e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை
ஊழலை ஒழிக்கப்போறோம், ஊழலை ஒழிக்கப்போறோம், திமுக அசிங்கம், அதிமுக அசிங்கம், பாமக அசிங்கம், எல்லா கட்சியும் ஊழல், எல்லாம் அசிங்கம் எல்லாம் அசிங்கம் எல்லாத்துலயும் ஊழல்னு குணா கமல் ரேஞ்சுக்கு பாட்டு படிச்சிக்கிட்டு இருந்தார் நம்ம ACF 'ரமணா' புகழ் விஜயகாந்த், அதுக்காக தேமுதிகனு ஒரு கட்சி கூட ஆரம்பிச்சார், ஆகா ஊழல் ஒழிப்பு ரட்சகனே, மாற்றம் தரும் பிதாமகனே என்று பத்திரிக்கைகளும் எலவச வெளம்பரம் தந்தாங்க, அப்படிப்பட்ட சரியாக இன்கம்டாக்ஸ் கட்டும், மக்களுக்காக மண்டபத்தையே தரும் இருக்கும் கொடை வள்ளல் , சரியாக சொத்து மதிப்பை காட்டும், தம் சாதி என்பதால் தெலுங்கு நாயக்கர் சாதிக்கு வெறும் 14 பதினான்கு மாவட்ட செயலாளர்களை மட்டுமே தந்திருக்கும் சாதி பார்க்கா சிங்கம் விஜயகாந்த் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக கட்சியிலிருப்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை.
அடடே நல்ல விசயம் தானே, ACFனு படத்துல மட்டும் படம்காமிக்காம EBCRAனு நெசத்துலயும் செய்யறாங்களே, இந்த EBCRA கெவுருமெண்ட்டு, தனியார்னு எங்கெல்லாம் ஊழல் இருக்கோ அங்கெல்லாம் அதை ஒழிக்க போறாங்க டோய்னு சந்தோசமா பார்த்தா... படா தமாசாகீதுப்பா மேட்டரு... யின்னா தமாசா இந்த EBCRA எதுக்குனா "இது தே.மு.தி.க.வுக்குள் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கான இயக்கமாம்" அட்றா அட்றா அட்றா... ஊளலை ஒளிக்க பிறந்த இயக்கத்தில் உள்ள ஊளலை ஒளிக்க இயக்கமா... புச்சா கீதேப்பா....சரி யாருடா விஜயகாந்த்தா ஆரம்பிச்சாரு அது கூட பரவாலேது, சொந்த கட்சியை சீர்படுத்தறாருன்னா விஜயகந்த் பாவா இல்லியாம் இதை ஆரம்பிச்சது, பாவா கட்சியில பாதிக்கப்பட்ட ராஜேந்திரன்னு ஒருத்தராம், இன்னா ராசானு கேட்டதுக்கு அவுரு சொன்னாராம் மாநாட்டுக்கு மூனு இலட்சம் செலவு செய்ததிலிருந்து கட்சி பதவி, தேர்தல்னு ஏகப்பட்ட வசூலாம், சரி பாவாகிட்ட சொல்லலாமேனா "கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்." அப்புடிங்கறார், இவுரை பத்தி தேமுதிக மாநில நிர்வாகிகிட்ட கேட்டா அவரு திமுக கைகூலியாம் அப்புடிங்கறாரு.... என்னமோ போங்கப்பா ஒன்னியும் பிரியலை...
அது சரி ரட்சகன், பிதாமகன்னு தூக்கிவுட்ட ஊடக பூடகங்கள் யின்னாத்துக்கு பாவா இப்போ ஒன்னிய கவுக்கறாங்க, சப்பை பய எனக்கு தெரியுது நான் சொன்னேன் விஜயகாந்த், இனி ஊடகங்கள் பாவா நீங்க கலைஞருக்கும் திமுகவுக்கும் மங்களம் பாடுவிங்கனு நெனச்சா நீங்க ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் மங்களம் பாடுறிங்க, சொந்த ரத்தம் உட்டுடுமா? அதான் தூக்கி புடிச்ச ஒங்களையே இப்போ கவுக்குறாங்க, நீ என்னானா இவுனுங்களை நம்பி எங்க மேட்டருங்களை கைவுட்டுட்ட, வச்சாங்களா ஆப்பு... பாவா உன் இமேஜை டேமேஜாக்க உடமாட்டானுங்க, நாங்க ஒன்னும் செய்யமுடியாது பாவா.... வேடிக்கை தான் பாக்கனும்....
