தமிழன் என்று எவனாவது ஓட்டு கேட்டால் செருப்பால் அடியுங்கள்

மனசும் உடம்பும் சரியில்லை.... செய்திகள் எல்லாம் முடிந்ததாகவே சொல்கிறது... இனி பேசுவதற்கும் செய்வதற்கும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை...

தேர்தல் திருவிழா வருகிறது... சாதிக்காக, மதத்துக்காக, சாராயத்துக்காக, பிரியாணிக்காக, அல்லது தலைவன் மேல் இருக்கும் ரசிக மனோபாவத்துக்காக எதுக்காக வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் ஆனால் எவனாவது தமிழனுக்காக என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள்...

ஒருத்தர் முதல்வர் பதவிக்காக, ஒருத்தர் மகனின் பதவிக்காக என்றால் இன்னொருவரோ ரெண்டு எம்.பி. சீட்டுக்காக என அத்தனை பேரும் விற்று தின்றுவிட்டார்கள் தமிழனை.

ஆரிய பார்ப்பானாக, சூத்திர பார்ப்பானாக, முற்போக்கு திமுக காரனாக, பிற்போக்கு அதிமுக காரனாக, வன்னிய சாதி பாமக காரனாக, தலித் விசியாக, தலித் புதியதமிழகத்துக்காரனாக அல்லது எதுவுமே இல்லாத இலம்பாடிகளாக இருந்துவிட்டு போவோம்...

இனி தமிழனாக மட்டும் இருக்கவே வேண்டாம்...

நாலு மந்திரிக்க்காக ஈழத்தமிழனை காட்டி கொடுத்தவர்கள், ஆறு மந்திரிக்காக தமிழக தமிழனை கூட்டி கொடுப்பார்கள் என்பதால் தமிழனாக மட்டும் இருக்க வேண்டாம்

10 பின்னூட்டங்கள்:

said...

:(((

said...

உங்கள் வேதனையில் பங்கு கொள்கிறேன்.

சீமாச்சு..

said...

//நாலு மந்திரிக்க்காக ஈழத்தமிழனை காட்டி கொடுத்தவர்கள், ஆறு மந்திரிக்காக தமிழக தமிழனை கூட்டி கொடுப்பார்கள் என்பதால் தமிழனாக மட்டும் இருக்க வேண்டாம்//

சிந்திக்க வேண்டிய செய்தி

"In Germany, they came first for the Communists, And I didn’t speak up because I wasn’t a Communist;
And then they came for the trade unionists, And I didn’t speak up because I wasn’t a trade unionist;
And then they came for the Jews, And I didn’t speak up because I wasn’t a Jew;
And then . . . they came for me . . . And by that time there was no one left to speak up."

said...

என்னுள் இருக்கும் ஆத்திரத்தை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் குழலி!
அவமானமாக இருக்கிறது தமிழன் எனச் சொல்லிக் கொள்ளவே!
இனி செய்ய ஒன்றுமே இல்லை என எண்ணும்போது, இப்போது பேரணி எனச் சொல்லும் தலைவனைப் பார்த்து.......... சரி விடுங்க!:(((((((((((((((((((

said...

அற மறை மரபுக்கேன் அரசன் நெறி வாய்க்கவில்லை!!!

படிக்காத பாமரனையும் படைப்பாளியாக்கும்
எண்ணிக்கை தெரியாதவனையும் வணிகனாக்கும்
அவசரகுடுக்கையும் அமைச்சராக்கும்
மெத்தபடித்தவனையும் பாவலனாக்கும்,தமிழ் ஏன்??
தமிழ் நாட்டுப்பற்றாளனை,மாற்றுப்படைக்கலணை படைக்கவில்லை?

அற மறை மரபுக்கேன் அரச நெறி வாய்க்கவில்லை!!!

அடிமைக்கல்வியா? மொள்ளமாறிகளால் கற்பிக்கப்பட்ட மூளைசுலுக்கா?
காலம் இருக்கு கனிவாக
வெற்றி கனியும் மறவாதே!!!
வீதிக்குவந்து போராடு
சமுக நீதிக்கு நீராய் வித்தாகு

said...

இனி யாவரும் தமிழன் என்று சொல்லிகொள்வதில் அர்த்தமில்லை

said...

இனி யாவரும் தமிழன் என்று சொல்லிகொள்வதில் அர்த்தமில்லை

என்று எண்ணிய வேளை உங்களின் பதிவினை பார்த்தேன். என் உள்ளத்தினை அப்படியே பிரதிபலித்தது உங்கள் பதிவு.

said...

சிதம்பரத்துக்கு விழுந்த செருப்படியை பார்த்து உசாராக மஞ்ச துண்டு மீண்டும் பேரணி நாடகம் நடத்த கிளம்பி இருக்கு.

கொஞ்சம் ரோசம் உள்ள உடன்பிறப்புகள் இதை புறக்கணிக்க வேண்டும்.


லண்டனில் போராடுவதை போல பொது மக்கள்தான் இனி போராட வேண்டும். அரசியல் கட்சிகளின் போராட்டம் இனி தேவை இல்லை. திருமா. குருமா. வைகோ எல்லோரையும் புறக்கணிக்க
வேண்டியதுதான்.

said...

Haven't got anything to say.

Never been proud of Indian and never ever again.

said...

Kuzhali, I read your other comments in various other bolgs and you seem to be politically incorrect, You are correct from my point of view. I am also like you - frustrated that we are unable to do anything to stop this genocide and now that the war has come to end with the complete slaughter of innocent thamizh makkal, I feel ashamed that I am a thamizhan.