என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன் டா? என்னாது டா வா?

சென்னை வலைப்பதிவர் சங்கம் என்பதை தமிழ் பதிவர்கள் சங்கம் என மாற்றியுள்ளார்களாம், யார் வேண்டுமானாலும் சங்கத்தில் சேரலாமாம் அதனால் நானும் சேரப்போகிறேன்... சங்கத்து கைப்புள்ளைகளா என்னை சேர்த்துப்பிங்க தானே?


சங்கத்தில் சேருவதால் ஏற்படும் நன்மைகள்

1. யாராவது நம்மை அடித்தால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவன் டா என்று 2 கைப்புள்ளைகள் நமக்கு சப்போர்ட்டா வரலாம்

2. நல்லாட்சி நடத்தும் கலைஞர் அய்யா அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தி அதில் நமீதா டான்ஸ் வைத்து அதனால் வீடு ப்ளாட் எதுனா கிடைக்கும் வாய்ப்புண்டு

3. தப்பிதவறி சங்கத்துல எதுனா பொறுப்பு வந்துடுச்சினா கிடைக்கிற லெட்டர் பேடை வைத்து என் பையன் டிராயிங் போடவோ என் பொண்டாட்டி காய்கறி பொருள் வாங்க சீட்டு எழுதி தரலாம்.

4. கைக்காசு போட்டாவது லெட்டர் பேட் அடிச்சி, விசிட்டிங் கார்டு வைத்து இளிச்சவாயன் எவனாவது மாட்டினால் எவ்ளோ பெரிய ஆளு நானுன்னு மொக்கை போடலாம்..

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் சமூகத்தில் சங்கம் வைப்பதற்குள்ளேயே ரத்த களறி ஆகிவிடும் போலுள்ளது, எல்லோரும் கருத்து சொல்லிட்டாங்க என் பங்குக்கு நானும் சொல்லிடறனே, அட கருத்தை சொல்லி என்ன நாட்டையா திருத்தப்போறோம்.

வலைப்பதிவாளர்கள் சங்கம் என்பது கண்டிப்பாக பத்திரிக்கையாளர் சங்கத்துடனோ தொழிற்சங்கத்துடனே இணை வைத்து பேச இயலாது, வலைப்பதிவு என்பது பெரும்பாலோனோருக்கு பொழுது போக்கு அதனால் இந்த சங்கம் இன்னொரு பேனா நண்பர்கள் குழுமம் போன்றோ "வெண்ணிலா கபடி குழு" போன்றோ தான், எனவே சங்கம் ஆரம்பிப்பதாலோ ஆரம்பிக்காமல் விடுவதாலோ ஒண்ணும் பெரியதாக கிடைக்கப்போவதோ இழக்கப்போவதோ இல்லை.

மற்ற சங்கங்களுக்கும் இந்த சங்கத்திற்க்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு, இணைய வெளி என்பது சுதந்திரமான ஒன்று என்பது மட்டுமல்ல ஒருவரே டபுள் டிரிப்புள் ஆக்டிங் எல்லாம் கொடுக்க முடியும், உதாரணத்திற்க்கு தானைத்தலைவருக்கு பாராட்டுவிழா நடத்தி சங்கத்துக்கு இடம் வாங்கப்போகிறோம் ஆதலால் சங்கம் தானைத்தலைவரை விமர்சித்து பதிவுகள் வரக்கூடாது என்று சங்கத்தின் சார்பில் அறிக்கை வாசித்துவிட்டு இந்த பக்கம் வந்து "உண்மை கலைஞர்" "பொய் புலவர்" என்று ஏதோ ஒரு பெயரில் தானைத்தலைவரை செக்க சாத்து சாத்தி அறிக்கைவாசித்தவரே பதிவெழுத இயலும், மேலும் இந்த பதிவரை புறக்கணி அந்த தளத்தை புறக்கணி என்றெல்லாம் சங்கம் கட்டுபடுத்தினால் சங்கத்தை புறக்கணித்துவிடுவார்கள், ஏனெனில் இந்த சங்கம் பதிவர்களின் வாழ்வியலையோ தொழிலையோ சார்ந்துள்ளது அல்ல.

இந்த சங்கம் ஒரு மதத்தை போன்றோ கட்சியை போன்றோ இறுக்கமானதாக(tightly coupled) இருந்தால் அது தானாகவே காணாமல் போய்விடும், சங்கம் பதிவர்கள் மீது செலுத்தும் ஆளுமையோ பிணைப்போ தளர்வானதாக இருக்க வேண்டும் (loosely coupled) அப்படி இருந்தால் மட்டுமே தொடர்ச்சியாக இருக்க இயலும்.