இவ்ளோதான் நம்ம மேட்டரு, அப்பாலிக்கா இதுக்குமேல குமுதம் ரிப்போர்ட்டர்ல வந்தது, அட நம்ம வலைப்பதிவு பத்திரிக்கை வெட்டி ஒட்டு புகழ் இட்லிவடை போடுவாரா இல்லையானு தெர்ல, அதான் நாமளே போட்டுட்டோம்........
குமுதம் கவர்ஸ்டோரி
ஊழலை ஒழிப்பதற்காக தனி இயக்கமொன்று தே.மு.தி.க.வில் தலை தூக்கியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மற்ற கட்சிகளில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் புண்ணை அகற்றுவதற்காகத்தான் இந்த இயக்கம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். இது தே.மு.தி.க.வுக்குள் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கான இயக்கமாம். இதனால் திகிலடித்துப் போய் நிற்கிறது தே.மு.தி.க.
‘ஊழலை ஒழிக்கப் போகிறேன்’ என்று ஒவ்வொரு சினிமாவிலும் டயலாக் பேசி நடிப்பவர் நடிகர் விஜயகாந்த். அதற்காகவே தே.மு.தி.க. என்ற கட்சியை அவதரிக்க வைத்தார் அவர். அந்த, ‘தே.மு.தி.க.வுக்குள்ளே ஊழலை ஒழிக்கப் போகிறோம்’ என்று, ஓர் அமைப்பினர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதால், தொண்டைக்குள் மீன்முள் சிக்கியதைப் போல துவண்டு நிற்கிறார்கள் தே.மு.தி.க. கட்சியினர்.
ஈரோடு, கோவை மாவட்ட எல்லையில் உள்ள தாசர்பட்டியில்தான் இப்படியரு புதிய இயக்கம் பூத்திருக்கிறது. தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட இந்தத் தாசர்பட்டியில் கடந்த ஏழாம் தேதியன்று (ஞாயிறு) மாலையில், அந்த ஏரியாவைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர், 'e.b.c.r.a' என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். "லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை" என்பது இதன் விரிவாக்கமாம்.
தாசர்பட்டிக்கு வெளியே ஒரு சோளக்காட்டை வெட்டிச் சமமாக்கி, அதில் மேடை போட்டு, ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் இப்படியரு இயக்கத்தை அறிவித்துள்ளனர் தே.மு.தி.க.வினர். இந்தத் திடீர் இயக்கத்தின் தலைவர் ராஜேந்திரன் என்பவர்.
‘‘பொதுக்கூட்ட மேடைக்கு தாரை தப்பட்டையுடன் மேளதாளம் முழங்க வந்த ராஜேந்திரனிடம், அவரது புதிய இயக்கம் பற்றி ‘என்ன இது திடீர் கலாட்டா’ என்று கேட்டோம்.
ராஜேந்திரன் சீரியஸாகப் பேச ஆரம்பித்தார். ‘‘சும்மா காமெடிக்காக இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. எங்களின் செயல்பாடுகள் சிலபேருக்கு காமெடி போலத்தான் தெரிகிறது. ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.
எங்க தலைவர் விஜயகாந்த், கட்சி ஆரம்பித்தபோதே சிலபேர் அதை காமெடியாத்தான் நினைச்சு சிரிச்சாங்க. ஆனால், இப்போ தலைவரைப் பார்த்து அலறிக்கிட்டிருக்காங்க.
கட்சிக்குள்ளே இப்படியரு ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நாங்க ஆரம்பிக்கக் காரணமே, எங்க கட்சிக்காரங்கதான். கேப்டனுக்கு லஞ்சம் என்கிற வார்த்தையே பிடிக்காது. ஆனால், கட்சிக்குள்ளே பல இடங்களில் லஞ்சம் புகுந்து விளையாடுது. அதுக்கு ஒரு சரியான உதாரணம் தாராபுரம் தொகுதிதான்.
