நட்சத்திரம் - சமாஜ்வாடி கட்சியும் பாமகவும்

சமாஜ்வாடி கட்சி வடமாநிலங்களில் குறிப்பாக உத்திர பிரதேசத்தில் வலுவான கட்சி சில முறை ஆட்சி செய்த கட்சியும் கூட, அதன் பின்புலங்கள் பார்த்தால் அது கட்டமைக்கப்பட்டதே பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் இசுலாமிய மக்களின் முன்னேற்றத்திற்காக, இந்த மூன்று இனங்களின் இனைவு ஒரு பலமான சக்தியாக உ.பி. அரசியலில் உள்ளது,இதே நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் பாமகவும், அதன் நிறுவனராக மருத்துவர் இராமதாசு இருந்தாலும் பாமகவின் தோற்றத்திற்கு முக்கிய பணியாற்றியவர்கள் இசுலாமிய தலைவர் பழனிபாபாவும் தென் மாவட்டங்களில் வலுவாக இருந்த தலித் தலைவர் பசுபதி பாண்டியனும்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இசுலாமிய இனத்தவர்களின் வாழ்க்கை நல்ல நிலையில் இல்லை(இன்று வரை), முக்கியமாக இந்த இனங்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியில்லாத நிலை, இவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது தான் பாமக.

மருத்துவர் இராமதாசுவும் தன்னை ஒரு வன்னிய இனத்தலைவராக மட்டும் முன்னிறுத்தாமல் பிற்படுத்தப்பட்ட இனத்தின் தலைவராக முன்னிறுத்திதான் பாமகவை ஆரம்பித்தார், இன்றைய நிலையில் பாமகவின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 14பேர் மட்டுமே வன்னியர்கள்(எண்ணிக்கையில் ஒன்றிரண்டு கூட குறைய இருக்கலாம்) மற்ற அனைவரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களே.

இம் மூன்று இனங்களின் இணைவு உ.பி.யில் செய்த விழிப்புணர்ச்சி புரட்சியைப் போல் தமிழகத்திலும் செய்ய தலைப்பட்டார்கள் இராமதாசுவும்,பழனிபாபாவும், பசுபதி பாண்டியனும், ஆனால் எதிர்பார்த்த அளவு இதற்கு வெற்றி கிடைக்கவில்லை, இன்னும் சரியாக சொல்வதென்றால் பாமக ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திற்கும் அதன் வளர்ச்சியை எதிர்பார்த்த அளவிற்கும் தற்போது இல்லை என்பதே உண்மை.

பழனிபாபா கொலையான பிறகு அந்த இடத்தை இசுலாமிய தலைவர்கள் யாரும் நிரப்பவில்லை, தற்போதைய நிலையில் பெரும்பாலான இசுலாமியர்களின் நிலையும் வாழ்க்கை தரமும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை, அவர்களில் பெரும்பாலானோர் சுரண்டப்படும் நிலையிலேயே உள்ளனர், என்ன ஒரு வித்தியாசமென்றால் அவர்கள் சுரண்டப்படுவது அவர்கள் இனத்தின் பெரும் பணக்காரர்களால், தற்போதுள்ள தமிழக இசுலாமிய தலைவர்கள் மீதான குற்றச்சாட்டாகவே இதை வைக்கின்றேன், இந்த தலைவர்கள் விழிப்புணர்ச்சியின்றியும், வாழ்க்கை முன்னேற்றமின்றியும், கல்வியறவு இல்லாமலும் இருக்கும் இம் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முயலாமல் மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அது தொடர்பாகவே இயங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பசுபதி பாண்டியனின் விலகலுக்கு பிறகு தலித் இனத்தினரின் பங்களிப்பு குறைந்துவிட்டது இவையெல்லா வற்றையும் விட ஊடகங்கள் பாமகவின் இந்த தோல்விக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதே பிரச்சினையை முன்பு திமுக எதிர்கொண்டது, ஆனால் அந்த காலகட்டத்தில் ஊடகங்களுக்கு பலமில்லை, ஊடகங்களால் பெரும்பான்மை மக்களை நெருங்க முடியவில்லை, ஊடகங்கள் சித்தரிக்க முயன்ற பிம்பம் யாருக்கும் தெரியவில்லை, ஆனால் திமுகவிற்கு இருந்த ஆள்பலத்தினால் தெருமுனை கூட்டங்கள் மூலமாக திமுக மக்களை நெருங்கியது, ஆனால் தற்போது ஊடகங்கள் சாதாரண பொது மக்களின் மூளை வரை செல்கின்றது, இதை பயன்படுத்தி ஊடகங்கள் பிற்படுத்தப்பட்ட, தலித் தலைவர்களின் மீது வன்முறையை அரங்கேற்றி வருகின்றது.

