நட்சத்திரம் - தமிழால் இணைந்தோம்

"பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொளிநீர்- கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளொடு
முற்றோன்றி மூத்த குடி"

(புறப்பொருள் வெண்பாமாலை)

"ஓடும் , உட்காரும், தாவும், தாண்டிக்குதிக்கும் ஆனால் ஒரே அடியாக அடிச்சுவடு அற்று போகாது, இதுவே வரலாற்று இலக்கணம்"- ஏ.செ. தாயின்பி

இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது தமிழும் தமிழக வரலாறும், வரலாற்றின் வழிநெடுக தமிழின் மீதான பல்முனை தாக்குதல்கள் தொடர்கின்றன, வெளியார்களிடமிருந்து தாக்குதல்களும், உள்ளுக்குள்ளேயான தாக்குதல்களும் தொடர்ந்தாலும் அவ்வப்போது சோர்ந்து போனாலும் வீழ்ந்து போவதில்லை தமிழும் தமிழினமும்.

எண்ணூத்தி சொச்சம் ஜொலிக்கும் நட்சத்திரங்களிடையில் இந்த வாலை நட்சத்திரமாக்கி விட்டார்கள் தமிழ்மணம் நிர்வாகிகளும் மதியும், சென்ற வாரம் ஜொலித்து சென்றிருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் 'ஜோ' அதற்கு முன் ஜொலித்த தருமி,இளவஞ்சி,கோ.கணேஷ் மற்றும் இன்ன பல நட்சத்திரங்களின் இடையில் நான் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

இன்று இந்த இணையத்தின் மூலமாக பல நட்புகள் கிடைத்துள்ளன, புவியியல் வரை கோடுகளை தாண்டி நாட்டின் எல்லைகள் தாண்டி நட்பு வட்டம் அமைந்துள்ளது இந்த தமிழால், தமிழ் உணர்வால், சில தனி மனிதர்களின் தமிழ் ஆர்வம் இத்தனை பெரிய நட்பு வட்டத்தை அமைத்து தந்துள்ளது. அதற்காக அவர்களுக்கு மிக்க நன்றி, அரசு, அரசியல் எழுத்தாளர்கள் என்பதையெல்லாம் தாண்டி இவர்களை மாதிரியானவர்களின் தமிழ் ஆர்வம் தான் தமிழை இன்னமும் வாழவைக்கின்றது, எத்தனை கருத்து மோதல்களும் இருந்தாலும் வரம்பு மீறாமல் பரிமாறிக்கொள்ளும் போது மிக நல்லதொரு நட்பு நிலைக்கின்றது, அது வலைப்பதிவர்களின் மத்தியில் உள்ள ஒரு நல்ல விடயமும் கூட.

சில மாதங்களுக்கு முன் என்னுடன் அலுவலகத்தில் ஒரு நண்பர் கூறினார் "நீங்கள்(நான்) இப்படி பழகுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை" இது பள்ளிகளிலும், கல்லூரியிலும் இன்னும் சில இடங்களிலும் சிலர் சொல்ல கேட்டதுண்டு, அன்று உள்ளிருந்த குரல் விழித்தது நான் இப்படி பழகுவேன் என்று நினைக்கவேயில்லை என்றால் எப்படி பழகுவேன் என்று நினைத்தார்? இதற்கு முன் பலர் இப்படி கூறியிருக்கின்றார்கள் என்றால் எப்படி அந்த தோற்றாம் உருவானது, எனது நிர்வாகத்தின் துணைத்தலைவர் அடிக்கடி கூறும் ஒன்று "put your feet in customer's shoes" அப்போது புரியும் உனக்கு என்று, இது தற்போது வாழ்க்கையிலும் சில காலமாக நேரமும் தனிமையும் கிடைக்கும் போது நடந்த விடயங்களை அசை போட்டு சுயபரிசோதனை செய்யும் பழக்கம் இலேசாக உருவாகியுள்ளது, அப்படி யோசித்ததும் அதன் பின் எனது நெருங்கிய நட்பு வட்டத்திடம் இதைப்பற்றி பேசிய போதும் 'easy going guy', பழகுவதற்கு எளிதானவன் என்று என்னைப்பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் உடைந்தது.

