இந்த கதையை குமுதம் வெளியிடுமா?

சுஜாதா எழுதிய அய்யோத்திய மண்டபம் கதையின் அடுத்த பகுதியான "ஸ்ரீரங்கம்" என்ற தலைப்பில் நான் எழுதிய இந்த சிறுகதை குமுதத்தில் வெளியிடப்படுமா? இந்த கதையை குமுதத்திற்கு அனுப்ப என்ன செய்யவேண்டும், விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குமுதத்தில் சுஜாதாவின் அய்யோத்தியா மண்டபம் கதையை படிக்க முடியாதவர்கள் பாலாவின் சேமிப்பில் இங்கே படிக்கலாம்.

ஸ்ரீரங்கம்

"அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது" என்றார். கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.

அடிதாங்க முடியாத பிராமண மாமனாரை என்னி கண்ணீர் விட்ட கலைச்செல்வியின் கைத்தொலைபேசி சிணுங்கியது

"ஹலோ"

"கலை, அப்பா பேசுறம்மா, நல்லா இருக்கியா"

"நல்லா இருக்கேன் பா"

"என்னமா ஏர்போர்ட்லயா இருக்க"

"இல்லப்பா, இங்க மாமாக்கு அடிப்பட்டுடிச்சி, அதான் ஒரு வாரம் தள்ளிப்போட்டுட்டோம், என்னப்பா ஏர்போர்ட்லயா இருக்கிங்க"

"இல்லமா? நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலை"

"ஓ, இன்னைக்கு நாங்க கிளம்புறதா சொன்னதால ஏர்போர்போர்ட்டுக்கு வந்திங்களோனு நினைச்சேன், அடுத்த வாரம் வந்துடுங்கப்பா"

"நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலைனு சொல்ல தான்மா போன் பண்ணேன்"

"ஏன்பா, என்ன ஆச்சி, ஒடம்பு எதும் சரியில்லையா? என்ன ஆச்சி"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைமா, இந்த கட்டை நல்லா தான் இருக்கு, மனசு தான் சரியில்லை"

"தூரமா போறோமேனு வருத்தப்படுறிங்களா? ரெண்டு வருஷம் தான்பா அப்புறம் இங்க வந்துடுவோம், நான், நீங்க, மாமா எல்லாம் ஒண்ணாவே இருக்கலாம் பா, இதுக்கு மேலயும் நீங்க கஷ்டப்படவேண்டாம் பா"

"ரெண்டு வருஷத்திலயே இங்க வந்துடாதிங்கன்னு சொல்ல தான் போன் பண்ணேன்"

"ஏன்பா, அந்த சம்பாத்தியம் இங்க கிடைக்காதுனு பாக்குறிங்களா? இப்போலாம் சாப்ட்வேர்ல அங்க வாங்குற சம்பளத்துக்கு சமமா இங்கயும் கிடைக்கும் பா"

"பணம் வந்து என்னமா செய்யப்போவுது, மரியாதை, உரிமையில்லாத ஊருல அது ஒன்னுக்கும் ஒதவாது, ஆனா ஒனக்கு நல்ல சான்ஸ் கெடச்சிருக்கு கெட்டியா புடிச்சிக்கோ"

"என்னப்பா சொல்றிங்க ஒன்னுமே புரியலையே"

"அய்யிரு பையனை கல்யாணம் செய்திருக்க, இனிமே நம்ம ஜாதி பேரை எங்கயும் சொல்லிக்காத, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆத்துக்காரர் தோப்பனாருனு அய்யிரு பாஷை பேச கத்துக்கோ"

"அதை ஏன்பா நான் கத்துக்கணம், எப்பவுமே சுயமா இருக்கனும் சொல்ற நீங்களே இப்படி சொல்றிங்க"

"உன் பசங்களுக்கு வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியமெல்லாம் உனக்கு பொறக்கபோற கொழந்தைகளுக்கு சொல்லி குடு"

"ஏன்ப்பா பேசுறிங்க, நான் அய்யிரை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல ஒங்களுக்கு எதும் சங்கடமா"

"அய்யய்யோ அதெல்லாம் இல்லமா, நீ அய்யிர கல்யாணம் பண்ணிக்கிட்டதை சாமி குடுத்த வரமா பாக்குறேன் அதனால தான் சொல்றேன் உனக்கு பொறக்க போற பையனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிதரயோ இல்லியோ, திருக்குறள் சொல்லிதரயோ இல்லியோ ஆனா காயத்திரி மந்திரமும், சந்தியா வந்தனமும் கத்துக்க வை, மறக்காம பூணுல் போட்டுவுட்டுடு"

"என்னப்பா இப்படி பேசுறிங்க, மனசனுக்குள்ள வேறுபாடு பாக்ககூடாதுனு சொன்ன நீங்களே பூணுல் போட சொல்லுறிங்க"

"இந்த ரெண்டு வருசம் கழிச்சி ஊருக்கு வர்றதுலாம் வேண்டாம் மா, இங்க நெலமை அப்படியாயிடுச்சி, நாயும், பூனையும் நடந்த தெருவுல நம்மள மாதிரி ஜனங்க நடக்க உரிமையில்லாம இருந்துச்சி, கோயில்லுக்குள்ள போக வக்கில்லாம இருந்துச்சி, இதுக்கெல்லாம் போராடி உரிமை வாங்கித்தந்த பெரியார் தலையையே ஸ்ரீரங்கத்துல எடுத்துட்டாங்க, அத எதுத்து போராடனவங்களுக்கும் போலிஸ் அடி, ஜெயில் இப்பவே இந்த நெலமை இங்க, போக போக என்ன ஆகுமோ"