வடமாவட்ட கடலோர மீனவ இன மக்களின் வாழ்க்கை தரம் மிகக் குறைவான நிலையிலேயே உள்ளது, இன்றைய நாள் வரை அந்த சமுதாயத்தில் பெரும் மாற்றம் ஏதும் வரவில்லை, இராமதாசு அவர்களின் முயற்சியால் மீனவ இனத்தின் முக்கிய பிரமுகர்கள் பாமகவில் சேரும்படி செய்தார், தொடக்க காலத்தில் ஹிலால் என்கிற மீனவ சமுதாயத்தின் முக்கிய பிரமுகர் பாமகவிலிருந்தார், இதனால் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டிருந்த வன்னிய, மீனவர்கள் மோதல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது, பாண்டிச்சேரி பாமக உறுப்பினர் பேராசிரியர் இராமதாசு மீனவ இனத்தை சேர்ந்தவர், இன்றைக்கும் பாமகவில் வன்னிய இனத்திற்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பவர்கள் தலித் இனத்தை சேர்ந்தவர்களே, இராமதாசு அவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை அரவணைத்து ஒரு இனக்கமான சூழ்நிலைக்காக பாடுபட்டவர் எத்தனையோ முறை உள்ளுக்குள்ளேயே அழுத்தங்கள் தரப்பட்ட போதும் அவர் விரும்பியது ஒரு இணக்கமான சூழலையே.

வன்னிய இன வட்டத்திலிருந்து இராமதாசு வெளியே வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் அவரை ஒரு வன்னிய இனத் தலைவராக மட்டுமே சித்தரிக்கும் வேலையை ஊடகங்கள் தொடர்ந்து செய்து வந்தன, வன்னியர் சங்கம் மரம் வெட்டியதை வேறு விதமாக சித்தரித்து காட்டியும், மறக்காமல் இருக்கும் படியும் தொடர்ந்து பார்த்துக் கொண்டன, மேலும் இதையே காரணமாக காட்டி தொடர்ந்து இவர்களின் மீது மற்றைய பிற்படுத்தப்பட்ட மக்களும் அவ நம்பிக்கை கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றன.

பழனிபாபா இறப்பு, ஹிலால் இறப்பு, பசுபதி பாண்டியனின் விலகலுக்கு பிறகு மற்றைய இனத்தவர்களின் பங்களிப்பும் ஊடகங்களின் தொடர் வன்முறையினாலும் மீண்டும் மீண்டும் பாமக வன்னிய வட்டத்தில் சுருக்கப்பட்டது, இதனால் பகுஜன் சமாஜ் கட்சி மாதிரி ஒரு பலமாக வர வேண்டிய கட்சி இன்னமும் நான்காவது இடத்திலேயே தமிழகத்தில் உள்ளது.

பாமகவின் அத்தனை போராட்டங்களும், திருமாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட தமிழ் பாதுகாப்பு பேரவையின் போராட்டங்களும் கொச்சை படுத்தப்பட்டன, புகைப்பிடிப்பதற்கு மற்றும் குடிப்பதற்கு எதிரான பிரச்சாரங்களை ரஜினிக்கு எதிரான பிரச்சினையாக மாற்றியதில் முக்கிய பங்காற்றியது தினமலர், ஆனால் அதன் பின் விளைவுகளாக ரஜினியின் மாயபலம் உடைத்தெறியப்பட்டது என்னமோ நல்லதற்கு தான், தமிழ் இல்லாமல் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்ட பெயர் பலகைகள் தார் பூசி அழிக்கப்படும் என்று கூறியதை சில ஆர்வக்கோளாறு தொண்டர்கள் இரண்டு மொழிகளிலும் எழுதியிருந்ததை அழித்ததை மட்டும் படமாக எடுத்து வெளியிட்டு தங்கள் எரிச்சலை தீர்த்துக் கொண்டன, தார் பூசியதை மாய்ந்து மாய்ந்து எழுதி தீர்த்த ஊடகங்கள் ஊரெங்கும் ஆங்கில-தமிழ் சொற்கள் பற்றிய டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்ததை ஏன் எழுதவில்லை,பேஷன் ஷோக்கள், துரித உணவகங்களுக்கு(பள்ளி,கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் இவைகளால் அதீத உடல் பருமன் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன என கூறி) தடை ஏற்படுத்த கோரி நடந்த போராட்டங்கள் வெளிக்கொணரப்படவேயில்லை, பிரபாகரனை கைது செய்து கொண்டு வரவேண்டுமென்று சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சட்டசபையில் கருஞ்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்ததற்கு புலிகளிடம் பெட்டி வாங்கிவிட்டார்கள் என அசிங்கப்படுத்தி பார்த்தது இந்த ஊடகங்கள், சம்பாதிக்கும் பணத்தை குடியில் அழிக்கும் மக்களை காக்க கிராமப்புற மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தியதையும் கேவலப்படுத்தி பார்த்தன இந்த ஊடகங்கள், கூட்டணி மாற்றங்கள்(கூட்டணியில் இவர்களை சேர்த்துக்கொண்டவர்களை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்), கடைசியாக இப்போது குஷ்பு, கற்பு பிரச்சினையை கருத்து சுதந்திரத்தை பறிக்கின்றார்கள் என்று விமர்சனம், கற்பை இன்னமும் வியாபாரத்திற்கான சரக்காக வைத்துக்கொண்டுள்ள இந்தியாடுடே இந்த வாரமும் இந்த பிரச்சினை தொடர்பான விவாதகளம் அமைத்து தமக்கு ஏற்ப கருத்து சொல்பவர்களை வைத்து விவாதம் நடத்தியுள்ளது (இது பற்றி எழுதுவதென்றால் தனியாக பெரும் பதிவே எழுத வேண்டும்) இதன் முக்கிய நோக்கம் கற்பாவது கருத்து சுதந்திரமாவது பச்சை வியாபர நோக்கம், மேலும் பசுமை தாயகத்தின் சுற்றுப்புற சூழல் பணியை கேவலப்படுத்தி பார்ப்பதிலும் முதலிடம் வகிக்கிறன ஊடகங்கள், பசுமை தாயகம் சுற்று சூழலுக்கு தரும் முக்கியதுவத்தையும் அதே நக்கலுடன் பழிக்கப்படுகின்றது.