தலைவர் கட்சி ஆரம்பிச்சப்போ, இந்தத் தாசர்பட்டியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாயை மதுரை மாநாட்டுக்காகச் செலவு செய்தோம். தலைவர் எனக்கு தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியைத் தந்தார். நானும் வெறியோடு உழைக்க ஆரம்பித்தேன். ஆனால், கொஞ்ச நாளில் எனக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.
இங்கே தாராபுரம் நகர தே.மு.தி.க. நிர்வாகிகள், தொட்டதற்கெல்லாம் பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக, நகரத் தலைவராயிருக்கிற விஜயகுமார் மேலே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்தது.
இவர்கள் எல்லைமீறி என்னுடைய ஒன்றியத்துக்குள்ளும் நுழைந்து, கைவேலையைக் காட்ட ஆரம்பித்தார்கள். கட்சி உறுப்பினர் படிவத்தைக் கூட இரண்டாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய்னு விற்றுக் காசு பார்க்க ஆரம்பித்தார்கள். கட்சியின் பேர் பயங்கரமாக கெட்டுப் போக ஆரம்பித்தது.
இதனால், தே.மு.தி.க. கட்சிக்குள் காலை வைக்கவே பயப்படும் நிலை உருவானது. சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் சீட் கேட்டவர்களிடம் எல்லாம் சரியான சில்லறை வசூல் நடந்தது.
எங்கள் கட்சி ஊழல் நிர்வாகிகள், தேர்தல் வேளையில் தி.மு.க., அ.தி.மு.க.காரர்களிடம் கைநீட்டிக் காசு வாங்கி கட்சியைக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்தார்கள். மாற்றுக் கட்சிக்காரர்களிடம், ‘நம்ம கட்சிக்கு வந்திடுங்க, கேப்டனிடம் சொல்லி பெரிய பதவி வாங்கித் தருகிறோம்’னு பீலா விட்டு வசூல்வேட்டை நடத்தினார்கள். பணம் வாங்கிய பின் கட்சியில் சேர்த்து, பதவி வாங்கித் தராதது தனிக்கதை.
ஈரோடு மாவட்ட நிர்வாகிகளிடம் இதுபற்றிப் புகார் செய்தோம். அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அங்கே தாராபுரம் நிர்வாகிகள் காசை வீசி காரியத்தைச் சமாளித்து விட்டார்கள் என்று பிறகுதான் தெரிந்தது.
சரி, கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்.
உள்கட்சியில் நடக்கும் இந்த ஊழல் பிரச்னையை எப்படிக் கழுவிக் களைவது என்று உட்கார்ந்து யோசித்தோம். அப்போது உதயமானதுதான் இந்த ஊழல் ஒழிப்பு இயக்கம் என்ற ஐடியா.
தே.மு.தி.க.வில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை ஒழிப்பதுதான், இந்த இயக்கத்தின் முதல் வேலை. கட்சியை முதலில் சரி செய்த பிறகு, ஊரைத் திருத்தும் நோக்கத்தோடு இந்த இயக்கம் நகர ஆரம்பிக்கும்.
இந்த இயக்கம் கண்டிப்பாக கேப்டனின் கவனத்திற்குப் போகும். அவர் எங்களிடம் விசாரிக்கும்போது, ஊழல் செய்தவர்களின் ஒட்டுமொத்த பட்டியலையும் அவரிடம் ஆதாரங்களோடு காட்டுவோம். எங்கள் ஒன்றியத்திற்குள் மட்டுமல்ல, இந்த ஈரோடு மாவட்டத்திற்குள், எங்கள் கட்சிக்குள், எங்கே ஊழல் நடந்தாலும் அதைப் பட்டியலிடுவோம். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.
