தமிழிசை - விகடன் தலையங்கம்
27-12-2006 வெளியான ஆனந்த விகடன் இதழின் தலையங்கம் தமிழிசை பற்றி எழுதப்பட்டுள்ளது, டிசம்பர் மேடைகளில் தமிழ்ப் பாட்டு 'துக்கடா' தான்!
என்று ஆதங்கத்தோடு வெறும் தலையங்கம் எழுதுவதோடு விகடன் நின்றுவிடாமல் தமிழிசை பற்றிய செய்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் டிசம்பர் மாத கச்சேரிகளுக்கு பக்கம் பக்கமாக இடம் ஒதுக்கி நிகழ்ச்சி விமர்சனங்கள், கர்நாடக சங்கீத பாடகர் பாடகிகளின் பேட்டிகள் , நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை வெளியிடுவது போல தமிழிசைக்கும், தமிழிசை கலைஞர்களுக்கும் விகடன் செய்யவேண்டும், விகடன் தருமா தமிழிசைக்கு இடம்? காத்திருக்கிறோம் தமிழிசை தலையங்கத்தோடு நிற்கிறதா? உள் பக்கங்களிலும் செல்கிறதா என்று, விகடனின் இந்த தலையங்கத்திற்கு முதலில் நன்றி
தமிழிசையை முன்னிறுத்திக் கச்சேரிகள் நடக்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
காலகாலமாகக் காற்றில் கலந்துவரும் ஆதங்கக் குரல் இது. ஆனாலும், டிசம்பர் மேடைகளில் தமிழ்ப் பாட்டு 'துக்கடா'தான்!
வயிற்றுப் பசிக்கு வழியில்லாதவர்கள் வேறு வீட்டில் கையேந்தலாம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமல்லவா நம் தமிழ்!
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை தராத மயக்கத்தை வேறு எந்த மொழிப் பாடல் தந்துவிடும்? சங்க காலம் தொட்டு சுப்ரமணிய பாரதி காலம் வரை... தெய்வ பக்திப் பாடல் தொடங்கி தேச பக்திப் பாடல் வரை... ஊனுக்கும் உயிருக்கும் இன்பம் சேர்க்கும் பாடல் வரிகளுக்கா பஞ்சம்?
பல்லவி, அனு பல்லவி, சரணம் என்ற கட்டுக்கோப்பான மேடைக் கச்சேரி வடிவத்தின் முன்னோடியான முத்துத்தாண்டவர் பாடல்களை எங்கே தொலைத்தோம்? "ஆடிக் கொண்டார் & அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ" என்ற அவரது பாடலைக் கேட்டால் ஆடாத தலையும் இருக்க முடியுமா, என்ன?
மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், பாபநாசம் சிவன் ஆகியோரின் வார்த்தை மகுடிகளை எடுத்து ஊதினால் மயங்காத இதயம் எது?
தமிழ் விளக்கை சுடர்விடச் செய்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, குணங்குடி மஸ்தான் சாகிபு, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாமே..!
இசை தாகம் கொண்ட எவருக்கும் மொழிகளைத் தாண்டிய நாட்டம் இருப்பது இயல்புதான். ஆனால், மண்ணின் மொழியாம் தமிழைத் தள்ளி வைத்தால் நிஜமான தாகம் எப்படித் தணியும்?
சிந்தனை செய் மனமே..!
27 பின்னூட்டங்கள்:
//தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை தராத மயக்கத்தை வேறு எந்த மொழிப் பாடல் தந்துவிடும்? சங்க காலம் தொட்டு சுப்ரமணிய பாரதி காலம் வரை... தெய்வ பக்திப் பாடல் தொடங்கி தேச பக்திப் பாடல் வரை... ஊனுக்கும் உயிருக்கும் இன்பம் சேர்க்கும் பாடல் வரிகளுக்கா பஞ்சம்?//
கொடுத்தவர்கள் இருந்தும், கொடுப்பவர்கள் இருந்தும், கொள்வாரிலாத குறையிருக்கிறது தமிழிசைக்கு.
கொள்வாரை மிகவாக்க அருமையான முயற்சிகள் செய்யும் மக்கள் தொலைக்காட்சிக்கும் திரு ராமதாஸ் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
குழலி..
