ரூபாய் 21,999* 4நாள் 3 இரவுகள் சிங்கப்பூர் டூர்? வெளிநாட்டு டூர்கள், விளம்பரங்கள் பற்றி சில டிப்ஸ்

ரூபாய் 21,999* 4நாள் 3 இரவுகள் சிங்கப்பூர் டூர்

இப்படி ஒரு விளம்பரம் பார்க்கின்றீர்கள்.. ஆகா இவ்வளவு குறைந்த விலையில் சிங்கப்பூர் செல்ல இயலுமா... என்று ஆர்வத்துடன் சிங்கப்பூர் செல்லலாம் என்று கணக்கு போட்டுவிட்டு உள்ளே போவீர்கள்... இருந்தாலும் ஒரு சந்தேகம் இருக்கும் ஒரு வேளை விமான கட்டணம் இல்லாமலோ என்று தோன்றும், கீழே இந்த விலையில் என்னென்னவெல்லாம் இனைக்கப்பட்டிருக்கும் என்ற இடத்தில் போக வர விமான பயணச்சீட்டும் இருக்கும் என போட்டிருக்கும், அடி சூப்பர் ஏர் டிக்கெட்டோடு சேர்த்தே இவ்வளவுதானா என்றிருக்கும்... அதற்க்கும் கீழே விலைக்கு பக்கத்திலேயே போட்டிருக்கும் *குறி பற்றிய குறிப்பு கொடுத்திருப்பார்கள்... அதில் என்னென்னவெல்லாம் இந்த கட்டணத்திலிருந்து விலக்கப்பட்டிருக்குமென்று...

Airport Tax excluded (விமான நிலைய பயன்பாட்டு கட்டணம் நீங்கலாக) அதை படித்தவுடன் அட என்ன டாக்ஸ் எவ்ளோ வரப்போகுது என்றால் அங்கே தான் சிக்கலே இந்த டாக்ஸ் விமானகட்டணத்தை போல இரண்டு மூன்று பங்கு.. சென்னை சிங்கப்பூர் விமாணகட்டனும் வெறும் 2500-4000ரூபாய் தான் ஆனால் இந்த ஏர்போர்ட் டாக்ஸ் ஏறக்குறைய ரூபாய்10,500 இரண்டாவதாக விசா கட்டணம் எக்ஸ்க்ளூடட் என்பார்கள் விசா கட்டணம் ரூபாய்1200-1500 இதெல்லாம் சேர்த்தால் 21,999 + 10,500 + 1500 = 33,999 ரூபாய்... இவைகளை Hidden Charges என்பார்கள்...

இது மட்டுமின்றி சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கான கட்டணங்கள் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவு பணம் எடுக்கும், ஆக முக்கியமான இடங்கள் மட்டும் பார்க்கவேண்டுமென்றாலும் அது ஒரு குறிப்பிட்ட தொகு எடுக்கும், மேலும் இந்த இடங்களுக்கு செல்ல போக்குவரத்து செலவு பார்க்க வேண்டும்

எனவே எந்த விளம்பரமாக இருந்தாலும் கவனிக்க வேண்டியவை
1. ஏர்போர்ட் டாக்ஸ் சேர்த்துள்ளதா
2. விசா கட்டணமும் சேர்த்துள்ளதா
3. அங்கே சுற்றிபார்க்கும் இடங்கள் டூர் அட்ராக்சன்ஸ் டிக்கெட்டும் சேர்த்துள்ளதா. அப்படியென்றால் எவை எவை?

இல்லையென்றால் அது பற்றி முகவர்களிடம் கேளுங்கள் அதன் பின் முடிவுக்கு வாருங்கள்

நமது வலைப்பதிவர் இளையகவி மற்றும் நண்பர்கள் நடத்தும் www.S-TeamHolidays.com நிறுவனம் கேரளா, சிங்கப்பூர் / மலேசியா / இந்தோனேசியா மற்றும் பல பேக்கேஜ் டூர்கள் நடத்துகிறார்கள்... டூர் தொடர்பான தகவல்கள், செக் லிஸ்ட் மற்றும் எந்த சந்தேகமென்றாலும் தயங்காமல் இவர்களிடம் கேளுங்கள்... இலவசமாக டிப்ஸ்கள் தருவார்கள்...

B.Ganeshkumar
+ 91 98949 16242
+ 91 90432 16661
gtalk :- contact.s.teamholidays(at)gmail.com
Yahoo:- steam.holidays(at)yahoo.com
Msn :- steam.holidays(at)hotmail.com

16 பின்னூட்டங்கள்:

said...

