பிரபல பதிவர்களுக்கு சமர்ப்பணம்
"டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலைடா" என்று வரும் இடத்தோடு இந்த வீடியோவை நிறுத்த ஆசைப்பட்டேன், ஆனால் அதையும் தாண்டி சில காமெடி வருது எஞ்சாய்ய்ய்ய்ய்ய்....
லேபிள்: புனைவு
கடலூர் காட்டானின் களத்துமேடு...
எமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...
"டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலைடா" என்று வரும் இடத்தோடு இந்த வீடியோவை நிறுத்த ஆசைப்பட்டேன், ஆனால் அதையும் தாண்டி சில காமெடி வருது எஞ்சாய்ய்ய்ய்ய்ய்....
லேபிள்: புனைவு
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Monday, May 31, 2010
1 பின்னூட்டங்கள்
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் வெற்றிபெற்ற திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் தற்போது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Tuesday, May 25, 2010
13
பின்னூட்டங்கள்
குறிசொல்: மணற்கேணி பதிவர் சந்திப்பு
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர்.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, May 21, 2010
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: மணற்கேணி வெற்றியாளர் கலந்துரையாடல்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Monday, May 17, 2010
9
பின்னூட்டங்கள்
குறிசொல்: முத்துக்குமார்
தமிழ் வலைப்பதிவரும் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் மற்றும் பல இடங்களிலும் இணையப்பயிலரங்கு நடத்தி வருபவருமான முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் சிங்கப்பூருக்கு மே15,16 களில் வருகை புரிகின்றார்... மேலும் கிராமத்து சூழல், பாடல்கள் மற்றும் தமிழ் சார்ந்த, மண் சார்ந்த விசயங்களில் ஆராய்ச்சிகள் செய்தும் எழுதியும் வரும் திரு இரத்தின புகழேந்தி அவர்களும் சிங்கப்பூர் வருகின்றார்.
இவர்களுடனான ஒரு கலந்துரையாடல் வரும் ஞாயிறு மாலை 6:30 மணியளவில் இலக்கம் 42,கேம்ப்பல் லேன் என்ற முகவரியில் உள்ள மருதப்பர் உணவகத்தில் நடைபெற உள்ளது... வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
இது தொடர்பாக என்னை தொடர்புகொள்ள +65 81165721 என்ற எண்ணில் அழையுங்கள்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Thursday, May 13, 2010
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: இரத்தின புகழேந்தி, முனைவர்.மு.இளங்கோவன்
இது திருமணங்கள் நிறைய நடைபெறூம் நேரம், புதிதாக திருமணம் ஆன / ஆகப்போகும் தம்பதியர்கள் ஹனிமூன் கொண்டாட கிளம்புவார்கள் அதனால் உங்களுக்கான சில சின்ன சின்ன டிப்ஸ்கள், இது இரண்டாம் ஹனிமூன் கொண்டாடுபவர்களுக்கும் பொருந்தும்
தேனிலவு என்பது திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான, சுவாரசியமான ஒன்று ஒரு முறை தவறவிட்டால் அடுத்த முறை செகண்ட் ஹனிமூன் வேறு அனுபவங்களை தான் தருமேயொழிய முதல் தேனிலவு அனுபவத்தை தராது... அலுவலக வேலை உடனே போக வேண்டும் அது இது என்று எத்தனை நெருக்குதல்கள் வந்தாலும் முதல் தேனிலவை மட்டும் தவறவிடாதீர்கள்.
நாங்க சின்ன பசங்களாக இருந்த போது திருமணம் முடிந்த உடன் அந்த ஜோடியுடன் மொத்த குடும்பமுமே மெட்டேடார் வேன் எடுத்துக்கொண்டு 10 நாட்கள் கோவில் கோவிலாக சுத்துவார்கள் இப்பொது அந்த திருமண ஜோடிகளை நினைத்தால் பாவமாக இருக்கின்றது...ம் அவங்க கொடுத்துவச்சது அவ்வளவு தான்...
தேனிலவை உள்ளூரிலோ அல்லது உங்களுக்கு மிக மிக பழக்கமான ஊரிலோ வைக்காதீர்கள், தேனிலவு என்பது என்னமோ வெறும் அறைக்குள் நடக்கும் அந்தரங்கம் மட்டுமல்ல, அது துணையின் கைபிடித்து நடப்பது, உணவு உண்பது, வள வளவென்று பேசுவது என உங்களின் எல்லா இனிமையான பொழுதுகளும் அடக்கம், அந்த நேரத்தில் உள்ளூரிலோ அல்லது பழக்கமான இடத்திலோ தேனிலவு கொண்டாடினால் உங்களுக்கு திருமணம் முடிந்ததை அறியாத ஒருவர் உங்கள் தந்தையிடமே சென்று உங்க பையன் ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருக்கானே என்னா விசயமென கேளுங்க என்பார்.
தேனிலவில் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இரண்டு விசயங்கள் Feel Free and Feel Safe... உங்களுடைய பிரைவசி(அந்தரங்கம்) மற்றும் உங்களுடைய பாதுகாப்பு.தேனிலவுக்கு போகும் வலைப்பதிவர்கள், வேலை வேலை என அலையும் வேலை பைத்தியங்கள் எல்லாம் முதலில் துறக்க வேண்டியது லேப்டாப் மற்றும் இணையம், அவசர தொடர்பு தவிர வேறெதற்க்கும் கைத்தொலைபேசியை திறந்து கூட பார்க்காதீர்கள்...
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Tuesday, May 11, 2010
12
பின்னூட்டங்கள்
குறிசொல்: Honeymoon package tours, Honeymoon trip tips
மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் லாபி செய்து தொலைத்தொடர்பு துறை பெற்றாராம், இது தொடர்பாக ராசா மற்றும் நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது, சரி லாபி செய்து பெற்றதாகவே இருக்கட்டும் ஆனால் கார்ப்பரேட் லாபிக்கு அடிபணிந்து பதவி கொடுத்த சோனியாவும், நலிந்த வீக்கான பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரசிடமும் தான் இதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும்.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Saturday, May 08, 2010
17
பின்னூட்டங்கள்
குறிசொல்: A.Raja Nira Radia tape