நானும் இந்தத் தலையங்கத்தைப்படித்த அடுத்த நொடி செய்தது விகடனின் சங்கீத விமர்சனப்பக்கங்களைப் புரட்டியதுதான். எல்லாக் கச்சேரிகளிலும் தெலுங்குக்கீர்த்தனைகளையே குறிப்பிட்டு விமர்சனம். தமிழ்ப்பாடல் பாடப்படவில்லையா அல்லது இவர்கள் கண்டுகொள்வதில்லையா அல்லது வேறு யாராவது செய்வார்கள் என்று விட்டுவிடுகிறார்களா;-))
குழலி அவர்களே,
நல்ல பதிவு, மருத்துவர் போல பலர் முன்வந்து, ஒரு குழுவாக டிசம்பர் சீசன் போல பொங்கல் (தமிழர் திருநாளையொட்டி) 15-20 தினங்களுக்கு திட்டம் தீட்டி, பாடகர்களூக்கு முன்னமே (அதாவது 5-6 மாதம் முன்)அறிவிப்பு செய்து வழக்கில் இல்லாத தமிழ் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து பாடச் செய்ய வேண்டும்....அப்படி செய்தால் பழைய தமிழ் பாடல்களூக்கு அவர்கள் ராகம் அமைத்து பாட வசதியாக இருக்கும்.
மருத்துவருடன் இணைவார்களா மற்ற "தமிழ் வாழ்க" குழுவினர்?....இது பொங்கல் விழாவாக இருக்கும் பட்சத்தில் எந்த சமயப்பாடல்களானாலும் சரியே (மார்கழி கச்சேரிகள் இந்து மதத்திற்க்காக மட்டுமே என்று இருக்கட்டும்)
I second above Anony's post.
During Pongal time, December season will also get over and the same artists can also sing exclusive Tamil songs too if informed well in advance.Carnatic superstars exlusively singing Tamil songs will get a lot of media attention to this event and its fame will grow quickly.
One thing with carnatic stars right now is 99% are Hindus and I dont think they'll sing songs praising Gods of other religions.
Marghazi season is for singing all language songs and Pongal season for Tamil songs!wow.That would be grand treat for carnatic music lovers.:-)
kuzhali avarkale,
For to mention one more point in my post above.
Pongal season can be held in other parts of TN instead of chennai.Say-madurai,thanjavur etc.
This will ensure that people all over tamil nadu get exposed to carnatic music.
அருமையான பதிவு.
தமிழ்ப்பாடல்களின் அருமையை சொல்லி இருக்கிறீர்கள்.
கர்னாடக இசையின் பெருமையே இறைவனை பாடுவதால்தான்.
தெலுங்கு கீர்த்தனைகளால் தேவார திருவாசகங்கள் புறம் தள்ளப்பட்டன.
பகுத்தறிவால் தேவார திருவாசகங்கள் விலக்கப்பட்டன்.
இவ்வாறு அனைவராலும் விலக்கப்பட்டு தமிழ் பாக்கள் பீடமின்றி தவிக்கின்றன.
தமிழை தமிழுக்காய் வளர்த்தெடுப்போம்.
நன்றி.
குழலி மற்றும்ஓகை,
கொள்வாரை மிகவாக்கல் கடினமைய்யா...15-20 நாட்கள் முன் தமிழில் பாடுவதில்லை என்று பலரும் வலையுலகில் நக்கலும் நய்யாண்டியுமாக பதிவுகள் இட்டு புலம்பினர், பொங்கினர்....அவர்களில் 10% கூட கண்ணன் பாடல்களிடும் கே. ஆர் எஸ் பதிவுகளூக்கு வருவதில்லையே?...அங்கு அவர் தமிழ் பாடல் மட்டுமே பதிவிடுகிறார். அதில் பாடல் முழுவதும் கொடுத்து, அந்த பாடலை கேட்க, பதிவிறக்க லிங்க்கும் தருகிறார்...எத்தனை பின்னூட்டம் வருகிறது?...எத்தனை தமிழார்வ பதிவர்கள் (நக்கல் பேர்விழிகள்) அந்த முயற்சியினை பாராட்டியுள்ளனர்?....இவர்களெல்லாம் வீண் வாதம் செய்பவகள் மட்டுமே....இவர்களூக்கு தெரிந்து கொள்ளள ஆர்வம் இல்லை ஆனால் தங்கள் பக்கம் மக்களை திசை திருப்ப இதனையும் ஒரு கருவியாக கொண்டுள்ளனர்....அவ்வளவே.....
