மத்திய மந்திரிசபை லாபி ராசா, கருணாநிதி குடும்பம் மர்மம் உடைந்ததா?

மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் லாபி செய்து தொலைத்தொடர்பு துறை பெற்றாராம், இது தொடர்பாக ராசா மற்றும் நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது, சரி லாபி செய்து பெற்றதாகவே இருக்கட்டும் ஆனால் கார்ப்பரேட் லாபிக்கு அடிபணிந்து பதவி கொடுத்த சோனியாவும், நலிந்த வீக்கான பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரசிடமும் தான் இதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டார், நீரா ராடியாவிடம் பேசியது அவரா இல்லையா என்ற கேள்வி, பதட்டப்படாமல் சொல்லலாம், மேலும் அவரின் ஆட்கள் பத்திரிக்கையாளர்களை வீட்டுக்கு பாதுகாப்பா போக மாட்டே என்று மிரட்டும் அளவுக்கு இறங்கியிருக்கின்றார்கள்...

ஆ.ராசா ரொம்பத்தான் மோசம் ஊழல், லாபி செய்யறது என மத்ததெல்ல்ல்ல்ல்ல்ல்லாம் அவாங்ககிட்ட இருந்து கத்துக்கிட்ட ராசா இன்னும் கோபத்தை அடக்கி சிரிச்சிக்கிட்டே பதில் சொல்ல கத்துக்கலை... ஆமா ஆங்கில மீடியா ஆட்கள் தானே நோண்டுறாங்க விகடன், நக்கீரன் குமுதமெல்லாம் என்னா ஆனாங்க... ஓ சாரி எல்லாம் கலைஞர் பாராட்டுவிழாவுக்கு போயிட்டாங்களா?

நீராராடியா ஆ.ராசா உரையாடல்

A.Raja : My case is clear a?

Nira Radia: your is cleared yeah, your case is cleared last night only, no butuuuu what is happening with daya

A.Raja : aang?

Nira Radia: Daya?

A.Raja: Then the rest of the thing is textile or fertilizers

Nira Radia: Not for daya

A.Raja: either one

Nira Radia: But alagiri or daya only one can come a?

A.Raja: No two, two can come

Nira Radia: both

A.Raja: Balu will be problem I hope

Nira Radia: I think it will be difficult for the leader to justify three family members.

A.Raja: ha ha , ya but everybody knows


மூன்று பேர் மினிஸ்டரியில், ஆ.ராசா, அழகிரி, மாறன்... அழகிரி மாறன் ஓகே கருணாநிதி குடும்பம், இதுல ஆ.ராசா எப்படி குடும்பத்துல ஒருத்தர்? கருணாநிதி சொல்றது போல கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகமா? அல்லது ஒரு வேளை நாஞ்சில் சம்பத்தை கேட்டா விலாவாரியா சொல்வாரா?

ஏ மக்களே பாருங்கள் எங்கள் தலைவர் கருணாநிதியை குடும்பத்துக்காக செயல்படுகிறார் என்கின்றீர்களே, தனது மகன் அழகிரிக்கும் பேரன் தயாநித்க்கும் எந்த துறை என்பது ராசாவுக்கு முடிவு செய்த பின் தான் என்றால் எப்படி குடும்ப உறுப்பினர்களை நடத்துகிறார் என்று தெரிகிறது.

17 பின்னூட்டங்கள்:

said...

அதுக்குள்ள இவ்வளவு விரைவா பதிவா!?

நெருப்பு நெருப்பா திண்ணா கரி கரியாத்தான் கழியனும்!

வினை விதைத்தவன் வினை அறுக்கட்டும்!

said...

ஆமா ஆங்கில மீடியா ஆட்கள் தானே நோண்டுறாங்க விகடன், நக்கீரன் குமுதமெல்லாம் என்னா ஆனாங்க... ஓ சாரி எல்லாம் கலைஞர் பாராட்டுவிழாவுக்கு போயிட்டாங்களா?
//

நாம யாவாரியிடம் ஒரு பலாப்பழத்த வாங்கியாந்துட்டமுன்னா யாவாரி அந்த பலாப்பழத்த நோண்ட வரமாட்டான், அவனுக்குத் தான் காசு கொடுத்துட்டமே!

said...

