போடுங்கய்யா ஓட்டு ரெட்டெலைய பார்த்து...

தேர்தல் என்றால் வாக்காளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஜாலியோ என்னமோ சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வத்தோடு இருக்கும் எனக்கு எப்போதும் குஜாலாக இருக்கும், ஒரு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது போன்று பத்திரிக்கைகள் படிப்பது, நண்பர்களுடன் அலசுவது, கருத்து கணிப்பு செய்வது என்று ஒரு சுவாரசியமான விசயமாகவே இருந்தது... வலைப்பதிவு எழுத ஆரம்பித்த பின் தளம் இன்னும் விரிவானது, கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைய பதிவுகள் தொகுதி நிலவரங்கள் என்று பதிவு செய்திருந்தேன்...

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய அன்று சில மணி நேரங்களில் அந்த செய்திகளை முதலில் வலைப்பதிவுகளில் பார்த்து அதன் பின் இணையத்தில் செய்திகளை தேடினேன், பின் நேரமாகிவிட்டது என தூங்க சென்றுவிட்டேன் காலையில் பார்த்துகொள்ளலாமென்று, பெரிய அளவில் எந்த விதமான பதட்டமோ பதைபதைப்போ எனக்கு இல்லை, அது எனக்கு மற்றுமொரு வருந்த வைத்த செய்தி என்பதை தவிர இந்தியா என்றோ உணர்வுப்பூர்வமாகவோ அது எனக்கு இல்லை.

கிளிநொச்சி முற்றுகை நிலைமை மோசம் என்று உறுதியாக படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை அதிகாலை வரை ஒரு ஒரு இணைய தளமாக தேடுகிறேன், அதிர்ச்சியோடும் துக்கத்தோடும் அடுத்த சில நாட்கள் இதே விசயங்களை தேடிக்கொண்டே இருந்தேன், தூக்கம் வரவில்லை, உணவும் இறங்கவில்லை... அன்று ஆரம்பித்தது இன்று வரை தூக்கத்தில் இருந்து அவ்வப்போது விழித்துகொள்வது என நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆயிற்று.

மும்பை தாக்குதல் உணர்வுப்பூர்வமாக என்னை பாதிகவில்லை ஆனால் ஈழம் உணர்வுபூர்வமாக பாதித்துள்ளது இந்திய தேசியம் பற்றி மிக கடைசியாக எஞ்சியிருந்த குழப்பத்தையும் தீர்த்துவைத்தது.

தேர்தல் அறிவுப்புகள் கூட்டணி கூத்துகள் என அல்லோகலப்பட ஆரம்பித்தும் இதில் மனம் ஒட்டவில்லை, தேர்தல் கணிப்புகள் எழுத முக்கியமான அடிப்படை தேவை நாம் எந்த கட்சி வெற்றி பெறவேண்டும் என நாம் நினைப்பதை கணிப்பாக திணிக்க கூடாது, தேர்தல் கணிப்பு எழுதுவது வெறும் கூட்டல் கழித்தல் கணக்கு மட்டுமல்ல. அது ஒரு பக்குவமாக செய்யப்படவேண்டிய கலை முந்தை தேர்தல் புள்ளிவிபரங்கள், கட்சி உள்ளூர் நிலவரங்கள், சாதி, படிநிலை சாதி உருவாக்கிய சமூக தாக்கங்கள், சாதி மத சமூக முரண்கள், என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன, இம்முறை தொகுதி மறுசீரமைப்புஅதனால் குறிப்பாக மிக நன்றாக தெரிந்த தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கு கணிப்பு எழுதுவது "வரும்.... ஆனா வராது..." மாதிரிதான்....

1991,1996 சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்று சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயங்கொண்டத்தில் தோற்ற பாமக இரண்டாம் இடத்தை பிடித்தது, வெற்றிக்கு வெறும் ஓரிரு ஆயிரம் வாக்குகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 2006ல் திமுக கூட்டணியோடு நின்ற போதும் சில ஆயிரம் வாக்குகளில் பாமகவுக்கு மீண்டும் தோல்வி ஏன்? 1999 பாராளுமன்ற தேர்தலில் தொல்.திருமா என்ற வலுவான வேட்பாளரை எதிர்த்து 65ஆயிரம் வாக்குகள் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பெற்ற பாமக 2001 சட்டமன்ற தேர்தலில் வென்ற போதும் 48 ஆயிரம் வாக்குகளே பெற முடிந்தது ஏன் என்று அலசினால் அது வெறும் கூட்டல் கழித்தல் கணக்கு மட்டுமல்ல, சாதிபடிநிலை இந்த சமூகத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது புரியும்.