அது போலவே திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை பற்றி பலர் பதிவிடுகின்றனர்....எஸ்.கே, ரங்கன் போன்றவர்கள்....அதில் எத்தனை பின்னூட்டங்கள்?.....அது முழுவதும் தமிழ்தானே?(இதிலும் அழகாக எம்.எல்.வி போன்ற மங்கா புகழுடையவர்களின் குரல்களில் கேட்க லிங்க் கொடுக்கிறார்கள்)...அந்த பதிவுகள் இந்துத்துவமான பார்வையாக கொண்டதாலோ அல்லது இறையிலி கொள்கை கொண்டதாலோ இவர்கள் கண்களை மறைக்கிறது.....அதனால் அங்கு இவர்கள் வருவதில்லை...என்ன செய்ய, இப்படி ஒதுங்கியே இருந்துகொண்டு தமிழிசை வளரவில்லை என்பது கண்துடைப்பே.
மருத்துவர், மக்கள் தொலைக்காட்சியில், ஜெயா டி.வியில் வரும் மார்கழி மகோத்ஸ்வம் வருவது போல மாதிரி ஏதேனும் தரலாம், தருவாரென நம்புவோம்.....
தமிழ்பாக்களை பதிவிட்டால் படிப்பவர்கள் இல்லையென்று மேலே ஒரு அனானி சொல்லியுள்ளார்.
அழகு தமிழில் பாக்களை பதிவிட்டால் படிப்பவர்கள் இல்லை என்னும் போது பாடினால் கேட்பவர்கள் எங்கிருந்து வருவார்கள்..
இது குறித்த எனது ஆதங்கம்...
தமிழிசை துவண்டு கிடப்பதேன் ?
மருத்துவரின் "தமிழிசை" இயக்கம் மகிழ்ச்சி தரும் முயற்சி. இந்த சீசன் கச்சேரிகளிலும் முழுக்க முழுக்கப் பல்வேறு தமிழ்ப்பாட்டுக்களை மெட்டமைத்துப் பாடிய புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமியின் நிகழ்ச்சியொன்றும் ஏதோ ஒரு சபாவில் இருந்ததாகவும், அதற்கு நல்ல வரவேற்பிருந்ததாகவும் விகடனில்தான் படித்தேன்.
குழலி,
தமிழிசை என்று எதை சொல்லுகிறீர்கள்? தமிழனின் இசையையா? தமிழ் திரைப்பட பாடல்களில் தமிழிசை இல்லையா? இது உன்மை என்றால் இளையராஜா மெட்டிட்டது எல்லாம் தமிழிசை இல்லையா? T.M.S & சீர்காளி பாடியது தமிழிசை இல்லையா? எந்த இசையும் தமிழ் சொற்களை கொண்ட பாடலை தாங்கி வந்தால் தமிழிசை தானே?
இசைத்தமிழ் என்றால் என்ன? தமிழில் இசைக்கு ஏன் தனி பிரிவு கொடுக்கப்பட்டது? இசைத்தமிழ் இன்றும் உயிரோடு உபயோகத்தில் உள்ளதா? அல்லது வடமொழியை போல அழிந்து விட்டதா?
தமிழிசையை பற்றி கூக்குரலிடும் நீங்கள் மேற்கண்ட என் கேள்விகளுக்கு/சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
-வேல்-
நீங்க மரம் வெட்டினதை கண்டிச்ச விகடன் தலையங்கம் ஏதும் கைவசும் இருந்தா போடுங்களேன் , பாப்பன சதின்னு திட்டுவோம் . ( இப்ப விகடன் பாப்பன மீடியாவா இல்லாம போச்சா ? கண்டிப்பா பதில் வேணும் குழலி)
//கண்டிப்பா பதில் வேணும் குழலி
//
கரு.மூர்த்திக்கு கண்டிப்பா பதில் சொல்லனுமா?.... கரு.மூர்த்திக்கு பதில் தெரியாதா?