Thanks Kuzhali.

Very useful.

Already book mark this page.

Thanks for Sharing!

said...

நல்ல பதிவு, இங்கு வெளிநாட்டு பயணங்களில் விளம்பரங்களால் வரும் குளறுபடிகள் அதிகம்

said...

முக்கியமான பதிவு. நான் போன வருடம் தாய்லாந்து போக முடிவெடுத்தபோது முடி எடுத்துவிட்டது இந்த குழப்பாச்சிகள்.

டிக்கட், ஏர்போர்ட் டாக்ஸ், தங்குமிடம், ப்ரேக்ஃபாஸ்ட் ஃப்ரீயா, ஏர்போர்ட் பிக் அப் .. நிறைய மேட்டர் யோசிக்காமல் கணக்கெடுக்காமல் வெறும் கவர்ச்சியை நம்பி முடிவெடுக்கக் கூடாது!

said...

ரொம்ப நன்றி தல, என் நிருவனத்தை பற்றி நல்ல விதமா நாலு வார்த்தை எழுதுனதுக்கு, இதயும் கொஞ்சம் பாருங்க.


சூப்பர் சிங்கபூர் - 4பகல் 3 இரவுகள் - ( சென்னை - சிங்க்ப்பூர் - சென்னை )

பயணத்திட்டம் :- 4பகல் 3 இரவுகள்

பார்க்கும் இடங்கள் :- சிங்கப்பூர் சிட்டி டூர், (நுழைவுகட்டணம் உள்ளிட்ட, சென்டோசா, அண்டர் வாட்டர் வேல்டு, டால்பின் ஷோ, சாங்ஸ் அப் த ஸீ , ஸ்கை ரெய்டு, பட்டர்பிளை பார்க் ) நைட் சாவாரி, ஜுராங் பறவைகள் பூங்கா.

இந்த பயணத்திட்டம் சிங்கப்பூர் விசா கட்டணம் ( குறைந்த பட்டசம் ஆறுமாத காலம் இருக்கும் செல்லத்தக்க பாஸ்போர்ட் தேவை) , விமானநிலைய வரிகள், சேவை வரிகள் அனைத்தையும் உள்ளடக்கியது.

எங்களிடம் மறைமுக கட்டணங்கள் எதும் கிடையாது, மேலும் ஏர்போர்ட் பிக்கப் & ட்ராப், டூர் அட்ராக்சன்ஸ் பிக்கப் & ட்ராப் வசதிகளும் செய்து தருகிறோம்.

மேலதிக விவரங்களுக்கு contact.s.teamholidays@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது + 91 9894916242 +91 90432 16661 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளவும்

said...

Singapore Package Tour (4 Days 3 Nights)

The Tour package contains the below items
1. Round trip Air ticket from Chennai to Singapore to Chennai
2. Singapore  
It includes 3 nights hotel stay with break fast, tourist pickup from and to Airport, city tour, sentosa (entrance, under water world , dolphin show, songs of the sea, sky ride, butterfly park), night safari. Singapore Jurong birds park
3. Singapore visa processing
(Required minimum of 6 moths passport validity period)
4. Airport taxes
5. Goods Service Tax
6. Airport pickup and drop, Tour attractions pickup and drop

with all the above mentioned tours and attractions tickets.

For One Adult = Rs. 33,500
For One Child = Rs. 31,500

For more information call @ +91 9894916242, +91 90432 16661 or email @ contact.s.teamholidays@gmail.com or log on to http://www.s-teamholidays.com

said...

நிச்சயம் அருமையான பதிவு... தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ’மதுரை- ஆஸ்திரேலியா’ பற்றித் தானாக்கும் என்று நினைத்தேன்.

நல்ல அறிமுகம் தலைவரே

said...

//டிக்கட், ஏர்போர்ட் டாக்ஸ், தங்குமிடம், ப்ரேக்ஃபாஸ்ட் ஃப்ரீயா, ஏர்போர்ட் பிக் அப் .. நிறைய மேட்டர் யோசிக்காமல் கணக்கெடுக்காமல் வெறும் கவர்ச்சியை
//
ஆமாம் முக்கியமாக நம்பிக்கையான ஏஜெண்ட்டுகள் வேண்டும்... முழு விபரமும் சொல்வார்கள், ஏதாவது பிரச்சினை என்றாலும் அவர்களை பிடித்து உலுக்கலாம்...

said...

Mr.Ilaiya kavi,

please expalin there is only sentosa in your list.