"ம்... நானும் பேப்பர்ல படிச்சேன்பா"

"ஏற்கனவே சாமியை தொடமுடியாது, சாமிகிட்ட போவ முடியாது, இனிமே கோயிலுக்கும்கூட போக முடியாத நெலமை வந்துடும், ஒழவு மாட்டவித்து ஒன்ன ஐ.ஐ.டி.ல எம்.டெக் படிக்க வச்சேன், ஆனா பி.இ. கோட்டால தான் படிச்ச, நம்மள மாதிரி படிப்புவாசனையே அறியாத ஜனங்களுக்கு இனி கோட்டாவும் இருக்காது, இங்க படிப்பில்லாம, மரியாதையில்லாம, உரிமையில்லாம ஈனபிறவியா அடிமையா தன்மானத்து உட்டுட்டு வாழுறதுக்கு சாகலாம் கலை, செத்துடலாம், ஆனா நீ அய்யிரு பையனை கல்யாணம் செய்துக்கிட்டதை நான் சாமி குடுத்த வரமாத்தான் பாக்குறேன்"

அதிர்ந்து போன கலைச்செல்வி தன் தந்தை பேசுவதை கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்தால்

"கலை அதனால தான் சொல்றேன், இங்க வராத, உயர்வுனு இந்த சமுதாயம் எதெல்லாம் மதிக்குதோ அதெல்லாம் கத்துக்கோ, உன் பசங்களுக்கும் கத்துகுடு, தமிழ் பாட்டு வேண்டாம் தெலுங்கு கீர்த்தனை கத்துகுடு, பரதநாட்டியம் கத்துகுடு, அத்திம்பேர்னு பேச கத்துகுடு, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆனா எப்புடி இருந்தாலும் ஒன் கலர் ஒன்னை காட்டி குடுத்துடும் அதுக்காக யார் என்ன பேசனாலும் கவலைப்படாத, உன் மானம், சுயமரியாதை முக்கியமில்லை உன் புள்ளைங்க மரியாதை தான் முக்கியம், ஒன்னை அய்யிரு ஜாதியில ஏத்துக்கலைனாலும் ஒன் புள்ளைங்களை ஏத்துப்பாங்க, முக்கியமா ஒன் புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வச்சிடாத, ஏதாவது சமஸ்கிரத சாமி பேரா பார்த்துவை, கலை இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ"

"சொல்லுங்கப்பா"

"முடிஞ்சா ஒன் பேரை கூட சரஸ்வதி, லஷ்மினு மாத்தி வச்சிக்கோயேன், விசாரிச்சேன் அது ஈசி தானாம், கெஜட்ல மாத்திடலாமாம், இனி எங்களுக்கு போன் பேசாத, ஒன் ஊரை மறந்துடு, ஒன் சாதியை மறந்துடு, மீன், கறி சாப்பாடுற பழக்கத்தை மறந்துடு, ஒன் பேச்சு வழக்கை மறந்துடு, எல்லாத்தையும் மறந்துடு இப்போ நீ ஒரு அய்யிருக்கு பொண்டாட்டி, அதை மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ, எங்களை விட, ஒன்னை விட ஒனக்கு பொறக்க போற கொழந்தைங்க மரியாதை முக்கியம், அவங்க உரிமை முக்கியம், நாயைவிட பூனையைவிட பொறப்பால கேவலமா என் பேரப்பசங்க இருக்க கூடாது, எங்களை பத்தி கவலைப்படாத கலை, எம் பேரப்புள்ளைங்க அய்யிரு சாதியாயிடுங்கற சந்தோசத்துல நாங்க இப்படியே இருந்துட்டு செத்துடுவோம், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கோ, நல்லா இரு கலை, நல்லா இரும்மா கலை"

போன் கட்டாகிவிட கதறி கதறி அழ ஆரம்பித்தாள் தற்போதைய கலைச்செல்வியான வருங்கால சரஸ்வதி

இது தொடர்பான பாலபாரதியின் பதிவு

47 பின்னூட்டங்கள்:

said...

"தமிழ் பாட்டு வேண்டாம் தெலுங்கு கீர்த்தனை கத்துகுடு, பரதநாட்டியம் கத்துகுடு, அத்திம்பேர்னு பேச கத்துகுடு, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆனா எப்புடி இருந்தாலும் ஒன் கலர் ஒன்னை காட்டி குடுத்துடும் அதுக்காக யார் என்ன பேசனாலும் கவலைப்படாத, உன் மானம், சுயமரியாதை முக்கியமில்லை உன் புள்ளைங்க மரியாதை தான் முக்கியம்"

"இப்போ நீ ஒரு அய்யிருக்கு பொண்டாட்டி, அதை மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ, எங்களை விட, ஒன்னை விட ஒனக்கு பொறக்க போற கொழந்தைங்க மரியாதை முக்கியம், அவங்க உரிமை முக்கியம்,

"நாயைவிட பூனையைவிட பொறப்பால கேவலமா என் பேரப்பசங்க இருக்க கூடாது"


மிக அருமையாக சொல்லியிருக்கிங்க குழலி
இதை நிச்சயமாக குமதத்தில் வெளியிடலாம்,
வெளியிடுமா குமுதம்?

said...