மேலே பெயர் சொல்லாமல் ஒருவர் ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார். அடியேனும் அதே கருத்தைச் சொல்ல விரும்பினேன். 'கண்ணன் பாட்டு' வலைப்பூவிலும் 'முருகனருள்' வலைப்பூவிலும் இதுவரை தமிழ்ப்பாடல்கள் மட்டுமே வந்திருக்கின்றன. கர்நாடக சங்கீதமோ திரையிசையோ எதுவாக இருந்தாலும் தமிழில் மட்டுமே பாடல்கள் இடப்பட்டிருக்கின்றன. தமிழில் பாடுங்கள் தமிழில் பாடுங்கள் தமிழைத் துக்கடாவென்ற அளவில் மட்டுமே வைக்காதீர்கள் என்று பலவாறாகப் பேசியும் எழுதியும் வந்த அன்பர்கள் யாரும் இந்தப் பக்கம் வந்ததாகவே தெரியவில்லை. அப்படி நக்கலும் நையாண்டியுமாக எழுதியவர்கள் இந்த மாதிரி முயற்சிகளுக்கு எந்த விதமான ஆதரவும் தராமல் இருப்பதைப் பார்த்தால் அவர்களின் நோக்கங்களில் ஐயம் எழுகிறது. அவர்கள் எழுதியது உண்மையில் தமிழின் மேல் உள்ள பாசத்தினாலா இல்லை இதனையும் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று கேட்கத் தோன்றுகிறது. திருப்பாவை, திருவெம்பாவை, திருப்புகழ், தேவார திருவாசகங்கள் என்று தமிழ்ப்பாக்களை எழுத்தோடும் விளக்கத்தோடும் நிறுத்திக் கொள்ளாமல் இசை என்ற வடிவத்திற்கும் இப்போது வலைப்பூவுலகில் அன்பர்கள் கொண்டு சென்றிருக்கிறார்களே; அவர்களுக்கு தமிழிசை பற்றி பேசும் அன்பர்களின் ஆதரவு உண்டா? இல்லை கடவுள் மறுப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழிசை ஆதரவு வராதா?
செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியார் போன்ற பெருமக்கள் போன நூற்றாண்டில் தொடங்கிய தமிழிசை இயக்கம் சிறிது காலம் தொய்வுற்றிருந்தது. அதனை மீண்டும் இயக்கமாகத் தொடங்கி புரவலர்களையும் பாடகர்களையும் ஊக்குவிக்கும் பொங்குதமிழ் பண்ணிசை மன்றத்தினருக்கும் அதன் நிறுவனர் மருத்துவர் இராமதாசு ஐயா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த பணிவான நன்றிகளுடன் கூடிய வணக்கங்கள். பொது மக்கள் நடுவில் பொங்குதமிழ் பண்ணிசை வெற்றி அடைய வேண்டுமெனில் இது போன்ற முயற்சிகள் வாழ்த்தி வரவேற்கப் படவேண்டும். அது வலையுலகிலும் நடக்கவேண்டும்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
//அப்படி நக்கலும் நையாண்டியுமாக எழுதியவர்கள் இந்த மாதிரி முயற்சிகளுக்கு எந்த விதமான ஆதரவும் தராமல் இருப்பதைப் பார்த்தால் அவர்களின் நோக்கங்களில் ஐயம் எழுகிறது. அவர்கள் எழுதியது உண்மையில் தமிழின் மேல் உள்ள பாசத்தினாலா இல்லை இதனையும் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று கேட்கத் தோன்றுகிறது.
//
குமரனுக்கு நிறைய சந்தேகம் போல... குமரன் மட்டுமல்ல வேறு சிலருக்கும் எழுந்துள்ளது, பிற்பாடு விளக்கமாக பேசுகிறேன், அதற்கு முன்னால் ஒன்றே ஒன்று தமிழக கிரிக்கெட்டர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கிரிக்கெட்டே தெரியாத அரசியல் வாதிகள் குரல் எழுப்பக்கூடாது, கிரிக்கெட் தெரிந்த அல்லது எல்லா கிரிக்கெட் மேட்சகளுக்கும் செய்பவர்கள் மட்டும் தான் குரல் எழுப்ப வேண்டுமென்று சொல்வார்கள் போல....
இன்னொரு விசயம் பதிவுக்கு ஆதரவு என்பதும் பலருக்கும் பிடிக்கும் எழுத்து என்பதும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையிலா இருக்கின்றது???
இசையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இது நல்லதொரு முயற்சி என்ற பின்னூட்டம் கூடவா இடமுடியாது குழலி?
