அடுத்தவன் பெற்ற பிள்ளைகளுக்கு அப்பன் உரிமை கொண்டாடும் திமுக

ஜெயமோகன் அவர்களின் திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? என்ற தலைப்பில் இப்படியான ஒன்றை முன்வைக்கிறார்...

"இன்று திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் எல்லா கடந்த காலச் சாதனைகளுக்கும் உரிமை கொண்டாடுகிறது. தமிழ் நூல்களை மீட்டது, தமிழிசையை வளர்த்தது, தனித்தமிழைப் பரப்பியது எல்லாமே ஈவேரா வில் தொடங்கும் திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று இன்று சாதாரணமாக மேடைகளில் பேசுகிறார்கள். "

இதே கட்டுரையில் மிகக்கடுமையாக திராவிட இயக்கங்கள் மீதான விமர்சனத்தை வைக்கிறேன் என்று தன் காழ்ப்புணர்வை பெரியாரின் மீது வைக்கிறார்... அதை ஒரு தந்திரத்துடன் செய்கிறார் ஜெயமோகன் செய்ய நினைப்பது ஷங்கர் படம் போல பல உண்மைகளின் நடுவே ஒரு பொய்யை சொறுகுவது, அதாவது இலஞ்சம் வாங்கும் ஆபிஸ் உண்மை, செருப்பு தைக்கும் தாத்தா உண்மை, அவருக்கு பின் இறப்பு சான்றிதழ் வாங்க துன்பப்படும் மனோரமா உண்மை, இதில் கொண்டுவது சொறுகும் இந்தியன் தாத்தா கற்பனை, மற்ற உண்மைகளை நம்பும்போது இந்தியன் தாத்தா என்ற கற்பனையை நம்ப வேண்டும், அது போல பெரியாருக்கு பிந்தைய நீர்த்துப்போன‌ திராவிட இயக்கத்தை குறிப்பிட்டு பெரியாரை திட்டுகிறார்.

இது தொடர்பான மேல் விபரங்களை ஆதாரங்களுடன் சுகுணாதிவாகரும், தமிழச்சியும் தொடருகின்றார்கள்... அவர்கள் அந்த இழையில் தொடர நான் இதே ஜெயமோகன் பெரியாரில் ஆரம்பித்து திராவிட இயக்கங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை பெரியாருக்கு பிந்தைய திராவிட இயக்கங்கள் மீது வைக்கிறேன்...

இது ஒரு முக்கியமான கட்டம், இந்த நிலையில் நாம் நம் நம்பிக்கைகளை மறு மதிப்பீட்டிற்குள்ளாக்க வேண்டிய நிலை. ஏனெனில் தமிழினத்திற்க்கு ஆதரவான ஒரு முற்போக்கு செயல்பாடுகளுடைய ஒரு இயக்கம் தற்போது இல்லை, ஆனால் அம்மாதிரியான ஒரு அரசியல் சமூக இயக்கத்தை கட்ட தடையாக இருப்பது வெளியாட்கள் அல்ல, நாமே தான், ஏனெனில் முற்போக்காக இல்லாத ஒரு இயக்கத்தை வெறும் கோஷங்களை மட்டுமே முன்னிறுத்தும் திமுக வை ஒரு முற்போக்கு இயக்கமாகவும் கருணாநிதியை தமிழ் ஆதரவு தலைவனாகவும் கொண்டுள்ள ஒரு பொய்யான பிம்பமே இந்த தடையை ஏற்படுத்துகிறது, இதை உடைத்தால் மட்டுமே நம்மால் முன்னோக்கி நகர இயலும்.அதிமுக,தேமுதிக போன்றவற்றை தள்ளிவிட்டு திராவிட இயக்கத்தின் ஒரே ஒரிஜினல் பீஸ்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் முற்போக்கு திமுக 1949லிருந்து 2009 வரையிலான இந்த 60 ஆண்டுகளிலும் மேலும் ஆட்சியில் இருந்த 19 ஆண்டுகளிலும் திமுக பெற்றெடுத்த பிள்ளைகள் என்ன என்று தோண்டிபார்த்தால் திமுக அடுத்தவன் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்துவிட்டு அதன் அப்பனாக மாறியுள்ளது.

