தேனிலவு(ஹனிமூன்) கொண்டாட கிளம்புறிங்களா? சில டிப்ஸ்



இது திருமணங்கள் நிறைய நடைபெறூம் நேரம், புதிதாக திருமணம் ஆன / ஆகப்போகும் தம்பதியர்கள் ஹனிமூன் கொண்டாட கிளம்புவார்கள் அதனால் உங்களுக்கான சில சின்ன சின்ன டிப்ஸ்கள், இது இரண்டாம் ஹனிமூன் கொண்டாடுபவர்களுக்கும் பொருந்தும்

தேனிலவு என்பது திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான, சுவாரசியமான ஒன்று ஒரு முறை தவறவிட்டால் அடுத்த முறை செகண்ட் ஹனிமூன் வேறு அனுபவங்களை தான் தருமேயொழிய முதல் தேனிலவு அனுபவத்தை தராது... அலுவலக வேலை உடனே போக வேண்டும் அது இது என்று எத்தனை நெருக்குதல்கள் வந்தாலும் முதல் தேனிலவை மட்டும் தவறவிடாதீர்கள்.

நாங்க சின்ன பசங்களாக இருந்த போது திருமணம் முடிந்த உடன் அந்த ஜோடியுடன் மொத்த குடும்பமுமே மெட்டேடார் வேன் எடுத்துக்கொண்டு 10 நாட்கள் கோவில் கோவிலாக சுத்துவார்கள் இப்பொது அந்த திருமண ஜோடிகளை நினைத்தால் பாவமாக இருக்கின்றது...ம் அவங்க கொடுத்துவச்சது அவ்வளவு தான்...


தேனிலவை உள்ளூரிலோ அல்லது உங்களுக்கு மிக மிக பழக்கமான ஊரிலோ வைக்காதீர்கள், தேனிலவு என்பது என்னமோ வெறும் அறைக்குள் நடக்கும் அந்தரங்கம் மட்டுமல்ல, அது துணையின் கைபிடித்து நடப்பது, உணவு உண்பது, வள வளவென்று பேசுவது என உங்களின் எல்லா இனிமையான பொழுதுகளும் அடக்கம், அந்த நேரத்தில் உள்ளூரிலோ அல்லது பழக்கமான இடத்திலோ தேனிலவு கொண்டாடினால் உங்களுக்கு திருமணம் முடிந்ததை அறியாத ஒருவர் உங்கள் தந்தையிடமே சென்று உங்க பையன் ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருக்கானே என்னா விசயமென கேளுங்க என்பார்.

தேனிலவில் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இரண்டு விசயங்கள் Feel Free and Feel Safe... உங்களுடைய பிரைவசி(அந்தரங்கம்) மற்றும் உங்களுடைய பாதுகாப்பு.

தேனிலவுக்கு போகும் வலைப்பதிவர்கள், வேலை வேலை என அலையும் வேலை பைத்தியங்கள் எல்லாம் முதலில் துறக்க வேண்டியது லேப்டாப் மற்றும் இணையம், அவசர தொடர்பு தவிர வேறெதற்க்கும் கைத்தொலைபேசியை திறந்து கூட பார்க்காதீர்கள்...

1) திருமணத்திற்க்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே போகவேண்டிய இடத்த முடிவு பண்ணிடுங்க.

2) தேனிலவுதான அதுனால கொஞ்சம் கஞ்சத்தனம் பாக்கம செலவு பண்ணி நல்ல ரூம் புக் பண்ணுங்க. விலை கம்மியா புக்பண்ணினா சுகாதரக்குறைவாத்தான் இருக்கும், இல்லாட்டி வசதிகள் குறைவாகத்தான் இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஆலப்புழை(குமரகம்) மாதிரியான படகு வீடுகளுக்கு போகின்றீர்கள் என்றால் ஒரு படுக்கை அறை அல்லது இரு படுக்கை அறை கொண்ட தனி படகு புக் செய்யுங்கள், விலை மிகக்குறைவாக இருக்கிறதே என்று பேக்கேஜ் தருபவர்கள் பல நேரங்களில் ஒரே படகில் உள்ள அறைகளில் ஒன்றை உங்களுக்கு தந்துவிடுவார்கள் இதனால் உங்களுக்கு தனி அறை கிடைத்தாலும் ஒரே படகை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும், இதனால் உங்கள் ப்ரைவசி கெடும்.

