சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே (அ) வேறு மழை
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
(அ) வேறு மழை
- ஆதவன் தீட்சன்யாவின் கவிதை
மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி
ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா
உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா
ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்
எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா
தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
--
ஆதவன் தீட்சண்யா கவிதை
7 பின்னூட்டங்கள்:
Outstanding! பளார்னு வாங்கியது இன்னும் ரொம்ப நாட்களுக்கு வலிக்கும்.
பகிர்தலுக்கு நன்றி.
அனுஜன்யா
//அனுஜன்யா said...
Outstanding! பளார்னு வாங்கியது இன்னும் ரொம்ப நாட்களுக்கு வலிக்கும்.
பகிர்தலுக்கு நன்றி.
அனுஜன்யா
//
முதலில் நான் பளார்னு வாங்கினேன், நான் வாங்கினா மட்டும் போதுமா அதுதான் எல்லோருக்கும்...
இதை நான் இங்கே பதிவிட்டதே ஒரு முரண் தான்...
அதிரடி :)
கிராமத்து மொழி நடை நல்லாயிருக்கு!
இனி ஒவ்வொரு முறை மழையை ரசிக்க முயற்சிக்கும்போதும் இந்தக் கவிதை மனதை உறுத்தும்
இனி ஒவ்வொரு முறை மழையை ரசிக்க முயற்சிக்கும்போதும் இந்தக் கவிதை மனதை உறுத்தும்
nice, thanks for sharing
Post a Comment