பதிவிற்கு ஆதரவு என்பதும் பலருக்கும் பிடிக்கும் எழுத்து என்பதும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் இல்லை என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பின்னூட்டங்கள் தானே பதிவர்களின் கருத்தை அறிவதற்கு ஒரு வாய்ப்பாக வலையுலகில் இருக்கிறது? மனத்தில் ஆதரவு எண்ணம் இருப்பதும் எழுத்து பிடித்திருக்கிறது என்பதும் சொல்லாமல் எப்படி தெரியும்? உங்கள் கருத்தையோ உங்களின் ஆதரவான கருத்தையோ மனத்தில் ஆதரித்தாலும் பின்னூட்டம் இடாமல் சென்றவர்களைப் பற்றி 'கள்ள மௌனம்' என்று நீங்களோ தங்களின் ஒத்தக்கருத்துடையவர்கள் என்று அறியப்பட்டவர்களோ சொல்லியதில்லையா? அந்த வகைப்பட்டது தான் என் ஐயமும்.
னீங்கள் கிரிக்கெட் எடுத்துக்காட்டை எந்த விதத்தில் இங்கே சொல்லியிருக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. விளக்கமாகப் பிற்பாடு நீங்கள் எழுதும் போது புரியும் என்று நினைக்கிறேன்.
குமரன் இனி அந்த பதிவுகளில் பின்னூட்டமிட்டுவிட்டு தான் தமிழிசை பற்றி பேசலாம் அப்படித்தானே?
//னீங்கள் கிரிக்கெட் எடுத்துக்காட்டை எந்த விதத்தில் இங்கே சொல்லியிருக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.
//
புரியலையா? நிஜமாவே உங்களுக்கு புரியலையா? சரி சரி உடைத்தே சொல்கிறேன், தமிழக கிரிக்கெட் வீரர்கள் திறமை தவிர்த்து வேறு ஏதோ காரணத்தினால் அதாவது தேர்வாளர்கள் அவர்கள் மாநிலத்திலிருந்து 5 பேரை செய்து இந்திய அணியில் சேர்ப்பதை கிரிக்கெட் தெரியாத எல்லா கிரிக்கெட் மேட்சும் சென்று பார்க்காதவர்கள் இந்த அநியாயத்தை எதிர்த்து கேள்விகேட்கக்கூடாது என்பதில் எத்தனை நியாயம் உள்ளதோ அதே நியாயம் தான் தமிழிசை சபாக்களில் பாடப்படவில்லை என்பதை கேட்க தமிழிசை பற்றிய அறிவும் அந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர்களும் மட்டும் தான் பேச வேண்டுமென்பது போல இருக்கின்றது....
குழலி. என் பின்னூட்டத்தை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். நான் அப்படி சொல்லவே இல்லை. டிசம்பர் கச்சேரிகளில் தமிழிசை இல்லை என்று சொல்வதற்குத் தமிழிசைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. நன்கு அந்த கருத்துகள் சொல்லப்படட்டும். ஆனால் அவர்கள் சொன்ன கருத்திற்கு ஏற்ப பதிவுகள் வரும்போதும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதும் அவர்கள் எல்லாம் எங்கே சென்று விட்டார்கள் என்பதே கேள்வி. அவர்களுக்குப் பேசத் தகுதி இல்லை என்று எங்கேயும் சொல்லவில்லை. அது உங்களின் புரிதல் தவறு.
