செல்போன் விற்கும் கைப்புள்ள - 1
சங்கத்து சிங்கமெல்லாம் கைப்புள்ள தலைமையில் சங்கத்தில் ஒன்று கூடுகின்றனர்.
சங்கத்து சிங்கம் 1: தல என்ன தல கூப்புட்டிங்க, சொல்லு தல ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம்
கைப்புள்ள: யேய் யேய் என்ன என்ன இப்போ ஓவரா சலும்புற, தல நான் இருக்கன்ல, ஏன் வாலு ஆடுது?
ச.சி. 1:(சசினு படிச்சிப்புடாதிங்கப்பு, சங்கத்து சிங்கத்தத தான் சுருக்கி ச.சி. அப்புடினு சொல்றோம், நல்லா பாருங்கப்பு "ச"க்கும் "சி"க்கும் நடுவுல புள்ளிவச்சிருக்கு) ஸாரி தல, தல நீயே சொல்லு தல
கைப்புள்ள: ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா, முடியலைடா இந்த சங்கத்தை வச்சிக்கிட்டு மாரடிக்க முடியலை, இப்போலாம் நாம காட்டுற படத்தையும் எவனும் பாக்க மாட்டேங்குறானங்க, அதான் நம்ம சங்கத்து சிங்கங்க ஒங்களை நம்பி ஒங்களை நம்பி
ச.சி.2: எங்களை நம்பி கட்சி ஆரம்பிக்கப்போறிங்களா?
கைப்புள்ள: அஹ்ஹ்ஹா அஹ்ஹா, நீ ஒருத்தனே போதும் டா, என்னிய குளோஸ் பண்றதுக்கு என்னிய குளோஸ் பண்றதுக்கு
ச.சி.1 : அப்போ வேற என்னதான் தல, சீக்கிரம் சொல்லுங்க
கைப்புள்ள: சங்கத்து சிங்கங்க ஒங்களை நம்பி செல்போன் கடைவைச்சி பிசுனஸ் பண்ணப்போறேன் டா பிசுனசு
ச.சி.2: சூப்பர் தல, சூப்பர், ஆமா எனக்கு ஒரு சந்தேகம்
கைப்புள்ள: சொல்றா சொல்றா சொல்றா
ச.சி.2: தல ஏற்கனவே நம்மூர்ல 4 செல்போன் கடை இருக்கு, ஒருத்தரு கேமரா செல்போனை விக்குறாரு, ஒருத்தரு கேமராவோட வீடியோவும் சேத்து விக்குறாரு, இன்னொருத்தரு ரேடியோ செல்போன் விக்குறாரு, ஒரு அக்கா வெறும் சொல்போனை விக்குது, நீங்க எப்புடி தல விக்கப்போறிங்க
கைப்புள்ள: வாடா என் வென்று தல இதை கூட யோசிக்காம இருப்பனா? இப்போ கேமரா செல்போனு வெல அதிகம், வீடியோ செல்போனு வெலையும் அதிகம், வெயிட்டும் அதிகம், ரேடியோ செல்போனு ரேடியோ கேக்குறவங்க மட்டும்தேன் வாங்குறாங்க, இந்த அக்கா விக்குதே செல்போனு அதுல ரிஜப்சன் ரொம்ப கம்மி, அது மட்டுமில்லை, அந்த கேமரா செல்போன்காரனை புடிக்காதவங்கள்ளாம் இந்த அக்கா கடைக்கு தான் வருவாங்க.
ச.சி.1: சரி தல அது இருக்கட்டும் நம்ம செல்போனை எப்படி விக்கப்போறோம், எல்லாருமே ஏதோ ஒரு குருப்பை கவர் பண்ணிட்டாங்களே, நீங்க என்ன பண்ணப்போறிங்க
கைப்புள்ள: செல்போன் எதுக்கு? எதுக்கு?