தமிழ் சமுதாயத்தின் முற்போக்கு புரட்சிகர நகர்வுகளை தமிழ் நில மீட்சி போராட்டங்கள், தமிழின மொழி மீட்சி மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம், சாதிய ஒழிப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தலித்திய ஆதரவு நடவடிக்கைகள் , இடஒதுக்கீட்டு ஆதரவு / அரசு தனியார் வேலைவாய்ப்புகளை பெறுதல் என்ற நான்கு முக்கிய நிலைகளை வைத்து என்னளவில் பார்க்கிறேன், இதில் இன்னும் பல இருக்கலாம் அதிலும் ஈழத்து தமிழனக்கு செய்த துரோகப்பட்டியலை கணக்கிலேயே எடுக்காமல் மற்றவற்றை மட்டும் பேசலாம்.

இவைகளில் திராவிட இயக்கங்களின் ஒரே ஒரிஜினல் பீஸ் ஆன திமுகவும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர்கள் எந்த அளவிற்க்கு இந்த நான்கு முக்கிய நகர்வுகளில் பங்கேற்றார்கள் என பார்த்தால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் திமுகவுக்கான பெயர் மட்டும் என்னவோ முற்போக்கு இயக்கம், சாதியொழிப்பா, தமிழ் மொழி இன வளர்ச்சியா, இந்தி எதிர்ப்பா எல்லாவற்றிற்கும் இவர்களே அத்தாரிட்டி போன்றதொரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது, மூளையில் மஞ்சளும் கருப்பு சிவப்பும் அடைத்துக்கொண்டிருக்கும் வரை நாமும் அதை நம்பிக்கொண்டு திரிந்து கொண்டிருப்போம். இதிலும் இடைச்செறுகலாக ஏன் இவ்வளவு தீவிரமாக ஆராயாமல் ஆதரித்தோமென்று பார்த்தால் அதற்கான காரணமாக பார்ப்பனர்களே இருந்திருப்பார்கள், தேவையேயின்றி அவர்கள் திமுகவையும் கருணாநிதியையும் மூர்க்கமாக அர்ச்சிக்கும் போது நாம் மேலும் மேலும் திமுகவையும் கருணாநிதியையும் நோக்கி தள்ளப்படுகிறோம், ஆனால் பார்ப்பனர்கள் மூர்க்கமாக எதிர்க்கும் அளவிற்க்கு திமுகவும் கருணாநிதியும் worth இல்லை, பெரியார் நடத்திய திராவிடர் கழகமும் பெரியாரும் தான் பார்ப்பனர்களை நொறுக்கி தள்ளியவர்களே தவிர இவர்கள் அல்ல.

மொழிவாரி மாநிலங்களாக பிரியும் போது தமிழ் நில மீட்சி போராட்டங்கள் எதுவுமே திமுகவால் முன்னெடுக்கப்படவில்லை, மொழி வாரி மாநிலத்தால் தமிழகம் இழந்த திருப்பதி, சித்தூர், கோலார், தேவிகுளம்,பீர்மேடு, பாலக்காடு என்று பெரிய பட்டியலே இருந்தாலும் தமிழகம் இன்னும் இழந்துவிடாமல் மீட்டெடுக்கப்பட்ட திருத்தனி, சென்னை, முழுக்குமரி மாவட்டம் என தமிழர்களின் தேசிய நிலத்தை மீட்டெடுத்தவர்கள் ம.பொ.சி, நேசமணி பொன்னையா மற்றும் பலர், பார்ப்பன பத்திரிக்கையான தினமலரும் கூட குமரி மாவட்ட மீட்பில் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்துள்ளது அதனால் கேரளாவில் அடக்குமுறைகளை அந்த பத்திரிக்கை சந்திக்க நேரிட்டது. ஆனால் இதில் எதிலும் திமுகவோ அல்லது அண்ணாதுரை கருணாநிதி போன்றோர்களின் பங்களிப்போ கிட்டத்தட்ட இல்லாமலே இருந்திருக்கிறது.

