சிறுவர் போர்னோகிராபி

நீண்டு போன நேற்றைய இரவில் டிஸ்கவரி சேனலில் நம்மோடு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் பற்றிய படங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒரு அதில் வந்த ஒரு விளம்பரம்,அது சிறுவர் போர்னோகிராபி பற்றிய விளம்பரம். அதில் சில புள்ளிவிபரங்கள்.

* கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் இணையத்தில் 1,500% அதிகரித்துள்ளது.

* இன்றைய அளவில் ஒரு இலட்சம் சிறுவர் போர்னோகிராபி தளங்கள் இணையத்தில் உள்ளன, வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும்.

* சிறுவர் போர்னோகிராபி தளங்களில் ஒரு நாளைக்கு இருபதாயிரம் சிறுவர்கள் வரை காண்பிக்கப்படுகின்றனர்.

* ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் ஐந்து வரையான புதிய சிறுவர்கள் வருகின்றனர்.

* The victims keep getting younger

* அத்துமீறல்கள் மேலும் மேலும் மோசமடைகின்றன.

* சிறுவர் போர்னோகிராபியில் பயன்படுத்தப்படுபவர்களின் சராசரி வயது ஒன்பது

* மூன்று வயதிற்கு குறைந்த குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

* ஆன்லைன் சிறுவர் போர்னோகிராபி ஒரு மல்ட்டி பில்லியின் டாலர் வியாபாரம், இது ஆன்லைன் இசை விற்பனையை விட பல மடங்கு அதிகம்.

இந்த விளம்பரத்தில் உங்களின் பணம் எங்களுக்கு தேவையில்லை, உங்களது ஆதரவே எங்களுக்கு தேவை என்று கோரிக்கை வைக்கின்றனர்.

நம் ஆதரவை காண்பிக்க lightamillioncandles.com என்ற இணையதளம் சென்று ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்.

விளம்பரப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

6 பின்னூட்டங்கள்:

Anonymous said...

விஞ்ஞான/நாகரிக வளர்ச்சிகளுடன் மனிதரின் பாலியல் வக்கிரங்களும் "வளர்ச்சியடைகிறது". இலங்கை, தாய்லாந்த் போன்ற நாடுகளில் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுக்க அரசுகளே சிறுவர்களை பாலியல் வக்கிரங்களுக்கு விற்பனை செய்கின்றன. பாலியல் பண்டமாக்கப்படும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டு குப்பைக்குள் தூக்கி வீசப்படுவது மேற்குநாடுகளில் வழமையாகிவிட்டது.

இந்தக் கொடுமையின் பயங்கரம் மெழுகுவர்த்தி ஏற்றுவதுடன் நின்றுவிடாமல், உறைக்கும்படியாக தொடர்ச்சியாக எழுதப்பட/பேசப்பட வேண்டும்.

siva gnanamji(#18100882083107547329) said...

மெழுகுவர்த்தியை ஏற்றீவிட்டேன்

BadNewsIndia said...

தாய்லாந்தில் அரசே அனுமதிக்கும் கொடுமை இது.
பிள்ளைக்கறிக்காக வரும் வெள்ளைக்காரனை வசீகரிக்க இளம் குழந்தைகள் சந்தையில் விற்கப்படும் அவலம் அங்கு தினந்தோறும் நடக்கிறதாம்.

என்னய்யா கொடுமை இதெல்லாம். வெள்ளைக்காரனுக்கு வேறு கவலை இல்லாததனால், மனம் இப்படி எல்லாம் அலையாயுதோ?

(நம் ஊரில் இந்த ஈனம் இருக்கிறதா? இல்லாமலா மகாநதியில் கமல் இதை எடுத்துக் காட்டியிருப்பார்? பார்த்த இடத்திலேயே வெட்டி எறிய வேண்டும் இந்த சைகோக்களை)

ரவி said...

கொடுமை...இதுபோன்றவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லாதது இவர்களுக்கு வசதியாக போய்விட்டது குழலி அவர்களே !!!

We The People said...

வக்கிர புத்தியின் எல்லை பரந்து விரிந்து போய்க்கொண்டு இருக்கிறது. ஏதோ இது வெள்ளைக்காரன் மட்டும் செய்வது இல்லை. இந்தியாவிலும் பல வழக்குகள் இருக்கின்றன, அந்த குற்றவாளிகள் இன்னும் ஜாலியா தான் ஊர் சுற்றுகிறார்கள். தண்டனைகள் கடுமையில்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம், பின்னர் இந்தியவில், இப்படி ஒரு பிரச்சனையில் குழந்தைகள் மாட்டிக்கொண்டால் சமுதாயத்துக்கு பயந்து அது வழக்காமல் விட்டுவிடுவதும் ஏராளம்!!! இது போன்ற விசயங்களுக்கு மெளுகுவர்த்தி ஏற்றி பயன் உள்ளதாக தெரியவில்லை :( இருந்தாலும் உங்க ஆசைக்காக ஏற்றிவிட்டேன்.

இது குற்றவாளிகளுக்கு மரணதண்டனையோ அல்லது நம்ம இரவுக்கழுகார் ரேஞ்சுக்கு ஒரு தண்டனைக்கிடைக்காமல் அடங்கமாட்டார்கள் என்று ஆனித்தரமாக நம்புகிறேன். அதை சொன்னால் கோ.சுகுமாரன் போன்றவர்கள் மனித உரிமை, பொதுபுத்தி போன்ற விசயங்களை சொல்லி சண்டைக்கு வருவார்கள் குழலி. சில நேரம் நீங்க கூட சண்டைக்கு வருவீங்க ;)

NONO said...

Pedophilia இது ஒரு நோய்யாக கண்டறியப்பட்டுள்ளது!இதுக்கு மரணதண்டனை என்ன ஜெயில் தண்டனை கூட குடுக்கமுடியாது. இந்த நோய் மருந்துகள் உற்கொள்ளும்வரை கட்டுப்பாட்டில் இருக்கும், தரப்பியும் மற்றும் பயிற்சியும் அளிக்கிறார்கள். இந்த நோய் பெண்களுக்கும் உண்டு.மணிதன் தோன்றில காலத்தில் இருக்கு இந்த நோய் இருக்கின்றது, இது ஒண்றும் விஞ்ஞான/நாகரிக வளர்ச்சிகளுடன் வந்த அல்ல.
இதைப்பற்றி விளிப்புணர்வை மக்களுக்கு எற்படுத்துவதான் இப்போது சிறந்த வழி!
முன்னுக்கு மறுமொழி அழித்தவர்களுடய மனநிலை இருக்கும் வரை ஒருதரும் முன் வந்து இந்த நோய்க்கு மருத்துவ உதவி தேடமாட்டார்கள்!!

http://en.wikipedia.org/wiki/Pedophilia