தற்போது வரை இணைய கதை கவிதை, கட்டுரை போட்டிகள்பெரும்பாலும்(மணற்கேணி மற்றும் சில முயற்சிகள் தவிர்த்து) தனிநபர் முயற்சிகளாகவே உள்ளன, தனி நபர்கள் சோர்வடையும் போது அந்த முயற்சிகளில் தொடர்ச்சி இருக்காது, பணம், வேலை பளு பகிர்தல் போன்றவையும் விட முயற்சிகளின் தொடர்ச்சி முக்கியம்.


இங்கே சிங்கை வலைப்பதிவர்கள் முயற்சியால் நடைபெற்ற மணற்கேணி போட்டி நிகழ்வுகளில் பதிவர்களின் ஒருவனாக நானும் பங்கெடுத்தவன் என்ற முறையில் தெரிந்ததை சொல்கிறேன்.அந்த போட்டிக்காக சிங்கை வலைப்பதிவர்கள் ஒவ்வொருவரும் பெரும் முயற்சி எடுத்துள்ளார்கள், இணைய தளம் வடிவமைப்பில் ஆரம்பித்து தலைப்புகள் விவாதித்தது, நடுவர்கள் தேர்ந்தெடுத்து தொடர்பு கொள்ளல், போட்டி பற்றி பலருக்கும் தனிப்பட்ட முறையில் எடுத்து சொல்வது போட்டி கட்டுரைகளை கையால் எழுதப்பட்டு ஸ்கேன் செய்து வந்தவைகள், PDF வடிவத்தில் வந்தவைகளை எல்லாம் கை வலிக்க டைப் அடித்தது, பணம் நன்கொடை, தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களை அழைத்து வர அவர்களுக்கு பயணம் தொடர்பான உதவிகள் செய்தல், அடுத்த மாதம் அவர்கள் வரும்போதான நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஒருங்கிணைப்புகள் மேலும் இதில் விடுபட்ட மேலும் பல பணிகள் என அத்தனையும் தனி நபர்களோ ஒரு சிலராலோ நிச்சயம் செய்ய இயலாது, இவை அனைத்தும் சிங்கை வலைப்பதிவர் குழுமம் என்ற 20க்கும் மேற்பட்ட பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளித்ததாலேயே சாத்தியமாகின்றது. இது எல்லாவற்றையும் விட இதை குழுமமாக செய்யும்போது ஒரு தொடர்ச்சி இருக்கும், இந்த ஆண்டு இந்த முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிங்கப்பூரில் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த முயற்ச்சி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடக்கும், இதுவே குழுமமாக இல்லாமல் போனால் தனி நபர்கள் ஆர்வம் இழக்கும் போது அந்த முயற்ச்சி அதோடு நின்றுவிடும்.

மேலும் தமிழ் மெண்பொருட்கள் தயாரித்தல் என்பது தனி நபர் முயற்ச்சிகளாகவோ அல்லது சில நிறுவனங்களின் முயற்சிகளாகவோ உள்ளன, தனிநபர் மற்றும் நிறுவன முயற்சிகள் அவரவர்களுக்கே சொந்தமாகுமேயொழிய தமிழ் சமுதாயத்துக்கு சொந்தமாகாது, தமிழில் ஒரு நல்ல OCR, பிழைதிருத்தி போன்ற மென்பொருட்கள் இல்லை, தமிழ் OCR உருவாக்க முயற்சித்த போது 30,000 ரூபாய் செலவும் அதைவிட முனைப்பான முயற்ச்சியும் தேவைப்படுமென தெரிய அந்த முனைப்பு அப்படியே கிடக்கின்றது, இது போன்றவைகளை சங்கமாக இருந்தால் எளிதாக செய்யலாம் மேலும் சங்கமாக இருந்தால் முதலிலிருந்து வேறொருவர் ஆரம்பிக்காமல் விட்ட இடத்திலிருந்து புதியவர் தொடங்கலாம்.

இது மாதிரி முயற்சிகள் தவிர்த்து சங்கம் அமைத்தால் சட்டபாதுகாப்பு, ஆட்டோ பாதுகாப்பு என்றெல்லாம் சொல்வது நடைமுறை சாத்தியமில்லை, கருணாநிதியை,ஜெயலலிதாவை மற்றும் பலரை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கி பதிவுகள் எழுதுகிறோம், இதையே தினம் கருணாநிதி பதிவு படிக்கிறார் அவரை விமர்சித்து எழுதுபவர் மீது காண்டாகி நடவடிக்கை எடுக்கிறார் என்றால் சத்தம் போடாமல் எழுதிய பதிவுகளை அழித்துவிட்டு வாயையும் டேஷ்ஷையும் மூடிக்கொண்டு போய் கொண்டே இருக்கலாமேயொழிய சங்கத்து சிங்கங்களை கூப்பிட்டு பஞ்சாயத்துக்கு போவது சற்று கடினமே.

