கருத்தடை டாட் காம்
பொதுவாகவே பாமரனின் எழுத்தில் நக்கல் நையாண்டி கொஞ்சம் விளையாடும்.... தங்களுடைய ஆதிக்கத்தை தக்கவைக்க எந்த அளவிற்கும் செல்வார்கள் என்பதை சமீபத்திய தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தை பற்றி விழிப்புணர்வு இதழில் எழுதியுள்ளார் பாமரன், கீற்று இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை உங்களின் பார்வைக்கு.
"பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு."
- காட்கோ வாலிஸ்
மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா அல்லது காணாமல் போயிற்றா என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் அதாவது---
இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது தே.மா.க.க என்று அழைக்கக்கடவதாக. அப்படி என்னதான் புள்ளி விவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது. ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும்.
அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்....
ஆம் இந்த ஒரு மாதிரியான கணக்கெடுப்பின் மூலம் அப்புள்ளி விவரம் சொல்வது இதுதான் :
இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 41 சதவீதமோ 31 சதவீதமோ எதுவாயிருந்தால் என்ன?
கிடைப்பது கிடைத்தால் சரி என எவராவது தேமே என்று இருந்தால் வந்தது வம்பு என்ற அர்த்தம்.
ஏனென்றால் இந்தப் புள்ளி விவரம் வெளிவந்திருக்கும் நேரம் அப்படி. நேரம் என்றதும் எந்த ஜோசியக்காரனையும் தேடிக் கொண்டு ஓட வேண்டியதில்லை. சமீப காலமாக உச்ச நீதிமன்றம் உதிர்த்து வரும் முத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும்.
தே.மா.க.க வின் இந்தக் கண்டுபிடிப்பு வெளிவந்திருக்கும் நேரம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிப்பதா கூடாதா?
அளிப்பதாக இருந்தால் அந்த 27 ஐயும் 9+9+9 என்று மூன்றாண்டுகளுக்கு பிரித்து அளிக்கலாமா?
அல்லது
3+3+3+3+3+3+3+3+3 என்று ஒன்பதாண்டுகளுக்கு ஜவ்வாய் இழுத்து பிரித்துக் கொடுக்கலாமா?
பிரித்துக் கொடுப்பதற்குள் இருக்கின்ற அரசின் ஆயுள் காலம் முடிந்து விடாதா?
ஒரு வேளை முடிந்து தொலைத்தால் வருகின்ற அரசாவது பிற்படுத்தப்பட்டோருக்கு சரியான விதத்தில் ஆப்பு வைக்கும் அரசாக அமையுமா?
என்று உச்ச நீதி மன்றம் தன் உச்சிக் குடுமியை உசுப்பிக் கொண்டிருக்கிற நேரம் இது.
1931 கணக்கெடுப்பின்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதம். ஆக இந்தக் கணக்கை முன் வைத்தே 70% இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றது காக காலேல்கர் கமிட்டி. 52 சதவீத மக்கள் தொகைக்கு 70% கிடைக்காவிட்டால் போகிறது. ஆனால் கிடைப்பதே 27 சதவீதம்தானே என்று எவரும் அங்கலாய்த்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தே.மா.க.க.வின் இந்தப் புதிய கணக்கெடுப்பு இதன்படி பார்த்தால் இருப்பதற்கும் வந்திருக்கிறது ஆப்பு என்பது தான் உள்ளார்த்தம். 52க்கு 27சதவீதம் ஒதுக்கீடு என்றால்... இப்புதிய கண்டுபிடிப்பின்படி 41 சதவீதம்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறபோது கிடைக்கவேண்டியது கூடுமா? குறையுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
கடைசியாகக் கணக்கெடுத்தது 1931ல். அதுவும் வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில், நல்ல வேளையாக சுதந்திர இந்தியாவில் கணக்கெடுப்பு நடக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். ஆக நமது கேள்விகளெல்லாம் இதுதான்.