சில வாரங்களுக்கு முன் அன்புமணி அமுக்கிய 56 கோடி என்று தலைப்பிட்டு தத்துபித்தென்றி உளறி தன் முகத்தில் கரி பூசிக்கொண்டது குமுதம் ரிப்போர்ட்டர், அன்புமணி மகள்கள் தில்லியில் தமிழ் பாடம் படிக்கவில்லை என கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும் வாசகர் கடிதம் என்ற பெயரில் தங்கள் வன்முறையை நிறைவேற்றின, இதை மறுத்து துக்ளக் பத்திரிக்கைக்கு அன்புமணி அவர்கள் எழுதிய கடித்தத்தின் தலைப்பை திரித்து "மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற வேண்டும்" - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதுகிறார்...என்று 'சோ'தனமான தலைப்பை வழங்கி தம் அசிங்கமான முகத்தை காட்டிக்கொள்கின்றார் இதன் சுட்டி இங்கே , 'சோ'வைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம், ஊடகவன்முறையின் அவதாரமாகவே திகழ்கின்றார், அதற்கு அவர் போடும் புத்திசாலி கோமாளி வேடமும் நிறைய உதவுகின்றது,

//வருமானத்துக்காகவோ, புகழுக்காகவோ எந்தவொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ அல்லது நிறுவனங்களுக்கோத் தன்னையோ தனது பத்திரிக்கையையோ இதுவரை அடகு வைக்காமல், தைரியமாக எல்லாரைப் பற்றியும், எவற்றைப் பற்றியும் எழுதுபவர்// என தன்னை பற்றிய பிம்பத்தை ஏதோ ஒரு சிலரிடம் ஏற்படுத்தி வைத்திருந்தாலும் எந்த மடத்தில் அடகு வைத்தார் என மற்ற அனைவருக்கும் தெரியும் ஏன் அவர்களுக்கே கூட தெரிந்திருக்கலாம்.
இன்னும் பல பல பேசலாம் 'சோ'வைப்பற்றி... நிச்சயம் நேரம் கிடைக்கும் போது இன்னும் பல பல பேசலாம் 'சோ'வைப்பற்றியும் அவரின் 'சோ'த்தனமான செயல்களையும்.


பண்ருட்டி அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து பாமக பயிற்சி முகாமிற்கு பெற்றோர் ஒப்புதலுடன் சென்ற மாணவியை ஏதோ கட்டாயப்படுத்தி அழைத்து போனதாக (வேற வேலை இல்ல பாருங்க இவங்களுக்கு...) திரித்த பத்திரிக்கைகள் கடைசியில் அந்த பெற்றோர்களின் பேட்டி அளித்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தனர் தொழுநோய் பற்றிய உண்மை தகவலை பேசிய அன்புமணியின் தகவலே தவறென திரித்த ஊடகங்கள் பிறகு இதைப்பற்றி பேசவே பேசாமல் மூடிக்கொண்டன, தற்போது ஓநாயாராகவும் நரியாராகவும் அன்புமணியின் நிர்வாகத் திறமையை விமர்சனம் செய்து வருகின்றன, பிரதமர் அன்புமணியின் நிர்வாகத்தில் அதிருப்தியாக உள்ளதாக கதை கட்டி வருகின்றன, அன்புமணிக்கு சுகாதார துறையின் மீதான ஆர்வமும் தொடர்ந்து பல மணி நேர உழைப்பும் எத்தனை பேருக்கு தெரியும்?

இன்னும் இந்த ஊடக வன்முறையை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது, Ramwatcher மாதிரி எத்தனை வாட்சர் வைத்தாலும் பத்தாது.