இலேசாக கலைந்த தலை, சிரத்தை எடுத்து அணியாத ஆடைகள், எப்போதும் தூக்கத்திற்கு ஏங்குவது போன்ற கண்கள், எத்தனை மாதங்கள் பார்த்துக்கொண்டாலும் அறிமுகமாகிக் கொள்ளும் அந்த கணம் வரை புன்னகை பூக்காத பழக்கம், அலுவலக கூட்டங்களில் தன்னம்பிக்கையோடு (மண்டைகனம்?!) பேசும் பேச்சு பலரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் சில விடயங்களை பட்டென்று பேசிவிடுவது (இது பல சமயங்களில் பாதகத்தையும், சில சமயம் சாதகத்தையும் தந்துள்ளது) அறிமுகமானாலும் உடனடியாக சரளமாக பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பது (ஆனால் வாடிக்கையாளர்களை பார்க்கும் போது விடயமே வேறு) என்று என்னை சுற்றி ஒரு வட்டத்தை வேலியாக போட்டுக் கொண்டிருந்துள்ளேன் அதை தாண்டி உள்ளே நுழைந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே, மேலும் தொடர்ந்து இதைப் பற்றி நண்பர்களுடன் அலசியபோது உடையிலிருந்து பல விடயங்களில் நான் மாற்றம் செய்ய வேண்டியிருக்கின்றது, அதிலும் தோற்றம் என்பது மிக முக்கியமானது, உடைகளிலும் பார்வையிலும் காட்டும் அலட்சியம் என்னுடைய சுயம் என்று கூறக்கூடாது, அது உன்னை பற்றி பிறர் எடை போட வைக்கும் முக்கிய காரணி என்றார்கள் என் நண்பர்கள்.

அவ்வப்போது என் உடன் இருந்தவர்கள் தட்டியும், சுட்டியும் காட்டியுள்ளார்கள், ஆனால் எனக்குதான் இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்ததில்லை, என் தந்தையின் நண்பர் அவரும் ஒரு ஆசிரியர் நான் +2 படிக்கும் போது அவர் கூறிய வார்த்தைகளை இப்போதும் நினைத்து பார்க்கின்றேன், "எருமை நெனச்சிக்குமாம் தான் விடும் மூத்திரம் கடல் மாதிரி எவ்ளோ இருக்கு என்று" அப்போதே என் தலையில் இப்படி குட்டியுள்ளார், ஆனால் அப்போது அதை புரிந்து கொள்ளும் பக்குவம் தான் எனக்கு இல்லை.

Image hosted by Photobucket.com

இந்த பூமியின் உயிர் ஆதாரமான சூரியன் இந்த பூமிக்கு மட்டுமல்ல இந்த சூரியகுடும்பத்தின் எல்லாமுமான சூரியன் என்கிற இந்த நட்சத்திரம் பிரபஞ்சத்தின் பால்வழிவீதியில்(பால்வழிவீதியில் 400பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன) ஒரு சிறுதுகள் மட்டுமே இது மாதிரி பல ஆயிரம் பால்வழிவீதிகள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன, அத்தனை பெரிய உயிர் ஆதாரமான சூரியனே பிரபஞ்சத்தில் ஒன்றுமில்லாத ஒன்றாக இருப்பதை நினைத்தால் நான் எனது என்ற தலைக்கனம் கணப்பொழுதில் காணாமல் போகும்.

பாருங்கள் என்ன எழுதுவது என்று தெரியாமல் சுய புராணம் பாடிக்கொண்டுள்ளேன்,

நம்ம வடிவேலு குரலில் படியுங்கள்
"உங்களைலாம் நெனச்சா பாவமா இருக்கு"
பின்ன தினம் ஒரு பதிவு போடணுமே, என்ன பாடுபடப்போறிங்களோ?!

49 பின்னூட்டங்கள்:

அன்பு said...

வாழ்த்துக்கள் குழலி. புயல் இன்னும் சிஙகையைக்கடக்கல போலிருக்குது, சந்தோஷம்.

தொடக்கமே பலமுனை தாக்குதலாயிருக்கு... கலக்குங்க.

துளசி கோபால் said...

இந்த வாரநட்சத்திரம் குழலி,

வாங்க வாங்க . வாழ்த்துக்கள்.

பூனைக்குட்டி said...

குழலி நட்சத்திர வாழ்த்துக்கள், புரட்சி புரோக்கிராமர் போல் நிறைய விஷயங்களை எதிர்பார்க்கிறேன்.