3) முடிஞ்ச அளவுக்கு நீங்க தங்குற இடம் நகரத்துகுள்ளேயோ அல்லது நகர எல்லைக்கு உள்ளேயோ இருக்கும் படி பாத்துக்கோங்க. மிகத்தனிமையான எங்கோ ஒரு ஆள் நடமாட்டமேயில்லாத இடங்களில் தங்காதீர்கள்.

4) நீங்க தங்கும் ஹோட்டலின் தொலைப்பேசி எண்களை குறித்து வைத்து கொள்ளுங்கள், அதை ஊரிலும் தெரிவித்து விடுங்கள், கைத்தொலைபேசி வேலை செய்யவில்லையென்றாலோ சிக்னல் கிடைக்கவில்லையென்றாலோ ஏற்படும் தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.

5) பக்கத்தில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

7) மலைபகுதிக்கு தேனிலவு செல்பவர்கள், சூழ்நிலைக்கு தக்கவாறு ஆடைகளை கொண்டு செல்லுங்கள்.

8) மலைப்பாதைகளில் தனிமையை தேடி தனியாக செல்லவேண்டாம்.

9) இருட்டும் வேளைகளில் வெளியே செல்வதை முடிந்த அளவிற்க்கு தவிர்த்து விடுங்கள்.

10) மலைவிளிம்புகளில் நின்று சாகசம் செய்வதை (புகைப்படம் எடுப்பதை ) தவித்து விடுங்கள்.

11) பயணத்தில் புதிய நபர்களை சந்திக்க நேர்ந்தால் சீக்கீரம் பேச்சை முடித்து விடுங்கள்.

12) மிகவும் முக்கியமானது விலை உயர்ந்த பொருட்களையோ அல்லது நகைகளையோ அறவே தவிர்த்துவிடுங்கள். ஒரு சிறிய பொருள் தொலைந்தாலும் செண்டிமெண்ட்டாகவும் வருத்தம் ஏற்பட்டு ஹனிமூன் மூடையே கெடுத்துவிடும்

13) சில தேவையான மருத்துகளையாவது கைவசம் வைத்திருப்பது நல்லது, அதே போல கொஞ்சமாவது உலர் உணவுகள் பிஸ்கெட், ப்ரெட் போன்றவைகளை வைத்திருப்பதும் நல்லது.

14) நீங்கள் தேனிலவு செல்ல ஏற்ப்பாடு செய்து தரும் நிறுவனம் நல்ல நிறுவனமா அவர்களின் சேவைகள் என்ன என்ன , எத்தனை வருடமாக தொழில் செய்கிறார்கள், முதலில் அவர்கள் நம்பிகையானவர்களா என்றும் ஆராய்ந்து அதன்பின் அவர்களிடம் புக் செய்யுங்கள்

15) சிறிய சிறிய ஏற்பாட்டு குறைபாடுகளும் உங்களின் ஹனிமூன் மூடை கெடுத்துவிடும் என்பதால் நம்பிக்கையான, தெரிந்த நிறுவனங்கள் வழியாக ஹனிமூன் புக் செய்யுங்கள். முக்கியமாக ஏதேனும் ஏற்பாட்டு குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் அவர்களால் செய்து தர இயலுமா என்று பாருங்கள்

16) வெளிநாடுகள் அல்லது சுற்றுலா தளங்களில் ஹனிமூன் கொண்டாடுபவர்கள் கவனிக்க வேண்டியது, எல்லா டூரிட்ஸ் அட்ராக்சன் இடங்களையும் பார்க்க வேண்டுமென காலையிலிருந்து நள்ளிரவு வரை சுற்றோ சுற்றென்று சுற்றாதீர்கள், ஆமாம் நீங்கள் காசு செலவழித்து தான் வந்திருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வந்திருப்பது தேனிலவுக்கு என்பதை மறக்காதீர்கள், சுற்றுங்கள் ஆனால் களைப்படைந்து விழும் வரை சுற்றாதீர்கள். நிறைய நிறைய கவர் செய்ய வேண்டுமென்று சுற்றாதீர்கள், மிக நெரிசலான இடங்களை தவிர்த்து அமைதியான இடங்களை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக மலேசியா வந்தால் பெட்ரோனஸ் டவர் கீழ் நின்று போஸ் கொடுப்பதற்காக சுற்றுவதை விட தியோமென் தீவு, லங்காவி, ஜென்டிங் ஹைலேண்ட் என்று சற்று ரிலாக்ஸ் ஆக இருங்கள்...