ச.சி.1:எதுக்கு தல
கைப்புள்ள: ஹைய்யோ ஹைய்யோ, இது கூட தெரியலையா, செல்போன் பேசுறதுக்கு.
ச.சி.2(மனதினுள்): ஆகா தலைக்கு ஏறிடுச்சி டோய், இனி பிச்சி ஒளறப்போவுது.
கைப்புள்ள: ஹேய் என்ன என்ன லுக்கு
ச.சி.2: ஒண்ணுமில்லை தல நீங்க சொல்லுங்க
கைப்பு: ஆங்.... அது....அந்த செல்போன் விக்குற எதுலயுமே ரிஜப்ஷன் சரியில்லை, எல்லா செல்போனும் வெயிட்டு அதிகம், வெலையும் அதிகம்.
ச.சி.1: தல சூப்பர் தல
கைப்பு: இப்போ நாம மத்த செல்போனை விட வெயிட்டு கம்மியா, நல்ல ரிஜப்ஷன் வர்றமாதிரி, வெலையும் கம்மியா செல்போன் விக்கப்போறோம். எப்புடி நம்ம ஐடியா?
ச.சி.2: தல சூப்பர் தல, ஆனா அப்புடி ஒரு செல்போன் வச்சிருக்கியா தல
கைப்பு: அது எவன்கிட்ட இருக்கு, அரைலோடு செங்கக்கட்டி தான் இருக்கு
ச.சி.1: தல செல்போனு இல்லைனா எப்புடி தல விப்ப
கைப்பு: சும்மா அப்புடி சொல்லி செங்கக்கட்டிய வித்துட்டா அப்புறம் 50 வருசத்துக்கு எவனும் நம்ம கடையை உட்டு வேற கடையில வாங்கமாட்டான்.
ச.சி.2: சூப்பர் தல சூப்பர், தல இப்புடி கலக்குறிங்களே, எல்லாம் அண்ணி ஐடியா தானே?
கைப்பு: டாய் யார்ராவன், நீ என்ன கட்டதொரை ஆளா? ஒனக்கும் கட்டம் சரியில்லை சொல்லிப்புட்டேன், ஆமாம், "வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கிட்ட ஐடியா கேட்காம வேற ஒருத்தர் கிட்ட எப்படி ஐடியா கேட்க முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி ஐடியாகேட்க முடியுமா இல்ல வேற பொண்ணுங்க கிட்ட ஐடியா கேட்க முடியுமா?..."
கைப்பு சொல்லி முடிக்கும் முன் கைப்பு மூஞ்சியில மேல இருந்து இரண்டு அழுகிய தக்காளி வீசப்பட்டது, கொஞ்சம் ஆளுங்க கோபத்தோடு கத்த
கைப்பு: ஏய் ஏய் யாரு அது மேல இருந்து எம்மேல தக்காளி எறியறது? ஹேய் ஹேய் வேணாம் அழுதுடுவேன், நான் சொன்னா மட்டும் எல்லாம் கோவப்படுறிங்க, நம்ம கேப்டன் விஜயகாந்த்தும் இதைத்தானே சொன்னாரு
கேப்டன் விஜயகாந்த் பெயரை சொன்னவுடன் கூட்டம் அமைதியாக.
கைப்பு: (மனதினுள் ஆங் கேப்டன் பேரை சொன்னாதான்பா அடங்குறாங்க) ராஸ்கல்ஸ் என்ன இது சின்னபுள்ளத்தனாமா? மேல எறிஞ்சிக்கிட்டு, அதை கையில குடுங்க சூசு வச்சி குடிக்கிறேன், இல்ல சட்னி அரைச்சு சாப்புடறேன்,
(கூட்டம் அமைதியானதை பார்த்து கேப்டன்ங்கற பெயரை தானும் வைத்துக்கொள்ளனும்னு கைப்புவுக்கு ஆசை வந்துடுச்சி.)