ஜோ/Joe said...

குழலி,
வாங்க..வாழ்த்துக்கள்!.அட்டகாசமா ஆரம்பிச்சுருக்கீங்க .ஒரு வார விருந்துக்கு காத்திருக்கிறோம்..சும்மா புகுந்து விளையாடுங்க.

rv said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் குழலி..

Muthu said...

வருக குழலி அவர்களே

வருக...தங்கள் சிந்தனைகளை அள்ளி தருக

ரவிகுமார் ராஜவேல் said...
This comment has been removed by a blog administrator.
ஏஜண்ட் NJ said...

//... இந்த வாலை நட்சத்திரமாக்கி விட்டார்கள்...//

வால் நட்சத்திரம்-னு பட்டம் வேணும்னா கேக்க வேண்டியது தானே, குடுக்க மாட்டோம்னு சொன்னமா?!
;-)

ஒருவேளை தமிழ்நாட்டுல உண்டாயிருக்க மழை வெள்ள அபாயங்கள் நீங்கிரும்-னு உம்மை நட்சத்திரமா ஆக்கிருக்காங்களோ! நல்லது நடந்தாச் சரி!!!

:-)

வாழ்த்துக்கள் குழலி!

G.Ragavan said...

வாழ்த்துகள் குழலி. நல்ல தொடக்கம். இந்த வாரம் சிறப்பாகச் செல்ல எனது வாழ்த்துகள்.

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நன்றாக சமைப்பதை நன்றாக பரிமாறுவதிலும் காட்ட வேண்டியது போல நம்மை முன்னிறுத்த ஆடையும் பயனாகிறது.

முத்துகுமரன் said...

வாழ்த்துகள் குழலி. உங்கள் படைப்புகள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. நட்சத்திர வாரத்தில் உங்கள் பல பரிமாணங்களை காண முடியும் என்ற நம்புகிறேன்

டிபிஆர்.ஜோசப் said...

வாழ்த்துக்கள் குழலி!


ரொம்பவும் அடக்கமா, ஒரு தன்னிலை விளக்கத்தோட தொடங்கியிருக்கீங்க. நம்முடைய தோற்றம்தான் நம்மை பத்தி சில வேளைகளில் தவறான ஒரு உருவத்தை மற்றவர்களிடத்தில் ஏற்படுத்திவிடுகிறதென்பது உண்மைதான். நம்முடைய பேச்சும்,எழுத்தும்கூட அப்படித்தான்.என்னுடைய தோற்றம் கூட இவன் ஒரு கண்டிப்பானவன், தலைக்கணம் பிடித்தவன் என்ற பட்டங்களை பெற்று தந்திருக்கின்றன. பலாப்பழம் போலத்தான் வச்சிக்குங்களேன்.
ஏழு நாளும் ஏழு முத்துக்களை தாருங்கள் என்ற வாழ்த்துக்களுடன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் குழலி.

Narain Rajagopalan said...

வாழ்த்துக்கள் குழலி. கலக்குங்க.

பழூர் கார்த்தி said...

வாங்கய்யா குழலி, நட்சத்திர வாழ்த்துக்கள் உங்களுக்கு :-), கலக்குங்க இந்த வாரம் !

தாணு said...

//சிரத்தை எடுத்து அணியாத ஆடைகள், அறிமுகமாகும் வரை புன்னகை பூக்காத முகம்// இதெல்லாமுமே கொஞ்சம் மண்டைக் கனம் உள்ள ஆட்களிடம் காணப்படுவதுதான். மண்டையில் stuff இருப்பதால்தானே கனம் வருது!

வாழ்த்துக்கள். இந்த வாரம் முதல் கிறிஸ்த்மஸ் வேலைகள் தொடங்குவதால் தமிழ்மணம் பக்கம் எட்டிப்பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். ஆனாலும் நட்சத்திரம் யார் என்று எட்டிப் பார்த்ததால் மாட்டியாச்சு.இனிமேல் தினமும் பார்க்காமல் இருக்க முடியாது.

Anonymous said...

