மணற்கேணி வெற்றியாளர்களுடன் இரண்டு நிகழ்ச்சிகள் தொகுப்பு

சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் வெற்றிபெற்ற திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் தற்போது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.


சிங்கை வலைப்பதிவர்களின் பதிவுகளின் தொகுப்பு புத்தகமாக "மணற்கேணி" என்ற பெயரில் தமிழ் அலை இசாக் மூலம் அச்சிடப்பட்டு கேபிள் சங்கர் அவர்கள் அந்த புத்தகங்களை மே 21 இரவு சென்னை விமான நிலையத்தில் வெற்றியாளர்களிடம் தந்துதவினார்.

கீழுள்ள படம் இடமிருந்து வலம் தேவன்மாயம், தருமி, பிரபாகர், வெற்றிக்கதிரவன் எ விஜயபாஸ்கர்,முகவை ராம், குழலி, ஜெகதீசன், ஜோ மில்டன் மற்றும் கோவி.கண்ணன்

மே 22 காலை 6 மணி அளவில் திரு.தருமி மற்றும் பிரபாகர் சிங்கப்பூர் வானூர்தி நிலையம் வந்திறங்கினர், காலை 8 மணியளவில் திரு.தேவன்மாயம் அவர் மனைவியுடன் வந்திறங்கினார், சிங்கை வலைப்பதிவர்கள் அவர்களை வரவேற்று தங்குமிடம் அழைத்து சென்றனர்.

மே22 மாலை 5:00 மணிக்கு சிங்கப்பூர் அங்மோக்கியா நூலகத்தின் தக்காளி அறையில் சிங்கப்பூர் "வாசகர் வட்டம்" சார்பில் கலந்துரையாடல் மற்றும்
கட்டுரைகள் மீதான திறனாய்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, சிங்கை வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர் வட்டம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டம் பற்றி தனியாக விவரமாக பதிவிடுகிறோம்.

(கீழுள்ள படம் BBQ ஆரம்பிக்கும் முன் சுத்தமாக உள்ள அடுப்பு)
மே 23 அன்று மாலை 4:30 மணியளவில் வெஸ்ட்கோஸ்ட் பார்க் (West coast Park) BBQ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஓரிருவர் தவிர கிட்டத்தட்ட சிங்கப்பூரின் அனைத்து வலைப்பதிவர்களும் கலந்து கொண்டனர் ஜெகதீசன், கோவி.கண்ணன், கிஷோர், சிவா, டொன்லீ மற்றும் சிலர் BBQ விற்க்கு தேவையான பொருட்களுடன் வந்து ஆரம்பித்தனர், முதலில் கிழங்கு சோளம் , காலிஃபிளவர் வகைகள் சுட்டு உண்ணப்பட்டன அதன் பின் சிங்கை நாதன், விஜய் ஆனந்த், நிஜமா நல்லவன் பாரதி மூவரும் BBQ கோழி கறியுடன் வந்து சேர்ந்தனர்...

கீழுள்ள படம் சிவா மும்மரமாக கோழி வறுத்தல்
தம்பி கிஷோர், சிவா, டொன்லீ,வெற்றிக்கதிரவன் மற்றும் பலர் BBQ வறுத்து தந்தனர்








கீழுள்ள படம் ரோஸ்விக் சுடச்சுட பதிவிடுதல்
ரவிச்சந்திரன், அறிவிலி ராஜேஷ், முகவை ராம், ஜோசப் பால்ராஜ், ஜோ மில்டன் மற்றும் அனைவரும் வெற்றியாளர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர், தருமி அவர்கள் அரசியல் பற்றி ஏன் தற்போது எழுதுவதில்லை என்று கேட்டார், ரவிச்சந்திரன் சீனா வளர்ச்சி பற்றி நேரடியாக அறிந்ததை பகிர்ந்து கொண்டார், கல்வி, அரசியல் என போய்க்கொண்டிருந்தது, நமது வெற்றியாளர் பிரபாகர் பல நெடுந்தொடர்களுக்கும் குறும்படங்களுக்கும் இசையமைத்தவர் என்பதால் இசைப்பற்றி பேசும் போதெல்லாம் தகவல்கள்கள் மற்றும் சிறப்பு செய்திகளால் நம்மை வியப்படைய வைக்கிறார்.