இது கேப்டனுக்கு எதிரான இயக்கமில்லை. அவருக்குத் துணை புரியப் போகும் ஓர் இயக்கம். நாங்களும் தே.மு.தி.க.வினர்தான். கேப்டன் எங்களைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
அப்படியே தப்பித் தவறி எங்கள் மீது நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு வெளியே தள்ளினாலும் கூட, ஊழல் பெருச்சாளிகளின் பட்டியலை அவரிடம் காட்டுவோம். ‘இந்த மாதிரி ஊழல் பேர்வழிகள் இருந்தால் கட்சி எப்படி உருப்படும் தலைவா?’ என்று கேட்டுவிட்டு, கட்சியை விட்டு காலை வெளியே எடுத்து வைப்போம்’’ என்றார் நெத்தியடியாக.
ஈரோடு மாவட்ட தே.மு.தி.க.வுக்குள் இப்படியரு எரிமலை வெடிக்க, இதற்கு மற்ற மாவட்ட தே.மு.தி.க.வினரும் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.
‘‘பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்தோம். நீங்கள் துணிந்து மணி கட்டி விட்டீர்கள். உங்கள் வழியில் நாங்களும் எங்கள் மாவட்ட ஊழல் நிர்வாகிகளை எதிர்க்கப் போகிறோம்’’ என்கிறார்களாம் உற்சாகமாக.
இந்தத் திடீர் இயக்கம் பற்றி தே.மு.தி.க. மாநில நிர்வாகிகளிடம் கேட்டோம்.
"ராஜேந்திரனை, தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நாளாகி விட்டது. அவர் இப்போது தே.மு.தி.க.வில் இல்லை. தி.மு.க.வின் கைக்கூலியாகி விட்டார். அவரைப் பற்றிப் பேசி அவரைப் பெரிய ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை!" என்றனர் படுகாட்டமாக.
ஒரு பக்கம் கொஞ்சம் காமெடியாகத் தெரிந்தாலும், இந்தத் திடீர் இயக்கம் தே.மு.தி.க. க்குள் ஒரு திகிலையும், கலக்கத்தையும் கிளப்பியிருக்கிறது என்பதே நிஜம்!
கடைசிச் செய்தி : ஈரோட்டில் பூனைக்கு மணி கட்டியதை மகிழ்ச்சியோடு ஆமோதித்திருக்கும் மற்ற மாவட்ட நிர்வாகிகள், நடந்தவை யாவும் நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையில், கட்சிப் பதவிகளைப் பெறுவதற்காக தலைமை கழக நிர்வாகிகள் இருவருக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலமாகத் தாங்கள் இதுவரை செலுத்திய பல லட்ச ரூபாய்களுக்கான ஆதாரங்களை தலைமைக்கு சரம் சரமாக அனுப்பி வருகிறார்கள்.
12 பின்னூட்டங்கள்:
இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்குப் புரியல. தன் கட்சிக்குள்ள இருக்கிற தப்ப கண்கானிக்க இரு இயக்கம் அமைச்சிருக்கிறது நல்லதுதானே? இன்னைக்கு ஒவ்வொரு கட்சிக்கும் உண்மையான தேவை இதுதான். கட்சி மேலிடம் சொல்லும் எல்லாம் அடிமட்டம் வரை எந்த கட்சியிலும் நடப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். தன் கொள்கைகள் முதலில் தன் கட்சியில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்று அவர் கண்கானிப்பதில் தவறொன்றும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
ராஜேந்திரன் சொல்வதுபோல் இப்போதைக்கு இது காமெடியாக தோன்றலாம். மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயத்தை ஒருவர் செய்ய முன்வரும்போது கிண்டல்கள் செய்யாமல் கொஞ்சம் பொருத்திருந்துதான் பார்ப்போமே... என்னதான் செய்கிறார் என்று!
//தன் கட்சிக்குள்ள இருக்கிற தப்ப கண்கானிக்க இரு இயக்கம் அமைச்சிருக்கிறது நல்லதுதானே?
//
அருள் நல்லா கவனிங்க அந்த இயக்கத்தை அமைத்தது விஜயகாந்த் அல்ல, பாதிக்கப்பட்டவர்கள் தான் அதை அமைத்திருக்கின்றார்கள்.... இவரே அமைத்திருந்தால் பாராட்டலாம்...
மேலும் சொல்லியிருக்கிறார்...
//கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்.