DAMN Raja...DAMN dmk and congress..

said...

கோவைல ஒரு அம்மினி ராசாவோட பேரல்லல் மந்திரியா செயல்படறதா விகடன்ல விடியோ எல்லாம் போட்டாங்களே.. அது என்னாச்சி? நார்த்ல ஒண்ணு.. சவுத்ல ஒண்ணா? :)

said...

it is colored with politics but who know which is true. thanks for sharing.

said...

நாறுதுப்பா கருமம்!!!

said...

நாருதுப்பா கருமம் !!!

said...

தமிழனென்றால் தலையில் கொதிக்கும் "தாரை" ஊற்றிக்கொண்டு அலையும் வட இந்திய மீடியா நாய்கள் குவாத்ரோச்சி யின் மீதான வழக்கை இல்லாதொழித்தது ஓங்க தயவில தான்னு சொல்லுறாங்களே உண்மையான்னு கேட்கட்டும். ராசா ஒரு கிராமத்து சேரிக்காரன் என்பது தான் அவாள்களின் பார்வை. நாங்க மட்டுமென்ன இங்க என்பது போயல தான் குழலி மற்றும் பின்னூட்டும் பத்தி வெட்டி பாதி சாரதியின் பார்வையும் போல தெரியாமலா இருக்கிறது!

said...

ஹய்ய்யா அனானி வந்துட்டாருடோய்... ஏ... இதெல்லாம் பார்ப்பன சதி, வட இந்தியர்கள் தமிழர்கள் மீது உள்ள வெறுப்பின் வெளிப்பாடு வடக்கின் சதி... என்றெல்லாம் பேசி பேசியே தானடா வெண்ணைங்களா ஏமாத்துனிங்க... அவனாவது ஏமாத்தி கொள்ளையடிக்கிறான் அவனுக்கு சொம்பு தூக்குற உனக்கு என்ன மயிரா கிடைக்குது.

எல்லா மந்திரிகளும் தன் குடும்பத்துக்கு, கொத்து கொத்தா தமிழர்கள் சாகும்போதும் பேரம் நடத்திய அவனுங்களை மக்கள் செருப்பால் அடிக்கும் நாள் வந்தா தான் விடியும்

said...

//ஒரு வேளை நாஞ்சில் சம்பத்தை
கேட்டா விலாவாரியா சொல்வாரா//

இது நெத்தியடி தலைவரே

said...

//அவனாவது ஏமாத்தி கொள்ளையடிக்கிறான் அவனுக்கு சொம்பு தூக்குற உனக்கு என்ன மயிரா கிடைக்குது.//

இன்னும் ஸ்ட்ராங்கா கேளுங்க.

said...

//கொத்து கொத்தா தமிழர்கள் சாகும்போதும் பேரம் நடத்திய அவனுங்களை மக்கள் செருப்பால் அடிக்கும் நாள்//

வரும் ஆனா வராது :(

அன்புடன்
சிங்கை நாதன்

said...

//உரையாடல் வீடியோ, ஆ.ராசாவின் அடாவடி பார்க்க இங்க அழுத்துங்கள்//

அழுத்தினேன். இரண்டு நிமிடம் பார்த்தேன். சகிக்கவில்லை. அதாவது அந்த பத்திரிகையாளர்களின் அடாவடித்தனம்.

தெருவில் செல்லும் பிச்சைக்காரனை துரத்துகின்றன. பிச்சைக்காரனும் “போ”, என்று சொல்லிப்பார்க்கிறான். நாய்கள் விடவில்லை. கடித்துக் குதறும் சந்தர்ப்பத்துக்காக தொடர்ந்து குரைக்கின்றன. “ஏய்,ஊய்” என்று அதட்டிப்பார்க்கிறான். அப்படியும் குரைப்பதை நிறுத்தவில்லை. மேலும் உக்கிரமாகக் குரைக்கின்றன. பிச்சைக்காரன் அடுத்து என்ன செய்வான். குனிந்து கல்லெடுத்து விட்டெறிவான். பிச்சைக்காரனுக்கு தன் பாதுகாப்பு, உயிர் பிரச்சினை. நாய்களுக்கு தாங்கள் நாய்கள் என்று நிரூபிப்பதில் ஒரு குரூரத் திருப்தி.