குழலி,

என்னங்க இப்படி போட்டு தாக்கி (பதிலடி) வச்சிருக்கிங்கன்னு சொல்ல வந்தேன் ... சொல்லி இருப்பது எதார்த்தமும் ஆற்றாமையும் என்பதால் சபாஸ் போட வைக்குது !

said...

அட! குழலி நீங்க கதை கூட எழுதுவிங்களா...?
நல்லா வந்துருக்கு.
புதிய அவதாரமான எல்கியவாதி குழலிக்கு ஜே!

said...

உங்களுக்காக நான் ஒன்றுதான் செய்யமுடியும்..

இந்த பதிவை பிரிண்ட் அவுட் எடுத்து, கொரியர்ல குமுதம் நிறுவனத்துக்கு உங்க பெயரில் அனுப்பலாம்...

செய்துடவா ???

said...

இந்த கதைக்கு தமிழ்மண பட்டையிலிருக்கும் வாக்கை உங்கள் விருப்பத்திற்கேற்ப அளிக்குமாறு வேண்டுகிறேன்....

said...

First of all do you treat all those who have Tamil as their mother tongue as equals.Are you
not discriminating against soley
on the basis of caste.If a brahmin
gives up all rituals and is an
atheist and knows no sanskrit and changes him name in to a chaste tamil name will he get benefits of reservation.Veeramani writes that
Brahmins are not Tamils.He publishes a book that says only
bad things about Brahmins.
Are you willing to oppose those
first.The story by Sujatha sounds
topical but misses the complexity
of the issue.I wont rate that as a
good story.I have criticised
Cho, Sujatha etc more than enough.

said...

பூனை சூடு போட்டுகிச்சு....

said...

kandippa pirasuram aagum..advance valthukkal..nalla eludhi irundheenga..

nan andha kadhaiya i kumudhaththil paditha podhu kadhai mudivadhaindha maadhiri oru thrupthi illai...nalla velai neenga mudichu vachuteenga...innum konjam sujatha touchm angila vaarthayai tamilil kalandhu eludhyirukkalam...

ungal reply i edir parkirane

said...

குழலி அய்யா,

குமுதம் கிடக்கிறது, விடுங்கள். நீங்க கதையை எங்க அசுரன் அய்யா கிட்ட அனுப்பி வச்சீங்கன்னா,புதிய கலாசாரத்திலே போட சொல்வாருங்கய்யா..

பாலா

said...

//kandippa pirasuram aagum..//
கதையில் எழுத்துபிழைகள் மற்றும் சிற்சில வாக்கிய மாற்றங்கள்(கண்டிப்பாக கருத்து மாற்றமிருக்காது) செய்து குமுதத்திற்கு அனுப்ப போகிறேன், பிரசுரிக்கிறார்களா என்று பார்ப்போம்.

//nan andha kadhaiya i kumudhaththil paditha podhu kadhai mudivadhaindha maadhiri oru thrupthi illai...nalla velai neenga mudichu vachuteenga...
//
மிக்க நன்றி, இவர்கள் எழுதுவது போன்ற கதை எல்லோருக்கும் எழுதவரும் என்று தெரிந்து கொள்ளட்டும், எல்லா வித்தைகளும் எல்லோருக்குமே வரும், எந்த வித்தையும் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமில்லை, அதை சுஜாதாவும் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும் முதலில்.

நன்றி

said...

innum konjam sujatha touchm angila vaarthayai tamilil kalandhu eludhyirukkalam...

//
merkuriya para vukku neenga reply pannalaye?? ena sujatha male ivvalvu kobam

said...

மிக்க நன்றி, இவர்கள் எழுதுவது போன்ற கதை எல்லோருக்கும் எழுதவரும் என்று தெரிந்து கொள்ளட்டும், எல்லா வித்தைகளும் எல்லோருக்குமே வரும், எந்த வித்தையும் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமில்லை, அதை சுஜாதாவும் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும் முதலில்.

Sujatha never claimed only some
could write good short stories
or film scripts.You cite if he has
said to the contrary and then
justify your point.Dont set up
straw men and start beating them.
The original story is flawed your
story is also equally flawed.Both
fail to capture the complexity.
If in the original stoty the
Ayodhya Mandapam incident sounds
too contrived there are similar
problems in your story also.
If not today one day you may
understand this.

said...

புதிய கலாசாரத்திலே போட சொல்வாருங்கய்யா..
Dont you know that PK is anti-PMK
and anti-Ramadoss.
Kuzhali may think that publishing it there is worse than getting it published in Kumudam or Vikatan.

said...

குழலி ,

Tit for Tat story..Good one though :)

//இந்த கதைக்கு தமிழ்மண பட்டையிலிருக்கும் வாக்கை உங்கள் விருப்பத்திற்கேற்ப அளிக்குமாறு வேண்டுகிறேன்.... //

I'm not sure about the method.Could you please tell me the procedure? Thanks..

said...

//I'm not sure about the method.Could you please tell me the procedure? Thanks..
//
பதிவின் மேலே இருக்கும் தொடக்கத்தில் தமிழ்மணப்பட்டையில் கட்டைவிரல் மேலே உள்ளது போல இருப்பதை அழுத்தினால் அது + கட்டைவிரல் கீழே இருப்பதை அழுத்தினால் அது -

said...