//
அப்புறம் இது வேற சொல்லியிருக்கிறார்
//தே.மு.தி.க.வில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை ஒழிப்பதுதான், இந்த இயக்கத்தின் முதல் வேலை.
//
பொய் சொத்துக்கணக்கு, இன்கம்டாக்ஸ் அது இதுனு கேப்டனையே போட்டு தாக்கிடப்போறாங்க பாத்துங்க.
// மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயத்தை ஒருவர் செய்ய முன்வரும்போது கிண்டல்கள் செய்யாமல் கொஞ்சம் பொருத்திருந்துதான் பார்ப்போமே... என்னதான் செய்கிறார் என்று!
//
ஹி ஹி இங்க பாருங்க தேமுதிக மாநில நிர்வாகி என்ன சொல்லியிருக்காருனு... நீங்க நல்ல விசயம்னு சொல்றீங்க, ஆனா அவங்க கட்சி காரங்களே திமுக கைகூலிங்கறாங்க...
//இந்தத் திடீர் இயக்கம் பற்றி தே.மு.தி.க. மாநில நிர்வாகிகளிடம் கேட்டோம்.
"ராஜேந்திரனை, தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நாளாகி விட்டது. அவர் இப்போது தே.மு.தி.க.வில் இல்லை. தி.மு.க.வின் கைக்கூலியாகி விட்டார். அவரைப் பற்றிப் பேசி அவரைப் பெரிய ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை!" என்றனர் படுகாட்டமாக.
//
படா ஒரு மேட்டர் மட்டும் மீட்டரு.... விஜயகாந்த் இந்த புனித பசு, புனித பிம்பம் லொட்டு லொசுக்கெல்லாம் பத்திரிக்கை காரங்களே போட்டு தள்ளிடுவாங்க... சும்மாவா ரத்தமாச்சே சொந்த ரத்தமாச்சே உட்டுடுவாங்களா என்ன?
மன்னிக்கவும், நீ வெட்டி ஒட்டியிருக்கும் குமுதம் கவர் ஸ்டோரியை நான் படிக்கவில்லை. நீ எழுதிய வரிகள் மட்டுமே படித்தேன்.
//திமுக அசிங்கம், அதிமுக அசிங்கம், பாமக அசிங்கம், எல்லா கட்சியும் ஊழல், எல்லாம் அசிங்கம் எல்லாம் அசிங்கம் எல்லாத்துலயும் ஊழல்னு குணா கமல் ரேஞ்சுக்கு பாட்டு படிச்சிக்கிட்டு இருந்தார் நம்ம ACF 'ரமணா' புகழ் விஜயகாந்த், //
காலங்காத்தால வந்து உக்காரக்கூட விடமாட்டிறீங்களேப்பா
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//மன்னிக்கவும், நீ வெட்டி ஒட்டியிருக்கும் குமுதம் கவர் ஸ்டோரியை நான் படிக்கவில்லை. நீ எழுதிய வரிகள் மட்டுமே படித்தேன்.
//
ஆமாம், வெறுமனே என் வரிகளை மட்டும் படித்தால் குழப்பம் வரும் தான்... கொஞ்சம் மாற்றுகிறேன்...
குழலி,
நானும் இன்னும் குமுதம் மேட்டரை முழுசா படிக்கலை (எப்படியும் புக் வாங்குவோம், அதிலேயே படிக்கலாம்னு விட்டிட்டேன்..)
தங்களிடம் உள்ள தவறை அந்தக் கட்சியினரே ஒப்புக் கொள்ள முன்வரும் போது அதைப் பாராட்ட வேண்டும் என்ற அருளின் கருத்து தான் எனதும். தேதிமுகவினரே அமைதியாக ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் நல்ல விஷயம் தானே. கேப்டனே ஊழல் செய்திருந்தாலும், கண்டுபிடிப்பார்கள் என்றால், செய்யட்டுமே! வெளிச்சத்துக்குக் கொண்டுவரட்டுமே..