வலைப்பதிவர்களுக்காக ஒரு குழுமம் அல்லது சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்களில் கனவு மின்ன பைத்தியக்காரனிடம் பேசிய பாலபாரதி இன்று சங்கம் அமைக்க போகிறார்கள் என்றவுடன் "என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது." என்று எழுதுவதற்க்கு பின்னால் எத்தனையோ "சொந்த" "தனிப்பட்ட" காரணங்கள் இருக்கலாம் இவைகளையெல்லாம் விலக்கிவிட்டு பார்த்தால் சங்கம் என்ன செய்யப்போகிறது என்பதற்க்கு சரியானதொரு விளக்கத்தை தந்துவிட்டு போய்கொண்டே இருக்கலாம். சங்கம் "டைட்டானால்" மல்லாக்க படுத்துக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சங்கத்தால் பிடிக்காத பதிவர்களை புறக்கணிக்க சொல்ல முடியும் என்றால் தமிழ்மணம் தளத்தை எத்தனையோ முறை சிலர் புறக்கணிக்க சொன்னார்கள், ஆனால் இன்னமும் தமிழ்மணம் சிறப்பாக செயல்படுகிறது அது போல இணையத்தில் சாத்தியமில்லை, இணையவெளி முன்பு போல யாகூ குழுமங்கள் போன்றோ அல்லது கிராமமோ அல்ல ஊரைவிட்டு தள்ளிவைத்தவர்கள் வீட்டிற்க்கு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு போய் தான் பார்க்க வேண்டும் என...

ஆனால் இதை பார்ப்பனர்கள் சதி, ஆரிய அடிவருடிகளின் சதி என்று பாலிடிக்ஸ் செய்வதிலும் மூத்த பதிவர்களை வெத்தலை பாக்கு வைத்து அழைக்கவில்லை கலக்கவில்லை என்பதும் சங்க வேலைகளில் முனைப்பாக இருப்பவர்களின் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் போன்ற எதிர்ப்புகளையும் ஓரங்கட்டிவிட்டு உண்மையிலேயே என்னடா என்று யோசித்தால் எதிர்ப்புக்கு காரணமாக வெளிப்படையாக சிலர் சொல்லவில்லையென்றாலும் கீழ் கண்ட காரணங்களை வைத்து எதிர்க்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.

1. இந்த சங்கத்தை வைத்து பணம் சம்பாதிக்க போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்...
- இந்த சங்கத்தை ஆரம்பித்து 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கேபிள் சங்கர் படமா எடுக்கப் போகிறார்? இதில் புழங்கப்போகும் பணம் சிறுசா பெருசா என்பதெல்லாம் இப்போது தெரியாது, பெரிய பணம் புழங்க வாய்ப்பும் மிக குறைவு, அப்படியே புழங்கினாலும் சரியான ஆடிட்டிங் போன்றவைகள் இருந்தால் தான் தொடர இயலும். தொடக்கத்தில் சங்கத்து சிங்கங்கள் கைக்காசை இழக்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்

2. இந்த சங்கத்தை வைத்து பிரபலமடையப்போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்...
- இருக்கலாம் வாய்ப்புகள் உண்டு, ஒரு வேலையை இழுத்து போட்டு செய்பவர்களுக்கு அதற்கான அங்கீகாரமாக இவர்கள் பெயர் நாலு பேருக்கு தெரிய வாய்ப்புண்டு, சென்ற முறை சென்னை பதிவர் பட்டறை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய பாலபாரதி மற்றும் பல சிறந்த பட்டறை ஏற்பாட்டாளர்கள் பெயர் ஹிந்து உள்ளிட்ட நாளிதழ்களில் வந்தது இது அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்ற தளங்களின் பெயர்களும் வெளிவந்தது.

3. இந்த சங்கத்தை வைத்து வலைப்பதிவுகளுக்கு அத்தாரிட்டி ஆகப்போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்
- இணைய பெருவெளியில் இந்த அத்தாரிட்டிகளுக்கெல்லாம் வேலையே இல்லை, ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகால தமிழ் இணையத்தில் பல அத்தாரிட்டிகள் வந்து போயுள்ளார்கள்,

4. இந்த சங்கத்தை வைத்து ஆதாயமடையப்போகிறார்கள்
- இதற்க்கு முன் வலைப்பதிவுகளின் பிரபலத்தை வைத்துக்கொண்டு கிடைத்த அறிமுகங்களை வைத்துக்கொண்டு சிலர் என்னென்ன எல்லாம் சொந்த ஆதாயங்கள் அடைந்தார்களோ(விரிவாக இதுப்பற்றி பேச விரும்பவில்லை) அவைகள் எல்லாம் இவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புண்டு

இவைகளையெல்லாம் தாண்டி தான் பதிவர் சங்கம் என்றில்லை எந்த சங்கமும் வைக்க இயலும்.

