ஐஐடி இடஒதுக்கீடு: புதிய சதி திட்டம்

நம் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஐஐஎம், ஐஐடிகளின் இயக்குனர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மனித வளத்துறை அமைச்சகத்தை நெருக்கி வருகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டிவனத்தில் தனது தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த அந்த கல்வி நிலையங்களின் இயக்குனர்கள் இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இது பிற்பட்டவர்களுக்கு எதிரான அவர்களது மன நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நம் நாட்டைச் சேர்ந்த பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்காக கொடி பிடிப்பது ஏன்?

இந்தக் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், அந்த ஒப்புதல் கிடைக்கும் முன்பே அவசர அவசரமாக நுழைவுத் தேர்வை நடத்தி முடிக்க ஐஐஎம், ஐஐடி நிறுவன இயக்குனர்கள் முயன்று வருகின்றனர்.

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் இந்த அவசரத்தைக் காட்டுகிறார்கள். இதனால் ஜனாதிபதியில் ஒப்புதல் கிடைத்து சட்டம் அதிகாரப்பூர்வமான பின்னர் தான் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.

நன்றி
தட்ஸ்தமிழ்

36 பின்னூட்டங்கள்:

said...

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டியிருக்கும்

subject to the case pending in the Supreme Court.It is likely that some more cases will be filed
against the Act.

said...

//subject to the case pending in the Supreme Court.It is likely that some more cases will be filed
against the Act.
//
இது வழக்கம் தானே, எல்லா சதிவேலைகளையும் முறியடித்து இடஒதுக்கீட்டை அமல் செய்ய வேண்டும்

said...

இந்த சதியை விழிப்புடன் அனைவரும் (சதிகார கும்பலைத் தவிர) ஒன்று சேர்ந்து முறியடிக்கவேண்டும்.

said...

//ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த அந்த கல்வி நிலையங்களின் இயக்குனர்கள் இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்//

Good catch by Mr.Ramadoss.
Thanks for sharing this Kuzhali.

said...

Reservation for OBCS itself is a great cospiracy against merit and people not covered by reservation.

said...

27% இடஒதுக்கீடு சட்டத்துக்கு கலாம் ஒப்புதல்!
ஜனவரி 05, 2007

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவில் நேற்று அப்துல் கலாம் கையெழுத்திட்டார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாகியுள்ளது.

இந்த கல்வியாண்டு முதலே இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது. இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினரும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற விகிதத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

இதேபோன்ற இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறாத தனியார் சுய நிதி கல்லூரிகளிலும் அமல்படுத்த அரசு சட்ட மசோதாவைத் தயார் செய்துள்ளது. விரைவில் இதுவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று ஏற்கனவே மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.

இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லியிலும் வேறு சில இடங்களிலும் பாஜக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டக்காரக்களுக்கு பாஜகவும் ஆதரவு தந்தது. ஆனால், சட்ட மசோதா கொண்டு வரப்பட்டபோது பிற்பட்டவர்களின் வாக்குகளை மனதில் வைத்து அமைதியாக வாக்களித்துவிட்டது குறிப்பிடத்தக்கது

-தட்ஸ்தமிழிலிருந்து திருடியது...

//ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற விகிதத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.//

இது தான் சுத்தமாக் மண்டையில் ஏறவில்லை.

முதலாமாண்டு 9%, இரண்டாமாண்டு 18%, மூன்றாமாண்டு 27% என்பது உண்மையிலேயே சாத்தியமா? இப்படி பரீட்சார்த்த முறையில் செயல்படுத்த முயல்வது அரசின் இயலாமையா? இல்லை தரகு / ஆதிக்க வர்க்கத்தின் அதிகாரத்திற்கு தலை கொடுத்தா?

மேலும் வெளிநாட்டினருக்கு 25% வழங்கலாம் என ஆலோசனை வழங்கும் பருப்புகள் பூர்வகுடிகளின் வரிப்பணத்தில் இயங்கும் அரசினது நிறுவனத்திற்கு இம்மண்ணின் மைந்தர்களுக்கு 27% இடஒதுக்கீடை வழங்கக்கூடாது என கூக்குரலிடுவது கேலிக்குறியதாகவே எனக்குப் படுகிறது

said...

