ஓட்டு பொறுக்கிகளிடம் மட்டுமா தோற்றோம் முத்துக்குமரா?

ஓட்டு பொறுக்கிகளிடம் மட்டுமா தோற்றோம் முத்துக்குமரா?













சொல்கிறார்கள் ஓட்டுப்பொறுக்கிகளிடம்
தோற்றுப்போனோமாம்

ஆம் தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
ஓட்டை விற்ற பொறுக்கிகளிடமும்
தோற்றுத்தான் போனோம்

தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
தலைமை விசுவாசத்தை விட முடியா
தொண்டர் பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
புரட்சி பேசி
அதிகாரத்துக்கு அருகாமையில் இருக்கும்
அறிவுஜீவி பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
குத்திக்கொள்ள ஆயுதம் தந்தவனுக்கு
கொஞ்சமும் வலிக்காமல் கவிதை எழுதிய
கவிஞர் பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
வாய்வலிக்காமல் மனித நேயம் பேசியவர்கள்
வாய்மூடி மெளனித்திருந்த
மனிதஉரிமை ஆர்வல பொறுக்கிகளிடமும்
தோற்றுத்தான் போனோம்

இன்னும் எந்தெந்த பொறுக்கிகளிடம்
தோற்றுப்போனோம் என கணக்கு
பார்க்க துணிவில்லை எமக்கு

இன்னும் எத்தனை அஞ்சலிகள்
நினைவிலிருக்க போகிறாயோ?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

13 பின்னூட்டங்கள்:

அப்பாவி முரு said...

இதை நான் அப்போதே சொன்னேன்...

http://abbaavi.blogspot.com/2009/04/blog-post_05.html

வால்பையன் said...

தமிழின உணர்வு உள்ள அனைவரும் தான் செத்து(தோத்து) போனோம்

ராவணன் said...

முத்துக்குமாரா....? யார் அது? இத்தாலி சோனியாவுக்கு ரொம்ப வேண்டியவங்களா?
ஆங்.... சினிமாவிற்குப் பாட்டெல்லாம் எழுதுவாரே அவரா....என்னாச்சு....?

அஹோரி said...

//இன்னும் எத்தனை அஞ்சலிகள்
நினைவிலிருக்க போகிறாயோ?//
உண்மை.

Anonymous said...

Maruthian & Co also tried to capitalize on his death and used that as an opportunity to project themselves as the one and only movement that was always right and perfect while everyone else was unholy or were plain opportunists. They suddenly became fond of the causes advocated by Muthukumar and did not criticise his views as they would usually do on others views.Vinavu & Co is as holy as anybody else is in this :). Muthukumar and others sacrificed their lives in protest. It did not have much impact except for few weeks because there was no strong movement or organization that could carry on a massive struggle on that issue on a sustained basis.
So their sacrifice had little impcat on society or in politics.
There are too many groups/'movements' acting with too little understanding to make any significant impact.This was true of 2009.This is true of 2010.In 2011 also this may be true.That is the tragedy and Muthukumar did not have this understanding.

உண்மைத்தமிழன் said...

தோற்றுப் போனது முத்துக்குமாரின் தியாகம்..!

Santhosh said...

தல,
நம்மளைப்போன்ற கையாலாகாதவங்களை விட்டுடிங்க...

//இன்னும் எத்தனை அஞ்சலிகள்
நினைவிலிருக்க போகிறாயோ?//

அதே அவரென்ன ரஜினியா இல்ல விஜயா இல்ல அட்லீஸ்டு ஒரு காட்சியிலாவது நடிச்சி இருக்காரா அவரை வாழ்நாள் முழுவதும் தமிழன் நினைவில் வைத்துக்கொள்ள..

enRenRum-anbudan.BALA said...

கோபம் தெறிக்கிறது எழுத்தில்!

பாவம் முத்துக்குமரன் !

ஜோதிஜி said...

ஒரு திறானாய்வுக்கு செய்ய வேண்டிய அத்தனை வார்த்தைகளும் வலிகளாக நெஞ்சில் முள் போல் குத்துகிறது.

கானா பிரபா said...

முத்துகுமரர்களின் தியாகத்தைப் புரிந்து கொள்ளாத உலகில் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது அவர் ஆவி, மெளனமாக அவருக்காக அழுவதைத் தவிர

Anonymous said...

முத்துக்குமாரின் தியாகத்தை யார் யார் எல்லாம் தங்களின் சுயலாப பதவி அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார்களோ. அவர்கள் எல்லோருமே முத்துக்குமார் விஷயத்தில் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன். முத்துக்குமாரின் மீதான உண்மையான உணர்வு கொண்டவர்கள். இந்த எல்லா ஒட்டுப் பொறுக்கிகளையும் விட்டொழிக்க வேண்டும். மிக மோசமாக நடந்து கேவலமான சந்தர்ப்பாவதிகள். ஜெ, கருணா இந்த இருவருக்கும் காவடி தூக்க முத்துக்குமாரை பலியாக்கி புதைத்ஹ்டு விட்டார்கள்.

Anonymous said...

இன்ரைய தமிழகத்தில் நிலை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நீடித்தால் தம்ழிழகம் மிகப் பெரிய வீழ்ச்சிக்குள்ளாகும். ஆனால் தமிழினக் காவலர்கள் என்று சொல்லும் உரிமை கருணா, ஜேவுக்கு காவடி தூக்கும் இந்த கும்பலுக்கு இல்லை. இவர்கள் முத்துக்குமாரை புதைத்தார்கள், அவரது மரண சாசனத்தை திசை திருப்பி அவரவருக்கு ஏற்ற மாதீர் எழுதிக் கொண்டார்கள். இவர்களை புறக்கணிக்காமல் விடிவே இல்லை.
டி,அருள் எழிலன்

ராஜ நடராஜன் said...

மவுனித்து விட்டுச் செல்கிறேன்:(