கைப்பு: என் சங்கத்து சிங்கங்களா, இனிமே என்னை தல தலனு கூப்புடாதிங்க, சிலுக்குவார்பட்டி கிட்டிப்புள்ளு டீம் கேப்டனா இருந்ததால எல்லாருமென்னை கேப்டன் கேப்டன்னு கூப்புடுங்க
ச.சி.1: சரி தல, ஸாரி ஸாரி, சரி கேப்டன்.
கைப்பு என்கிற கேப்டன்: அஹ்ஹா அஹ்ஹா, நாளைக்கு எல்லாம் மதுர மார்க்கெட்டுக்கு வந்துடுங்க, அங்கே தான் நம்ம கடையை ஆரம்பிக்கறோம்.....
பின்குறிப்பு:
மக்களே நாளைக்கும் மறக்காம இங்க வந்துடுங்க, நம்ம கேப்டன் கைப்பு செல்போன் விக்கபோறது நேரடி கவரேஜ் பாக்கலாம்
17 பின்னூட்டங்கள்:
ஆச்சரியமா இருக்கே!!
ஏன் இந்த கொலைவெறி குழலி...
//ஆச்சரியமா இருக்கே!! //
இதில் என்னங்க ஆச்சரியம், கைப்புள்ள செல்போன் விக்கறதா ஆச்சரியம்?
//ஏன் இந்த கொலைவெறி குழலி...
//
யோவ் ஜெய், கைப்புள்ள செல்போன் விக்குறது உமக்கு கொலை வெறியா? நல்லா கெளப்புறிங்கய்யா பீதியை... அஹ்ஹா அஹ்ஹா...
கைப்புள்ள சில்லரை தட்டுப்பாட்டு செல்போன் கடை போடப்போறாரு ஓ.கே, கேப்டன் சில்லரையை தக்கவைக்க கடைப்போட்டிருக்காரு... இது ரெண்டும் எப்படி ஒன்னா சேர்ந்தது??
இது தான் தம்பிக்கு ஆச்சரியமா இருக்கோ என்னவோ?? :))))
என்ன தலை நீங்களும் இப்படி நகைச்சுவை மார்கமா இறங்கிட்டிங்க என்னமோ போங்க..
//"வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கிட்ட ஐடியா கேட்காம வேற ஒருத்தர் கிட்ட எப்படி ஐடியா கேட்க முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி ஐடியாகேட்க முடியுமா இல்ல வேற பொண்ணுங்க கிட்ட ஐடியா கேட்க முடியுமா?..."//
குழலி,
வப்பாட்டிக் கதையெல்லாம் வேணாம்.
துணையாக கூடவே உட்கார்ந்திருக்கும் இருக்கும் உயிர் தோழியிடம் கேட்பது தவறு என்கிறாரா கேப்டன் ?
:))
//என்ன தலை நீங்களும் இப்படி நகைச்சுவை மார்கமா இறங்கிட்டிங்க என்னமோ போங்க..
//
என்னது இது, சும்மா, ஆங்... சும்ம்மா... ஆங்.... அய்ய்ய்ய்யோ அம்ம்ம்ம்ம்மா.... ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா என்ன வெயிலு என்ன வெயிலு....
//குழலி,
வப்பாட்டிக் கதையெல்லாம் வேணாம்.
துணையாக கூடவே உட்கார்ந்திருக்கும் இருக்கும் உயிர் தோழியிடம் கேட்பது தவறு என்கிறாரா கேப்டன் ?
:))
//
கோவி நீங்க கேப்டன்னு சொன்னது கேப்டன் கைப்புள்ளைய தானே? வேற கேப்டன்னா வேண்டாம்யா.... வேண்டாம்... நான் இந்த வெளையாட்டுக்கே வரலை... இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் ஏற்கனவே அடிவாங்கி உடம்பு வீங்கியிருக்கு ஏற்கனவே, நான் ரொம்ம்ம்ப்ப்பபபப நல்லவன் என்னை விட்டுடுங்க கோவி.