அந்தப் பதிவுகளில் பின்னூட்டம் இடுவதும் இடாதததும் உங்கள் விருப்பம் குழலி. ஆனால் நான் சொல்ல வந்த கருத்து தமிழிசையைப் பற்றிய சிறு முயற்சிகளும் ஊக்கப்படுத்தப் படவேண்டும். அப்படி செய்தால் தான் தமிழிசைக்கு பரவலான இரசிகர்கள் தோன்றுவார்கள். பின்னர் எல்லா இசைக்கலைஞர்களும் தமிழிலேயே பாட நிர்பந்தப்படுத்தப்படுவார்கள். சாத்வீகனின் பதிவில் உள்ள கருத்தையும் நான் அதே விதமாகத் தான் புரிந்து கொள்கிறேன். எதற்கு மார்க்கெட் இருக்கிறதோ அது கிடைக்கும். பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம் எடுத்துச் செல்லும் இயக்கமும் அதன் வகைப்பட்டதே. தமிழிசையில் ஆர்வம் ஏற்படுத்தத் தொடக்கத்தில் ஊக்கம் தரப்பட வேண்டும். அது அந்த மன்றத்தால் செய்யப்படுகிறது. தமிழர்களுக்கு தமிழிசையில் ஆர்வம் ஏற்பட்ட பின் அது தொடர்ந்து தானே வெற்றி பெறும். அதே போல் வலைப்பூக்களில் தொடங்கப்படும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கும் ஆதரவு தரப்பட வேண்டும். இங்கே நீங்கள் பின்னூட்டம் இடவில்லை என்பது கேள்வியல்ல. இது பொதுவான கருத்து. நீங்கள் பின்னூட்டம் இட்டு ஆதரவு தெரிவிப்பதும் பின்னூட்டம் இடாமல் மனத்தில் ஆதரிப்பதும் உங்கள் விருப்பம்.
நக்கலும் நையாண்டியும் செய்து எழுதுவது கருத்தைச் சொல்ல ஒரு வகை. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவர்களே ஆக்கபூர்வமாக சில முயற்சிகள் எடுக்கப்படும் போது ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று தான் ஐயம் கொண்டேன். வெறுமனே திட்டுவதால் தமிழிசை வளராது. அதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள், பொங்கு தமிழிசை மன்றம் போன்ற முயற்சிகள் வேண்டும். அதற்கு ஆதரவும் தரப்பட வேண்டும். தமிழிசைப் பதிவுகள் தொடங்கி ஓரிரு நாட்களில் இதனைக் கேட்கவில்லை. மார்கழிக்கு முன்னாலேயே தொடங்கப்பட்டு மார்கழி 15ஆன இன்று வரை பல தமிழிசைப் பாடல்கள் பதிவுகளில் இடப்பட்டுவிட்டன. திட்டும் பதிவுகள் தொடர்ந்து வரும்போது ஆதரவு பதிவுகளோ பின்னூட்டங்களோ ஒன்று கூட வரவில்லையென்றால் அதனை நீங்கள் சொல்லும் 'கள்ள மௌனம்' என்று ஐயப்படுவதில் என்ன தவறு?
//ஆனால் அவர்கள் சொன்ன கருத்திற்கு ஏற்ப பதிவுகள் வரும்போதும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதும் அவர்கள் எல்லாம் எங்கே சென்று விட்டார்கள் என்பதே கேள்வி. அவர்களுக்குப் பேசத் தகுதி இல்லை என்று எங்கேயும் சொல்லவில்லை. அது உங்களின் புரிதல் தவறு.
//
குமரன் கீழ்கண்ட வரிகள் மேலே உங்கள் பின்னூட்டத்தில் இருந்தவை
//அவர்கள் எழுதியது உண்மையில் தமிழின் மேல் உள்ள பாசத்தினாலா இல்லை இதனையும் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று கேட்கத் தோன்றுகிறது. //
இதுக்கு என்னங்க அர்த்தம்?
இவைகளை தவறாக புரிந்து கொண்டேனா நான் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்....
இது தொடர்பாக நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன், இனியும் பதிவில் பின்னூட்டம் போடாமல் இருப்பது என்ற ஒற்றை விசயமே ஒரு விசயத்தை பற்றி பேச தகுதி இல்லை, நான் எங்கே தகுதி இல்லை என்று சொன்னேன் என்பீர்கள் அதனால் சற்று மாற்றி உங்கள் வார்த்தைகளிலே சொல்கிறேன், பதிவில் பின்னூட்டம் போடாமல் ஒரு அநியாயத்தை பற்றி பேசினால் அதில் அரசியல் உள்நோக்கம் என்று கொச்சைப்படுத்துவதை எப்படி புரிந்து கொள்ளலாம்.
கிரிக்கெட் மேட்ச் பார்க்காத, கிரிக்கெட் தெரியாத ஏன் கிரிக்கெட்டே அவனுக்கு பிடிக்காமல் கூட இருக்கும், ஆனால் அவன் தமிழக கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் நியாயமற்ற காரணங்களால் சேர்க்கப்படாமல் விடப்பட்டதை எதிர்த்து பேசக்கூடாது அப்படித்தானே...