குழலி,
விழித்திருக்க வேண்டிய நேரமிது. நான் என் பதிவில் சொன்னது போல இதனை எதிர்கொள்ள ... பாராளுமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், இன்னும் வேகமாக வெகுசன ஊடகங்களிலும் செய்ய வேண்டியவை நம்முன் மலையென நிற்கின்றன.

இதற்காகக் குரல் கொடுப்பதில் இப்போதைக்கு முன்னணியில் இருக்கும் ராமதாஸ் தொடர்ந்து இதுபோல் இருக்க வேண்டும். அதற்காக அவருக்கு என் வாழ்த்துக்கள்.

said...

//Reservation for OBCS itself is a great cospiracy against merit and people not covered by reservation.//

What is the problem with Mr.Ravi Srinivas? This is not InfoSys or any other private organisation to set cut-off marks as >75% and filter out all others. This Indian Goverment, and people are trying to live , and for the they need to get their fair part. Is this that difficult to undestand? If so dont call your self a social writer heron.

said...

//It is like pulling and leaving the unarmed people at the battle front.
//
வந்துட்டாருடா பரமபிதா, இன்னா அர்த்தம்பா இதுக்கு, அவங்கெல்லாம் பொறக்கும் போதே ஆயுதத்தோட பொறந்தவங்களா? இப்படித்தான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால பொறியியல் மருத்துவ கல்லூரி இட ஒதுக்கீட்டுக்கு சொன்னாங்க இன்னைக்கு என்னா நெலமை, இப்போ அதையே ஐ.ஐ.டி.க்கு சொல்றாங்க.

//If somebody is really interested in the upliftment of downtrodden, they must work towards getting the basics and fundamentals from the beginning.
//
அதெல்லாம் சரிதான் அதுவரைக்கும் இடஒதுக்கீடு இருக்கட்டும், இன்னா ராசா அதுவரைக்கும் இங்க கஞ்சிக்கு கும்பி காய்ஞ்சி கிடக்கட்டும் அவங்க பிரியாணி சாப்பிடட்டுமா? நல்லா பேசுறாங்கய்யா நெயாயம்...

//This politically forced madness will not only destroy the very upliftment of downtrodden but will cater the collapse of the education centres of excellence
//
பொறக்கும்போதே அறிவோட பொறந்ததுங்க என்னத்த சாதிச்சி கிழிச்சிதுங்கனு கேக்கத்தோனுமா இல்லியா? சென்ட்டர் ஆஃப் எக்ச்சலென்சியாம் எக்ச்சலென்சி, இன்னா பெருசா கயிட்டிடுச்சிங்க சென்ட்டர் ஆஃப் எக்ச்சலென்சில? இந்த சென்ட்டர் ஆஃப் எக்ச்சலென்சி கும்பலால அறிவியல்ல இந்தியா நெம்பர் ஒன்னா கீதா? புவியல்ல ஒன்னா கீதா? அப்புறம் என்ன அங்க புடுங்கி எக்சலன்சி? பதினோராயிரம் கோடி செலவு செஞ்சி உடுற ராக்கெட் சொய்யிங்னு கடல்ல போயி சொறுகுது, மறுநாள் கஸ்த்தூரி ரங்கன் பேட்டி தர்றாரு, எங்கே பிரச்சினை, எங்கே தவறு நடந்ததுனு ஆய்வு செய்கிறோம்னு, இத்தனை வருசமா அதைத்தானய்யா செய்றிங்க, ஏன் இந்த கடல்ல சொறுகிற ராக்கெட் செய்ய பொறக்கும்போதே அறிவோட பொறந்தவங்களால மட்டும் தான் முடியுமோ?

said...

25% வெளிநாட்டுகாரவங்க அத்தனை பேரும் ஆப்ரிக்க பூர்வீக கருப்பு இனத்தவங்களாக இருந்தாலும்கூட ஓ.கேவா?
மண்ணையும், வளத்தையும் அந்நியனுக்கு இலவசமா கூறுபோட்டு விற்கரதிலேயே இப்படி குறியா இருக்காங்களே!
என்று தனியும் இந்த அடிமையின் மோகம்?

said...

யார் வீட்டு சொத்தை, யார எடுத்து, யாருக்கு இப்படி இனாமுக்கு ஏலம் விடுவது?
விவரம் அறியா உலகம் ஆகிவிட்டதடா சாமி!

said...

kuzhali,

After a long time you and Ramadoss are raising valid points. Congratulations! and please do not stoop one more time with xenophobic and linguitic fascist tirades. Please continue with such excellent blogging.

