இந்த வார த(பி)த்துவங்கள்

அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நிறைய இடத்துல இருக்கும், ஆனா அடையார் ஆலமரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும் தான்.

பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது, ஆனால்
பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆகிடும்.

காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி,
அதே நம்ப மேல அந்த டயர் ஏறினா நாம சட்னி

உள்ள போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியிய வந்தா அதுக்கு பேரு வாந்தி

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்
என்னால ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை
என்னால மட்டும் தான் ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தலைக்கனம்

செல்லுல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது
ஆனா மனுசனுக்கு கால் இல்லனா பேலன்ஸ் பண்ண முடியாது

இரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியில தான் போகும்.

பஸ் போயிட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கயேதான் இருக்கும்
ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள்ஸ்டேன்ட் கூடவே போகும்

வாயால 'நாய்'னு சொல்ல முடியும்
ஆனா நாயால 'வாய்'னு சொல்ல முடியுமா?

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்
பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது

ஃபைல்ஸ்னா உட்கார்ந்து பார்க்கனும்
ஆனால் பைல்ஸ்னா பார்த்து உட்காரனும்

மின் மடலில் வந்ததை தமிழில் தட்டச்சியது மட்டும் நான்.

13 பின்னூட்டங்கள்:

said...

http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=2310

said...

kalakkitteenga!

said...

மூலத்திற்கு - I mean, இதை உங்களுக்கு அனுப்பியவருக்கு - வாழ்த்துக்கள்

said...

ஆஹா, எனக்கும் இது வந்துதே. என் வலைப்பூவில் போட்டு ஒரு பதிவு ஓட்டலாம்னு பெரிய திட்ட அறிக்கை வெச்சுருந்தேனே!!! போச் போச். எல்லாம் போச்!!!

(குழலி, நீங்களும் ந்யூஜெர்சி ஹ்யூமர் க்ளப்ல உறுப்பினரா?)

said...

//எங்க.. யாருமே எட்ட முடியாத "sanity" பீடத்துல ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்ள போயிட்டாரு. வாழ்த்துச் சொல்லக்கூட நெருங்கமுடியாம "Hidden agenda" சோதனைல மாட்டுவேனோன்னு பயமா இருக்கு.//

ஜெயஸ்ரீ வைத்த இந்த பின்னூட்டத்திற்கான பதில் பதிவா இது குழலி. நான் சாதாரணமாய்த்தான் கேட்கிறேன்.

said...

வாழ்க்கையிலத் த(பி)த்துவம் பேசலாம் ஆனா
த(பி)த்துவம் பேசறதே வாழ்க்கையாயிடக் கூடாது! :-)))

said...

SMS இல் ஆங்கிலத்தில் பார்த்ததைத் தமிழில் படிக்கும்போது நல்லாத்தான் இருக்குது

said...

"tha[pi]ththuvam"----- Does it mean 'escapism' too?!!
I mean 'thappiththuvam' !!
:-)

said...

//இரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியில தான் போகும்.//

வாழ்வின் யதார்த்தத்தை கண்முன் காட்டும் தத்துவம் இது!

சம்பவாமி யுகே யுகே
:-)

said...

வேகமாப் போய் சேர்றனுங்கறதுக்காக ஓடற பஸ்ஸூக்குள்ள ஓடக்கூடாது. (வேணும்னா ஓடற பஸ் முன்னாடி ஓடலாம்!!!).

said...

த(பி)த்துவம்னா தத்துபித்துன்னு தான் இருக்கும். அதுக்காக தத்துபித்தூன்னு இருக்கறதெல்லாம் த(பி)த்துவமாயிடாது .;-)

said...

அட .. இதுகூட நல்லாயிருக்கே

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, க்ருபா இது ஒரு நண்பர் மின்மடலில் அனுப்பியது நியூஜெர்சி ஹியூமர் கிளப்பிற்கு ஏதேனு மின் குழுமம் உள்ளதா? நானும் சேர்ந்து கொள்கின்றேன்.

தொடர்ந்து பின்னூட்டங்களை கவனிக்கமுடியாததால் தற்போதைக்கு moderation enable செய்துள்ளேன்

நன்றி