இதைப் பாராட்டாமல், முளையிலேயே விமர்சிப்பதால், இது போன்ற முயற்சிகளை எடுக்கும் யோசனை உள்ளவர்கள் கூட பின்வாங்கத் தொடங்கும் வாய்ப்பிருக்கிறதே! கணக்கு கேட்பவர்கள், ஊழலை ஒழிக்கக் கிளம்புபவர்களை மாற்றுக் கட்சிக்காரர்கள் என்று சொல்வது எல்லாக் கட்சிகளையும் போலவே, தே.தி.மு.கவும் செய்கிறது என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.
//இதைப் பாராட்டாமல், முளையிலேயே விமர்சிப்பதால்
//
சே... சே... நான் எங்கே விமர்சித்தேன், இந்த முயற்சியை எடுத்த ராஜேந்திரனை எங்கேயாவது விமர்சித்திருக்கிறேனா பாருங்க... நாஞ்சொல்றாது என்னனா ஊளலை ஒளிக்க பொறந்த கட்சியின் ஊளல் கூத்துகள், அம்பது வருசம் ஊளலற்ற ஆட்சி குடுக்க துடிக்கிற கேப்டன் கட்சியில் நடக்குற ஊளலை கூட தெரிஞ்சிக்காம இருக்குற லட்சனம், இத்த சொல்ல அனுப்புற ஃபேக்ஸ் குப்பை கூடைக்கு போற கூத்து, இத்தெல்லாம் தான் மாற்றம் தரும் கேப்டனோட புனித பசு கட்சியில நடக்குற விசேசங்கறதைதான் சொல்லிகினேன்....
அப்பாலிக்கா இன்னொரு மேட்டரு தாங்கோ தாங்குனு தாங்குன கேப்டனை டகால்னு எல்லா பிரஸ்சும் காலைவாரி உடுறாங்களே மேட்டர் மீட்டர் புர்ஞ்சிதா?
//ஊழலை ஒழிக்கக் கிளம்புபவர்களை மாற்றுக் கட்சிக்காரர்கள் என்று சொல்வது எல்லாக் கட்சிகளையும் போலவே, தே.தி.மு.கவும் செய்கிறது என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது.
//
இன்னாங்க புரியாம பேசிக்கினிருக்கிங்க... தேமுதிகவும் செய்கிறதேனா? இவுங்க இன்னா ஸ்பெசலு? ஸ்பெசல் தோசை, ஸ்பெசல் தோசைனு சொல்லிகினே சாதா தோசையை துண்ணுட்டு இது என்னா ஸ்பெசல் தோசை மாதிரியே இல்லியேனு சொல்லுறிங்க...
//ஸ்பெசல் தோசை, ஸ்பெசல் தோசைனு சொல்லிகினே சாதா தோசையை துண்ணுட்டு இது என்னா ஸ்பெசல் தோசை மாதிரியே இல்லியேனு சொல்லுறிங்க... //
அது சரி :)
சொக்கத்தங்கம் கருப்புத்தங்கம் விஜய்காந்து கட்சியில கோந்து போட்டு ஊழல் யார் தான் யார் என அடையாளம் தெரியாத அளவுக்க்கான இதர கட்சியிலிருந்து வந்தவர்களின் ஊழல் நீட்சியைக் கண்காணிக்கும் அமைப்பாக இது இருக்கலாம் இல்லியா?
மேற்படித் தகவல்: சம்பந்தப்பட்ட ஈரோடு, கோவை தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
விஜய்காந்தை ஒரு முழுமாற்றாக கூடுதல் கற்பனைகளோடு எண்ணி, எதிர்நோக்கும் அளவுக்கு சூழலை ஆக்கிய தமிழக அரசியலில் இதர திராவிடக் கட்சிகளில் இந்த அளவுக்குக் கூட நேர்மை இல்லை என்பது மறுக்கமுடியாதது.
//விஜய்காந்தை ஒரு முழுமாற்றாக கூடுதல் கற்பனைகளோடு எண்ணி, எதிர்நோக்கும் அளவுக்கு சூழலை ஆக்கிய //
Katchi arambicha appa theriyalayo indha media mel pasukkalukku? Innumoru cinema nizhalai unmai enru namba (alladhu nambiya) vaitha ivangalai enna solla..ada pongada neegalum unga oodaga niyayamum.. dharmamum...
Balaji aka vvaniyan
Post a Comment