1931ல் 52 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் 2005இல் 41 சதவீதமாகக் குறைந்தது எப்படி...?
விவசாயிகளின் ஒட்டு மொத்தத் தற்கொலைகள் மாதிரி பிற்படுத்தப்பட்டோர் எங்காவது கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டார்களா?
(52-41=11) இந்த 11 சதவீத மக்கள் எங்காவது ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனார்களா....?
ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் அவர்கள் வந்த கைபர் போலன் கணவாய் வழியாக இவர்கள் எவனாவது வெளியேறிவிட்டார்களா...?
சரி இந்த சர்வே - சப்வே எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா....?
பிற சாதியினரின் கணக்கை யார் முஷாரப்பா வந்து எடுப்பார்....?
கணிப்பொறியின் ஒரு சுவிட்சைத் தட்டினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் விழக்கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் இந்தியர்களுக்கு இதில் மட்டும் என்ன சிக்கல்...?
ஆனால் அப்படியும் எடுத்தார்கள் ஒரு கணக்கை. இன்றல்ல 1961ல் தலித் மக்களது கணக்கை. அந்தக் கணக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்னமே 25 சதம் என்று காட்டியது. ஆனால் இன்றுவரை தலித் மக்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீடோ வெறும் 22.5%...
இந்த 22.5 சதவீதத்தையும் எந்த லட்சணத்தில் நிரப்புகிறார்கள் என்பது தெரிந்தவர்கள் இந்த நாடு கடலில் மூழ்கட்டும் என்று மனதார வாழ்த்துவார்கள்.
ஆக இன்றுவரை இந்த சுதந்திர இந்தியாவில் ஆகா ஓகோ என்று ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான். அதனால் அவர்களுக்கு மட்டும் இந்தக் கணக்கெடுப்பு மற்றவர்களெல்லாம் பாவம் மடிப்பிச்சை ஏந்தித்தான் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்த்து ஏதாவது அவர்களுக்குக் கூட்டி கொடுத்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும். என்ன செய்ய...?
இதே தே.ம.க.க.வின் 1999 கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டோர் 35.8% என்கிறது. 1999 இல் இந்தக் கணக்கெடுப்பைக் கண்டுணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்யாமல் பெற்றெடுத்ததன் விளைவு 41%மாக எண்ணிக்கை உயர்ந்ததுதான்.
ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியைக் காட்டிய இம்மக்கள் 1931லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.
சரி எப்படித்தான் கண்டெடுத்தார்கள் இந்தப் புள்ளிவிவரங்களை என்று கேட்டால் குழப்பத்தில் தே.மு.தி.க.வையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த தே.மா.க.க
79306 நகர்ப்புற வீடுகளிலும்
45377 கிராமப்புற வீடுகளிலும்
இந்த சர்வே நடத்தினோம் என்பவர்களிடம் சர்வே சரி....
எந்த நாட்டில்....
எந்த மாநிலத்தில்....
எந்த நகரத்தில்....
எந்த கிராமத்தில்....
நடத்தினீர்கள்? என்றால் பதிலாக வெறும் காத்துதாங்க வருது.
தங்களது அகண்டபாரதக் கனவில் பிரிக்கப்படாததற்கு முன்பிருந்த இந்தியப் பகுதிகளில் ஏதேனும் நடத்தியிருப்பார்களோ இந்தக் கணக்கெடுப்பை?
வாய்ப்பில்லை.
ஒருவேளை இந்தக் கணக்கெடுத்த மகான்கள் முன்னொரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்துத் திரிந்த தங்களது பூர்வீக மத்திய ஆசியாவின் கணக்கைத்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டார்களோ என்னவோ....?
யாமறியோம் பராபரமே.
காட்கோ வாலிஸ்... பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் வாழ்ந்த புள்ளியியல் நிபுணர் என்று சொன்னால் நீங்களும் நம்பத்தான் போகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த காட்கோ வாலிஸ் யாரென்பது எனக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.
நன்றி
கீற்று
21 பின்னூட்டங்கள்:
http://mospi.nic.in/nsso.htm
செம நக்கலு.. யபா..!