பாலா உங்களுடைய கடைசி பின்னூட்டம் அதிகபட்ச நாகரீகத்தோடு இருப்பதாலும் எங்களுக்கு அந்த அளவிற்கு நாகரிகம் இல்லையென்பதாலும் அந்த பின்னூட்டத்தை வெளியிட இயலவில்லை.

நன்றி

said...

கதை நல்லா வந்திருக்கு. சபாஷ் குழலி சார்.

said...

good story!!

said...

குமுதத்தில் பிரசுரிக்க முதல்ல நீங்க அய்யங்காரா இருக்கணும்.
அவா அய்யர எழுதினாலே பிரசுரிக்க மாட்டா. இத எங்க போட
போறாங்க?

said...

குழலி ஐயா அவர்களே

உங்கள் கதையை கதையாக படிக்காமல் ஒரு உணர்ச்சி குவியாலாகத்தான் பார்க்க முடிகிறது. நான் பிறப்பால் பிராமின். அதை என்னால் அழித்துக் கொள்ளமுடியாது. ஆனால் தலித்துக்களுக்கு ஏற்பட்டுவிட்ட தீரா தழும்புகளை நான் உணர்கிறேன். ஒருவேளை நான் ஒரு தலித்தாக பிறந்திருந்தால் இதே வேகத்தோடு இருந்திருப்பேனோ என்னவோ? என்னால் நலிந்தவர்களுக்கு (அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும்) எனது பங்களிப்பை செய்து வருகிறேன். நான் மனிதனாகவே இருக்க ஆசைப்படுகிறேன். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நல்லது நடக்கட்டும்.

said...

Kuzhali,

Nice one!

said...

//எங்களுக்கு அந்த அளவிற்கு நாகரிகம்//

குழலி அய்யா,

உங்களிடம் எனக்கு பிடித்த விஷயம் இந்த தன்னடக்கம் தான். அது சரி, "எங்களுக்கு" என்று பன்மையில் எழுதியிருக்கீங்களே? கூட யாரை சேர்த்து சொல்கிறீர்கள்?

பாலா

said...

அன்பு குழலி,
அப்படியே என்னோட பதிவுக்கும் வந்து இந்தக் கதையையும் குமுதம் வெளியிடுமாங்கர கதைய படிச்சுட்டு உங்க மேலான கருத்தை சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.( ADHVAITHI )

said...

Kuzhali,

I read sujatha's and your story couple of times.

I do not see any overtly castiest bent in sujatha's story. But then, if you read between the lines and twist the logic, it could be interpreted as casteist.

You are a good story writer but your story is rather reactionary than original. Kumudam maynot accept it for exactly this reason.

However, what you could do is actually write an original story that carefully and not overtly delivers your message, that would be the best approach. Goodluck on your story publication.

On the hindsight, I ponder over few questions. That violence was unleashed over innocent people of all caste people in the name of caste is very true. Isn't it appropriate for an individual to express their plight in a story seems like a democratic approach. Right or wrong, if you are at the wrong end of the caste wars, definitely you suffer. This applies to every one. Your beef with sujatha seems misplaced.

The miscreants who destroyed periyar's statue and the indivduals who attacked the brahmin store owner are both equally guilty. What should have been healthy debate has been reduced street fights.

Sorry for the long post.

Vignesh

said...

குழலி,

சரியாகச் சொன்னீங்க. என் நண்பர் ஒருவரின் விடயத்தில் இது ஏற்கனவே நடந்து விட்டது. என்ன, இலங்கையைச் சேர்ந்த கிறித்தவர் இன்று அடுத்தாத்து மாமியாகிவிட்டார்.

பெத்தராயுடு

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி, இது வெறும் சுஜாதா கதைக்கு எதிர்வினை கதை என்பது மட்டுமல்ல, இன்று சமுதாயத்தில் உயர் சாதியினர் செய்வதெல்லாம் உயர்ந்தது என்றதொரு கண்ணோட்டத்தில் பேச்சு மொழியில் ஆரம்பித்து பலதிலும் செய்து வருகின்றார்கள், பெங்களூருக்கு வேலைக்கு சென்ற புதிதில் நான் "வந்துண்டு", "போயிண்டுவை" நானும் என் பேச்சில் பிடித்து தொங்கிண்டு இருந்தேன், இன்று வரை ஏனென்று யோசித்து பார்க்கிறேன் ஊரில் பேசாத, நான் ஏன் புது இடத்தில் அப்படி பேசினேன்? புரியலை.... மேலும் இன்றைய நிலையில் பெருநகரங்களிலும் யு.எஸ்.சிலும் சில நண்பர்களின் குடும்பங்கள் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் கற்றுக்கொள்ள தன் பிள்ளைகளை அனுப்புகின்றார்கள், இசையின் மேலோ நடனத்தின் மேலுள்ள ஆர்வத்தினாலோ அல்ல ப்ரஸ்டீஜ் என நினைக்கிறார்கள் அவர்கள் குழந்தைகள் பரதம் கற்றுக்கொள்வதும் வாய்ப்பாட்டு கற்று கொள்வதும்.

இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்த கதையில் கலைச்செல்வியின் தந்தை, கலைச்செல்வி திருமணம் செய்துகொண்டதால் கிடைத்த உறவை வைத்து செய்ய சொல்வதை, இன்று இடஒதுக்கீட்டில் படிஉத்துவிட்டு கிடைக்கும் படிப்பு வேலைகளை பணத்தை அறிவை வைத்துக்கொண்டு செய்துகொண்டிருக்கின்றார்கள், வாய்ப்பாட்டு, பரதம், இந்தி கற்று கொடுப்பது தேவைக்காக்வோ ஆர்வத்துக்காகவோ அல்லாமல் ப்ரஸ்டீஜ்க்காக தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு, தங்களை மறைத்துக்கொண்டு உயர்சாதியை அட்டர் காப்பி அடிக்க முயல்கின்றனர், இது ஏன் என்ற கேள்விக்கு விடை தேட முயலும்போது பல உண்மைகள் வெளிப்படும்

said...

நீஈஈஈஈஈஈண்ட தயக்கத்துக்குப்பின் இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

1. சுஜாதா எழுதிய ஒரு சாதாரணக் கதை மிகைபடுத்தப் படுகிறது என்று பாலபாரதி பதிவில் எழுதிய என் கருத்தில் மாற்றமில்லை. சமீபத்தில் தலைப்புச் செய்திகளை கதைக்குள் நுழைக்கும் ஆர்வத்தில் அயோத்தியா மண்டபத்தைத் தேர்ந்தெடுத்ததில் தவறு காண முடியாது. சுஜாதா அந்த கதாநாயகி பாத்திரத்தில் எந்தத் துவேஷமும் உள்நோக்கத்தோடு இணைத்ததாகக் கூறுவது உணர்ச்சிவசப்பட்ட பார்வையே என்றே கருதுகிறேன். அயோத்தியா மண்டபத் தகராறை எழுதும்போது வேறெப்படி எழுத முடியும் என்றும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெரியவரைத்தான் காலத்துக்கு உதவாத கருத்துக்களைப் பிடித்துக்கொண்டு தொங்கும் அறிவுக்குறைவோடு சித்தரிக்கப்படுகிறார்.

2. உங்கள் கதை எழுதப்பட்ட விதம், குமுதம் வெளியிடுமா என்ற கேள்விகள் எல்லாவற்றிற்கும் உங்களுக்கே விடை தெரியும் என நினைக்கிறேன். இது வெளியிடப்படாது, நீங்கள் நினைக்கும் காரணங்களாகவும் இருக்கலாம், அல்லது கீழ்க்காணும் காரணங்களாகவும் இருக்கலாம்:

அ. முன்பே வலைப்பதிவிலோ வேறு பத்திரிக்கைகளிலோ வெளியிடப்பட்டதை பொதுவாக பத்திரிக்கைகள் வெளியிடாது.

ஆ. ஒரு கதையின் தொடர்ச்சியை பொதுவாக அதே ஆசிரியர் எழுதினால் மட்டுமே வெளியிடுவார்கள்.

இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்காது என நான் நம்பவில்லை, நீங்கள் ஒரு கருத்தைச் செலுத்த இந்தப்பதிவை உபயோகப்படுத்துகிறீர்கள், அந்தக்கருத்து செலுத்தப்பட்டுவிட்டது:-)

3. கதை எழுதிய விதத்தில் உங்கள் பிரசாரத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வடிவ அமைதிக்கும் சுவாரஸ்யத்துக்கும் (என் பார்வையில்) கொடுக்கப்படவில்லை.

தயக்கத்துக்கு காரணம் - நீங்கள் தவறாக எடுத்துக்கொள்வீர்கள் என்பதில்லை. உங்களோடு சிலமுறை செய்த விவாதங்களில் உங்கள் குணம் தெரியும் என்பதால் அந்த பயம் இல்லை. இந்த விவகாரங்களில் பட்டுக்கொள்வதில்லை என்ற (சரியோ தவறோ) கொள்கையால்.

தயக்கத்தை உதறியதற்கு காரணம், சுஜாதா என்பதால் அவர் எழுத்துகள் எழுதிய அர்த்தம் தவிரவும் வேறு அர்த்தங்கள் பெறுவதை, அவர் அயோத்தியா மண்டபத்தைப்பற்றி எழுதினாலும் எதிர்ப்பு, திண்ணியம் பற்றி எழுதினாலும் எதிர்ப்பு என்ற ஒரு நிலை நிலவுவதை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பதால். (இத்தனைக்கும் நான் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல இப்போது தீவிர சுஜாதா ரசிகன் இல்லை)

said...

"இன்று சமுதாயத்தில் உயர் சாதியினர் செய்வதெல்லாம் உயர்ந்தது என்றதொரு கண்ணோட்டத்தில் பேச்சு மொழியில் ஆரம்பித்து பலதிலும் செய்து வருகின்றார்கள்"

Kuzhali, who's fault is it? It is normal for anyone anywhere in the world to preserve their identity. If the brahmins want to preserve theirs by speaking a certain dialect and practising certain forms of art, we should welcome that. Because, India is a huge and diverse country with countless number of sub-cultures. We should celebrate this.

On the other hand, the issue you raise with brahmins is misplaced. Its rather our own fault for not proactively celerbating other forms of native art and culture that are specific to our region.

The issue you raised is very important, however it has a striking similarity to anti-globalization movement. The argument is, americans are turning every single country in to a McDonald ?! culturally. If you look at it closely, they have no intention of destroying our culture, rather in a market based economy like America, their cultural cues have been taken over by Ad agencies that aggressively and creatively promote their products/culture.

