மீள் கவுஜ

மீள் கவுஜ
காத்திருந்தேன் உனக்காக
காதலுடன் வருவாயென
கால்கடுக்க நின்றிருந்தும்
காணவில்லை உன்னை

உனக்காக ஒரு ரோசா
வைத்திருந்தேன் வாடியது
எழுதிவைத்த கவிதையெல்லாம்
எங்கேயோ ஓடியது

எங்கே போனாயென
ஏங்கி இருந்தபோது
ஏக்கம் தீர்க்கவந்தாய்
என்னிடம் நீ கண்ணே!

வாடிய ரோசாவை
வாசமுடன் நான் நீட்ட
வைத்திருந்த ரோசாவை
வான் நோக்கி நீ எறிய
வானரப்படையாக நான்மாறி
அதை பிடிக்க

வழக்கம்போல் வீசினாயே
வசந்தப் புன்னகையை
அதைப்பிடிக்க என்னால்
இயலவில்லை கண்ணே

நீ பேசுவாயென
நான் மவுனிக்க
நான் பேசுவேனென
நீ மவுனிக்க
இருளும் மவுனமும்
இறுகிக் கொண்டிருந்தது

எனக்காக நீபேச
உதடுபிரிக்க
உனக்காக நான்பேச
உதடுபிரிக்க

எழுந்திருடா
மணியேழு
என்றான்
என் அறைத்தோழன்

40 பின்னூட்டங்கள்:

said...

/வாடிய ரோசாவை
வாசமுடன் நான் நீட்ட//

நீ சொன்னாய்
புதுசா ஒன்னு வாங்குறது கஞ்ஜூஸ்

said...

//வைத்திருந்த ரோசாவை
வான் நோக்கி நீ எறிய//

பெரிய சைண்டிஸ்ட் ராக்கெட் விடுறமாதிரி பில்டப்ப பாரு!

said...

//வழக்கம்போல் வீசினாயே
வசந்தப் புன்னகையை
அதைப்பிடிக்க என்னால்
இயலவில்லை கண்ணே//

இதுக்காக தோணியையா கூட்டிக்கிட்டு வரமுடியும்?

said...

//எனக்காக நீபேச
உதடுபிரிக்க
உனக்காக நான்பேச
உதடுபிரிக்க//

ஏதோ கலெக்டர் வேலைக்கு வந்த அப்பாயின்மெண்ட் லெட்டரை பிரிக்கிறமாதிரி பேச்சை பாரு:)

said...

ஹல்லோ இதெல்லாம் நாங்க டிராயர் போட்டுட்டு பேண்ட்டுக்கு மாறன காலத்துல எழுதியது அக்கும்

said...

ஃஅவ்வ்வ்வ்வ்வ்வ்வழ்

said...

//உனக்காக ஒரு ரோசா
வைத்திருந்தேன் வாடியது
எழுதிவைத்த கவிதையெல்லாம்
எங்கேயோ ஓடியது//

அப்படியே இந்த கவிதையும் ஓடி இருக்க கூடாது, நாங்க பொழைச்சு இருப்போமுல்ல!

said...

//குழலி / Kuzhali said...

ஹல்லோ இதெல்லாம் நாங்க டிராயர் போட்டுட்டு பேண்ட்டுக்கு மாறன காலத்துல எழுதியது அக்கும்//

பிறவி கவுஜர் போல:)

said...

//Blogger செந்தழல் ரவி said...

ஃஅவ்வ்வ்வ்வ்வ்வ்வழ்//

உங்கள் கவிதை ரவியை திரும்ப மழலை பேசு அளவுக்கு மாற்றிவிட்டதே:)

said...

//காத்திருந்தேன் உனக்காக
காதலுடன் வருவாயென//

பொய் சொல்லாதீங்க திங்க முறுக்கு எடுத்து வரேன் என்று சொன்னதால்தானே?

said...

//செந்தழல் ரவி said...
ஃஅவ்வ்வ்வ்வ்வ்வ்வழ்
//
புரியிற மாதிரி எழுதனா ஃஅவ்வ்வ்வ்வ்வ்வ்வழ் ஆ

5 நிமிசம் டைம் குடு ஒரு பின் நவீனத்துவ கவிதை எழுதறேன்

said...

