தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களில் நாடகத்தை இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட வியாபார, கலாச்சார சீரழிவுகளிடம் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம், இசையையோ கர்நாடக சங்கீதத்திடமும், டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளிடமும் பறி கொடுத்துவிட்டு அங்கே புரியாத மொழிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க நாமோ அய்யோ தமிழில் பாடுங்கள் என்று கெஞ்சி, கதறிக்கொண்டிருந்தோம், அது தான் துக்கடா பாடுகிறோமே அது போதாதா என்று திமிரெடுக்க பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த கும்பல். இசையில் தமிழின் இடம் தமிழகத்திலேயே துக்கடாவாகிப்போனது.

தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது? கொம்பு முழக்கம் ஏற்படுத்தும் உணர்சி கொதிப்பு வெறெந்த கருவிக்கு இருக்கின்றது? போராட்டங்களே வாழ்க்கையாகிப்போன எம் மக்களின் இசையும் இப்போது போராடிக்கொண்டிருக்கின்றது ஆதிக்க சக்திகளோடு.

ஆண்மீகத்திற்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திவ்யபிரபந்தம், மனதை மயக்கும் காவடிச்சிந்து, காதல், வீரம், வாழ்க்கை, போராட்டம் என நாட்டுப்புறப்பாடல்கள், பாரதி, பாரதிதாசனின் சமூக பாடல்கள் என அத்தனையும் இருக்கும் எம் தமிழை துக்கடாவாக்கி வைத்திருக்கும் டிசம்பர் கச்சேரி கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டம் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலே மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் தமிழிசை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, துக்கடாவாகிப்போன எம் மண்ணின் இசை மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றது, வழக்கம்போல புரியாமல் தலையாட்டும் டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளுக்கு பக்கம் பக்கமாக ஒதுக்கும் பத்திரிக்கைகள் தமிழிசை விழாக்களுக்கு துக்கடா இடமே தருகின்றன, இதையெல்லாம் மீறித்தான் தமிழிசை விழாக்கள் இன்று மக்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக சிங்கப்பூரில் பண்ணிசைப்பெருவிழா நடைபெறவிருக்கின்றது, டிசம்பர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண்ணிசைப்பெருவிழாவில் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் இன்றைய தமிழ்முரசு இதழிலிருந்து விழாவை பற்றிய குறிப்புகள்
தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, "தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை" என்றார்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழிசையில் பாடப்படும், கேட்போரை மயங்கவைக்கும் காவடிச்சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல்களை திரைப்படப்பாடகி டி.கே.கலா பாடுகிறார், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகின்றார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானபாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உண வகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் அய்யா இராமதாசுவுடன் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

டிசம்பர் மாத கச்சேரி கும்பலிடமிருந்து தமிழிசையை மீட்டெடுக்கும் மருத்துவர் அய்யா இராமதாசு கலாச்சார சீரழிவு தொலைக்காட்சிகள், திரைப்படங்களிடமிருந்து நாடகத்தமிழையும் மீட்டெடுக்கும் விதமாக "மக்கள் தொலைக்காட்சி"யை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கின்றார், மருத்துவர் அய்யா இராமதாசின் தமிழ்ப்பணியும் அடிமைபட்டுப்போன தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.

நேரம் : மாலை 6.00 மணி
நாள் : திங்கள் 25 டிசம்பர் 2006
இடம் : காலாங் அரங்கம், சிங்கப்பூர்

16 பின்னூட்டங்கள்:

said...

தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

தமிழ் இசைக் கருவிகள் ?

said...

அடடே, தமிழகம் முழுதும் இவர்களது பெரும்பாடினால் தமிழிசையில் இனிதாக மூழ்கிக் கிடக்கிறது. அடுத்ததாக சிங்கப்பூரிலா? அருமை, அருமை.

said...

//அடடே, தமிழகம் முழுதும் இவர்களது பெரும்பாடினால் தமிழிசையில் இனிதாக மூழ்கிக் கிடக்கிறது. அடுத்ததாக சிங்கப்பூரிலா? அருமை, அருமை.
//
வா ராசா அனானி ராசா, சில்லுனு ஒரு ஐஸ் வாட்டர் குடிச்சிட்டு வா.... கொஞ்சம் உம்ம வயிற்றெரிச்சலாவது குறையுதான்னு பார்ப்போம்....

எந்த கும்பலிடமும் இனி துக்கடா பாட்டுக்கும் கூட கையேந்தி நிற்காது தமிழிசை.... புரியாமல் தலையாட்டி மண்டை காயும் நிலையுமில்லை இனி. இதுவரை அரசியல் சமூக ரீதியாக விலக்கி வைக்கப்படவர்கள் அரசியலிலும் சமூகத்திலும் இடம் பெற பெற எங்கேங்கே ஆப்பு விழுகிறது பார்த்தீர்களா? அந்த எரிச்சல்தானோ என்னமோ மூர்க்கத்தனமாக எதிர்ப்பதற்கு காரணம்....

said...

மேலே பின்னூட்டம் போட்ட அனானி, வேணாடாம்யா நீ யாருனு தெரியும்.... அடங்க மாட்டியா நீ...

said...

தாய் தமிழ்நாட்டில் மார்கழிக் குளிரில் "கருநா(ட)க" இசை...
பிழைக்க வந்த இடத்தில் தழைக்கிறது தமிழிசை...

ஆனந்தமாக இருந்தாலும் கோபத்துடன் எரிச்சலும் வருகிறது.