The solution to your frustration is not in writing a reactionary story to Sujatha, rather come up with creative ideas that incorporates best marketing and sales techniques to promote our culture.

To some extent, beleive it or not, Kodambakkam has shown the way. Thirty years ago, I remember, there was a huge influx of Hindi movies and an overall appreciation all over India that, we cannot compete with them due to money and aggressive promotion. This truly bothered me about losing our own film industry and our identity along with it, to amitabh, dharmendra and others. However look at what happened? Rajini and Kamal dominated the entire 1980s and entertained us with mass entertainers so much so, Hindi films now run as some english movie nowadays. In addition, dark skin became popular, bharathiraja popularized out village culture. This happened because, kodambakkam is a "survival of fittest" and a "market based economy". Therefore, everyone is constantly inventing new faces, looks, techniques, scripts so on so forth, that kodambakkam stands above the rest of the crowd. Kamalhassan is the only popular hero in all of India to have been nominated for oscar, ten times!

This is simply an example, in a free economy that India is becoming, you will see more and more entertainers aggressively promoting our native art. If it has not been so so far, it is largely due to misplaced faith on socialism.

I never imitated brahmins, though I went to sankaracharya's college in kancheepuram. Me and my friend were top two students of the class always. We both were non-brahmins and all our teachers were brahmins. I never was discriminated even once. I found them reasonable people trying to survive this competitive world and hang-on to their traditions. I think the rest of us, who feel neglected should do the same.

No more antagonism please.

Live and let live!

Vignesh

said...

குழலி,

அவர்களுடைய மொழியிலேயே அவர்களுக்குப் பதில் தந்துவிட்டீர்கள்! அது கொஞ்சம் உறைக்கிறது போலும்! பாவம் இத்தனை முனகல்கள் கேட்கின்றன!

வியாழக்கிழமை "கீதை படித்துவிட்டு" வெள்ளிக்கிழமை 'மஞ்சள் பத்திரிக்கையை' வெளியிடும் கும்பலுக்கு இதெல்லாம் உவப்பாயிராது! ;)

இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது என்பது கானல்நீர்தான்!

said...

//சுஜாதா என்பதால் அவர் எழுத்துகள் எழுதிய அர்த்தம் தவிரவும் வேறு அர்த்தங்கள் பெறுவதை//

வன்முறை கண்டிக்கத்தக்கது, மாற்றுக் கருத்தில்லை. அடி தாங்க முடியாது என்று பெரியவர் புலம்புவதுபோல் கீழ்சாதியினர் எத்தனை பேர் எத்தனை காலத்துக்குப் புலம்பியிருப்பார்கள் பினாத்தல் சுரேஷ்? கட்டையால் அடிப்பது மட்டும்தான் வன்முறையா? தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று திருக்குறள் வழிப்படியா ஆதிக்க ஜாதியினர் நடந்தனர்? கலவரம் வெடிக்கும்போது உடைபடும் மண்டைகளில் கீழ்சாதி மண்டைகளைவிட மேல்சாதி மண்டைகள் உடையும்போதுதான் தமிழ்நாட்டு மத்தியதர வர்க்கத்துக்கு ஜீவகாருண்யம் பொங்கும் என்பது சுஜாதாக்களின் இதுபோன்ற கதைகளில் உள்குத்தாக வைக்கப்படுவது. எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோமே என்ற வெற்று ஆதங்கம்தான். தானும் உயர்சாதியாகவேண்டுமென்று சொம்பைத் தூக்கிக்கொண்டு வரிசையில் நிற்கும் இடைச்சாதியினர் சுஜாதாக்களைவிடத் தீவிரமாக இதைக் கட்டிக் காப்பதில் ஈடுபடுவார்கள் என்பதுதான் தற்கால நிலைமைகள் காட்டும் உண்மை.

வடிவ அமைதி! சுஜாதாவின் கதை இரண்டு பேர் பேசிக்கொள்ளும் துண்டுப்பிரசுர பிரச்சார உரையாடல் மாதிரி இருக்கிறது, வடிவ அமைதி எங்கே வந்தது இதில்?

திண்ணியம் பற்றி சுஜாதா எழுதினார்! அவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு, மலம் தின்ன வைத்த நாய்கள் கள்ளர் சாதி, கவுண்டர் சாதி என்று வெளிப்படையாக சாதிப் பெயரைச் சொல்லி எழுதும் முதுகெலும்பு இருக்கிறதா? குசும்பர்களை நம்பினாலும் நம்பலாம், ஊமைக்குசும்பர்களை நம்பக்கூடாது. சுஜாதா இந்த விஷயத்தில் செய்வது ஊமைக்குசும்பாகத்தான் படுகிறது - இங்கேயும் அங்கேயும் மூட்டிவிட்டு மோதிக்கொள்ளவைப்பது!

said...

சுஜாதா என்பதால் அவர் எழுத்துகள் எழுதிய அர்த்தம் தவிரவும் வேறு அர்த்தங்கள் பெறுவதை, அவர் அயோத்தியா மண்டபத்தைப்பற்றி எழுதினாலும் எதிர்ப்பு, திண்ணியம் பற்றி எழுதினாலும் எதிர்ப்பு என்ற ஒரு நிலை நிலவுவதை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பதால்.

