நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போராளிகள் அல்ல!

நக்கிப் பிழைப்பவை
நாய்கள்தான்
போராளிகள் அல்ல!

கக்கித் தின்பவை
பூனைகள் தான்
புலிகள் அல்ல!

ஆரிய பார்ப்பான்
அலறி சொன்னான்
நீ போய்
சேரலையேயென்று

வாய் சண்டையிட்டோம்..
அட்டை கத்தி சுழற்றினோம்

கத்தினோம் கதறினோம்
உள்ளே புன்முறுவிக்கொண்டே

உன் நினைப்பே
அவர்களை அறுக்குதென்று...

உன் உயிர்ப்பே
அவர்களை உருக்குதென்று...

கத்தினோம் கதறினோம்
உள்ளே புன்முறுவிக்கொண்டே

போன வருசமே
போய் சேர்ந்திருதால்

போன வருசமே
போய் சேர்ந்திருதால்

கண்ணீர் விட்டு
கதறியிருப்போம்...

இனி இல்லை ஒரு சொட்டு
கண்ணீரும் உனக்கு

இனி இல்லை ஒரு சொட்டு
கண்ணீரும்

ஆரிய பார்ப்பான்
ஆரிய பார்ப்பான்
என்றாய்
நீயே
சூத்திர பார்ப்பானாகி
எம்மினம் குடித்தாயே!

கொள்ளையிட்டு சேர்த்த
சொத்து காக்க நீ
கொள்கை விற்று சேர்த்த
சொத்துக் காக்க
கொள்ளைபோச்சே என்
இனம்...

அய்யோ போச்சே
அய்யோன்னு போச்சே!

நக்கிப்பிழைப்பவை
நாய்கள்தான்
போராளிகள் அல்ல!

கக்கித்தின்பவை
பூனைகள் தான்
புலிகள் அல்ல!

மே13க்கு முன்
வந்தால் கெட்ட செய்தி
அது உமக்கும்
கெட்ட செய்தியே!

நீ நம்பாத கடவுளை
வேண்டிக்கொள்
எதுவும் மே13க்கு
பிறகே என்று

பதவி துண்டு
கொள்கை வேட்டி
அரசியல் வியாபாரிக்கு
வெறும் பேச்சு
போராளிகளுக்கு
அதுவே மூச்சி


அல்லக்கைக்கே
அமைச்சர் பதவியெனில்
'ரோ'ட்டில் விற்றிருந்தால்
தங்கதட்டில் தின்றிருக்கலாம்
ஆனால் நக்கிதான்...

சேகுவேரா
தங்கத்தட்டில் நக்கிதின்று
கடற்கரையில் சமாதியாகவில்லை
அகோர சாவென்றாலும்
அவன் சாவு
போராளி சாவு
அது அவன்
கெளரவ சாவு


நக்கியும் கக்கியும்
நீ தின்றுகொள்!

சொத்தையும் சொந்தத்தையும்
நீ காத்துகொள்!

இனி உனக்கில்லை
ஒரு சொட்டு கண்ணீர்!

இனி உனக்கில்லை
எம்மிடம்
ஒரு சொட்டு கண்ணீர்!

11 பின்னூட்டங்கள்:

Anonymous said...

குழலி கவிதை எழுதிதான் உங்கள் தமிழ்பற்றை காமித்தாக வேண்டும் என்பதில்லை. நீங்கள் தமிழ் பற்றாளர் என்று ஒத்துகொள்கிறோம். எங்களை இப்படி சித்தரவதை செய்ய வேண்டாம்.

பழகிய நண்பர்

Suresh Kumar said...

அருமையாக இருக்கிறது

Anonymous said...

This is very nice and high standard poem. This came from you bottom of the heart, that why words coming with true and emotion, not like the one karunanithy writing to his followers…

RB-Dubai

சோழன் said...

கலைஞர் இறந்து நான்கு மாதமாகிவிட்டது.இந்தக்கல்லுளிமங்கன் கூலிக்கு மாரடிப்பவன்.கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டே இருக்க ,நெஞ்சு மட்டும் பகைமுடிக்க விம்முகிறது .இவனை தீகூட தீண்டாது.
-சவுதியிலிருந்து கைய்யலாகத கபோதி

Sanjai Gandhi said...

தல, எழுதினவர் பேர் எங்க?

குழலி / Kuzhali said...