அப்போ சங்கம் ஆரம்பிச்சா எந்த தப்புமில்லையா என்றால் சங்கம் சில குழும ஆக்கிரமிப்புக்குள்ளாகவோ சார்பு நிலைப்பாடெடுக்கவோ, அதிகார பீடங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவோ சிலருக்கு உதவலாம், கட்சிகளை போன்று கட்டம் கட்டுதல், வலைப்பதிவு அத்தாரிட்டி ஆகுதல் என போகலாம், ஆனால் இதையும் கடந்து தான் முயற்சிகளை எடுக்கல் இயலும் என நம்புகிறேன். நம்பிக்கையோடு ஆரம்பிக்கலாம், பிடிக்கவில்லையென்றால் சங்கத்தை விட்டு விலகுவதோ, சங்கத்தை உடைப்பதோ அல்லது புது சங்கம் ஆரம்பிப்பதோ ஏதோ ஒன்றை செய்துவிட்டு போகலாம்.

இணைய சுதந்திரம் பாதிக்கப்படுதல், குழு ஆக்கிரமிப்பு போன்றவைகளை சரியாக நிர்வகித்து சங்கம் சரியான தெளிவான வேலைதிட்டத்துடன், சார்பின்றி, தன்முனைப்பு குறைவாக்கிக்கொண்டு பதிவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தால் பல முயற்சிகளை தொடர்ந்து செய்யவும் பல தமிழ் கணிணி செயலிகளும் கிடைக்க வாய்ப்புண்டு.

பின்குறிப்பு:
வலைப்பதிவுகளுக்கு ஒரு சங்கம் தான் இருக்கனுமென்ற அவசியமில்லை, திமுக,அதிமுக,மதிமுக என்றெல்லாம் இருப்பது போல பல சங்கங்கள் ஆரம்பிச்சிக்க வேண்டியது தான்

25 பின்னூட்டங்கள்:

said...

குழலி,
பொறுமையாக கூர்ந்து கவனித்து, தகவல்களை திரட்டி தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

பலவற்றில் உடன்பாடு... சிலவற்றில் மறுப்பும் இருக்கு... பிறகு எழுதுகிறேன்.

//இணைய சுதந்திரம் பாதிக்கப்படுதல், குழு ஆக்கிரமிப்பு போன்றவைகளை சரியாக நிர்வகித்து சங்கம் சரியான தெளிவான வேலைதிட்டத்துடன், சார்பின்றி, தன்முனைப்பு குறைவாக்கிக்கொண்டு பதிவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தால் பல முயற்சிகளை தொடர்ந்து செய்யவும் பல தமிழ் கணிணி செயலிகளும் கிடைக்க வாய்ப்புண்டு.
//

வேலைத்திட்டங்களை முன்னெடுத்து உழைப்பவர்களுக்கு கும்பல் கூட்ட வேண்டிய அவசியம் இருக்காது.

உழைப்பவனுக்கு அமைப்போ, அதிகாரமோ எப்பொழுதும் பெரிய தேவையாக இருக்காது. அது தானாக ஒன்றிணைந்து உருவாகும்.

வேலைத்திட்டத்தை முன்வைத்து குழுமமாக உருவாகும்பொழுது விருப்பமானவர்கள் இணைந்துக்கொள்வார்கள், மற்றவர்கள் அவர்கள் வேலையை பார்ப்பார்கள்.

எ.கா:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

3 ஆண்டுகளாக பல்வேறு தமிழ் கணிமை பட்டறைகளை, கருத்தரங்கங்களை நடத்தியிருக்கிறார்கள். ஏதாவது கூச்சல் உண்டா?

நன்றி

said...

ஸாரி மிஸ்டர் ஆளப்பிறாந்தவன், உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டு பிரச்சினையை பெரிதாக்க விரும்பவில்லை

said...

//
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

3 ஆண்டுகளாக பல்வேறு தமிழ் கணிமை பட்டறைகளை, கருத்தரங்கங்களை நடத்தியிருக்கிறார்கள். ஏதாவது கூச்சல் உண்டா?
//
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சிறப்பான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள், நிச்சயம் பாராட்டுக்குறியவர்கள்...

said...

சங்கம் பற்றிய உங்களின் அவதானங்கள் மெய்யே. அமைப்பு, குழுமம், சங்கம், சபா இவைகளின் அடிப்படை அரசியல் ஆராயப்பட​வேண்டியது.