What to do- he is a brahmin by
birth.His son might have married
a Japanese and Sujatha might be
a liberal.Still we will oppose
him.Whatever Vairamuthu or Marans or Ramadoss does we will support
because they are NOT brahmins.
So that makes all the difference.

said...

குழலி அவர்களே.. உங்களுக்கு ஒரு எதிர்பதிவு இட்டிருக்கிறேன்.

http://karaiyoram.blogspot.com/2007/01/blog-post.html

said...

குழலி கதை அருமை! :)

said...

சுஜாதா,பாலகுமாரன் போன்ற பார்ப்பனர்களை எல்லாம் மனிதனாகக் கூட மதிக்கத் தேவையில்லை.
இளையராஜா திருவாசகத்திற்கு இசையமைத்தார் என்றவுடன்,அவர் ஆழ்வார் பாசுரத்துக்கும் இசையமைக்க வேண்டும் என்று தனது வைணவ அய்யங்கார் புத்தியுடன் திருவாய் மலர்ந்தவர்தான் இந்த "ச்சீ"ரங்கத்து அய்யங்கார்.

said...

இந்தக் கதையில் முக்கிய குற்றவாளி நாளைய சரஸ்வதியாகிய இன்றைய கலைச்செல்வியின் தந்தை தான்.
போயும்,போயும் ஒரு அய்யர் வீட்டுப் பையனைத் திருமணம் செய்யும் அளவிற்கு தன் மகளை வளர்த்துள்ளாரே?

said...

//குசும்பர்களை நம்பினாலும் நம்பலாம், ஊமைக்குசும்பர்களை நம்பக்கூடாது. சுஜாதா இந்த விஷயத்தில் செய்வது ஊமைக்குசும்பாகத்தான் படுகிறது - இங்கேயும் அங்கேயும் மூட்டிவிட்டு மோதிக்கொள்ளவைப்பது!//

thats a real statement.. as i think

said...

// பெங்களூருக்கு வேலைக்கு சென்ற புதிதில் நான் "வந்துண்டு", "போயிண்டுவை" நானும் என் பேச்சில் பிடித்து தொங்கிண்டு இருந்தேன், இன்று வரை ஏனென்று யோசித்து பார்க்கிறேன் //

குழலி, நீங்களா? வியப்பாக இருக்கிறது. நானும் சில வேளைகளில் அம்மாதிரி வேலை நிமித்தமான சூழல்களில் இருந்திருந்தாலும் ஒருபோதும் எனக்கு அவ்வாறு நேர்ந்ததில்லை.

said...

Dear friend,
In your reply story you have told the feeling of supressed and condemned brahmins.
Though I accept the views and ur feelings my question is it these brahmins alone who were doing the supression as you told to the marigin people??? I will accept your neutrality if you could show the same opposition to all the people who is doing atrocities.
And my dear friend, who forced you during your Bangalore days for brahminical behavior? Have you stayed with majority of brahmin friends or somebody forced you? And how is that relevant in this context?
Hope you will be making a reply in your feedback.
Murali.

said...

//எல்லா வித்தைகளும் எல்லோருக்குமே வரும், எந்த வித்தையும் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமில்லை, //

இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

1960ல் வெளிவந்த தமிழ் திரைப்படங்லளுக்கு இசை அமைத்தவர்கள் எந்த ஜாதி

2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படங்லளுக்கு இசை அமைத்தவர்கள் எந்த ஜாதிகளை சேர்ந்தவர்கள் (Ilayaraja, Harris Jeyaraj, Deva, Imaan etc)

said...

//குமுதத்தில் பிரசுரிக்க முதல்ல நீங்க அய்யங்காரா இருக்கணும்.
அவா அய்யர எழுதினாலே பிரசுரிக்க மாட்டா. இத எங்க போட
போறாங்க?//

நெத்தியடி

said...

//ராவணன் said...
இந்தக் கதையில் முக்கிய குற்றவாளி நாளைய சரஸ்வதியாகிய இன்றைய கலைச்செல்வியின் தந்தை தான்.
போயும்,போயும் ஒரு அய்யர் வீட்டுப் பையனைத் திருமணம் செய்யும் அளவிற்கு தன் மகளை வளர்த்துள்ளாரே?
//

ரிப்பீட்டு...

அப்படியே ஆனபிறகும் உனது சுயத்தை தனித்தன்மையை இழக்காதே என்றுதானே அந்த தந்தை சொல்லியிருக்க வேண்டும்...

said...

குழலி,

வர்ணாஸ்ரமம் கொடுத்த வலியை கலைச்செல்வியின் தந்தையார் வழி சொல்லியிருக்கிறீர்கள். பார்ப்பனீயத்தின் நெற்றிப்பொட்டில் தட்டியிருக்கிறீர்கள். இது எதிர்வினைகளில் தெரிகிறது. உங்களுக்கு கதையும் அருமையாக வருகிறது. பாராட்டுக்கள்.

said...

உங்கள் கதை நன்றாக இருக்கிறது.