//
(52-41=11) இந்த 11 சதவீத மக்கள் எங்காவது ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனார்களா....?
ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் அவர்கள் வந்த கைபர் போலன் கணவாய் வழியாக இவர்கள் எவனாவது வெளியேறிவிட்டார்களா...?///
உண்மையாத்தான் இருக்கும் போல...:-)))))))))))))))
//ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியைக் காட்டிய இம்மக்கள் 1931லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்//
;-)))))
--FD
இன்னாப்பா இது 75% அனானியாவே வர்ரீங்க....
Any idiot can write like this.NSSO is a reputed organisation and data given by it is used by govt. depts,
social scientists,World Bank etc.Rajinder Sachar panel also cites data from surveys
done by NSSO in the report.So will
you reject the Panel's report as
it cites data from NSS conducted
by NSSO.
Use of sampling is a well known and accepted pratice in many
fields.NSSO uses sampling and
statistical techniques and designs and conducts surveys on various
aspects of indian economy and society.See its website to know
more.When this was published there were many write ups on this.
do a google search NSS OBC to
learn more.Mandal commission
used 1931 census figures and
its methodology to arrive at
the number of OBCs was criticised
when it gave the report.
You will any junk that supports
OBC reservation.About the understanding of Pamaran the
less said the better it is.
Some bloggers who support OBC
reservations will also like
this article.Viduthalai published
it.A junk is a junk however much you republish it.
http://realitycheck.wordpress.com/2006/12/14/nss-61st-round-data-for-social-groups/
ரவி நீங்கள் குறிப்பிட்ட சுட்டியை படித்தேன். அந்த பதிவை படித்தவுடன் மீண்டும் ஞாபகம் வந்தது கீழ்கண்ட வரிகள்
"பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு."
- காட்கோ வாலிஸ்
//ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியைக் காட்டிய இம்மக்கள் 1931லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.
//
இதை அந்த பதிவிலும் ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள் 5 ஆண்டுகளில் 5% அதிகமாக ஓபிசிக்களின் எண்ணிக்கை கூடியிருப்பதை....
அவரு பேரு மட்டும்தான் பாமரன்!
"The nationwide OBC percentage has increased 5% from the last round. TN OBC count has increased 8%. The SC/ST count nationwide has remained pretty much the same. It turns out OBC purchasing power is almost equal to that of the “Others”. OBCs are also better employed than the FCs at 42% vs 38.9%."
This survey and the blog post challenge many myths
promoted by persons like you and
parties like PMK,DMK,DK.It shows
that OBC population is not as huge
as it is assumed to be.In other words it challenges YOUR BIG LIES.
You have a vested interesr in maintaing those BIG LIES. So is
DK and Pamaran.It is no wonder you
all cry foul when your lies are
exposed.
//It shows
that OBC population is not as huge
as it is assumed to be.In other words it challenges YOUR BIG LIES.
//
ரவி அதெப்படி ரவி 50 ஆண்டுகளில் குறைந்த ஓபிசியின் சதவீத எண்ணிக்கை 1999 கணக்கெடுப்பிற்கும் இப்போதைய கணக்கெடுப்பிற்கு 5% அதிகரித்துள்ளது?? புள்ளிவிபர புளுகு மூட்டையை வெளியிடுவதற்கு முன் இதைக்கூட சரிபார்ப்பதில்லையா??
//OBCs are also better employed than the FCs at 42% vs 38.9%."//
என்னமோ போங்க, புள்ளிவிபரத்து புளுகில் தான் இப்படி சொல்கின்றார்கள் உண்மை அப்படியில்லை என்று என் நேரடி அனுபவங்களே சொல்கின்றன, எனக்கு மட்டுமல்ல இங்கே இருப்பவர்களில் பெரும்பாண்மையினருக்கே அப்படித்தான் இருக்கும். ஒரு முன்னேறிய ஆளின் கீழே ஓபிசியில் ஓராயிரம் ஆட்கள் கிடக்கின்றனர் என்பதை நாங்கள் கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
அன்பு மிக்க நண்பர்களுக்கு...உங்கள் விவாதம் கண்டேன் மிக்க மகிழ்ச்சி.சமூக நீதிக்கான போராட்டத்தில் என்னைப் போன்றவர்கள் மட்டும் தனியாக இல்லை என்கிற ஆறுதல் உங்கள் வரிகளைப் படிக்கும் போது ஏற்பட்டது.