இழந்த தமிழ் தேசிய நிலத்தை மீட்டதோ இந்த போராளிகள் ஆனால் திமுகவின் ஆட்சி காலத்தில் கட்சத்தீவை இந்திய அரசு தமிழர்களுக்கெதிரான சிங்கள இனவாத இலங்கைக்கு தாரை வார்த்தபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும் வெறும் சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றியதோடு நின்று விட்டது... இனி எந்த காலத்தில் நம்மால் தமிழ் தேசிய நிலமான கட்சத்தீவை மீட்கப்போகிறோமோ?

அடுத்ததாக தமிழ் மொழி எழுச்சி அதன் வரலாற்றை மீட்டல் மணிப்பிரவாள நடையொழித்து தனித்தமிழ் போன்றவற்றில் பெரும் பங்களித்தவர்கள் பாவாணர் போன்ற தமிழறிஞர்களே அன்றி திமுக அல்ல, திமுகவின் அறிஞர் அண்ணாவின் தொடக்ககால எழுத்துகள் மற்றும் பேச்சுகளை படித்தால் தனித்தமிழ் என்பது இல்லாமலிருப்பது புரியும், தனித்தமிழெசுச்சியை கொண்டு வந்த தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்களின் நடையை நகலெடுத்து copy cat ஆக கொண்டு வரப்பட்டது தான் திமுகவின் தமிழ் மேடைப்பேச்சுகள் ஆனால் இந்த தனித்தமிழ் திமுக பெற்ற பிள்ளை அல்ல, பாவாணர் போன்ற தமிழறிஞர்கள் பெற்ற பிள்ளை, சரி அந்த பிள்ளையை தத்தெடுத்துக்கொண்டார்கள் என்றாலும் கூட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக திருடிக்கொண்டது.

தமிழ் அறிஞர்களும் மாணவர்களும் பெரும் போராட்டமாக அடக்குமுறைகளை எதிர்த்து போரிட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடைசியில் பந்தியில் வந்து சாப்பிட உட்கார வந்தவன் தாலியெடுத்து கட்டிவிட்டு மாப்பிள்ளையான கதையாக போராட்டம் வெற்றி பெற போகும் கடைசி நேரத்தில் திமுக தன் ஆதரவை தெரிவித்து போராட்டத்தின் வெற்றியை திருடி அதை ஓட்டாக்கி ஆட்சியை பெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் அதை தூண்டிவிடுவது திமுக என்ற குற்றச்சாட்டை அரசு வைத்த போது மாணவர்கள் போராட்டத்தை நாங்கள் தூண்டவில்லை, மாணவர்கள் அரசியலில் ஈடுபடாமல் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு புத்திமதி கூறியவர் அறிஞர் அண்ணா. இப்படியெல்லாம் மாணவர் போராட்டத்தை எதிர்த்துவிட்ட கடைசியில் மொய் வைப்பது போல ஆதரவு தெரிவித்து ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்தை நிறைவேற்றியது, இப்படி திருடியதாலேயே இந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக பெற்ற பிள்ளையாகிவிடாது...

திமுக செய்ததெல்லாம் பிள்ளைக்கு பெயர் வைக்கும் வேலைகளை மட்டுமே, தமிழ்நாடு என்று பெயர்வைத்தது, பெரியார் உருவாக்கிய சீர்திருத்த திருமணத்திற்க்கு அங்கீகாரம் அளித்தது என அடுத்தவர் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் வேலைகளையே...

இடஒதுக்கீடு தொடர்பாக அதிகாரத்திலிருந்த திமுக கழற்றியவைகள், சாதிய ஒழிப்பில் ஒரே நேரத்தில் சாதிய எதிர்ப்பாளனாகவும் சாதிய ஆதரவாளனாகவும் நடிக்கும் இரட்டை முகங்கள், தமிழ் தேசிய மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி போராட்டங்களை அதிகாரத்திலிருந்த காலத்தில் மிக மூர்க்கமாக அடக்குமுறைகளை ஏவி முறியடித்தாலும் இன்னமும் நாக்கூசாமல் நானும் கம்யூனிஸ்ட்தான் என்று சொல்லும் பொய்கள், வெற்று கோஷங்களை மட்டுமே முன்வைத்து பரப்பிய இயக்கமாக திகழும் இடங்கள் என திமுக திருடியவைகள் மேலும் தொடரும்...