//இன்றைய நிலையில் பெருநகரங்களிலும் யு.எஸ்.சிலும் சில நண்பர்களின் குடும்பங்கள் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் கற்றுக்கொள்ள தன் பிள்ளைகளை அனுப்புகின்றார்கள், இசையின் மேலோ நடனத்தின் மேலுள்ள ஆர்வத்தினாலோ அல்ல ப்ரஸ்டீஜ் என நினைக்கிறார்கள் அவர்கள் குழந்தைகள் பரதம் கற்றுக்கொள்வதும் வாய்ப்பாட்டு கற்று கொள்வதும்.//

மறுமொழிகளில் கண்ட இந்தப் பொதுமைப்படுத்துதல் (generalization) எனக்கு சரியாகப் படவில்லை. நான் சிறுவயதில் பரதம், வாய்ப்பாட்டு இரண்டையும் ஒரு சோதனையோட்டம் இட்டுவிட்டு சிலபல காரணங்களால் அவற்றைத் தொடராமல் வீணை பயின்றேன். பிற்காலத்தில் என் குழந்தை(கள்) பரதம், வீணை, வாய்ப்பாட்டு ஆகியவற்றில் இரண்டொன்றையாவது சொல்லித் தர விரும்புகிறேன். சில குழந்தைகளுக்கு உள்ளபடி பரதத்தில் ஆசையிருக்கும். சூர்யா மெகா தொடரின் டைட்டில் பாடலில் வரும் பரதத்தைப் பார்த்து டிவியின் முன் ஆடி மகிழும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். எனவே இவ்வாறான பொதுமைப்படுத்ததிலின் மூலம் உங்கள் எழுத்தின் வீரியத்தையும் தாக்கத்தையும் குறைத்துக்கொள்ளாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

said...

yow kooru ketta kuzhali, sujatha-vai vida periya aalunu onakku nenaippa, onnai maathiri 100000 peru, ipti eluthalam, aana eelloralum sujatha aaka mudiyathu... Have you read Sujatha's Nilan Kaieerru????......

enna venalum eluthalamnu nu nenaikkathey.....

said...

//மறுமொழிகளில் கண்ட இந்தப் பொதுமைப்படுத்துதல் (generalization) எனக்கு சரியாகப் படவில்லை.
//
சுட்டியமைக்கு நன்றி, பொதுப்படுத்துதல் செய்தது தவறு, எல்லோரையும் சொல்லவில்லை, ப்ரஸ்டீஜ்க்காக மட்டுமே செல்பவர்களை குறிப்பிடுகிறேன், எந்த கலையையும் கற்றுக்கொள்வது தவறில்லை, ஆனால் கலையின் மீதான ஆர்வமின்றி இது கற்றுக்கொள்வதால் உயர்வு என்று நினைப்பார்கள் என்பதன் பின்னுள்ள சாதிய தாக்கத்தையே குறிப்பிடுகிறேன்.

நன்றி

said...

எனவே இவ்வாறான பொதுமைப்படுத்ததிலின் மூலம் உங்கள் எழுத்தின் வீரியத்தையும் தாக்கத்தையும் குறைத்துக்கொள்ளாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Good joke,she could have as well asked Kuzhali to stop writing.

said...

ஒவ்வொரு முறை பார்ப்பன எதிர்ப்பு பதிவு வரும்போதும் படித்துவிட்டு அமைதியாகி விடுவது வழக்கம். ஆனால் இம்முறையும் அவ்வாறு இருக்க முடியவில்லை. சீரங்கத்தில் சிலைதான் உடைக்கப் பட்டதே தவிர தலைகள் இல்லை. பெரியாரே பெருமாள் முன் தன் சிலையை விரும்ப மாட்டார். பெரியாருக்கு சிலை வைக்கும் காசிற்கு தலித் சிறுவர்கள் நால்வருக்கு கால் சட்டை வாங்கிக் கொடுக்கலாம். பார்ப்பனர்களை விடுங்கள், உங்களுக்குத் தான் சுதந்திரமும், கணிப்பொறியும் கிடைத்து விட்டதே. ஆளும் கட்சி முதல் அனைவருமா பார்ப்பனர்கள்? உங்கள் தலைமுறையை ஒழுங்காக உருவாக்க ஒரு தடையும் இருப்பதாக தெரியவில்லை இன்றைய நாட்களில்.

சுஜாதாவின் கதையோ, சோ வின் கட்டுரையோ ஒரு மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்பதை அவர்களே உணருவார்கள். உங்களுக்குள் இல்லாத ஒற்றுமையை (பார்ப்பனர் அல்லாத) உருவாக்குங்கள் முதலில். தலித் தொகுதிகளில் விழும் கொலைகளை நிறுத்துங்கள். சும்மா பார்ப்பன எதிர்ப்பை காட்டாமல் மனிதத்தை வளருங்கள்.

அம்பேத்கார் அவார்டு வாங்கின திருமாவே சும்மாதான் இருக்கிறார். நீங்கள் பரதமும் கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொள்ள வேண்டாம்யா, அருவாள தூக்கிகினு அலைங்கய்யா, அதான் வீரம், அப்பதானே பூனூல அருக்கலாம்.

ஞாநி ஒருமுறை எழுதியது போல், எப்பவோ ஒளரங்க சீஃப் பண்ணின தப்புக்கு இப்ப முஸ்லீம் எல்லோரையும் வெட்ட முடியாது. இப்பவும் பார்ப்பனிய எதிர்ப்புன்னு கருணாநிதி மாதிரி காரிய அரசியல் பண்ணாமல், படித்த படிப்பு நாலு பேருக்கு உதவுற மாதிரி நல்லது பண்ணுங்க.

திராவிட கழங்கள் பண்ணிய மூளை சலைவையிலிருந்து சற்றே வெளியே வாருங்கள்.....