However, I agree with paramapitha to some extent. Reservations has helped a lot of people in the backward community (including me)to enter higher education and participate in global economy. However, if we look at this issue closely, it is actually people who are relatively middle class in the OBC community who have enjoyed these priviliges. The poor in the OBCs are still poor. The same goes for SCs/STs children.

Though the argument that people who oppose reservations are painted as brahmins, I disagree with many of the OBCs arguments myself.

The discrepancies you see in India post-independence are largely a result of the failure of the Indian political system to provide quality primary education to everyone in India. Even today, in my village, children do not have decent primary schools. One of my own relative who works as a housemaid, sends her children to english medium private schools spending a big chunk of her income.

In order to bring a social transformation, a 27% reservation in IITs, which recruits only 3000 students is nothing. What actually will bring a social transformation is establishing good quality primary schools all around Indian villages that will educate children from all the poor sections of the caste system.

This is exactly where, Ramadoss fails. He never protests against the injustice that is being inflicted upon the Indian poor of all castes. It is glamorous to fight the IITs and IIMs and get photo-op in newspapers. But it does not actually change the fate of millions of poor indians.

I will be happy only when all the poor in India irrespective of caste gets access to quality primary education. When that happens, India will become a superpower in three decades.

Vignesh

said...

This is exactly where, Ramadoss fails. He never protests against the injustice that is being inflicted upon the Indian poor of all castes. It is glamorous to fight the IITs and IIMs and get photo-op in newspapers. But it does not actually change the fate of millions of poor indians.


Neither Ramadoss nor Kuzhali Nor Karunanidhi is interested in this.
They want the elite in OBCs to compete with and defeat the 'forward castes' in all walks
of life.They are for elite OBCs ruling the country and state, and,
not for the poor to come up and
compete with elite in OBCs.Will Ramadoss ever give up the benefits and priveleges he enjoys in favour
of a poor vanniya or will he be
interested in a poor vanniyar male
or female competing with his children or granchildren.NO.

said...

25% for foreign students will result in making IITs,IIMs more popular abroad and will bring in
a large pool of qualified students
will diverese educational backgrounds.They too have to compete and score equally well
to get in. When there is discrimination is done against
some citizens of India in the name
of caste through preferntial treatment what is wrong in making
25% reservation for students from
other countries who compete with the best in India.They seek no
concession in cut-off marks.
It is OBC ruled universities like Anna University,Madras University which discriminate against a forward caste student and faculty where as Yale and Stanford or CNRS(france) or University of Munch do not discriminate.Go global and compete with the best in world.
Dont discriminate on the basis of
caste.

said...

ISRO builds rockets.PMK,DMK are expers in rackets, fool proof rackets.

said...

முதலில் 10ம் வகுப்பு வரை எவ்வளவு வேண்டுமோ இட ஒதுக்கீடு கொடுங்கள். அதன்பின் திறமை அடிப்படையில்தான் எல்லாரும் பொட்டியிடட்டுமே? சும்மா வீம்புக்காக இந்தமாதிரி இடஒதுக்கீடு செய்வதால் I.I.T/I.I.M உள்ளே வேண்டுமானால் நுழையமுடியும், மற்றவர்களுடன் சமமாக படித்து வெளியில் வரமுடியாது. அங்கு படித்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இதெல்லாம் வெறும் கண்துடைப்பு, மற்றும் இடங்களை வீண்செய்வதே.

said...

/*...will not only destroy the very upliftment of downtrodden but will cater the collapse of the education centres of excellence */
Let it collapse. If so called "centres of excellence" collapse in the process of downtrodden brother's upliftment, LET IT COLLAPSE...RAHTER STAND IN PROUD.

said...

இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்திலே உள்ள உரிமை.இத்தனை காலமாக மறைக்கப்பட்டு வந்துள்ளது.இப்போது மறுக்கப்படுவதற்கு என்னென்ன சூழ்ச்சிகள் முடியுமோ அவ்வளவும் செய்யப்படுகின்றன்.இதில் வேதனை என்னவென்றால் பிற்படுத்தப்பட்டவர்களில் படித்து முன்னேறிப் பதவிகளில் இருப்பவர்களின் மெளணமும் மெத்தனமுந்தான்.இந்த சூழ்ச்சிக்காரர்களை பிடித்து அக்கு வேறு ஆணிவேறாகப் பிய்த்து எடுத்து அடக்கிவைக்க வேண்டாமோ?
இத்தனை வழக்குறைஞர்கள் இருக்கிறார்களே என்ன செய்துகொண்டுள்ளார்கள்,போட்டு வதக்கவேண்டாமோ?இது அரசு நிறுவணங்களா இல்லை அவாளது அப்பன் வீட்டுச்சொத்தா?நான்கு பேரைச்சந்தியில் சிரிக்கவைத்தால் நரிகள் தானாக அடங்கிவிடுமே.கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் தானே கைவந்த கலை.

said...

//நான்கு பேரைச்சந்தியில் சிரிக்கவைத்தால் ..//

நண்பரே,

அடிப்படை கல்வி தரமானதாக இல்லாமல் இடஒதுக்கீட்டில் I.I.T/I.I.M நுழைபவர்கள் நிலைமைதான் சந்தி சிரிக்கிறது.

It is one thing to get into these institutions, it is a whole different thing to get through!

இல்லை அங்கேயும் 10 மார்க் வாங்கினால் பாஸ் போடவேண்டும் என்று ஆரம்பிப்பீர்களா?

அங்கு படித்தவர்களிடம் கேட்டு பாருங்கள். அடிப்படை கல்வியில் எவ்வளவு சலுகை வேண்டுமானாலும் கொடுத்து, அவர்களை போட்டிக்கு தயார் செய்வதுதான் தொலைநோக்கு பார்வையுடன் செய்யவேண்டியது.

உடனே பார்ப்பான், பூணூல் என்று சில chronic schizophreniacs மாதிரி ஆரம்பிக்கவேண்டாம். நானும் சூத்திரன் தான், பூணூல் போடாத சூத்திரன். கோட்ட இல்லாமல் படித்த சூத்திரன்.

said...

குழலி,

நல்ல பதிவு! வெளிநாட்டினர் என்ற போர்வையில் இந்திய வம்சாவழி உயர்குடியினருக்காவது கிடைக்கட்டும், இந்தியாவில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடம் கிடைக்ககூடாது என்ற நல்லெண்ணமாக இருக்கலாம் :)

தருமி அய்யா குறிப்பிட்டது போல சமூகநீதிக்காக நாம் செய்யவேண்டிய பணிகள் இன்னும் ஏராளம். தொடர்ந்த விளிப்புணர்வும், அரசியல் களங்களும் இதற்கு உதவட்டும்.

அடுத்த எதிர்ப்பு தனியார் துறையில் இடஒதுக்கீடு சட்டமசோதாவிற்கு காத்திருக்கிறது. மறுபடியும் இதே வாதங்கள், இதே தந்திரங்கள் என சக்கரம் சுழலும்.

said...

Thanks Kuzhali. Atleast few people are here to keep reminding this reservation issue. But if the reservation is for 60% or majority of sons of soil, I request and plead that others like Ramdoss also keep raising their voice to get this justice. Although you only dream of getting this justice as most of the judicial, political and administrative systems including the media are under their control. As one of fellow blog writer(I think sundaravadivel..) said that it is their right and only they should fight for it. Oru samudhayathin valiyay andha samudhyam mattumae unara mudiyum.
Thanks
Balaji aka vvaniyan

said...

/*
////Let it collapse. If so called "centres of excellence" collapse in the process of downtrodden brother's upliftment, LET IT COLLAPSE...RAHTER STAND IN PROUD.
////

உணர்ச்சி வசப்படுவதில் அர்த்தம் இல்லை ஐயா!
*/
Dear PP,
Mine wasn't an emotional statement, I said it with full clarity against a tactic I saw here. The tactic of using "institution collapse fear" to reason against a process intend to help downtrodden brothers.

/*
சிலர் எழுந்து நின்று மற்றவர்க்கும் உதவியாய் இருப்பதை விட எல்லாரும் சேர்ந்து அழிந்து நாசமாவதுதான் தங்கள் சித்தம் எனில்...
*/
I'm not for collapse of anyone or anything. As you wish, let's all *share* and live in prosperity.

said...

Dear Kuzali, It seems my second comment to Dear PP been missing.

said...