நன்றி.
தோழமையுடன்,
பாமரன்
பி.கு: நான் திராவிடர் கழக உறுப்பினர் அல்ல.
பாமரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//சமூக நீதிக்கான போராட்டத்தில் என்னைப் போன்றவர்கள் மட்டும் தனியாக இல்லை என்கிற ஆறுதல் உங்கள் வரிகளைப் படிக்கும் போது ஏற்பட்டது.
//
நிச்சயமாக நீங்கள் தனியாக இல்லை, என்னை போன்ற சிலர் இன்று படித்து வேலை செய்வதெல்லாம் இதற்கு முன் சமூக நீதிக்காக போராடிய பலரால் தான் எம்மை போன்றவர்களின் இன்றைய நிலை, அவர்கள் போராடவில்லையென்றால் எங்கள் கதி அதோகதியாகியிருக்கும், அந்த நன்றி உணர்ச்சியும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும், போராட்டங்கள் நிற்குமிடத்தில் ஆதிக்க சக்திகள் ஆளை விழுங்கிவிடும் என்பதாலும் குரல்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
நன்றி
On Backwardness and Fair Access to
Higher Education
Results from NSS 55th Round Surveys, 1999-2000
Against the backdrop of the policy of reservation of seats in higher education for the Other
Backward Classes in India, this paper examines two inter-related yet distinct issues: (i) the use
of economic criteria for assessing the backwardness of different social groups, and
(ii) assessment of fairness of access to higher education of an identified “backward” social
group. On an analysis of the NSS 55th round surveys for 1999-2000 we show that, on a range
of economic criteria, there is a clear hierarchy across (essentially) caste-based social groups,
with the scheduled castes (in urban India) and the scheduled tribes (in rural India) at the
bottom, the OBCs in the middle, and the non-SC/ST “Others” at the top. However, for the
poor among them, there is more of a continuum across caste-groups, with surprisingly small
differences between the OBCs and the non-SC/ST Others. It is also shown that for the OBCs
as a group, and especially for over 70 per cent of them who are above the povertythe
extent of their under-representation in enrolments at the undergraduate and postgraduate
levels is less than 5 per cent. Therefore, a 27 per cent quota for the OBCs, which would
effectively raise their share in enrolments to over 50 per cent when their share in the eligible
population is 30 per cent or less, is totally unjustified.
K SUNDARAM
http://epw.org.in/showArticles.php?root=2006&leaf=12&filename=10874&filetype=pdf
பாமரன் எழுத்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி !!!
