டுள்ளது