தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களில் நாடகத்தை இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட வியாபார, கலாச்சார சீரழிவுகளிடம் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம், இசையையோ கர்நாடக சங்கீதத்திடமும், டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளிடமும் பறி கொடுத்துவிட்டு அங்கே புரியாத மொழிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க நாமோ அய்யோ தமிழில் பாடுங்கள் என்று கெஞ்சி, கதறிக்கொண்டிருந்தோம், அது தான் துக்கடா பாடுகிறோமே அது போதாதா என்று திமிரெடுக்க பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த கும்பல். இசையில் தமிழின் இடம் தமிழகத்திலேயே துக்கடாவாகிப்போனது.

தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது? கொம்பு முழக்கம் ஏற்படுத்தும் உணர்சி கொதிப்பு வெறெந்த கருவிக்கு இருக்கின்றது? போராட்டங்களே வாழ்க்கையாகிப்போன எம் மக்களின் இசையும் இப்போது போராடிக்கொண்டிருக்கின்றது ஆதிக்க சக்திகளோடு.

ஆண்மீகத்திற்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திவ்யபிரபந்தம், மனதை மயக்கும் காவடிச்சிந்து, காதல், வீரம், வாழ்க்கை, போராட்டம் என நாட்டுப்புறப்பாடல்கள், பாரதி, பாரதிதாசனின் சமூக பாடல்கள் என அத்தனையும் இருக்கும் எம் தமிழை துக்கடாவாக்கி வைத்திருக்கும் டிசம்பர் கச்சேரி கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டம் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலே மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் தமிழிசை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, துக்கடாவாகிப்போன எம் மண்ணின் இசை மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றது, வழக்கம்போல புரியாமல் தலையாட்டும் டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளுக்கு பக்கம் பக்கமாக ஒதுக்கும் பத்திரிக்கைகள் தமிழிசை விழாக்களுக்கு துக்கடா இடமே தருகின்றன, இதையெல்லாம் மீறித்தான் தமிழிசை விழாக்கள் இன்று மக்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக சிங்கப்பூரில் பண்ணிசைப்பெருவிழா நடைபெறவிருக்கின்றது, டிசம்பர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண்ணிசைப்பெருவிழாவில் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் இன்றைய தமிழ்முரசு இதழிலிருந்து விழாவை பற்றிய குறிப்புகள்
தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, "தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை" என்றார்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழிசையில் பாடப்படும், கேட்போரை மயங்கவைக்கும் காவடிச்சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல்களை திரைப்படப்பாடகி டி.கே.கலா பாடுகிறார், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகின்றார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானபாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உண வகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் அய்யா இராமதாசுவுடன் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

டிசம்பர் மாத கச்சேரி கும்பலிடமிருந்து தமிழிசையை மீட்டெடுக்கும் மருத்துவர் அய்யா இராமதாசு கலாச்சார சீரழிவு தொலைக்காட்சிகள், திரைப்படங்களிடமிருந்து நாடகத்தமிழையும் மீட்டெடுக்கும் விதமாக "மக்கள் தொலைக்காட்சி"யை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கின்றார், மருத்துவர் அய்யா இராமதாசின் தமிழ்ப்பணியும் அடிமைபட்டுப்போன தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.

நேரம் : மாலை 6.00 மணி
நாள் : திங்கள் 25 டிசம்பர் 2006
இடம் : காலாங் அரங்கம், சிங்கப்பூர்

7 பின்னூட்டங்கள்:

said...

நன்றி குழலி ஐயா.

இராமதாசு ஐயாவின் இந்த முயற்சியை வேரொரு வலைபதிப்பாளர் அவமானப்படுத்தி எழுதியிருப்பதை படித்து மிகவும் மன
வேதனைப்படேன். ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கிற கதையைப்போல் இருக்கிறது அவர்களின் கூற்று. அவர்கள் இன்னும் கீழ் தளத்திலேயே இருப்பதால் உயரத்தில் உள்ள நம் தமிழ் உலகின் கலை கலாச்சாரங்களின் அருமை அறியாமல் பிதற்றுகின்றனர்.

//தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது?//
சரியான கேள்வி! போர் என்றால் என்ன தெரியாத மனிதர்களுக்கு இதைப்பற்றி என்ன சொன்னாலும் புரியாது.

//தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.// நானும் இதை மறுமொழிகிறேன்.

அன்புடன் மாசிலா!

said...

I really admire Mr.Ramdoss's efforts to create awareness on tamil music. I agree with him totally on this. At the same time, brahmins have got nothing against tamil music. Always there is an unwanted hatred in your columns against certain section of society. Probably your anger is misplaced.

said...

Tamizh music azhiudhuna athuku karanam people stopped patronising it. oothuvargal apdingara inam azhinju ponathuku karanam brahmins kidayathu. people simply lost track and got addicted to filthy music. Ellathulaium jaathi politics podarathai vitta unga blog innum nalla irukum.

said...

saathi veri pidichee alaiyatheenga.....kaalam maari pothchu..... Iruttulernthu veliya vaanga.....

padicha neengaley ipti iruntha, padikkathavanga nilamaiyai ninaichee kooda paakamudiyalai...

pls thirunthungappa.....

(publish this comment. by seeing this somebody may reform. thanks.)

said...

//saathi veri pidichee alaiyatheenga.....kaalam maari pothchu..... Iruttulernthu veliya vaanga.....
//
இந்த பதிவிற்கும் சாதி வெறி க்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? அய்யோ பாவம் இந்த அனானி, தமிழ் கூட படிக்க முடியாது இருக்கின்றது.

ஓ... ஓ... இப்போது தான் புரிகின்றது, இவர் சொல்லியிருப்பது அந்த சாதி வெறியா.... அவங்க வரலைனாலும் பரவாயில்லை, இப்போ அதையும் தாண்டி உலகம் போய்க்கொண்டிருக்கின்றது, அந்த முன்னெடுப்பை பெரியார், அண்ணா மற்றும் முந்தைய கலைஞர் கருணாநிதியைத் தொடர்ந்து மருத்துவர் முன்னெடுக்கின்றார், நீங்க ரொம்பக் கவலைப்படாதிங்க, அவங்க திருந்தலையே கவலைப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதிங்க...

said...

i am aasath

how doctor organize peoples for Tamizisai to Mass participation abroad only.

If he will ready to organize at tamilnadu also, what is the theme of this vizha ...

It is for Sabha or Street viewers ...


tell us

said...

//i am aasath

how doctor organize peoples for Tamizisai to Mass participation abroad only.

If he will ready to organize at tamilnadu also, what is the theme of this vizha ...

It is for Sabha or Street viewers ...
//
ஆசாத் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவரே, தமிழிசை கடந்த சில ஆண்டுகளாக சென்னையிலும் தமிழகத்தின் பல நகரங்களிலும் தமிழகம் தாண்டி மும்பை, தில்லி நகரங்களிலும் நடந்தது. அதன் பின் இப்போது தான் முதன் முறையாக வெளிநாடுகளில் சிங்கப்பூர் மலேசியாவில் நடந்தது, இது சபா ரசிகர்கள், தெரு ரசிகர்கள் என்றெல்லாம் தரம்பிரிக்கும் வேலையெல்லாம் செய்யாமல் தமிழ்புரிந்த எல்லோருக்கும், அதே போல இசைக்கு மொழி தேவையில்லை என்போருக்குமாக எல்லோருக்குமானது தான்.