17 பின்னூட்டங்கள்:

said...

வெற்று கோஷங்களை மட்டுமே முன்வைத்து பரப்பிய இயக்கமாக திகழும் இடங்கள் என திமுக திருடியவைகள் மேலும் தொடரும்...//

ஆம்! தொடர்ந்து இருட்டடிப்புகளை, அல்லது இருட்டுக்குள் திருடியவைகளை வெளிக்கொண்ருங்கள்!

said...

நல்ல பதிவு....

said...

அப்ப அண்ணாயிசத்தைக் குழைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆரின் அண்ணா தி.மு.க.....

ஓஓ...! இப்படி சொல்லப்படாதோ...

அண்ணான்னு வரப்படாது இல்ல...
இருட்டடிச்சிடுவோம்...!(1)

அதான் அந்த அ.தி.மு.க திராவிட கட்சி இல்லங்கிறீங்களா?

said...

//அதான் அந்த அ.தி.மு.க திராவிட கட்சி இல்லங்கிறீங்களா?
//
அட உங்களுக்கு தெரியாதா திராவிட இயக்கத்தின் ஒரே ஒரிஜினல் பீஸ் திமுக... போனாப்போவுதுன்னு இன்னொன்றை ஒத்துப்பாங்க அது எழவு கருமாதி எல்லாம் முடிஞ்சி ஈழத்தமிழர்களின் தெவசத்துக்கு வந்து பால் ஊத்துற மானமிகு தலைமையிலான டீம்டு யுனிவர்சிட்டி

said...

குழலி / Kuzhali said...
//அதான் அந்த அ.தி.மு.க திராவிட கட்சி இல்லங்கிறீங்களா?
//
அட உங்களுக்கு தெரியாதா திராவிட இயக்கத்தின் ஒரே ஒரிஜினல் பீஸ் திமுக... போனாப்போவுதுன்னு இன்னொன்றை ஒத்துப்பாங்க அது எழவு கருமாதி எல்லாம் முடிஞ்சி ஈழத்தமிழர்களின் தெவசத்துக்கு வந்து பால் ஊத்துற மானமிகு தலைமையிலான டீம்டு யுனிவர்சிட்டி
//


அது மானமிகு இல்லை மானமிலி!

said...

-:)

said...

இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை போன்ற பெரியாரின் கொள்கைகளை தி.மு.க செயல் படுத்தியது எனலாமே!

ஆனாலும் தி.மு.க.வின் விளம்பரம் கொஞ்சம் அதிகம் தான், அதனாலே ஜெயமோகன் போன்றவர்களால் இம்மாதிரி ஜல்லி அடிக்க முடிகிறது!

said...

FOR PUBLICITY DMK DO ANYTHING, ONE PADI RICE FOR ONE RUPEES IS ANNA'S ELECTION CAOMPGIN ON 1967... NOW ALSO, ONLY GOVT. WORKING ON PAPER.

said...

//இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை போன்ற பெரியாரின் கொள்கைகளை தி.மு.க செயல் படுத்தியது எனலாமே!
//
இடஒதுக்கீட்டில் திமுகவும் கருணாநிதியும் என்ன செய்து கிழித்தார்கள் என்பது அடுத்த பதிவில் விரிவாக பேசலாம், இன்னும் கேட்டால் திமுக கருணாநிதியை பற்றிய பிம்பங்களை உடைத்ததே நான் இடஒதுக்கீட்டின் வரலாற்று நிகழ்வுகளை படிக்க ஆரம்பித்த போதுதான், நீங்கள் இங்கே இடஒதுக்கீட்டை திமுக செயல்படுத்தியது என்று எழுதுகிறீர்கள் ஆனால் நிஜத்தில் இடஒதுக்கீட்டிற்காக 19 ஆண்டுகள் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமுகவும் கருணாநிதியும் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை, நான் சொல்வது அதிர்ச்சியாக இருக்கும் இடஒதுக்கீடு விசயத்தில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அதிகாரத்தை பயன்படுத்தி செய்தது திமுகவும் கருணாநிதியும் செய்ததை விட அதிகம் ....