ரவிஸ்ரீனிவாஸ், தே.மா.க.க புள்ளி விபரங்களே ஒரு டுபாக்கூர் என்பதை சொல்வது தான் இந்த கட்டுரையே, நீங்கள் என்னடாவென்றால் அந்த தே.மா.க.க புளுகுமூட்டை புள்ளிவிபரங்களை வைத்து எழுதப்பட்ட கட்டுரையை ஆதாரமாக சொல்கின்றீர், பெரியார் தாசன் ஒரு பேச்சில் நன்றாக நக்கலடித்திருப்பார், "யேசு சொன்னாருங்கறைதை எப்படிப்பா நம்புறது" அதான் "பைபிள்ல சொல்லியிருக்கே" சரி "பைபிள்ல இருப்பதை எப்படி நம்புறது" அதான் "யேசு சொல்லியிருக்காரே" , சரி "யேசு சொன்னாருங்கறதை எப்படி நம்புறது", அதான் "பைபிள்லயே சொல்லியிருக்கே" னு பேசினாராம் அவரோடு வாதாடியவர், அது மாதிரி தே.மா.க.க புள்ளிவிபரமே புளுகுமூட்டை என்பது தான் இங்கே கட்டுரையே, அந்த புளுகு மூட்டை புள்ளிவிபர ஆதாரத்தை வைத்து எழுதப்பட்ட கட்டுரை இன்னொரு ஆதாரமா? நெசமாவே தாங்கலைங்க :-)))
ரவிஸ்ரீனிவாஸ், தே.மா.க.க புள்ளி விபரங்களே ஒரு டுபாக்கூர்
If so you will have to reject what
most of what Sachar Panel has said also because it has used data from NSSO extensively.Are you ready for it.NSSO is not a private body.Data provided by it has been used by many govt. agencies and bodies
like World Bank.EPW and many other
journals publish articles which
cite NSSO data.Bye the by is
Pamaran an economist or an expert in statistics to challenge the
methodology or data collection
by NSSO.What are his credentials
in this regard.
//Bye the by is
Pamaran an economist or an expert in statistics to challenge the
methodology or data collection
by NSSO.What are his credentials
in this regard.
//
ரவி 50 ஆண்டுகளில் குறைந்த ஓபிசியின் சதவீத எண்ணிக்கை 1999 கணக்கெடுப்பிற்கும் இப்போதைய கணக்கெடுப்பிற்கும் 5% அதிகரித்துள்ளது, இது கூட தே.மா.க.க வின் புள்ளிவிபரம் தான், 5 வருசத்தில் ஓபிசி 5% வளர்ச்சி ஆனா 50 வருசத்தில் வளர்ச்சி குறைவு... இந்த நிலையில் இந்த புள்ளி விபரம் ஒரு டுபாக்கூர்னு சொல்ல எக்கனாமிஸ்ட்டாவோ ஸ்டேட்டிஸ்டிக் எக்ஸ்பர்ட்டாவோ வேறு இருக்கனுமோ?
Statistics Don't Lie: The truth behind OBC numbers
Around 36 per cent of the country's population is defined as belonging to the Other Backward Classes according to the National Sample Survey's 1999-2000 rounds, and not 52 per cent as defined by the Mandal Commission, a number that most politicians still use while asking for reservation.
If you exclude Muslim OBCs, the proportion falls to 32 per cent according to the NSS, 1999-2000. Indeed, Yogendra Yadav, professor at the Delhi-based Centre for the Study of Developing Studies, agrees that there is no empirical basis to the Mandal figure: "It is a mythical construct based on reducing the number of SC/ST, Muslims and others and then arriving at a number."
The NSS data is also corroborated by the National Family Health Statistics, a survey conducted in 1998 by the DHS, which has conducted 200 such surveys in 75 countries.
The NFHS data show that the proportion of non-Muslim OBCs is 29.8 per cent, a figure quite close to the NSS' 32.1 per cent. For SC/ST, while the NSS shows this is 28.3 per cent of the population, the NFHS estimates this at 27.9 per cent. The 2001 Census estimated the SC/ST population at 24.4 per cent, though the Census did not canvass any information on OBCs.
Number of OBCs:
In 1953, the Kaka Kalelkar commission found 2399 castes and communities to be backward
In 1989, the Mandal Commission found that the number had increased to 3743
In 2005, the number was found to be 4418
Till now, NOT A SINGLE CASTE HAS BEEN REMOVED FROM THE OBC LIST
(Source: National Commission of Backward Classes – NCBC site, and Hindustan Times article on Sunday 28 th May, 2006)
http://yfearchive.blogspot.com/2006/06/statistics-dont-lie-truth-behind-obc.html
//In 1953, the Kaka Kalelkar commission found 2399 castes and communities to be backward
In 1989, the Mandal Commission found that the number had increased to 3743
//
ஓபிசியில் 1953ம் ஆண்டு 2399 சாதிகளில் இருந்து 1989ல் 3743 ஆக எண்ணிக்கையில் அதிகரித்தாலும் தே.மா.க.க படி பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் மட்டும் 1999ல் 35.8%மாக குறையும் அதிசயம் நடந்திருக்கின்றது... ஒரே ஒரு சாதி கூட ஓபிசியிலிருந்து நீக்கப்படாதது மட்டுமல்லாமல் 1344சாதிகள் கூடுதலாக ஓபிசியில் சேர்க்கப்படிருந்தும் 1933ல் 52% ஆக இருந்த ஓபிசி எண்ணிக்கை 1999ல் 35.8%மாக குறையும் அதிசயம் நடந்துள்ளதே, ஓபிசி 52% ஆக இருந்ததே இல்லை, அது ஒரு டுபாக்கூர் புள்ளிவிபரம் என்கிறீர்களா?