For all attractions u mentioned is in sentosa. It comes around 1500indian rupees. What about other attractions?

You dint mention Bird park (which is nice one to see), Chinese garden (this is free actually), Flyer, Universal Studio (around 2000 per head including food and all attractions), Japanese Garden (free).

said...

//You dint mention Bird park (which is nice one to see),//
நைட் சாவாரி, ஜுராங் பறவைகள் பூங்கா.
night safari. Singapore Jurong birds park

என்று அவரின் பின்னூட்டத்தில் உள்ளதே

said...

//For all attractions u mentioned is in sentosa. It comes around 1500indian rupees. What about other attractions?
//
வணக்கம் ரிவோல்ட் நீங்கள் சிங்கப்பூரில் இருக்கின்றீரா வாங்களேன் வலைப்பதிவு சந்திப்புகளுக்கு...

இங்கே இளையகவி குறிப்பிட்டிருக்கும் டூர் அட்ர்ராக்சன் டிக்கெட்டுகள் நிச்சயம் 1500 ரூபாயில் பெற முடியாது விலை இன்னும் அதிகம்...

PR, Singaporen களுக்கு டூர் அட்ராக்சன் டிக்கெட்டுகளில் விலைக்கழிவு உண்டு ஆனால் டூரிஸ்ட்களுக்கு அது கிடையாது... விலைப்பட்டியல்கள் இணையத்திலேயே உள்ளன... 1500 ரூபாயில்(1500/35 = S$43 ஊர்பணம் டாலர் ஆகும்போது அதிகம் கட்டவேண்டும்)இளையகவி சொல்லியுள்ள இடங்களை 45 வெள்ளியிலும் கூட பார்க்க இயலாது

உதாரணம் சாங்ஸ் ஆஃப்த சீ மட்டுமே 15 வெள்ளி இந்திய ரூபாய் ரூபாய் 525, காம்போ பேக் போனாலும் சரி நீங்கள் சொன்ன 1500ல் முடியாது

said...

குழந்தை என்றால் Infant என்பதை சொல்கிறீர்களா அல்லது 3 வயசுக்கு மேலே உள்ள குழந்தையா ? என்னிடம் Infant உள்ளது. அதற்கும் அதே கட்டணமா ?

said...

நல்ல பயனுள்ள இடுகை குழலி, உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

said...

//Mr.Ilaiya kavi,

please expalin there is only sentosa in your list.

For all attractions u mentioned is in sentosa. It comes around 1500indian rupees. What about other attractions?

You dint mention Bird park (which is nice one to see), Chinese garden (this is free actually), Flyer, Universal Studio (around 2000 per head including food and all attractions), Japanese Garden (free).//


Birds Park மற்றும் Night Safari எங்களின் பேக்கேஜ்ஜில் உள்ளது... எனவே இதற்க்கு பணம் கட்ட தேவையில்லை... சைனீஸ்கார்டன், ஜப்பானிஸ்கார்டன் போன்றவைகளுக்கும் போன்றவற்றிற்க்கும் வாகனவசதி அழைத்து சென்று வரப்படும் ஃப்ளையர் , யுனிவர்சல் ஸ்டூடியோ எல்லா பயணிகளும் விரும்புவார்களா என்பது கொஞ்சம் சந்தேகம், Must See இடங்களை கவர் செய்கிறோம்... மற்றவைகள் அவரவர்கள் விரும்பினால் கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம் டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து தரப்படும்

said...

//April 23, 2010 6:03 PM
செந்தழல் ரவி said...
குழந்தை என்றால் Infant என்பதை சொல்கிறீர்களா அல்லது 3 வயசுக்கு மேலே உள்ள குழந்தையா ? என்னிடம் Infant உள்ளது. அதற்கும் அதே கட்டணமா ?//


infant - மூன்று வயதுக்கு குறைவு இதற்க்கு விமானக்கட்டனம் மற்றும் விசா கட்டணம் மட்டுமே மற்றவைகள் அனைத்தும் இலவசம்
3 முதல் 11 வயது உள்ளவர்களே child என்ற வரையறையில் வருவார்கள்.

said...

கூடவே இளைய கவியும் வருவாரா...

குலை நடுக்கத்துடன்..
கும்க்கி.

said...

//கூடவே இளைய கவியும் வருவாரா...

குலை நடுக்கத்துடன்..
கும்க்கி.
//
சிங்கப்பூருக்கு அவரு வரமாட்டார் தல, ஆனா நான் வரலாமா ஓகே வா?