வெற்றியாளர்கள் சிங்கப்பூர் பதிவர்களுக்கு கிருஷ்ணா இனிப்புகள் ஊரிலிருந்து வாங்கிவந்தனர், மேலும் வெட்டிவேரால் ஆன பிள்ளையார் உருவம் மற்றும் சாவிக்கொத்துகளை சிங்கை பதிவர்களுக்கு வழங்கினார்கள், குழுப்படம் எடுத்துக்கொண்டோம்.

(கீழுள்ள படம் BBQ முடிந்த பின் நாங்கள் சுத்தம் செய்த அடுப்பு)

இது தான் தலைப்பு இது பற்றி பேச வேண்டும் என்றில்லாமல் இரவு 9:00 வரை பூங்காவில் இருந்தோம், பின் அப்படியே வெளியேறி மேலும் அரை மணி நேரம் பேருந்து நிறுத்தத்தில் பேசி பின் அவரவர்கள் இருப்பிடம் அடைந்தோம்.

13 பின்னூட்டங்கள்:

said...

பகிர்வுக்கு மகிழ்ச்சிங்க....

said...

:)

said...

//மேலும் வெட்டிவேரால் ஆன பிள்ளையார் உருவம் மற்றும் சாவிக்கொத்துகளை சிங்கை பதிவர்களுக்கு வழங்கினார்கள், குழுப்படம் எடுத்துக்கொண்டோம்.//

:)

வெட்டிவேரில் பிள்ளையார் செய்ய முடியாது. குளிர்பானம் தான் செய்ய முடியும். அது வெள்ளை எருக்கு பிள்ளையார்

said...

:)

said...

//பகிர்வுக்கு மகிழ்ச்சிங்க....
//
ஞானசேகர் அண்ணே எல்லோரையும் போட்டோ எடுத்த உங்க போட்டோ இல்லையே நீங்களும் இருப்பது போன்ற ஒரு போட்டோவை கொடுங்க...

//வெட்டிவேரில் பிள்ளையார் செய்ய முடியாது. குளிர்பானம் தான் செய்ய முடியும். அது வெள்ளை எருக்கு பிள்ளையார்
//
அட ஆமாங்க...

said...

3 பொட்டி நிறைய ஐஸ் இருந்துச்சே ..என்னய்யா பண்ணுனீங்க? :)

said...

பள்ளிக்கூட பிள்ளை ஒப்பிக்கிற மாதிரி இருக்கு !!!

said...

போட்டோஸ் சூப்பர்ங்க...

said...

கமெண்டு கமெண்டு ?

said...

//பள்ளிக்கூட பிள்ளை ஒப்பிக்கிற மாதிரி இருக்கு !!!
//
மாம்ஸ் வரலாறு முக்கியம் அப்படிங்கற நோக்கத்தில் எழுதிய பதிவு அதான் :-(

said...

//3 பொட்டி நிறைய ஐஸ் இருந்துச்சே ..என்னய்யா பண்ணுனீங்க? :)
//
ஜோ அதெல்லாம் ஊற்றிதான் நெருப்பை அணைத்தது

said...

//போட்டோஸ் சூப்பர்ங்க...
//
பட்டாப்பட்டி நீங்களே இப்படி சொல்லலாமா? வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்துட்டு குரூப்லயே இருந்துக்கிட்டு இப்படி பட்டாப்பட்டியா கமெண்ட்டு போட்டிருக்கிங்க... சரி வெளியூர்காரர் எங்கே?

said...

நல்ல தொகுப்பு.....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்