என்னங்க கடை ஆரம்பிச்சு கூட்டம் கம்மியா இருக்கு?? ஹோ! ஹோ!! 10%க்கு இவ்வளவு தான் வருமோ??!!
கைப்பு உடாதே விளம்பரம், ரோட் ஷோன்னு ஏதாவது பண்ணி ஆளை புடிப்பா.... நம்மளும் ஏதாவது செய்யனும் இல்ல?!! :))))
//என்னங்க கடை ஆரம்பிச்சு கூட்டம் கம்மியா இருக்கு?? ஹோ! ஹோ!! 10%க்கு இவ்வளவு தான் வருமோ??!!
//
என்னா ஜெய் செய்றது, எனக்கு நகைச்சுவை எழுத வரலையோனு தோணுது :-(
//என்னா ஜெய் செய்றது, எனக்கு நகைச்சுவை எழுத வரலையோனு தோணுது :-( //
உங்களுக்கு காமெடியெல்லாம் நல்லா தான் வருது.. ஆனா
கேப்டனுக்கு பதிலா பெருச புடியுங்க இல்ல, அம்மாவை புடியுங்க அப்ப தான் கூட்டம் வரும். நீங்க பாட்டுக்கு வோட் ஷேர் பெருசா இல்லாத ஒரு ஆளை ரவுண்டு கட்டி என்ன கூட்டம் வரும் ;)
//என்னங்க கடை ஆரம்பிச்சு கூட்டம் கம்மியா இருக்கு?? ஹோ! ஹோ!! 10%க்கு இவ்வளவு தான் வருமோ??!!
//
ஜெய் ஒரு இன்ப அதிர்ச்சி, இந்த பதிவுக்கு இது வரை வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 730, இது வரை எத்தனையோ பதிவுகள் எழுதியிருக்கிறேன், ஒரே நாளில் ஒரே பதிவுக்கு, அதுவும் பதிவு போட்ட மூன்று மணி நேரங்களில் 730 ஹிட் இருந்ததேயில்லை.....
மக்களே உங்கள் ஆதரவை நாளையும் தாங்கள், நாளைதான் நம்ம பார்த்திபன் மதுர மார்க்கெட்டில் கேப்டன் கைப்புவை கலாய்க்க போகிறார்.
(அடேய் அடேய் தெரியாம வந்துப்புட்டோம், நகைச்சுவை எழுதுறேன்னு நீ கடிச்சு இரத்தமா கொட்டுதுனு யாருப்பா அங்க என்னை கலாய்க்கறது) விடு விடு இதெல்லாம் சகஜம் எத்தனை எடத்துல அடி வாங்கியிருப்போம் நாங்க
நன்றி
ஒன்னும் பிரியல
இந்தப்பதிவில் வரும் வியாபாரங்களூக்கும் சன் டிவி / மக்கள் டிவி / சூரியன் எஃப் எம் / ஜெயா டிவி இவற்றிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நம்புகிறேன்
:-)))))))))))
பேசாமா கைப்புள்ள ரசிகர் மன்றம் தொடங்களாம் போல.. நல்ல வரவேற்ப்பு இருக்கும்ன்னு தோணுது :))))
கொஞ்சம் லைவ் டெலிகாஸ்ட் பண்ண முடியுமா.
கைப்புள்ள இப்ப சக்சஸா பஸ்ஸில்ல ஓட்டிகிட்டிருக்காரு.
நீங்க செல்போனைச் சொல்லிக் குழப்புறீங்களே மிஸ்டர் குழலி!
SP.VR.SUBBIAH
இட்லி வடையையும் கேப்டனையும் நோண்டுறதை விட்டுட்டு வேறு ஏதாவது சுவாரசியமா எழுதலாமே!
எத்தனை பேர் என்னை ஆதரிக்கிறீர்கள்?
-வேல்-
Post a Comment