சென்னை வலைப்பதிவர் சங்கம் பற்றி ​மொக்கையான பதிவுகள் மட்டுமே படித்து அறிந்து கொள்ள முடிகிறது. அந்த மட்டில் சக பதிவர்களுக்கு இந்த சங்கமமைப்பு மேல் ஏதாவது ​கோபம் இருக்கலாம் (//மற்ற சங்கங்களுக்கும் இந்த சங்கத்திற்க்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு, இணைய வெளி என்பது சுதந்திரமான ஒன்று //) என்பது ​போல.

அதைக் காத்திரமாக எடுத்துச் ​சொல்லி, குறைகள் களைந்து சங்கம் அமைக்கப்பட்டால் மகிழ்வே!

வெளிநாடுகளில் தமிழ் சங்கங்களின் ஆளுமை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அது​போல் இதையும் நிறுவலாம் அல்லவா?

said...

பின்னூட்டங்கள் மதியத்திற்க்கு மேல் வெளியிடப்படும் தற்போது வெளியில் செல்கிறேன் நன்றி

said...

ரைட்ணே..
என்னமோ பண்ணட்டும்..

என்னாத்த சொல்லி என்னாத்த செய்ய..

said...

:)

Anputan
சிங்கை நாதன்

said...

//வலைப்பதிவர்களுக்காக ஒரு குழுமம் அல்லது சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்களில் கனவு மின்ன பைத்தியக்காரனிடம் பேசிய பாலபாரதி


இன்று சங்கம் அமைக்க போகிறார்கள் என்றவுடன் "என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது."

என்று எழுதுவதற்க்கு பின்னால் எத்தனையோ "சொந்த" "தனிப்பட்ட" காரணங்கள் இருக்கலாம். //

தல.. அவதானிப்புக்கு நன்றி!

முதலில்.. எனக்கு கொஞ்சம் மறதி அதிகம். கண்களில் கனவுடன் நான் பேசியது நினைவில் இல்லை. ஒருவேளை நான் அப்படி பேசி இருந்தால்.. அது நிச்சயம் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கலாம். இப்போது இருக்கும் அறிவு அப்போது இல்லாதிருந்திருக்கலாம். :)

பதிவர்கள் இணைந்து செயல்பட வேண்டும்/முடியும் என்பது தான் இப்போதும் என் எண்ணம்.

மற்றபடி, நான் அதில் இணைய முடியாது என்றது இன்றைய பக்குவத்தினால் தான்.
சொந்த/வாடகை/தனிப்பட்ட விசயங்களினால்.. அதை எழுதவில்லை..

said...

//முதலில்.. எனக்கு கொஞ்சம் மறதி அதிகம். கண்களில் கனவுடன் நான் பேசியது நினைவில் இல்லை
//
தல நீங்கள் கண்களில் கனவு மின்ன பைத்தியக்காரனிடம் பேசியதை http://naayakan.blogspot.com/2010/03/blog-post_28.html இங்கே பைத்தியக்காரன் எழுதிய இந்த //நண்பர் பாலபாரதி தேனீர் பருகியபடி என்னிடம் வலைப்பதிவர்களுக்காக ஒரு குழுமம் அல்லது சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்களில் கனவு மின்ன பேசியது நினைவுக்கு வந்தது. // வரிகளில் இருந்து அறிந்து கொண்டேன்

//நான் அதில் இணைய முடியாது என்றது இன்றைய பக்குவத்தினால் தான்.
//
உங்களுக்கு மூண்றாண்டுகளுக்கு முன் இல்லாமல் இன்றைக்கு இருக்கும் பக்குவம் சிலருக்கு இன்றைக்கு இல்லாமல் இன்னும் மூன்றாண்டுகளுக்கு பிறகு வரலாம்..

//சொந்த/வாடகை/தனிப்பட்ட விசயங்களினால்.. அதை எழுதவில்லை..
//
நன்றி... நீங்களே சொல்லிவிட்டீர் வேறென்ன இருக்கு நீங்கள் சொன்னபடி தான் இருக்க வேண்டும்.

said...

தசாவதாரம் படம் வந்தப்போ அதென்ன கேயாஸ் தியரி, பட்டர் பிளை எபெக்ட் என்றெல்லாம் நிறைய விமரிசனங்கள் வந்தன. அப்போதெல்லாம், என்னை மாதிரிப் பாமரர்களுக்குப் புரிந்துகொள்ள முடியாத, ஓலைக நாயகன் மாதிரி அறிவுஜீவித்தனமானநபர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய விஷயமாக்கும் என்றுதான் இணைத்திருந்தேன்!