//This came from you bottom of the heart//
பல்லாண்டு வாழ்க என்று அன்றும் எழுதினேன் அன்றும் அடிமனதிலிருந்து தான் எழுதினேன்.... இன்று அடிவயிறு எரிந்து எழுதினேன்

http://kuzhali.blogspot.com/2006/11/blog-post.html

RAJEEV SAMPATH said...

//// தமிழ் நாட்டில், உண்மையான நல்ல தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை - சாதுரிய வார்த்தைகளால், ஊடக கவர்ச்சியால், சமூக பிரிவினைவாத அரசியலால் தானே நிரப்பியாதாக எண்ணிக் கொள்ளும் நபரைப் பற்றியும், அதில் ஏமாந்து மயங்கும் தொண்டர்கள் பற்றியும் ஒரு எடுத்துக் காட்டாக இந்த பதிவு நிலைத்திருக்க வேண்டும்

பரம்ஸ்

நிதானம் இழந்து, இகழ்ந்து பின்னூட்டம் இடுபவர்கள் மு.க. வின் சாதுரிய வார்த்தைகளை பயன்படுத்தவும், அந்த ஒரு திறனையாவது தொண்டனாக இருந்ததின் பயனால் வளர்த்திக் கொள்ளவும்

////

Above comment is from Kuzhazhi's old post of birth day greetings to Dr.MK.

Though I have known Params as Brahmin and anti-minority RSS minded guy, the above comment was very nice and made me think about its truthfulness which we ourselves tend to agree today..

மாயவரத்தான் said...

//This came from you bottom of the heart//
பல்லாண்டு வாழ்க என்று அன்றும் எழுதினேன் அன்றும் அடிமனதிலிருந்து தான் எழுதினேன்.... இன்று அடிவயிறு எரிந்து எழுதினேன்

http://kuzhali.blogspot.com/2006/11/blog-post.html//

Lol.

அப்போ பா.ம.க. இவருக்கு கூஜா தூக்கிச்சு. ஆதரிச்சீங்க. இப்போ ஓடிடிச்சு. எதிர்க்கிறீங்க.

அதுக்கு போலியா ஒரு சாக்கு தேவைப்படுது!

சூப்பரு!

மாயவரத்தான் said...

கூடவே இந்த வரியையும் சேர்க்கவும்..

மரம் வெட்டியும் ஓடிப் போனான்.. ஓடிப் போனான்.

அதனால் தான் இந்தக் கவிதை!

குழலி / Kuzhali said...

//அப்போ பா.ம.க. இவருக்கு கூஜா தூக்கிச்சு. ஆதரிச்சீங்க. இப்போ ஓடிடிச்சு. எதிர்க்கிறீங்க.

அதுக்கு போலியா ஒரு சாக்கு தேவைப்படுது!

சூப்பரு!
//
மாயவரத்தான் பாமக கூஜா தூக்குனா நான் ஏன் கலைஞரை வாழ்த்தி எழுதனும்? நேரா மருத்துவர் இராமதாசையே வாழ்த்தி எழுதிட்டு போறேன்... என்னய்யா காமெடி செய்றீங்க? ஏம்பா பாமக கூட்டணியில் இருக்கு அப்படின்னா பாமக காரனெல்லாம் கலைஞர் வாழ்கன்னு கத்தனுமா என்ன?

கலைஞரை திட்டினாலும் கூட உங்கள் கடுப்பு என்ன என்று நன்றாக புரிகின்றது :-) தற்போதைய கலைஞர் தமிழ் மக்களின் ஒடுக்கப்ப்ட மக்களின் போராட்டத்திற்கு பயன்படாமல் போய்விட்ட ஒரு துருபிடித்த போர்வாள்... ஏற்கனவே களம் கண்ட போர்வாள் என்பதற்காக துருபிடித்த போர்வாளை தூக்கி கொண்டு போருக்கு போகமுடியுமா? அதான் போர்வாளை தூக்கி போட்டுவிட்டு புதிய போர்வாளை தேடுகிறோம்... உங்களுக்கு துருபிடித்த போர்வாள் இருந்தால் தான் நல்லதோ?

சோழன் கொடி said...

நல்லது செய்யும் ஆதரிக்கிறது, கெட்டது செய்யும் போது எதிர்கிறது நடுநிலையாக இருக்கிறோம் என்பதை காட்டுகிறது