குஷ்புவின் மீது பல இடங்களில் வழக்கு போடுவதையும், இந்தியாடுடே பிரபுசாவ்லா மற்றும் எடிட்டர் ஆனந்த் நடராஜன் மீதும் வழக்கு போடுவதையும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக தலையங்கத்தில் புலம்பும் பிரபுசாவ்லாவுக்கு வழக்கு போடுவது சட்டத்திற்கு உட்பட்டது தான் என்பதாவது தெரியுமா?

அதிகாரம் இல்லாதபோதே இப்படியென்றால் அதிகாரத்திற்கு வந்தால் எப்படி என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களிடம் ஒரு வித பீதியை தோற்றுவிக்க முயல்கின்றனவே இந்த ஊடகங்கள், இதற்கு உண்மையன நோக்கம் கற்பு, கருத்து சுதந்திரம் பற்றிய கவலையா அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்ற எண்ணமா?

இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதென்றால் இது பாசிசமென்றால் இத்தனை வருடமாக இராமதாசுவையும் திருமாவையும் திரித்தும், பொய்யான தோற்றத்தை உருவாக்கி காட்ட முயலும் ஊடகங்கள் அவர்களுக்கு பிடிக்காத இராமதாசு திருமாவின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்றனவே இது ஊடகங்களின் பாசிச செயல் அல்லவா?

திமுக உருவாக்கியுள்ள மீடியா சாம்ராஜ்யத்தை போன்று இவர்களும் உருவாக்கினால் தான் குறைந்த பட்சம் தம் பக்கமுள்ள நியாயங்களையாவது சொல்ல முடியும்,

தற்போது திருமாவுடன் இணைந்து பணியாற்றுவதையும் பொறுக்க மாட்டாமல் இருவரையும் சேர்த்து கேவலப்படுத்திக் கொண்டுள்ளன.

வன்னிய இனத்திலுள்ள சிலரின் உள் அழுத்தங்கள் எத்தனை தூரம் இந்த இரு இனங்களின் இணைப்பிற்கு ஊறு விளைப்பதுவோ கிட்டத்தட்ட அதே அளவிற்கு இந்த இரு இனங்களின் இணைப்பிற்கு ஊறுவிளைக்க கூடியது சில தலித்துகள் இந்த இணைப்பினை சந்தேகக்கண் கொண்டும், நம்பிக்கையில்லாமலும் பார்ப்பது (இரண்டும் ஒன்றென்று சொல்ல வரவில்லை ஆனால் இரண்டும் ஏற்படுத்தும் விளைவு ஒன்றுதான்), இதை மிகச்சரியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளன ஊடகங்கள், அதனால்தான் தொடர்ந்து மறக்க நினனக்கும் வடுக்களையும் காயங்களையும் மீண்டும் மீண்டும் கீறிப்பார்க்கின்றன, இந்த இணணவு உடைய வேண்டுமென நினைக்கும் சில ஆதிக்க சக்திகள் தொடர்ந்து நேற்று அப்படி பேசினாயே, முந்தா நாள் இப்படி பேசினாயே என்று கீறி கீறி இரத்தம் குடிக்க முயல்கின்றன. அதற்கு பலியாகாமல் இரு பக்கத்தினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமாஜ்வாடி பாமக பற்றிய ஒப்புமை எங்கேயோ இணையத்தில் படித்ததோ நண்பர் சொல்ல கேட்டதோ மற்றதெல்லாம் நம்ம சரக்கு

27 பின்னூட்டங்கள்:

said...

பழனி பாபாவை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்., பதிவின் நோக்கம் திசை மறி விடப் போகுது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

Dear Kuzhali

what you are telling 100% right.

Karunanidhi about Hindu, Nedumaran, Ramdoss, Thiruma, Veeramani, Tankar Pacchan - Insulting others, ruthless,

Kushboo, shuhashini, jayandrar - freedom to express.

what a scale???????

said...

குழலி, உங்கள் தலைவர் சோ என்று நீங்கள் ஏற்றுக் கொண்டாலும், இப்படி அவருடைய பெருமையை மட்டும் சொல்வது
கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை, அடடா! நீங்க சொல்லுகிறது ராமதாசரையா? சாரி நண்பா! கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். சோவுக்கு பாராட்டு மழை பொழிய வைத்தது அருண் இல்லையா? இதை தூக்கி அங்கிட்டு போடணும்.

-Friend

said...

குழலி உங்கக்கிட்டேர்ந்து ஒரு நல்ல கம்ப்யூட்டர் சம்மத்தமான பதிவை எதிர்பார்க்கிறேன். ஏமாற்றிவிடாதீர்கள். :-)))

said...

anbumani yai patri silar vishama pracharam seidhu avar endha satam kondu vandhalum sila pathirikaigal edhirkiradhu. oru udharanathuku iodine salt. enakku therindhu niraya peruku, (plains il vazbavargaluku) thyroid ulladhu. sila pathirikaigal iodine salt vidhimurai kondu vandhal yezhaigal padhikapaduvargal. uppu vilai yerividum. malayil irupavargaluku mattume iodine salt thevai endru ezudhugiradhu.

ivargaluku samoogathin meedhu oru akkarayum illai, anbumaniyai edhirpadhai thavira.

said...