ராமதாசை சந்திக்கும் எண்ணம் இருக்கிறத?

said...

//மேலே பின்னூட்டம் போட்ட அனானி, வேணாடாம்யா நீ யாருனு தெரியும்.... அடங்க மாட்டியா நீ... //

யோவ் எங்களுக்கும் சொல்லுமய்யா...நாங்களும் குமுறி எடுக்கறோம்

said...

//ராமதாசை சந்திக்கும் எண்ணம் இருக்கிறத?
//
சந்திக்க முயற்சிக்கின்றேன், ஆனாலும் இந்த முறை அவருக்கிருக்கும் நேர நெருக்கடியிலும் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இசைக்குழுவினர் என பலரும் வந்திருப்பதாலும் எவ்வளவு நேரம் மருத்துவருடன் பேச முடியுமென்று தெரியவில்லை....

said...

சிங்கப்பூர் வருகை தந்து நம் தமிழ்
இசையை பரப்ப வரும் அவரது குழுவிற்கும், அதனை ஏற்பாடு செய்யும் விழா குழுவினருக்கும் பாராட்டுகள் பல.

மயிலாடுதுறை சிவா...

said...

//அடடே, தமிழகம் முழுதும் இவர்களது பெரும்பாடினால் தமிழிசையில் இனிதாக மூழ்கிக் கிடக்கிறது. அடுத்ததாக சிங்கப்பூரிலா? அருமை, அருமை.//

குழலி அய்யா,

என்ன ,நம்ம மருத்துவர் அய்யா சிங்கப்பூரில் தமிழில் பாடப்போகிறாரா..
அவர் பேச்சுக்கே மயங்கும் நீங்கள்.அவர் பாட்டுக்கு..? வழக்கும் போல் ஜால்ரா தானா?இல்லை நாட்டியமும் உண்டா?

பாலா

said...

சந்தித்தால், மக்கள் தொலைக்காட்சிக்கு எனது நன்றியினை தெரிவிக்கவும்.

கடந்த வாரம் ஒரு கலந்துரையாடலுக்கு எனக்கும் எனது நண்பர்களுக்கும் 'மரண தண்டனை, மோதல் சாவுகள்' குறித்து விவாதிக்க அழைப்பு வந்தது. வேலை நாளானதால் முடியவில்லை.

said...

குழலி,

தகவலுக்கு நன்றி. நான் இந்த இசை நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்று எண்ணியுள்ளேன். முடிந்தால் இசை நிகழ்ச்சியில் சந்திக்கலாம். தங்களது செல்பேசி எண்ணை vssravi@gmail.com அனுப்பி வையுங்கள்.

said...

இராமதாசு கடந்த 4/5 வருடங்களாக முனைப்புடன் செய்து வரும் இந்த முயற்சிக்கு
அவரை நிறைய பாராட்ட வேண்டும்.

தமிழக அரசு இவரின் முயற்சிக்குப் பல உதவிகளைச் செய்து,தமிழிசை மீட்டெடுப்பு மேலும் விரைவெடுக்க வேண்டும்.

said...

//குழலி அய்யா,

என்ன ,நம்ம மருத்துவர் அய்யா சிங்கப்பூரில் தமிழில் பாடப்போகிறாரா..
அவர் பேச்சுக்கே மயங்கும் நீங்கள்.அவர் பாட்டுக்கு..? வழக்கும் போல் ஜால்ரா தானா?இல்லை நாட்டியமும் உண்டா?//

புலிகேசி பாலா அய்யா,

டிஷம்பர் கச்சேரிகளிலும் ஷோ ராமஷாமி போன்ற ஆசாமிகளுக்கும் ஃபுல்லாங்குழல் வாசிச்சு சதிரும் ஆடின அனுபவந்தான் இப்பிடி உருக்கின கொழுப்பா வழியுதோ, துடைச்சுக்குங்க, சறுக்கிரப்போவுது.

said...

மேற்கண்ட அனானியின் பின்னூட்டம் ஒரு வரி எடிட் செய்யப்பட்டுள்ளது.... தவறாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சை உருவாக்குமென்பதால் அந்த தணிக்கை...

said...

தமிழ் இசை நல்ல விஷயம் தான். அதே போல் பா.மா.கா வில மருத்துவர் தலைமையில் பயிற்சி வகுப்பு போன்ற முன்னோடியான விஷயங்களும் நடக்கின்றன.
//மேலே பின்னூட்டம் போட்ட அனானி, வேணாடாம்யா நீ யாருனு தெரியும்.... அடங்க மாட்டியா நீ... //

யாருன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சிகுவோமுல்ல.. பொதுவுல சொல்லாட்டி பரவாயில்லை தனியா மயிலில் சொல்லுங்க போதும் :))..

said...

அரசியல் ஆதாயங்கள் பின்னணியில் இல்லாமலிருக்க வேண்டும். பெரிதும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி. அமேரிக்க நாட்டிலும், வருங்காலத்தில், அமேரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் - கூட்டிணைப்பின் வருடாந்திர விழாவின் போது இவ்விழா நடத்தப்பட வேண்டும்.

நடந்து முடிந்திருக்கும் இவ்விழாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசைக்காக பெருங்குரல் கொடுத்த கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற முன்னோடிகளுக்கு வணக்கம் தெரிவிக்கப்பட்டதா என அறிய ஆவல்.

தமிழ் இசைக்கருவி பற்றி இங்கு தேடி பார்க்கலாம் தமிழ் இசை


நன்றி.