அதாவது கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஏன் பேசுகிறார்கள் என்று வியாக்கியானம் பேசுபவர்களுக்கும் மேலே பின்னூட்டம் போடாதவர்களின் அரசியலை தேடுவதற்கும் வித்தியாசமேதுமில்லை....
இதுக்கு மேல என்னால விளக்க முடியாதுப்பா சாமி.... கடந்த நான்கு பின்னூட்டங்களையும் ஒரே விசயத்தை பல மாதிரி சொல்லி அலுத்துப்போய்விட்டேன்
சரி விடுங்க சாமி. நானும் மீண்டும் மீண்டும் நான் என்ன சொல்கிறேன் என்பதையும் சொல்லிவிட்டேன். படிப்பவர்கள் அவரவர் புரிதலின் படி நீங்கள் சொல்வதையும் நான் சொல்வதையும் புரிந்துகொள்ளட்டும்.
//கிரிக்கெட் மேட்ச் பார்க்காத, கிரிக்கெட் தெரியாத ஏன் கிரிக்கெட்டே அவனுக்கு பிடிக்காமல் கூட இருக்கும், ஆனால் அவன் தமிழக கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் நியாயமற்ற காரணங்களால் சேர்க்கப்படாமல் விடப்பட்டதை எதிர்த்து பேசக்கூடாது அப்படித்தானே...//
கடைசியாக சரியாகச் சொன்னீர்கள் குழலி...உங்களுக்கு ஒரு விஷயத்தில் இண்ட்ரஸ்ட் இல்லை, அல்லது அந்த விஷயத்தை பற்றி தெரியாது அல்லது அதில் கருத்தாய்வு செய்ய பிடிக்கவில்லை எனில் அதனை விலக்கி செல்வதே உசிதம்.....கிரிக்கெட் தெரியாதவனுக்கு ஸ்பின் என்ன, பாஸ்ட் போளலிங் என்ன?....இல்லை மிட் ஆன், ஆப் தான் தெரியுமா? கூக்குரல் மட்டுமே இட ஒருவன் தேவையா?....ஆக்க பூர்வமாக செய்பவர் தேவையா?..
////கிரிக்கெட் மேட்ச் பார்க்காத, கிரிக்கெட் தெரியாத ஏன் கிரிக்கெட்டே அவனுக்கு பிடிக்காமல் கூட இருக்கும், ஆனால் அவன் தமிழக கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் நியாயமற்ற காரணங்களால் சேர்க்கப்படாமல் விடப்பட்டதை எதிர்த்து பேசக்கூடாது அப்படித்தானே...//
கடைசியாக சரியாகச் சொன்னீர்கள் குழலி...உங்களுக்கு ஒரு விஷயத்தில் இண்ட்ரஸ்ட் இல்லை, அல்லது அந்த விஷயத்தை பற்றி தெரியாது அல்லது அதில் கருத்தாய்வு செய்ய பிடிக்கவில்லை எனில் அதனை விலக்கி செல்வதே உசிதம்.....கிரிக்கெட் தெரியாதவனுக்கு ஸ்பின் என்ன, பாஸ்ட் போளலிங் என்ன?....இல்லை மிட் ஆன், ஆப் தான் தெரியுமா? கூக்குரல் மட்டுமே இட ஒருவன் தேவையா?....ஆக்க பூர்வமாக செய்பவர் தேவையா?..
//
தயவு செய்து மேலே இந்த பின்னூட்டமிட்ட அனானி இனி தமிழ் படித்து புரிந்து கொள்ளும் நிலை வந்த பின் வலைப்பதிவுகளில் வந்து விவாதித்து கருத்து சொல்லட்டும், அது வரை நல்ல தமிழாசிரியரை தேடட்டும்.... எனக்கு ஒரு தமிழாசிரியர் மிகவும் நெருக்கமானவர் வேண்டுமானால் அவரின் முகவரி தருகிறேன் அவரிடம் போய் படிக்கட்டும், என்ன ஒரே பிரச்சினை 4 தடவை சொல்லியும் புரிந்து கொள்ளவில்லையென்றாள் காதை பிடித்து திருகுவார்..... அந்த அனானி தமிழ் கற்றுக்கொள்ள தயாரா? பாவம் இந்த அனானி புரிந்து கொள்ளும் தன்மை குறைவுள்ள மனிதர் போல, சிலருக்கு அப்படித்தான் இருக்கும்.... இது சிறிய குறைபாடுதான் முயன்றால் இந்த குறையை நீக்கிவிடலாம்...