இப்போது,தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஓன்றை ஆரம்பிக்க முடிவு செய்து விட்டதாகச் சொன்னவுடன் கிளம்பிய புழுதி, புயலைப் படித்துப் பார்த்தவுடன், கேயாஸ் தியரி, பட்டர்பிளை எபெக்ட் எல்லாமே புரிய ஆரம்பிச்சிடுச்சு சாமிங்களா!

ஆனால், ஒரு பதிவில் இன்னார் இன்னார் மட்டும் தான் இந்த மாதிரி சங்கம், குழுமத்துக்குத் தலைமை தாங்கத் தகுதி உள்ளவர்கள் என்ற கருத்தைப் படித்தவுடன், தமிழ்பதிவுலக நுண்ணரசியல் இன்னமும் புரிய மாட்டேங்குதே!

அதெல்லாம் புரிய, இன்னொரு தபா பதிவுலகத்தில் சுனாமி மாதிரி ஏதாச்சும் வரணுமா என்ன?

யாராச்சும் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்களேன்! ப்ளீஸ்! ப்ளீஸ்!

said...

முதலில் சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதன் செயல்பாடுகள் குறித்த வரையறை எல்லைகள் குறித்து தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்ற சில தொழில்நுட்ப வேலைகளைச் செய்யலாம். மற்றபடி சங்கத்தில் சேர்ந்தால் பிரெஸ் கார்ட் வாங்கலாம், வீடு வாங்க பத்திரிகையாளர் சங்கம், பிரிஜ் வாங்க வேண்டுமா, பிளாக்கர் சங்கத்தில் சேருங்கள் என்றெல்லாம் சொல்வது அபத்தம். அதேபோல் ஸ்கூல் ஸ்கூலாகப் போய் பிளாக் எழுதுவதைப் பற்றி வகுப்பு எடுப்பது, பிளாக்கர்களின் தொழில்நுட்ப பிரச்சினைகளைச் சரிசெய்ய அலுவலகம் போடுவது, ஆட்களை நியமிப்பது என்பதும் முட்டாள்தனமான யோசனைகளே. இனி வரும் தலைமுறை இணையத்தில் தானாகவே இயங்கத் தொடங்கும். பேஸ்புக், ஆர்குட் தெரிவதைப் போல பிளாக்குகள் அறிமுகமாவதும் தானாக நடக்கிற காரியம். மேலும் பிளாக் எழுதுவதைப் பரப்புவதால் ஆகக் கூடிய காரியம்தான் என்ன? பத்திரிகையாளர் சங்கத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் அரசு வீடு ஒதுக்கவில்லை என்கிற உண்மையை இந்த மாதிரி அபத்தமான எடுத்துக்காட்டுகளைச் சொல்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் எனக்கு எப்போதோ ஏற்படப்போகும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்காக எதற்காக அலுவலகம், பணியாட்கள், நான் ஏன் மாதா மாதம் சந்தா கட்ட வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்புதானே?

said...

//இப்போது,தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஓன்றை ஆரம்பிக்க முடிவு செய்து விட்டதாகச் சொன்னவுடன் கிளம்பிய புழுதி, புயலைப் படித்துப் பார்த்தவுடன், கேயாஸ் தியரி, பட்டர்பிளை எபெக்ட் எல்லாமே புரிய ஆரம்பிச்சிடுச்சு சாமிங்களா!
//
:-))

said...

கூட்டத்தில் நண்பர் உண்மைத்தமிழன் அச்சடித்துக் கொண்டு வந்திருந்த டிராப்ட்தான் குழப்பத்தின் தொடக்கத்திற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அதிலே ஆரம்பத்திலேயே ஒரு அபத்தமான கேள்வி, ‘நாம் இனி எப்படி செயல்பட வேண்டும், குழுமமாகவா, சங்கமாகவா, கட்சியாகவா?”. நானும் டோண்டு ராகவனும் எப்படி ஒரு கட்சியாக செயல்பட முடியும் என்கிற தர்க்க யோசனை கூட இல்லாமல் என்ன ஒரு அபத்தமான கேள்வி! மேலும் குழுமம் ஆரம்பிக்கப்படுவதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது, ‘பதிவர்களுக்கு இடையிலான கருத்துவேறுபாடுகள் மறைந்து பின்னூட்டப்பெட்டி அர்த்தமுள்ள கருத்துக்களால் நிறையும்”. கருத்து என்று இருந்தால் கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். மேலும் அர்த்தமுள்ள பின்னூட்டம் வருவதற்காக ஒரு சங்கமா? சங்கம் குறித்த ஆதரவாளர்கள் சங்கத்தில் லிமிடேஷன்களை வெளிப்படையாக் அறிவிக்காமலும் அபாரமான கற்பனைகளிலிருந்தும் பிரமைகளிலிருந்தும் வெளியே வராதவரை ஏட்டிக்குப் போட்டியாகவாவது விவாதங்கள் தொடரத்தான் செய்யும்.

said...