//Dear Kuzali, It seems my second comment to Dear PP been missing.
//
மன்னிக்கவும் ஜிமெயிலில் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுவிட்டதால் கவனிக்கவில்லை, ப்ளாக்கர் சென்று பார்த்தால் நிறைய பின்னூட்டங்கள் இருந்தன, இப்போது தான் வெளியிட்டேன்.

நன்றி

said...

// அங்கு படித்தவர்களிடம் கேட்டு பாருங்கள். அடிப்படை கல்வியில் எவ்வளவு சலுகை வேண்டுமானாலும் கொடுத்து, அவர்களை போட்டிக்கு தயார் செய்வதுதான் தொலைநோக்கு பார்வையுடன் செய்யவேண்டியது.///

அங்கு படித்தவர்கள் என சொல்லி களத்திற்கு இழுத்து விட்டீர்கள்.

உண்மையில் நான் பார்த்த வரை பொது மற்றும் SC/ST இட ஒதுக்கீடில் வந்தவர்க்கிடையில் பெரிதாக distinctions தெரியவில்லை.

அதிபுத்திசாலித்தனமும், சராசரியும் இருபக்கமும் இருந்தது. சந்தர்ப்பங்களை கண்டறிந்து பயன்படுத்தியவர்களும் கடின உழைப்பை கொண்டவர்களுமே இறுதியில் வென்றனர்.

இட ஒதுக்கீடு என்றால் ஒன்றுமே இல்லாமல் வருவது என்பது தொனி நிலவுகிறது. உண்மையில், அனுமதிக்கப்படும் பாடத்திற்கு தேவையான குறைந்த பட்ச மதிப்பெண்ணுக்கு பிறகே இடஒதிக்கீடு வரும்.

இட ஒதிக்கீடின் கீழ் IIT வருபவர்கள் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டுமானால்:

1. ஆங்கில மொழி தடுமாற்றம்
2. தாழ்வு மனப்பான்மை
3. குழு மனப்பான்மை

என்ற சிலவற்றை தவிர்த்து, logical, reasoning, correlation, analytical - இந்த திறமையில் பொதுவாக குறை எதையும் கண்டதில்லை

சல்மான்

said...

//எல்லாருமாய் சேர்ந்து மகத்தான சில அமைப்புகளை நிறுவியுள்ளோம்.
//
பரமபிதா இப்பவாவது புரிஞ்சுதோ ஓய்... எல்லோருமாய் சேர்ந்து.... அழுத்தி சொல்லும் ஓய் எல்லாருமாய் சேர்ந்து மகத்தான சில அமைப்புகளை நிறுவியுள்ளோம். அப்படி இருக்க சொல்ல எல்லோருக்குமான பங்கு தரணுமோல்லியோ... தரணும்...

said...

அன்பு அனானி,
சென்ற ஆண்டுத் தேர்்வு பற்றி இந்து தலையங்கம் வரைந்திருந்தது.அதிலே இட ஒதுக்கீட்டு மதிப்பெண்களுக்கும் திறந்த போட்டி மதிப்பெண்களுக்கும் இடைவெளி வெகுக்குறைவே.அடிப்படைக் கல்வித்தரம் உயர்ந்துதான் வருகிறது.பிள்ளைகள் வாங்கும் மதிப்பெண்களைப் பாருங்கள்.ஆகவே குதிரைக் கொம்பாக்காதீர்கள்.நானும் உங்களை மாதரிியேதான் ஆனால் திறமை என்பதி ல் ஒளிந்துகொள்ளாமல் இடஒதுக்கீட்டின் அவசியத்தை உணர்கின்றவன்.ஆம் அவாளைத்திட்டுவதை விட நம்மவாளுக்குப் புரியவைப்பதுதான் அவசியம்.

said...

I dont how true is this news.But if 25% is reserved for students outside India purely on merit I see no harm.We need to open up higher education so that best universities like Oxford,Harvard can set up campuses here.That will
attract lots of talented students
and faculty to India. IITs,IIMs should become true global institutions.If an Indian can
apply to MIT or Oxford or Harvard
and get selected why not make IITs,IIMs so good as to attract bright students and faculty from
all over the world. Even now there are some exchange programs but there are restrictions on student
in take from abroad.Let us build truly global institutions in India that are among the best in the world.When that happens as an India
I will be very proud.

said...