நன்றி
What next-asking western music and Hindustani music performers to include Tamil songs/Tamil Music
in their concerts?.
Carnatic music is not limited to Tamil or Telugu.Lovers of music know how to diffentiate between chauvinism in the garb of love for language and the real love for language and the real love for music.The chauvinism in the garb of love for language comes in many shades.
Someone like IlayaRaaja is above this petty politics.That is why he can go beyond traditions and genres
in music and satisfy both the masses and experts in music.But politicians and their followers
have a narrow tunnel vision.They will do more harm than good to
music,language and fine arts.
Their sense of aesthetics is linked to their narrow,divisive
politics.Vikatan may approve it
but real lovers of arts and music
will not.
தெய்வீக வருணனையே 95% பாரம்பரிய இசையில் மையக்கருத்தாக இருக்கிறது.
தெய்வமே இல்லை என்கிற கொள்கை எழுச்சி பெற்றுவந்திருக்கின்ற நிதர்சனத்தில் தமிழ் தன் இசைவடிவில் குத்துப்பாட்டாகக் குறுகி இருக்கிறது.
தெய்வீகத்தை, இறை இருப்பை வருணிக்கும் இசையை, சாமானியத் தமிழன் தமிழை, தமிழிசை வடிவில் ஆட்சி அதிகாரக் கொள்கைத் தாக்கத்தில் உந்தப்பட்டு உழல்வதும் அதனால் விளைகின்ற இறை இருப்பை அங்கீகரிக்கும் பாடல்களைக் கேட்பது என்பது தரும் வெட்க உணர்வும் மிக முக்கிய காரணிகள்.
தெய்வீகத்தையும், இறை இருப்பையும் தவிர்த்தால் தமிழில் இசையாக குத்துப்பாட்டு மட்டுமே எஞ்சும். இன்று குத்துப்பாட்டு மட்டுமே ரசிக்கப்படுகிறது சாமானியத் தமிழனால்.
மற்றபடி தமிழிசை என்பது பாடல் வரிகள் மட்டும் தமிழில் இருக்கும் இந்தியப் பாரம்பரிய இசையே என நான் நினைக்கின்றேன்.
பொங்குதமிழ்ப் பண்ணிசை என்பதான தமிழிசைக்கென புதிய ராகங்கள், இலக்கணம், சரிகமபதநி அடிப்படைகள் என்பன முற்றிலும் தனித்த வேறா?
//பொங்குதமிழ்ப் பண்ணிசை என்பதான தமிழிசைக்கென புதிய ராகங்கள், இலக்கணம், சரிகமபதநி அடிப்படைகள் என்பன முற்றிலும் தனித்த வேறா?
//
என்னது புதிய ராகங்களா? ஆதி இசை இதானப்பா, இங்கே பண், பாலை என்பவைகள் தான் அங்கே ராகங்கள் ஆகிவிட்டன? கோவலன் பாடிய அரும்பாலை தான் சங்கராபரணம், இப்படி இருக்கும் போது புதியராகங்கள் என்று சொல்வது தமிழிசைக்கு பொறுந்துமா?
நாங்க சின்ன வயசில இருக்கும்போது ஒரு ஜோக் சொல்லுவாங்க...
ஒரு ஜப்பான்காரன், பிரிட்டிஷ் காரன், இந்தியன் மூன்று பேரும் ஒரு போட்டியில கலந்துகிட்டாங்களாம். ஜப்பான் காரன் ஒரு ஹீரோ பேனா செய்து அதை பிரிட்டிஷ் காரன்கிட்ட குடுத்தான், அவன் வாங்கி அதுக்கு கவர் எல்லாம் போட்டு கலர் ஏத்தி கொடுத்தான், இந்தியா காரன் வாங்கி அது மேல Made In India னு எழுதினானாம் அது போல, ஆதி இசையாம் தமிழிசையிலிருந்து பண் பாலையெல்லாவற்றையும் கர்னாடக இசை சுட்டுக்கொண்டு போய் ராகம் என்றாக்கி இன்றைக்கு புதுராகமானு கேக்குற நிலைமையிலிருக்கு
Post a Comment