Kuzhalai
You need to understand politics in India and Tamil nadu before jumping to conclusions and making
sweeping statements.
Samajwadi Party did not emerge all of a sudden.After emergency non congress political forces formed Janata Paty.Unfortunately it was a failure.Later V.P.Singh formed Janata dal. It again got fragmented and some prominent
persons formed their own parties.
Lalu wanted to emerge as a strong
force in Bihar and in the process
those who were with George Fernandes and Nithish Kumar were
sidelined.As a result they formed
Janata Dal United. Most of these
leaders started their political career as socialists or as student
leaders inspired by Jaya Praksh Narayan (JP).
Thanks to Lohia, Charan Singh,JP
and others there was an anti
congress movement in North although
it got fragmented and was weakened
over the years.Samajwadi Party
is one stream of that movement.
You should ask yourself why
the SP-BSP alliance did not last
long and why BSP later chose to align with BJP rather than with SP.
This sort of alliance per se is
not progressive as in the name
of taking pro muslim stand they
end up supporting conservative elements in muslim society.
The backward castes - dalits alliance has not worked in all
places and in all times.You need to
read a lot to find out why it is so.
Regarding PMK you are unable to make an objective assessment.I do agree that media is biased against
PMK but that itself does not absolve of PMK of its opportunistic politics.

said...

இஸ்லாமியர்களால்- முஸ்லீம் முல்லாக்களால் ஏமாற்றப்படும் யாதவர்கள் போல வன்னியர்களும் ஆகிவிட வேண்டாம்.

இஸ்லாமின் இரட்டை முகத்தை கண்டுகொள்ளாமல் அரசியல் செய்ய முனைவது தற்கொலைக்குச் சமானம்.

இது சம்பந்தமான கட்டுரையை பாருங்கள்

இஸ்லாமின் இரண்டு முகங்கள்

said...

மாய பலமா? எத்தனை நாளைக்கு இதே கீறல் விழுந்த ரெக்கார்டை சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றுவீங்க? ஜாதிக்கட்சிங்க ரேஞ்சுக்கு கீழே இறங்கிட வேணாம்னு சைலண்டா இருந்தா...தயவு செய்து அதற்கு தப்பாக அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டாம். தலைவனை பத்தி தப்பா சொல்லிட்டாண்டான்னு கோதாவில் இறங்கி கண்டதையும் வெட்டிபோடும் கூட்டமில்லை இது. உங்க வேலை வேற. எங்க வேலை வேற. பழைய கதையையெல்லாம் பிளாஷ்பேக் ஒட்டினா நாடு தாங்காது. மத்த படி ஆல்த பெஸ்ட் குழலி!

said...

//தலைவனை பத்தி தப்பா சொல்லிட்டாண்டான்னு கோதாவில் இறங்கி கண்டதையும் வெட்டிபோடும் கூட்டமில்லை இது.//
ராம்கி,
என்ன,ரஜினி ரசிகர்களை பற்றி சொல்கிறீர்களா? நிஜத்துல இல்லீங்க ,சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தில் ரஜினி கதாபாத்திரத்தை திட்டியதற்காக ,அது வெறும் கதாபாத்திரம் என்ற சிற்றறிவு கூட இல்லாமல் வடிவுக்கரசி வீட்டில் கல்லெறிந்த கூட்டம் தானே?

said...

//அது வெறும் கதாபாத்திரம் என்ற சிற்றறிவு கூட இல்லாமல் வடிவுக்கரசி வீட்டில் கல்லெறிந்த கூட்டம் தானே?
//
வடிவுக்கரசி வீட்டில் மட்டுமா? பாரதிராஜா, மனோரமா....

ம்... இந்த கதைய கிண்டினால் தாங்காதுடா சாமி....

ரவி உங்கள் தகவலுக்கு நன்றி, ஜே.பி. பாசறையிலிருந்து வெளிவந்தவர்கள் பல தளம் மாறி உருவானது சரிதான் என்றாலும் நான் சொல்ல நினைத்தது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இசுலாமிய மக்களின் கூட்டு பங்களிப்பு தான் சமாஜ்வாடி கட்சியின் பலம், கிட்டத்தட்ட அது மாதிரியான முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது தான் பாமக, அது மட்டுமின்றி இங்கு இசுலாமிய அடிப்படைவாதிகளை ஆதரிக்க கூடாது, அந்த மக்களின் முன்னேற்றத்தை நினைப்பவர்களின் பங்களிப்பை ஆதரிப்பது வேண்டுமென கருதுகின்றேன், ஆனால் தமிழகத்தில் இசுலாமிய தலைவர்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்து மட்டுமே இயங்குகிறார்கள், அந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் சார்ந்து இயங்கவில்லை.