17) ஹனிமூன் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பதை ஓரளவு முன்பே தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தயார் செய்யுங்கள்.

18) நண்பர்களுக்கு திருமணம் ஆகின்றதா? அவர்களுக்கு மறக்க முடியாத பரிசு தரணும் என நினைக்கின்றீர்களா? அவர்களுக்கு ஹனிமூன் பேக்கேஜ் ஒன்றை திருமணப்பரிசாக புக் செய்து தாருங்கள்.

இன்னும் ஒரே ஒரு டிப்ஸ் பாக்கி இருக்கு, வெளிப்படையாக இங்கே சொல்லமுடியாது வேண்டுமெனில் என்னை ஜிடாக்கில் தொடர்பு கொள்ளுங்கள் சொல்கிறேன்...

நமது நண்பர் இளையகவி அவர்களின் S-Teamholidays நிறுவனம் பல ஆண்டுகளாக ஹனிமூன் பேக்கேஜ் டூர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள், நீங்கள் முதல் ஹனிமூன் செகண்ட் ஹனிமூன் போவதாக இருந்தாலும் நண்பர்களுக்கு ஹனிமூன் டிரிப் பரிசளிப்பதாக இருந்தாலும் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.

B.Ganeshkumar
+ 91 98949 16242
+ 91 90432 16661
gtalk :- contact.s.teamholidays(at)gmail.com
Yahoo:- steam.holidays(at)yahoo.com
Msn :- steam.holidays(at)hotmail.com

12 பின்னூட்டங்கள்:

said...

:)

said...

நல்ல பிஸினஸ் போல,உங்களுக்கு எவ்வளவு கமிசன்?

இப்படிக்கு

சிங்கபூரில் உள்ள
ராவணன்

said...

//நல்ல பிஸினஸ் போல,உங்களுக்கு எவ்வளவு கமிசன்?

இப்படிக்கு

சிங்கபூரில் உள்ள
ராவணன்
//
:-) உங்களுக்கும் கமிஷன் வேண்டுமா? கம்பெனில சேர்த்து விடறேன் வாங்களேன்

said...

நண்பர் ஒருவருக்கு ஒருமாதம் முன்பு நண்பர் இளயகவி மூலம் மூனார் ஹனிமூன் பேக்கேஜ் ஒன்றில் அனுப்பிவைத்தேன். நண்பன் சொன்னது மிகவும் அருமையாக ஏற்பாடுகள் செய்து இருந்தார் உன் நண்பர் என்று இளயகவி பற்றி சொன்னார்.

said...

நல்ல டிப்ஸ்

முதல்ல கமெண்ட் போட்ருக்க முருவுக்கு ஒரு பேக்கேஜ் புக் பண்ணிருங்க.

(மறக்காம காச அவருகிட்டயே வாங்கிருங்க)

ராவணணுக்கு எல்லாம் பதில் சொல்லி டென்சனாகதிங்கண்ணே.

said...

ங்கொய்யால சத்யா அனானி கமெண்ட்டா போடுற சாட்டிங்குக்கு வா கொல்றேன் உன்னை

said...

//பக்கத்தில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
//

இதுமிக முக்கியம்! சில பல அனுபவஸ்தர்கள் சொல்லிக்கேட்டு இருக்கேன்:))))

தனிசாட்டுக்கு வரவும்:)))

said...

பயனுள்ள தகவல்கள்

நன்றி!

said...

//வால்பையன் said...

பயனுள்ள தகவல்கள் நன்றி!//

வாலு, ரெண்டு குட்டி போட்டும், வயசாகியும் அடங்க மாட்டியா?? :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

குழலி : அருண் தப்பா நெனைக்க மாட்டார், பின்னூட்டத்தை ரிலீஸ் பண்ணலாம்.

said...

//வாலு, ரெண்டு குட்டி போட்டும், வயசாகியும் அடங்க மாட்டியா?? :)//

ரெண்டு புள்ள இருக்கலாம், ரெண்டு பொண்டாட்டி இருக்கக்கூடாது! என்ன கன்ஃபியூஸ் உலகமடா இது!

said...

மைண்ட்ல இருக்குங்க... யூஸ் பண்ணிக்கிறேன்....

said...

அப்பாவி முரு said...

:)
/////////////

வெட்க புன்னகையோ?
??
!?!