//If an Indian can
apply to MIT or Oxford or Harvard
and get selected why not make IITs,IIMs so good as to attract bright students and faculty from
all over the world.
//
ரவிக்கு NRI க்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இந்த ஒதுக்கீடு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு என்று தான் சொல்கிறார்களே தவிர உலகில் உள்ள எல்லோருக்குமென்று சொல்லவில்லை, அதாவது வெளிநாட்டிற்கு சென்றவர்களின் குழந்தைகள் அங்கே உள்ள MIT போன்ற தரமான கல்வி நிலையங்களில் இடம் கிடைக்கவில்லையென்றால் இங்கே வருவார்கள்....செலவும் குறைவு மதிப்பும் அதிகம், அப்புறம் இதை சொல்லவே தேவையில்லை இது எந்த பிரிவினருக்கு அதிகமாக பயன்படுமென்று....

said...

MUMBAI: The seven IITs have asked the HRD ministry to reserve 25% post-graduate seats and 10% faculty posts for foreigners. The idea to introduce reservations for foreigners was mooted after all the seven directors agreed that having a mix of "unlike minds with different backgrounds" will work towards enhancing the academic environment on campuses.

IIT-Madras director M S Ananth, who heads a sub-group to chart out the implementation on 27% OBC reservations, told TOI,"encouraging foreign students will allow better academic exchange."

The current total strength for P-G courses at the IITs is 804, but not all the seats get taken up. While former education secretary Sudip Banerjee was amenable to the idea of allowing foreign students in principle, the ministry wanted seats set aside for foreigners over and above the current total intake of post-graduate students, so that Indians were not deprived of allotments.

Sources said the question of reservations over and above the current intake does not arise as several seats go vacant even now. Sources in the ministry say the proposal, in its present shape, is waiting for a final nod. This is not the first initiative aimed at widening the pool of students. In fact, to draw talent from overseas, the IITs have also announced setting up jee centres in Singapore and West Asia.

As part of the expansion plan to accommodate 27% OBC students, campuses will require 1,200-1,500 more faculty members. Officials hope to meet some of the demand by recruiting abroad. "Teachers from eastern Europe are willing to come here and work with us. We have spoken to the HRD ministry to simplify rules in letting them come here," said Surendra Prasad, IIT-Delhi director.
http://timesofindia.indiatimes.com/Caste_Cauldron/IITs_seek_quotas_for_foreign_students/articleshow/940029.cms

said...

"அப்புறம் இதை சொல்லவே தேவையில்லை இது எந்த பிரிவினருக்கு அதிகமாக பயன்படுமென்று.... "

Kuzhali, this is a Self defeating prophecy. Contrary to popular belief, most tamilians living in the U.S, including me are from OBC community and not Brahmins.

I think India needs to scale up IITs to recruit atleast 200,000 students every year, considering the Indian population it is a very apt number. Each top tier university in the U.S, recruits around 30,000 students, there is no reason why our good schools cannot recruit equally large numbers.

Secondly, the kendra vidyalaya system of primary education should be made centrally administered throughout India with the ratio of one school for every 3000 students.

If these are accomplished, there won't be any fights among communities.

Though I am a BC, I do not understand why most of us think, even after securing 95%, a brahmin student does not deserve to study his choice of degree, based on historical wrongs.

These well educated brahmin kids come to U.S and end up working for MNCs. Why not fund a solution to keep them home and generate income using their potential. Afterall isn't it to our own loss to let them go?

Lastly, most villages I have been to including mine, the landowners are BCs and not brahmins. Dalit students face lots of discrimination directly from Mudaliars, vanniyars, reddiars, devars and koundars.

You are asking for these two communties to come together. Seriously, if you are dalit, would you consider BCs as your friend?

If India to needs to transform, it should start with OBCs giving away their practice and prejudice against the dalits. OBCs like you and me accusing the brahmins is merely a distraction to keep the dalits from taking on us.

I firmly believe, dalits should be given top most priority over anyone else. But it should start from prinary education. But from your blog and your political affiliation, I doubt anytime soon, PMK will come forward to accept their guilt for the crimes they have inflicted on dalits.

I grew up in vandavasi for a while, I have seen vanniyars vandalizing the dalit's property.

Vignesh

said...