//I do agree that media is biased against
PMK but that itself does not absolve of PMK of its opportunistic politics.
//
ஆமோதிக்கின்றேன், அதே சமயம் opportunistic politics என்பது வெறும் கூட்டணி மாறியதை குறிப்பிட்டால் எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது, சில இடங்களில் பாமக சறுக்கியதும், சமரசங்கள் செய்து கொண்டதும் உண்மை, கொள்கை நீர்ப்புகள் மற்ற இயக்கங்களைப் போல இதிலும் உள்ளது.

said...

//The backward castes - dalits alliance has not worked in all
places and in all times.
//
இதுவும் பல சமயங்களில் உண்மையாகவே இருந்துள்ளது, ஆனாலும் வட மாவட்டங்களில் தெரியும் கண்கூடா சில மாற்றங்கள் சிறிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்துகிறது, இந்த இணைப்பினால் பாதிக்கப்படும் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருக்கும் பட்சத்தில் இது ஒரு உதாரணமாக அமையும் வாய்ப்புள்ளது, இதற்கு மாற்றம் தலைவர்களிடம் மட்டுமல்ல அந்த இன மக்களிடமும் வரவேண்டும்.

said...

கட்சி சார்ந்த அரசியல் நிலையில் இருந்து சற்று விலகி அழகாக எழுதுகிறீர்களே என்று சற்று மனம் உவந்த நேரத்தில், திரும்பவும் உங்கள் ஒரிஜினல் முகத்தைக் காட்டி, என்னை ஏமாற்றி விட்டீர்களே, நண்பரே!
அந்த சாக்கடை உங்களுக்கு வேண்டாம்.
அதைத் தாண்டி, உங்களுடன் ஒன்றி வர என்னைப் போன்ற பலர் இருக்கிறார்கள்.
உங்கள் கட்டுரையில் பல ஒவ்வா செய்திகள் உள்ளன.
ஒவ்வொன்றாய்ப் பட்டியலிட்டு விவாதம் செய்வது அநாவசியம் எனக் கருதுகிறேன்.
தயவு செய்து, சற்று திறந்த மனத்துடன், விருப்பு வெறுப்பின்றி செயல் படுங்கள்.
டா.ரா, திருமா வந்துதான் இந்த சமுதாயத்தைக் கப்பாற்ற முடியும் என்றில்லை.
நாம் செய்வோம், இந்த அப்பவி மக்களின் நலனிற்காக.
நான் சொல்வது புரியும் என நம்புகிறேன்.
நன்றி.

திரு.'முடிச்சவிக்கி' அவர்களே,
'அங்கு' வந்த பதிவில் இருந்து ஒரு 'வாசகத்தை' // // குறிகளுக்குள் போட்டு 'இங்கு' எழுதி இருப்பதால், 'அது'தான் முன்னம் வந்தது என எண்ணுகிறேன். தவறென்றால் மன்னிக்கவும்!

said...

"காப்பாற்ற", "அப்பாவி"

தட்டெழுத்துப் பிழைகளுக்கு வருந்துகிறேன்!
திருத்திப் படிக்கவும்.
நன்றி.

said...

Media is against Ramadoss!

All the other political parties are against Ramadoss(except thiruma, atleast as of today
)!

Cho is against Ramadoss!

We cut the trees? oh, come on. Forget about the past. Today we have "pasumai thaayagam".

are you giving me 10 seats? you are my "Udan pirava sagodhari"
you are giving 11? you are my "Sagodharar" .

"Thozhargalle purappadungal sarithiram ezhudhuvom", but keep erasers ready! Azhithu Azhithu ezhudhuvom.

sshhhhhh...., Dont talk about past.
OR "ranathai killara vendaam."

Apparam kuzhali, what happened to your announcement about writing the history about "varallatru sirappu mikka inaippu"?
Seekkiram ezhudhunga, election varudhu. apparam character maarum, role maarum, dialogue marum. Niraya maathi ezhudha vendi varalaam.

said...

ராம்கி, என்ன தமாசா எழுதறதா நெனப்பா? ஆறு தொகுதிகளிலும் பாமக வை தோற்கடிப்பதே எங்கள் இலட்சியமென்று வாய் வலிக்க கூவி முகத்தில் தாமகவே சேறு பூசிக் கொண்டது அதற்குள்ளாகவே மறந்து விட்டதா? "ப்ளாஷ் பேக்" நீங்க ஓட்டப் போறிங்களா. நான் நிஜத்தை ஓட்டவா...நீங்களும், உங்க rajini spams(not fans) ம் "கமல்ஹாசன் யாஹூ" குழுமத்தில் எவ்வளவு அழகாக பேசுகிறீர்கள் என்று! போங்க ராம்கி...உங்களுக்கு நிறைய வேலை இருக்கு rajinispams.comல...போங்க போங்க...சும்மா "சீன்" போடாம!

said...