//உனக்காக ஒரு ரோசா
வைத்திருந்தேன் வாடியது//

உங்க டெரர் பேஸ் பார்த்ததால் வந்த எபக்ட்டா இருக்கும்:)

said...

//ஏக்கம் தீர்க்கவந்தாய்
என்னிடம் நீ கண்ணே!//

ஹி ஹி இப்பதான் புரியுது என்ன “மேட்டருன்னு”

said...

//வாடிய ரோசாவை
வாசமுடன் நான் நீட்ட//

திரும்ப ஸ்ப்ரே அடிச்சிங்களாக்கும்!

said...

//கால்கடுக்க நின்றிருந்தும்
காணவில்லை உன்னை//

ஸ்டூல் கிடைக்கலையா??

said...

//ஏதோ கலெக்டர் வேலைக்கு வந்த அப்பாயின்மெண்ட் லெட்டரை பிரிக்கிறமாதிரி பேச்சை பாரு:)//

ஹா..ஹா..ஹா..

குசும்பா, நேத்து நைட் மப்புல இன்னைக்கு இவரைத் தான் ஓட்டணும்னு என்கிட்ட சொன்னியா??:-)

said...

பூக்களை புணர்வது
தேனிக்கு தெரியாதென்றாலும்
பூவின் தேனை உறிஞ்சும்
பூவின் புணர்வுக்கு தன் கால் தந்து
கால் என்ற உறுப்பு தந்து
அசைவின்றி ஊழி
பெருவெள்ளமென ஓடும்
அடக்கப்படாத ஒரு
காமத்தை அடக்கி
பெருவெளியில் பொங்கி எழும்
ரோசாவின் காமக்கடலில் நீந்தியது
ரோசாவுக்கு தெரியும்
தேனிக்கு தெரியாதென்பது
உங்களுக்கு தெரிந்து
எனக்கும் புரிந்த
அந்த நிழலில் குரங்கின் கு$%^&சு
கசக்கி எறிந்த நிழலில்
வழிந்தோடியது தேனியின் உயிர்

said...

இனி இங்க வராதன்னா கேட்டுக்கப்போறோம், அதைவிட்டுவிட்டு சின்ன புள்ளதனமா எங்களை இப்படியா மிரட்டுவீங்க:(

said...

தேனி புணர்வது
பூக்களுக்கா புரியாது?

said...

adeyappa!!!

said...

இதுக்கு குசும்பனை நாலு கெட்ட வார்த்தையில திட்டியிருக்கலாம்.!!

said...

//எழுந்திருடா
மணியேழு
என்றான்
என் அறைத்தோழன்//

காலையிலா?? மாலையிலா??

ஏன்னா நைட் ஃபுல் மப்புல இருந்தா மறுநாள் சாயங்காலம் வரைக்கும் இறங்காதுன்னு சொல்லுவாங்க.. இந்த கவிதை அப்படியே கண்ணதாசனை ஞாபகப்படுத்துது...:-)

said...

நிழலின் நீட்சியில்
நிறைந்திருக்கிறது புணர்ந்து களைத்த
தேனியின்
நாளைக்கான மிச்சம்
ஊழ்வினையின் வகைதொகையில்லா
கணக்குகளில் காலக்கிறுக்கலாய்
எழுதி எழுதி இதழ்
வாடுகிறது
புணர்ச்சியால் கிளர்ச்சியடைந்த
ரோசா

said...

//ஆசிப் மீரான் said...
தேனி புணர்வது
பூக்களுக்கா புரியாது?
//
பூக்களுக்கு தெரியாமல்
புணர்ந்து போனது தேனி
தேனிக்கு வேலை
தேனெடுப்பது
கம்பத்தை தேய்க்கும்
எறுமை மாட்டிற்கே
சொறிதல் சுகம்
அங்கே கம்பத்துக்கில்லை
நடிகைகளின் நாபி
பார்த்து மைதுனம்
கொள்ளும்...