2001 தேர்தலில் குறிஞ்சிப்பாடியில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்த போது திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களிலேயே மிக அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அந்த நேரத்தில் மாநிலமெங்கும் திமுக தோல்வியடைந்திருந்தது, ஆனால் 2006ல் திமுக கூட்டணி மாநிலமெங்கும் வெற்றி பெற்ற போதும் பாமக திமுக கூட்டணியில் இருந்தும் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் வெற்றிபெற்றார். இதை ஏன் என்று நோண்டினால் உள்குத்து அரசியல், சொந்த சாதிகாரர்களிடம் சம்பாதித்த வெறுப்பு என எக்கச்சக்கமாக வெளிப்படும்.

நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் 1996ல் கூட்டணியில்லாமல் பாஜக வெறும் 10,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, 1998ல் எல்லோரும் பாஜகவெற்றி என்று கணித்த போதும் நாகர் கோவிலில் அதிமுக கூட்டணி இருந்தும் அதே 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, இதையும் நோண்டி பார்த்தால் மதப்பிரச்சினை புரியும்.

குறைந்தபட்ச புள்ளிவிபர அலசல், அரசியல் மற்றும் சமூகத்தின் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்களை தொடர்து நோக்குவது என்று கூட இல்லாமல் டேபிள் கருத்துகணிப்புகள் எழுதிய சிலரின் பதிவுகளை பார்த்தபோது எழுத வேண்டும் என்று கை அரித்தது என்றாலும் ஈழ வேதனையில் தேர்தல் கும்மிகளில் நாமும் கலந்து கொண்டு ஈழவேதைனையை மறைக்க என்பதிவுகளும் உதவ வேண்டாமென தொடர்ச்சியாக ஒதுங்கியே நின்றேன்.

சென்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை விட திமுகவே மேல் என்று திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டுமென விரும்பி அதை ஆதரித்து பதிவுகளும் பலரிடம் தொலைபேசி திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டேன், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியின் முதல் இடியாக

நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக முன்பு செய்தது போன்றே திமுக செய்த அடாவடி ரவுடியிசம், அதை தொடர்ந்து மாமன் மச்சான் குடும்ப பிரச்சினையில் அதிமுகவினர் தர்மபுரிவாலாபாக் படுகொலை போலவே மதுரையில் அப்பாவிகள் மூன்று பேரை எரித்து கொன்றது என திமுக தாம் அதிமுகவை விட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை என்று காட்டியது.

சீமான், கொளத்தூர்மணி போன்றோரை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளி தமக்கு எதிராக கருத்து சொல்பவர்களை கைது செய்யும் பாசிச போக்கை கடைபிடித்து ஜெயலலிதாவிற்கும் தமக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று காட்டினார் கருணாநிதி.

முத்துக்குமார் செந்தழலில் வெந்து போனதை கூட தம் ஊடக வலிமையால் மறைக்க முயன்றதும் இன்றைக்கு ஈழப்பிரச்சினை தேர்தல் பிரச்சினையல்ல என்று இன்றும் தன் அடிபொடி ஜால்ராக்களின் மூலம் முழுங்குவதும் ஈழ எழுச்சியை ஒடுக்க முயல்வதும் திமுகவிடம் எதிர்பாராத ஒன்று.

சமீப காலமாக ஜெயலலிதாவின் ஈழ ஆதரவும் கோத்தாபய ராஜபக்சே, கபில்சிபிலுக்கு கொடுத்த மறு அடி பதில்களையும் ஜெயலலிதாவின் தேர்தல்கால நாடகமாக எடுத்து கொண்டாலும் கருணாநிதியின் கபட நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

எது எப்படியாயினும் தேர்தலுக்காகவேனும் ஈழ ஆதரவு பேச்சு பேச வேண்டுமென்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டது மிக்க மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக ஜெவின் ஈழ ஆதரவு பேச்சு அதன் தொடர்ச்சியாக

தேர்தல் கள நிலை முழுக்க ஈழத்தை மையம் கொண்டது தமிழின அரசியலை ஒதுக்கிவிட்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

அதிமுகவை விடுத்து தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவும் உதவியும் தரும் காங்கிரஸ் கட்சியை தன் தோள்மேல் தாங்கிக்கொண்டு தமிழின எழுச்சியை அடக்க முயலும் திமுகவை ஆதரிக்கும் அளவிற்கு திமுக எந்த விதத்தில் அதிமுகவை விட மேலானதாக இல்லை... சமதூரத்தில் இரண்டும் இருக்கும் போது தற்போது காங்கிரசை ஆதரிக்காத அதிமுக கூட்டணியை தேர்ந்தெடுக்கும் நிலை.

மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்கும் படுதோல்வி தமிழின அரசியலை முன்னெடுக்காததற்கு ஈழப்படுகொலைகளை நிறுத்தாததற்கு கிடைக்கும் தண்டனையாக அமையும்.


இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது கோப்பை முழுக்க நிரம்பிய விஷம், திமுக என்பது விஷம் கலந்த தேநீர், அதிமுக என்பது பழைய தேநீர், பழைய தேநீர் குடித்தால் ஃபுட் பாய்சன் ஆகாதா என்றால் இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்....

காங்கிரசு சிறையில்

திராவிடச் சிங்கம்
என்ற பதிவில் முத்துகுமார் நான் எழுத நினைத்தவைகளையே எழுதியுள்ளார்...

தமிழின உணர்வாளர்களை அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தள்ளியது கருணாநிதியே... இதை புரிந்து கொள்ளாமல் வலைப்பதிவாளர்கள் சூ... வில் சுண்ணாம்பு என்றெல்லாம் கொக்கரித்தால் (சொல்லி வாயை மூடும் முன் பொய் செய்தியை பரப்பி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு சுண்ணாம்பு தடவிட்டார் என்று சொன்னவர்களுக்கெல்லாம் சுண்ணாம்பு தடவினார் கருணாநிதி) வன்னியர் ஒற்றுமை ஓங்குக என அனானியாக பின்னூட்டம் போட்டு காலத்தை ஓட்டலாம்.

9 பின்னூட்டங்கள்:

said...

"யார் முத்துகுமார்?" என்று ஏளனமாகக் கேட்ட சொறிநாய் இளங்கோவனை ஓட்டுக்கேட்க வரும் போது தாய்மார்கள் விளக்குமாறு கொண்டு அடிக்கவில்லையெனில் அவமானம்.

இவனுக்காக ஓட்டு கேட்கும் திமுக-வுக்கும் பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம்.

said...

இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்....//////////


இப்போ நாம் எடுக்க வேண்டிய நிலை இது தான்

said...

வாழ்த்துக்கள் குழலி. சிங்கப்பூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு என்னால் ஓட்டு போட முடியாதே என வருந்துகிறேன்.

இங்கே அமெரிக்காவில் வெறும் திமுக வேட்பாளர்களும் காங்கிரஸ் வேட்பாளர்களுமே போட்டியிடுகிறார்கள். என்ன செய்ய விதி வலியது..!

said...

வன்னியர் குல சிங்கம். எங்கள் தங்கம் அண்ணன் குழலி வாழ்க. வன்னியர் குழம் சாரி குலம் ஓங்குக..

said...

சிங்கப்பூரில் இருந்து கொண்டு இப்படி நம் வன்னிய குல பெருமையை உயர்த்திப் பிடிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல

said...

தேர்தல் எங்க ஊர்ல நடக்குது.. நாங்க பாத்துக்கறோம்.. வேணும்னா இங்க வந்து ஓட்டுப் போடுங்க, இல்லாட்டி ஈழத்துக்குப் போய் சண்டை போடுங்க.. அதவிட்டுட்டு பதிவு போடறீங்களே அண்ணே :-)

said...

உட்டாலக்கடித்தமிழன் (எ) Anonymous (எ)அன்புமணி s/o ராமதாசு (எ) நலம் விரும்பி சொன்னதை வழிமொழிகிறேன் :))))))))))))))

வன்னியர் ஒற்றுமை ஓங்குக!! என்ற கமெண்ட் என் பதிவுக்கு வந்தது அதனால் அந்த பின்னூட்டம் காப்பி ரைட்ஸ் என்னுடையது! என் அனுமதியில்லாம இங்கே உபயோகித்ததை வன்மையா கண்டிக்கிறேன் !!! ஹா ! ஹா! ஹா!!!

said...

//இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது கோப்பை முழுக்க நிரம்பிய விஷம், திமுக என்பது விஷம் கலந்த தேநீர், அதிமுக என்பது பழைய தேநீர், பழைய தேநீர் குடித்தால் ஃபுட் பாய்சன் ஆகாதா என்றால் இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்...//

நல்ல விளக்கம். அருமை.

said...

இனி தனியொருவன்கள் தமிழினத் தலைவன்களாக இயலாது.

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html