Statistics Don't Lie: நீங்க சொன்னது தான், ஆனா மாதிரி புள்ளிவிபரம் பொய் சொல்லும்....
இதுக்குதான் ரவி சாதி வாரியான முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும், அப்போ எந்தெந்த சமூக மக்களுக்கு எவ்வளவு பங்கு சமூகத்தில், அரசியலில், கல்வியில் மத உரிமையில் என்று எல்லாம் வந்துவிடும்.
காவல்துறையில் கடைமட்ட ஊழியர்களும் கான்ஸ்டபிள்களும் ஏட்டுகளும் ரவுடிகளை பிடிக்க ஓடுபவர்களும், சாலையோரம் பந்தோபஸ்த்து நிற்பவர்களும் எங்கிருந்து வருகின்றனர் அதில் எத்தனை சதவீதம் யார் இருக்கின்றார்கள், ஆனால் டிஜிபிகளும் உயர் அதிகாரிகளில் பெரும்பான்மையானவர்கள் எங்கிருந்து வருகின்றனர் என்ற உண்மை வெளிவரட்டும்.
ராணுவத்தில் சண்டை போடவும் சலாம் போடவும் உள்ள கீழ் மட்ட ஊழியர்களில் உயர் சாதியினரின் பங்களிப்பு எவ்வளவு, அதே உயர் அதிகாரிகளில் எத்தனை சதவீதம் இருக்கின்றனர் என்றும் தெரியவரட்டும், இதே போல ஒவ்வொடு துறையிலும், தனியார் துறையிலும் தெரியட்டும், அதற்கு தான் முழுமையான சாதி வாரியான கணக்கெடுப்பு வரட்டும் யாருக்கு எவ்வளவு பங்கு இருக்கின்றது என தெரியட்டும், அதன் பிறகு வாதாடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது, தானாக வந்து சேரும் அவரவர்களுக்கானன் பங்கு ஆனால் அப்போது உயர் சாதியினருக்கும் கிடைக்கும் அவர்களுக்குரிய பங்கு மட்டும், இப்போ மற்றவர்களிடமிருந்து பிடுங்கி தின்னுவது பறிபோய்விடும்.
//சமூக நீதிக்கான போராட்டத்தில் என்னைப் போன்றவர்கள் மட்டும் தனியாக இல்லை என்கிற ஆறுதல் உங்கள் வரிகளைப் படிக்கும் போது ஏற்பட்டது.
//
அய்யா அவர்களே
தமிழ் வலையுலகில் ,"சமுகநீதி" மற்றும் நீதியெல்லாம் தீண்டதகாத பதமாகவே இருக்கிறது .
இதைப்பற்றி ஒரு இடுகை இடக்கூட எனக்கு பேரவா.ஆனால் இனப்படுகொலையில் ம(ர்)னம் மடிந்து போனேன்.
ப்ளாக்கரில் உள்ள அனைத்து தமிழ் பதிவர் சுயவிவர தேடலில்.
ஒரு பதிவர் மட்டுமே கிடைப்பார்,,,,,
பி.கு:- "சமூக நீதி" மற்றும் "நீதி" எல்லாம் என்ன வில்லை எனக்கேட்பார்கள்
Post a Comment