//இந்த பூமியின் உயிர் ஆதாரமான சூரியன் இந்த பூமிக்கு மட்டுமல்ல இந்த சூரியகுடும்பத்தின் எல்லாமுமான சூரியன் என்கிற இந்த நட்சத்திரம் பிரபஞ்சத்தின் பால்வழிவீதியில்(பால்வழிவீதியில் 400பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன) ஒரு சிறுதுகள் மட்டுமே இது மாதிரி பல ஆயிரம் பால்வழிவீதிகள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன, அத்தனை பெரிய உயிர் ஆதாரமான சூரியனே பிரபஞ்சத்தில் ஒன்றுமில்லாத ஒன்றாக இருப்பதை நினைத்தால் நான் எனது என்ற தலைக்கனம் கணப்பொழுதில் காணாமல் போகும்.

SATHIYAMAANA Vaarthaihal.
Intha karutthai ninaivil kondaal Aaanavam, Ahangaaram, Mamadhai, Tharperumai muthaliya anaithum ahandru ADAKKAM vuruvaahum.

After I read "Brief history of Time" by Hawkings, I got the same feelings.

Kuzhali. Great Work. Keep it up.

Regards,
MM

மணியன் said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
தங்களின் நல்விருந்தை எதிர்நோக்கியிருக்கிறோம்.

பழூர் கார்த்தி said...

தன்னம்பிக்கைக்கும் தலைக்கணத்துக்கும் நூழிழைதான் வித்தியாசம்ன்னு கஜினி சூர்யா சொல்வாரே, பாக்கலையா நீங்க :-) என்னால முடியும்னு சொன்னா தன்னம்பிக்கை, என்னால மட்டும்தான் முடியும்னு சொன்னா தலைக்கணம்.. ஆதாலால் நீங்க ஆபிஸ் மீட்டிங்ஸ்ல கவலைப்படாம கலக்குங்க :-))

dondu(#11168674346665545885) said...

என்ன ஆச்சரியம்! என்னுடைய கடைசி பதிவும் தன்னைத் தானே அறிவதை பற்றித்தான் குறிப்பிடுகிறது.பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்ல நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்,
அன்புடன்,
டோண்டு ராகவன்

b said...

அன்பின் குழலி,

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நம் கடன் எழுதிக் கிடப்பதே என்ற உயரிய தத்துவத்தினை உறுதியாகப் பின்பற்றுவோம். அருமையான நல்ல பல தகவல்களை இவ்வாரத்தில் எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள். வாழ்த்துக்கள் குழலி, புகுந்து விளையாடுங்கள்.

Pot"tea" kadai said...

வாழ்த்துக்கள் குழலி!
"எண்ணூத்தி சொச்சம் ஜொலிக்கும் நட்சத்திரங்களிடையில் இந்த வாலை நட்சத்திரமாக்கி விட்டார்கள் தமிழ்மணம் நிர்வாகிகளும் மதியும்,"
அப்போ வால் நட்சத்திரம்னு சொல்லலாம். அப்படி சொன்னாலும் அது மிகையாகாது!

நட்சத்திர வாரம் நன்றாக செல்ல வாழ்த்துக்கள்!

நன்றி!
சத்யா

வானம்பாடி said...

வாழ்த்துக்கள் குழலி.

Thangamani said...

வாழ்த்துக்கள் குழலி.

மதுமிதா said...

வாழ்த்துகள் வால்நட்சத்திரமே
கலக்குங்க குழலி !

தருமி said...

ஒரே 'பூரான்களின்' அட்டகாசமா இருக்கே!

i mean 'சிங்கப்பூரான்களின்' அட்டகாசமா இருக்கேன்னேன்!ஒருவேளை இந்த மாதமே சிங்கப்பூர் மா...தமோ...?(சும்மா, அன்பாதான் கேட்டேன்!?)

வாழ்த்துக்கள்.

கலக்குங்கள்...........

Anonymous said...

இந்த வாரம், குழலி வாரம், நல்ல வாரம். வாழ்த்துக்கள்

இப்னு ஹம்துன் said...

நம்ம குழலி நட்சத்திரமா..! எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது!

நிறையப் பேருக்குத் 'தல'யாக இருந்தும் சும்மா பேருக்கு 'வால்' என்று சொல்லிக்கொள்கிறீர்கள் போலும்.
கலக்குங்க வாத்தியாரே.! வாழ்த்துக்கள்!!

முகமூடி said...

எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வியின் விளைவாக சமீப காலமாக "வாழ்த்துக்கள் *" என்று எழுதுவதில்லை..