பெண்ணுரிமை என்றால் ஆம் கனிமொழி என்ற பெண்ணுக்கும், ராஜாத்தி அம்மாள் என்கிறா பெண்ணுக்கும், தயாளு அம்மாள் என்கிற பெண்ணுக்கும் உரிமை அதிகம் தான்...

said...

///பெண்ணுரிமை என்றால் ஆம் கனிமொழி என்ற பெண்ணுக்கும், ராஜாத்தி அம்மாள் என்கிறா பெண்ணுக்கும், தயாளு அம்மாள் என்கிற பெண்ணுக்கும் உரிமை அதிகம் தான்...///

அது....இல்லை..இல்லை..இது....
ரொம்ப சூடாக உள்ளீர்கள் என்று தெரிகிறது.

said...

ம.கோ.இரா.வால் உருவாக்கப்பட்டது என்பதாலேயே “தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம்” கருணாநிதியால் பொலிவிழந்து போனது.

கருணாநிதி குடும்பம் தமிழினத்திற்கு பிடித்த தொழுநோய்.

தமிழினத்திற்கு தன் வாழ்நாளெல்லாம் தொடர்ந்து துரோகம் செய்துவரும் கருணாநிதியிடமிருந்து தமிழினத்தை மீட்க அனைவரும் செயல்படுவோம்.

said...

பதிவுக்கு தொடர்பில்லாத காங்கிரஸ் பிரமுகர் சஞ்சய்காந்தியின் பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டது

said...

அனாவசியமா ஒரு கொலை விழும்.. பதிவுக்குத் தொடர்பானது தான் என் பின்னூட்டம்.. தல, நீங்க பதிவெழுதினா கம்யூனிஸ்ட் ஆளுங்களும் வரதில்லை.. திமுககாரங்களும் வரதில்லை.. இப்போ கமெண்ட் போட்டிருக்கிற எல்லாரும் உங்க கருத்தை ஆதரிக்கிறவங்க மட்டுமே தான்.. நானாவது ”மாற்றுக் கருத்து” சொல்றேனேன்னு சந்தோஷப் படுங்க. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதிங்க..

( உண்மை சுடுதா தல? :)) )

said...

வாய கோணையா வச்சி கிட்டு பேசறத தவிர கருணாநிதி குடும்பம் என்னத்த சாதிச்சதோ தெரியல.

said...

கொழலி பதிவு எழுதினா அவறு "வக்கிர" தலைப்பை எல்லாம் பாத்து அவங்க வீட்ல உள்ளவங்களே வாசிக்க பயப்படுராங்களாம்

said...

கலைஞர் தமிழுக்கு பெருசா எதுவும் பண்ணலை என்பது உன்மைதான்.

மகன் முத்துவை நடிகனாக்கினார், பாடகனாக்கினார்.
மகன் அழகிரியை தென்மாவட்ட பொறுப்பாளராக்கினார், மத்திய அமைச்சர் ஆக்கினார்.
மகன் சுடாலினை துணை பொதுச் செயலாளர் மற்றும் துணை முதல்வராக்கினார்.
மவள் கனிமொழியை "கவிஞர்" ஆக்கி பின் எம்.பி ஆக்கினார்.

ஆனால் இன்னொரு மகனான தமிழ் என்ற தமிழரசுக்கு எதுவுமே பண்ணலை.

இப்போ புரியுது...
கலைஞர் தமிழுக்கு பெருசா எதுவும் பண்ணலை என்பது உன்மைதான்.

-- வேல் --

said...

//ஆனால் இன்னொரு மகனான தமிழ் என்ற தமிழரசுக்கு எதுவுமே பண்ணலை.

இப்போ புரியுது...
கலைஞர் தமிழுக்கு பெருசா எதுவும் பண்ணலை என்பது உன்மைதான்.
//
இவருக்கு கார் டீலர் கம்பெனி ஆரம்பித்து தந்ததற்க்கே DM(Deputy CM), CM(Chemical Minister)கொந்தளித்தார்களாம்... தமிழ் தொழில் வியாபாரம் கார் டீலர்ஷிப் மற்றும் கருணாநிதி தொகுதியின் அன் அஃபிசியல் எம்.எல்.ஏ என செட்டில் ஆகித்தான் இருக்கிறார்