Dear PP,
/*
உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
*/
Thanks for the understanding.
/*`
எல்லாருமாய் சேர்ந்து மகத்தான சில அமைப்புகளை நிறுவியுள்ளோம். அது சிதைந்து யாருக்கும் பயனில்லாமல் போக கூடாது என்ற எண்ணமே தவிர வேறில்லை.
*/
I'm with you my friend... I have my own respect for engg colleges even run with one building, I do understand our govt. done a good job establishing well equipped institutions behalf of us. Let's share these institutes and the benefits to reach out.

said...

//Though I am a BC,//
வாங்கய்யா விக்னேஷ் அய்யா, இது என்னங்க அடிக்கடி இப்படி வேற லேபிள் போட்டுக்குறிங்க, இதுக்கு என்ன சாதி சர்ட்டிபிகேட் வாங்கியா சரி பார்க்க முடியும்.

//You are asking for these two communties to come together. Seriously, if you are dalit, would you consider BCs as your friend?
//
எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு.... அவர்கள் மூலமாகத்தான் பல தெரியாத விடயங்கள் தெரியவந்தது, நிறைய மாற்றங்கள் அந்த நட்பினால் வந்தவையே....

மேலும் நீங்க சொல்றதை பிசியும் எஸ்.சி.யும் அடிச்சிக்கிட்டு சாவனும், ஓ....அப்போதானே உச்சத்துல இருக்கறவங்க பொழைக்க முடியும்.... அதனால தான் இந்த இணைப்பு வேண்டுமென நினைப்பதே எரிச்சல் தருதோ....

//I grew up in vandavasi for a while,//
நெசமாவா? எங்க தல?

// I have seen vanniyars vandalizing the dalit's property.
//
தவறு செய்திருக்கிறார்கள், இப்போ என்ன சொல்றிங்க, அதனால இவர்கள் சமாதானமா போகவே கூடாதா? தொடர்ந்து அடித்துக்கொண்டு சாகனுமா?

அப்புறம் விக்னேஷ் அய்யா, இனிமே நான் பி.சி. உயர் சாதியில்லை உச்ச சாதியில்லைனு கூட "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதுனு" விளம்பரத்துல சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டே இருந்திங்கனா நாங்க என்ன உங்க சாதி சர்ட்டிபிகேட்டையா வாங்கி பார்க்க முடியும்.... விடுங்க உங்க கருத்தை சொல்லுங்க.... நான் இது இல்லை, அது இல்லைனு ஏன் சேர்த்துக்கறிங்க....

said...

//Though I am a BC, I do not understand why most of us think,//
//These well educated brahmin kids come to U.S and end up working for MNCs// I truly believe with full conscience(?) that our vignesh is BC(Brahmin Community?). So please kuzhali don't irritate our "BC" community really bad:))))
Balaji aka vvanniyan

said...

http://timesofindia.indiatimes.com/Caste_Cauldron/IITs_seek_quotas_for_foreign_students/articleshow/940029.cms

said...

"வாங்கய்யா விக்னேஷ் அய்யா, இது என்னங்க அடிக்கடி இப்படி வேற லேபிள் போட்டுக்குறிங்க, இதுக்கு என்ன சாதி சர்ட்டிபிகேட் வாங்கியா சரி பார்க்க முடியும்"

kuzhali, thanks for pointing it out. I have said it deliberately, becoz, on thamizmanam many bloggers assume, if you have neo-liberal leanings, you are a brahmin. In order to preempt such notions I have given out my community. To beleive or to not believe is your prerogative.

"தவறு செய்திருக்கிறார்கள், இப்போ என்ன சொல்றிங்க, அதனால இவர்கள் சமாதானமா போகவே கூடாதா? தொடர்ந்து அடித்துக்கொண்டு சாகனுமா?"

This is exactly my point. Why cannot we unite as indians? Why simply BCs and SCs? How about everyone? Why this unforgiving animosity against brahmins alone?

What exactly do you achieve by demonising one caste? Making brahmins the dalits of the 21st century is not a solution, rather it is simply perpetuating the problem. Now the victims are different, thats all.

But from your response, I do not think you are going to give me a benefit of doubt. Already your questioning my community authenticity, :)

Are you familiar with the state bank of India in vandavasi? We lived opposite of the bank. I went to the RCM school, I do not know what it is called now. Its been a long time since I went to school.

"I truly believe with full conscience(?) that our vignesh is BC(Brahmin Community?). So please kuzhali don't irritate our "BC" community really bad"

There we go, This is what I wanted to avoid. Seems like everyone should have identical ideas or else be gheraoed?!

Vignesh