சுகுணாதிவாகர் சங்கம் வேண்டவே வேண்டாம் என்று சொல்லும் அளவிற்க்கு அதில் எந்த ஆபத்துமில்லை, கண்டிப்பாக சங்கம் இருந்தே தீரணும் என்கிற அவசியமும் இல்லை, சங்கம் இருந்தால் தெளிவான நோக்கங்களுடன் இருந்தால் நிச்சயம் சில விசயங்களை செய்ய இயலும், இணையத்தில் தமிழ் வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முகுந்த் கொடுத்த கலப்பையில் உழுது கொண்டும் ஒரு OCR கூட இல்லாமலும் இருக்கிறோம்.

கண்டிப்பாக எல்லோரும் சேரனும் என யாரும் கழுத்தில் கத்தி வைப்பதாக தெரியவில்லை, யாரோ சிலர் ஆரம்பிக்கட்டுமே நடத்தட்டுமே, என்னதான் செய்கிறார்கள் என பார்ப்போம், பிடிச்சிருந்தா சரியாக தோன்றினால் நாமளும் சேருவோம் பங்களிப்போம்,இல்லைன்னா சேராம விட்டுடுவோம் அதுவும் இல்லைன்னா போட்டிக்கு ஒரு சங்கம் ஆரம்பிப்போம், அட சங்கத்துல கலகம் கூட செய்யலாமே, ஆனா எதுவும் ஆரம்பிக்கும் முன்னாலேயே நொங்கெடுப்பதில் எனக்கு சற்று உடன்பாடில்லை...

சங்கமில்லாத சங்கமாக வலைப்பதிவில் சங்கம் வைத்து நடத்தியவர்களே நொங்கெடுக்கும் போது நொங்கெடுப்பவர்கள் நோக்கத்தின் மீது சந்தேகம் எழுவது இயல்பே

said...

சுகுணா உங்களின் இரண்டாவது பின்னூட்டத்திற்க்கு ஒரு ஸ்மைலி போடுவதை தவிர வேறென்ன செய்ய இயலும் என்னால் :-)

said...

நானும் உங்கள் கருத்தில் முரண்படவில்லை. எனது தனிப்பட்ட சுதந்திரத்தையோ அரசியல் கருத்தையோ பாதிக்காத வெளி வரை குழுமத்தில் இணைவதற்கு எந்த தடையுமில்லை. ஆனால் அதன் செயல்பாட்டு எல்லைகள் என்பதை வரையறுப்பது தெளிவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறேன். மேலும் இந்த குழுமத்து நிர்வாகிகள் பெண்கள், தலித்துகள், முஸ்லீம்கள், திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆகியோருக்கான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியதும் அவசியம். ஏனெனில் ஏதோ பிளாக்கில் கருத்து சொல்வோம், ஆனால் அது இயங்குதளமாக மாறும்போது எதையும் கண்டுக்கமாட்டோம் என்பது சரியான அணுகுமுறை இல்லை என்றே கருதுகிறேன்.

said...

//நானும் உங்கள் கருத்தில் முரண்படவில்லை. எனது தனிப்பட்ட சுதந்திரத்தையோ அரசியல் கருத்தையோ பாதிக்காத வெளி வரை குழுமத்தில் இணைவதற்கு எந்த தடையுமில்லை. ஆனால் அதன் செயல்பாட்டு எல்லைகள் என்பதை வரையறுப்பது தெளிவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறேன். மேலும் இந்த குழுமத்து நிர்வாகிகள் பெண்கள், தலித்துகள், முஸ்லீம்கள், திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆகியோருக்கான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியதும் அவசியம். ஏனெனில் ஏதோ பிளாக்கில் கருத்து சொல்வோம், ஆனால் அது இயங்குதளமாக மாறும்போது எதையும் கண்டுக்கமாட்டோம் என்பது சரியான அணுகுமுறை இல்லை என்றே கருதுகிறேன்
//
ரைட் நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு பேரும் ஒரே மாதிரி கருத்தோடு ஒரு விசயத்தை பார்க்கிறோம்..

அசல் (ஒரிஜினல்)டிவிடி பார்க்க கிளம்புறேன் வேற வழி கிளம்புறேன் பை

said...