// உங்களைலாம் நெனச்சா பாவமா இருக்கு // தகவலுக்கு நன்றி

பரஞ்சோதி said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

உங்கள் பதிவுகள் விரும்பி படிப்பவன். அருமையான வாரமாக அமைய வாழ்த்துகள்.

மாயவரத்தான் said...

வாழ்த்துக்கள் குழலி!

ஜெ. ராம்கி said...

Welcome back! :-)

சிங். செயகுமார். said...

செந்தமிழோடும்
கருத்தாழமிக்க வெண்பாவோடும்
களம் இறங்கிய
நட்சத்திர நாயகர்
குழலிக்கு வாழ்த்துக்கள்!
( ஆமா புலி பதுங்குவது எதுக்குன்னு தெரியலையே)

ஜோ/Joe said...

//வரலாற்றின் வழிநெடுக தமிழின் மீதான பல்முனை தாக்குதல்கள் தொடர்கின்றன, வெளியார்களிடமிருந்து தாக்குதல்களும், உள்ளுக்குள்ளேயான தாக்குதல்களும் தொடர்ந்தாலும் அவ்வப்போது சோர்ந்து போனாலும் வீழ்ந்து போவதில்லை தமிழும் தமிழினமும்.//
சும்மா நச்-ன்னு சொன்னீங்க!

குழலி / Kuzhali said...

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி, எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வேனா என்பது கேள்விக்குறியே.

நன்றி

சங்கரய்யா said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

ஏஜண்ட் NJ said...

//சமீப காலமாக "வாழ்த்துக்கள் *" என்று எழுதுவதில்லை// - முகமூடி

//வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி, //- குழலி

So...


நாராயண... நாராயண... நாராயண

;-)

குழலி / Kuzhali said...

யோவ் அடியாத்தி ஏற்கனவே ஞானபீடம் என்கிற ஒரு நாரதர் தொல்லையே தாங்கலை, நீர் வேறு கிளம்பியுள்ளீர்.

போ போ போய்கிட்டே இரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

SnackDragon said...

வாழ்த்துக்கள் குழலி.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் குழலி.

-L-L-D-a-s-u said...

நிரந்தர சூரியனை நட்சத்திரமாக்கிய தமிழ்மண நிர்வாகத்தைக் கண்டிக்கிறேன் . ;)

ஏஜண்ட் NJ said...

I agree with LLDASU partly!

(ask me not, which part , of his comment!)

;-)

எம்.கே.குமார் said...

வாழ்த்துகள் குழலி,
அடிச்சி ஆடுவீங்கன்னு எதிர்பாக்குறேன்.:-)

எம்.கே.

குழலி / Kuzhali said...

குசும்புகார தாசு, நன்றி குமார்... ஞானபீடம் ம்... நடத்துங்க

Anonymous said...

வாழ்த்துக்கள் குழலி.
enRenRum anbudan
BALA

-L-L-D-a-s-u said...

நல்ல பதிவு குழலி ..

இப்படிக்கு
பெருமையுடன் ..
விசிலடிச்சான் குஞ்சு

Unknown said...

"Put yourself in your customers shoes..." and that comment on buffalo... yes it really means a lot. Manikkanum.. tamizhlley thaan sollanumnnu irunthen.. avasaram... avasiyam karuthi ippadiyae solli vidugiren

- Dev
http://sethukal.blogspot.com

நாமக்கல் சிபி said...

Well Done Kuzhali! Nalla Pesi irukkeenga

கோவி.கண்ணன் said...

//இலேசாக கலைந்த தலை, சிரத்தை எடுத்து அணியாத ஆடைகள், எப்போதும் தூக்கத்திற்கு ஏங்குவது போன்ற கண்கள், எத்தனை மாதங்கள் பார்த்துக்கொண்டாலும் அறிமுகமாகிக் கொள்ளும் அந்த கணம் வரை புன்னகை பூக்காத பழக்கம்,//

ம், கிட்டதட்ட நம்மபள மாதிரியே சொல்றிங்க. ஆனால் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற கேள்வியை நான் கேட்டுக் கொள்வதே இல்லை. இப்போ ஓரளவுக்கு சிரிப்பவர்களைப் பார்த்து பேசும் பழக்கம் வந்துவிட்டது.