ராம்கி, என்ன தமாசா எழுதறதா நெனப்பா? ஆறு தொகுதிகளிலும் பாமக வை தோற்கடிப்பதே எங்கள் இலட்சியமென்று வாய் வலிக்க கூவி முகத்தில் தாமகவே சேறு பூசிக் கொண்டது அதற்குள்ளாகவே மறந்து விட்டதா?

3rd place in Chidambarm Parliment consistunecy.

PMK - ஜாதிக்கட்சி, மரம் வெட்டி.

BJP - ????? Gandhi, budda, rahavendra கட்சி (Since 1989 to Gujarat'02 - 90 thousand died in India, India watch 2003 annual report) all because of peace loveing, harmony loving, freedom to express loving, most importanly ரஜினி யின் BJP and sangh parivar)

said...

//PMK - ஜாதிக்கட்சி, மரம் வெட்டி.

BJP - ????? Gandhi, budda, rahavendra கட்சி (Since 1989 to Gujarat'02 - 90 thousand killed in secterian voilences in India - India watch 2003 annual report) all because of peace loveing, harmony loving, freedom to express loving, most importanly ரஜினி யின் BJP and sangh parivar) //


1996 - 'Even God cann't save Tamil Nadu'

2004 - 'Thairiya Lakshmi'

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி,
எனது 'சோ' பதிவிலிருந்து சில வாசகங்களை அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்...அதை ஒரு சுட்டியாகவோ அல்லது அங்கிருந்து தான் எடுத்திருக்கிறேன் என்ற சிறு குறிப்போ எதுவும் காணப்படவில்லை. 'சோத்தனமான உத்தி' என்று தங்கமணி எதைக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறித்தெல்லாம் எனது பதிவிலேயே
விரிவாக விவாதம் நடைபெற்றுள்ளது. ஜெயேந்திரர் கைதானவுடனேயே சோ 'ஜெயலலிதா தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் அவரைக் கைது செய்திருக்க மாட்டார்'
என்று தான் பேட்டியும் கொடுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசு தீவிர முனைப்புக் காட்டியதும், வழக்குக் குறித்த கேள்விகளை எழுப்பினார். இதற்குப் பெயர் சோத்தனம், அடகு என்று நீங்கள் நினைக்கலாம்...நான் அப்படி நினைக்கவில்லை. இங்கு ஒருவர் 'உங்களது பதிவைக் கிண்டல் அடித்துப் போட்டிருப்பதாய்' சொன்னார். அது சோற்றில் முழுப்பூசணிக்காய். உங்களின் எந்தப் பதிவுக்கும், அந்தப் பதிவுக்கும் சம்பந்தமில்லை. நான் எதற்காக அதை
எழுதினேன் என்பது குறித்த விளக்கமெல்லாம், அந்தப் பதிவிலேயே இருக்கிறது.அது இருக்கட்டும், சகட்டு மேனிக்கு அய்யங்கார் பாஷையில் குலைத்திருப்பதாய்
எல்லாம் வாசகங்களும், பார்ப்பனக் கூட்டம் என்றெல்லாமும் மறுமொழிகள் வந்திருக்கிறதே...அந்த மறுமொழியிலெல்லாம் உங்களுக்கு ஒப்புதலா? அது போன்று மறுமொழிகள் உங்களுக்கு உடன்பாடா? அவற்றை அழிக்கும் எண்ணமோ அல்லது கண்டிக்கும் எண்ணமோ உங்களுக்கு இல்லையா?!

- அருண் வைத்யநாதன்

- அருண் வைத்யநாதன்

said...

//இட்லி இட்ட முந்தைய பின்னூட்டம் அவரின் கருத்தை இழக்காமல் தனிக்கை செய்யப்பட்டுள்ளது, இது என் பின்னூட்டமல்ல//

சுப்பிரமணியசாமி என்ற கேடுகெட்ட அரசியல் தலைவருடன் ஒப்பிடுகையில் கருணாநிதியும் திருமாவும், ராமதாசும் எவ்வளவோ தேவலாம் எனலாம். மதுரை முருகன் புகழ் இட்லிக் கடையில் ரவுடித் தனம் செய்ததை அந்த திருமலை மறந்து விட்டார் போலும்! சுப்பிரமணியசாமியை அமெரிக்காவில் பேட்டி கண்டு அதனை தமிழோவியத்தில் கட்டுரையாக்கி ‘அவர் ஒப்பற்ற தலைவர்” எனப் பிதற்றியவர் ச.திருமலை. சோனியா இலங்கை சென்று பிரபாகரனிடம் காசு கொடுத்து ராஜீவைக் கொன்றதாகவும், சோனியா படிக்கவே இல்லை, அவர் கொடுத்தது போலி சர்டிபிகேட்டு என்றெல்லாம் பீலா விட்டவர் இப்போது அருண் வலைப்பதிவில் சோ பற்றிய பதிவுக்கு சூப்பர், பெண்டாஸ்டிக்,, பின்னீட்டீங்கோ என சொல்லியிருக்கிறார்! எனக்குத் தெரிந்து சுப்பிரமணிய சாமியை சிறந்த தலைவன் எனக் கூறுபவர் உலகிலேயே திருமலை ஒருவர்தான்! கருத்து சுதந்திரம் என்பதற்காக யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது! அவனுக்கு சுனாசாமியை ஆதரிக்க முடிந்திருக்கிறது. அருண் பதிவில் மாயவரம், திருமலை, முகமூடி போன்றவர்கள் சென்று சோ பற்றிய பதிவில் ஆகா சூப்பர் என்று எழுத முடிகிறது. அதுபோல நீங்கள் ராமதாஸ் மற்றும் பா.ம.க பற்றிய விளக்கம் தருகிறீர்கள். இதில் என்ன தவறைக் கண்டனர் அவர்கள்?