வலைப்பதிவர்கள் குழுமமாக இணைவதில் உள்ள சிக்கல்களாக நான் கூட்டத்தில் சொன்ன கருத்துக்களை இங்கேயும் சொல்லலாம் என்று கருதுகிறேன். தொழில்சார்ந்த வர்க்க அடிப்படையில் சங்கம் அமைப்பது எளிது. ஆனால் இங்கு எல்லோருமே கருத்து உற்பத்தியாளர்களாக இருக்கிறோம் என்கிற அடிப்படை வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா எழுத்தாளர்களையும் இணைத்து ஒரு சங்கம் கட்டுவது இயலாத காரியம். ஜெயமோகனும் அ.மார்க்சும் தமிழ்ச்செல்வனும் ஒரே சங்கத்தில் இணைந்து வேலை பார்க்க முடியுமா? நான் சொல்லாமல் விட்ட ஒரு கருத்தையும் இங்கு சொல்கிறேன். எழுத்தாளர்களுக்குள் ஈகோ இருப்பது என்பது இயல்பான ஒன்று. நேற்று பிளாக் ஆரம்பித்த பதிவரிடமிருந்து சோ கால்ட் மூத்த பதிவர்கள் வரை அனைவருக்கும் ‘தான் ஒரு எழுத்தாளர்’ என்கிற நினைப்பும்(ஆனால் அதெல்லாம் கிடையாது என்று நடிப்பார்கள் என்பது வேறு விஷயம்)ஈகோவும் உண்டு. இதைக் குழுமம் எப்படி சமாளிக்கும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்த ஈகோவின் வெளிப்பாடுதான் பாலபாரதி நடத்தும் ‘போட்டி வலைப்பதிவாளர் சந்திப்பு’. அவர் ரொம்பநாள் எந்த பதிவரையும் சந்திக்க முடியவில்லையாம், அதற்காக ஒரு வலைப்பதிவர் சந்திப்பாம். என்ன ஒரு
நிலப்பிரபுத்துவ மனோபாவம்! இதை அவரது பதிவிலேயே பின்னூட்டமாகவும் இட்டிருந்தேன். முதலில் அதை அனுமதித்திருந்த நண்பர் பாலபாரதி இப்போது அழித்துவிட்டார் போலும். ஆக மொத்தம் எல்லோருக்கும் தலைமை விருப்பம் இருக்கிறது என்பது மட்டும் உண்மை. வடை யாருக்கு மூத்த பதிவர்களுக்கா, புதிய பதிவர்களுக்கா என்னும் விளையாட்டை வேடிக்கை பார்ப்போம்.

said...

:-)

சிறகம்னா பிரிவு(wing)ன்னு பொருளா? சிறப்பு.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்கு வாழ்த்துகள்.

said...

nice analytical post

said...

//ஆக மொத்தம் எல்லோருக்கும் தலைமை விருப்பம் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.//
:-)))))))))

// வடை யாருக்கு மூத்த பதிவர்களுக்கா, புதிய பதிவர்களுக்கா என்னும் விளையாட்டை வேடிக்கை பார்ப்போம்.
//
சுவாரசியமான இந்த விளையாட்டை வேடிக்கை பார்க்கலாம்... சிலருக்கு "வடை போச்சே" என்ற ஃபீலிங்க்ஸ் நன்றாக தெரிகிறது :-)

said...

//இந்த ஈகோவின் வெளிப்பாடுதான் பாலபாரதி நடத்தும் ‘போட்டி வலைப்பதிவாளர் சந்திப்பு’. அவர் ரொம்பநாள் எந்த பதிவரையும் சந்திக்க முடியவில்லையாம், அதற்காக ஒரு வலைப்பதிவர் சந்திப்பாம். என்ன ஒரு
நிலப்பிரபுத்துவ மனோபாவம்! இதை அவரது பதிவிலேயே பின்னூட்டமாகவும் இட்டிருந்தேன். முதலில் அதை அனுமதித்திருந்த நண்பர் பாலபாரதி இப்போது அழித்துவிட்டார் போலும்.//

சுகுணா..

நிச்சயமாக இது ஈகோவினால் நடத்தப்படவில்லை.

நாம இப்போ முதலாளித்துவ சமூகத்தில் தான் வாழ்கிறோன்னு சொல்லுறீங்களா.. :)

மேலும் தாங்கள் இட்ட பின்னூட்டம் அப்படியே தான் உள்ளது பார்க்க..

http://bit.ly/cdJGIu

said...

தல.. என் பின்னூடம் எங்கே?!

said...

//தல.. என் பின்னூடம் எங்கே?!
//
ஆகா இந்த படம்(பதிவு) இன்னுமா ஓடுது? ரிலீஸ் செய்துட்டேன்...

said...

// சங்கம் "டைட்டானால்" மல்லாக்க படுத்துக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.//

நாட்டாம நல்ல தீர்ப்பு .. சரியான காமெடி தல. சிரிச்சு சிரிச்சு புண்ணா போச்சு .......................................வயிரு தான்