அய்யோ அய்யோ இதுக்கு மேல எழுத தெரியலையே, ஜ்ய்ரோம், சாரு ப்ளீஸ் ஹெல்ப் மீ

said...

எல்லோரும் என் கவுஜையை கலாய்க்கிறீர்கள்...

இந்த கவிதைய பாருங்க

கவிதையே நிஜமாகி

நிஜத்தைக் கனவாக்கியது

நிஜமா

நிஜத்தின் நிழலா

நிழலின் கனவா

கனவின் கவிதையா

http://www.charuonline.com/July2009/EzhuthanumSarasarikalum2.html

said...

தலைவா ,எப்போலேருந்து இப்படி :)

said...

கவுஜ.. கவுஜ...

இதெல்லாம் நம்மள மாதிரி பிறவி கவுஜர்கள் மட்டும் தான் வடிக்க முடியும்.. :)

said...

எப்டியிருந்த நீங்க இப்டி ஆயிட்டீங்களேண்ணா?

said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

என் ஸ்மைலியே ஒரு பின்னவீனத்துவக் கவிதை தான்!

said...

//:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

என் ஸ்மைலியே ஒரு பின்னவீனத்துவக் கவிதை தான்!
//
ஸ்மைலி போட்டு எதிர் அழகியல் பின் நவீனக்கூறுகளை சிதைத்து விறால் மீன் செதில்களாக்கிய பெரு வெளியில் காயமாக கரைந்து போன சிறு கூட்டக்குரலின் வேர்கள் சுரந்து போன நான்கு திருகலில் விரைக்கும் காம்புகள் காய்ந்து போன மார்பு தொங்கலில்....
யோவ் கொலைவெறி ஆயிடுவேன்

said...

//ஸ்மைலி போட்டு எதிர் அழகியல் பின் நவீனக்கூறுகளை சிதைத்து விறால் மீன் செதில்களாக்கிய பெரு வெளியில் காயமாக கரைந்து போன சிறு கூட்டக்குரலின் வேர்கள் சுரந்து போன நான்கு திருகலில் விரைக்கும் காம்புகள் காய்ந்து போன மார்பு தொங்கலில்..../

குயிலி'ண்ணே,

அப்பிடியே இன்னும் ஒடச்சி போட்டு படிக்கட்டுங்க... நல்ல கவுஜ'யா வடிச்சிறலாம்... :)

said...

//குயிலி'ண்ணே,

அப்பிடியே இன்னும் ஒடச்சி போட்டு படிக்கட்டுங்க... நல்ல கவுஜ'யா வடிச்சிறலாம்... :)
//
ஒடைக்காம போட்டா உரையாடல், ஒடச்சி போட்டா கவுஜ...

பின் நவீனத்துவத்துல இதெல்லாம் சாதாரணமப்பா

said...

//5 நிமிசம் டைம் குடு ஒரு பின் நவீனத்துவ கவிதை எழுதறேன்//

4 நிமிசம் போதும் நான் இங்கிருந்து எஸ்கேப்பு ஆகுறதுக்கு!

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

வலிய வந்து
வாடா மல்லியை
வன்புணர்ச்சி செய்யுமா
வண்டு
வாசம் இல்லாதது
வண்டும் நாறும்

said...

'கவுஜ'யில் இழைந்தோடிய நகைச்சுவை அருமை.

said...

//ஒடைக்காம போட்டா உரையாடல், ஒடச்சி போட்டா கவுஜ...

பின் நவீனத்துவத்துல இதெல்லாம் சாதாரணமப்பா//
பாத்து ரொம்ப ஒடச்சிட போறீங்க.. தனி எழுத்தையாவது விட்டு வையிங்க..

மத்த படி இங்க நடக்கிற வெளையாட்டுக்கும் எனக்கு சம்பந்தம் இல்ல.. மீ த எஸ்கேப்பு...

said...

மொக்கை மொக்கை
கிழிந்த டவுசரில்
வெடித்துச்சிதறின
என் புடுக்குகள்

said...

ங்ஙே!!!!!!

said...

dear sir ,
i read your article.
very use to know about society.
can you give phone or address
thanking.
v.govindharajan
panruti.
9865585154,989944913