said...

அருண் உங்கள் பதிவின் சுட்டியை பதிவில் இணைத்துள்ளேன், நீங்கள் ஆட்சேபித்தால் அப்படியே பயன்படுத்திய அந்த வரிகளையும், உங்கள் சுட்டியையும் நீக்கிவிட தயாராக உள்ளேன்.

நன்றி

said...

Thanks Kuzhali.
I never asked you to stop using those lines or my blog reference...you are entitled to your views. Thanks again for editing the comment, atleast I think from my next time onwards, malicious comments will be edited or deleted proactively.

said...

I think people calling 'Avan' 'Ivan' and also be condemned. Why do we need to call names, attack somebody personally disgracefully for explaining some of our views?!

(I forgot to post the same in my above comment)

said...

Kuzhali, this blog seems to be written by a PMK fanatic defending for every moves of Mr. Ramadoss. That would discourage anyone to read further on the history of PMK.

said...

PALANI BAABAA KURITTHU EZUTHI IRUNTHIRKAL...MIKAVUM MOSAMAAGA PURINTHUK kOLLAPPATTA ..MIKACHIRANTHA MANITHAR AVAR...MANITHA NAYATHILUM SARI...SAATHI,SAMAYA NALLINAKKATHILUM SARI AVARK KONDIRUNTHA KARUTTHUKKAL MIKA UYARTHARAMAANAVAI...THEEMAIKALAI AZHITTHU,OZITTHU NANMAIKALAI SEYYA VAENDUM ENTRA THUDIPPU MIKUNTHAVAR...THAAI MOZIP PATRU THAMIZINAP PAASAM INDIYA ORUMAIPPAADU NEEDITTHU NILAIKKA VAENDUM ENBATHILU ALAATHIYAANA PIRIYAM KONDAVAR...THANATHU VAZNALL MUZUVATHUM MIKACCHIRANTHA PORAALIYAAKA THIKALNTHAVAR...ODOKKAPPATTA,PIRTPADUTTHAPATTA SAMUTHAAYANGAL..ONTRINAINTHU VAZA VAENDUM ENPARTHARKKAAKA PALA NALLA MUYARCHIKALAI MARKKONDAR...THEN THAMIZAKALTHIL MUKKULA SAMUTHAAYA MAKKALUM PALLARKALUM ADIKKADI SANDAIP PODUVATHAI THADUKKUM VAKAYIL SAMARASA MUYARCHIKAL PALAVATRAI SEYTHAR...VADATHAMIZAKATTHIL VANNIYAKALUM PARAIYARKALUM MOTHIKKOLLAAMAL THADUKKUM VAKAYIL AYYAA RAAMADASU AVARKALUDAN INAINTHU PA.MA.KA. URUVAAKI THAMIZAKATTHIN MOOLAI MUDUKKELLAM SENTRU KATCHIYAI VALARTTHAAR... RAMAADASU AVRKAL NADATTHIYA "HINDU THAMIZAR OTRUMAI MAANAADU" ENTRA NIKALCHIKKU BOMBAY PALTHAKKERA" AI AZAITTHATHAAL KOBAMKANTU PA.MA.KA.VILIRUNTHU PAZANI BAABA VILAKINAR....AANAALUM RAAMADASU AVARKAL MEETHU NALLA NATPURAVU VAITTHIRUNTAR....PALANI BAABA PAASISA MATHA VERIYARKALAAL PADUKOLAI SEYYAP PATTA SEITHIK KETTATHUM MUTHAN MUTHALIL ODODI SENRTU AVARUKKU IRUTHI ANCHALI SEYTHATHU RAMADASU AVARKALTHAAN ENBATHU VARALAARU PATHIVU SEYTHU VAITTHULLATHU....

said...

பழனி பாபாவை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்., பதிவின் நோக்கம் திசை மறி விடப் போகுது.- அப்படிப்போடு

பழனிபாபா படுகொலை செய்யப்பட்ட்டபின் அவரின் நல்லடக்கத்துக்கு - செல்ல பல அரசியல்வாதிகள் தயங்கியபொழுது- தைரியமாக சென்ற ஒரே தலைவர் மருத்துவர் அய்யா மட்டும்தான்!!