ஒருவர் விமானமிறங்கி சென்றுக்கொண்டிருப்பவரை, பொது இடத்தில் வழி மறித்து கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் குதறினால் குற்றமிழைத்த ராஜாவுக்கு மாட்டுமில்லை, குற்றமிழைக்காத குழலிக்குக் கூட எரிச்சல் தான் வரும்.

எங்கோ இருந்து எழுதிய ஒரு அனானினியின் சாதாரண பின்னூட்டத்துக்கு தனியாக அமர்ந்திருக்கும் உங்களால் பொறுமையாக பதில் சொல்ல முடியவில்லை. அவசரமாக சென்றுக்கொண்டிருக்கும் ஒருவரை பொதுஇடத்தில், வழிமறித்து ஒரு கூட்டம் கொத்திக் குதறும் போது அவர் பொறுமை காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீகள்.

நேர்மையானவன், குற்றவாளி, என்பதையெல்லாம் தாண்டி மனிதனுக்கு சில அடிப்படை குணங்கள் உண்டு. தாக்கினால் திருப்பித் தாக்குவது என்ற குணம். அதைத்தான் ராஜா செய்திருக்கிறார். ஒரு பிரஸ் கான்ஃபரண்ஸ் அல்லது ஒரு ஒன் - டு - ஒன் தொலைகாட்சி செவ்வியில் அவர் பொறுமையிழந்து அடாவடித்தனம் செய்திரூந்தால் பிறகு அவரை நையப்புடைக்கலாம்.

நடுத்தெருவில் நிறுத்தி விசாரணை நடத்துவதும், தீர்ப்பளிப்பதும் முறையான ஊடகவியல் அல்ல. தாதாத்தனம்.

இந்திய அரசியல்வாதிகள் அய்யோக்கியர்கள் என்றால், ஊடகக்காரர்கள் குரூரர்கள். சாதாரண குடிமக்கள் குரூர ரசிகர்கள். ஊழல் செய்த ராஜா, அவரை வழிமறித்த தொலைக்காட்சிக்காரகள், அதைக் கண்டு புல்லரிக்கும் நீங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள்.

said...

//
வினை விதைத்தவன் வினை அறுக்கட்டும்!//

அதெல்லாம் அந்த காலம், இப்போதெல்லாம் வினையை அறுத்து விற்று (அவர்களின் மீடியா வழியாக) காசு ஆக்கி விடுவார்கள்

said...

கனிமொழி அமைச்சராகப் போவதாக செய்தி இரண்டு மூன்று நாட்களுக்கு முன் செய்தி கசிந்தது. இப்போது ராஜாவின் பழைய உரையாடல் கசிகிறது. அனேகமாக கனிமொழியை அமைச்சராக்கும் பொருட்டு ராஜாவை ராஜினாமா செய்ய நிர்பந்தப்படுத்தும் சோனியா/கருணாநிதி சூழ்ச்சியாக இருந்தால் வியப்பதற்கில்லை. அடுத்த சில நாட்களில் ராஜாவை ராஜினாமா செய்யச் சொல்கிறார்களா, பிறகு கனிமொழியை அமைச்சராக்குகிறார்களா என்பது தெரிந்துவிடும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா கனிமொழியின் கையாளாக செயல்பட்டார். இப்போது கையாளைத் தூக்கிவிட்டு கனிமொழியையே அந்த இடத்தில் நியமிப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள் புரியும். ராஜா தலித் என்பதால் தாக்குகிறார்கள் என்று கருணாநிதி நீலிக்கண்ணீர் வடிப்பது கூட கபடநாடகம் என்பது புரியும்.

said...

//அழுத்தினேன். இரண்டு நிமிடம் பார்த்தேன். சகிக்கவில்லை. அதாவது அந்த பத்திரிகையாளர்களின் அடாவடித்தனம்.//

ஸ்பெக்ட்ரம் வருமான வரித்துறை பின்னிய பின்னல்.சி.பி.ஐ ஒத்துழைக்கும் பட்சத்தில் அதில் உண்மைகள் வெளி வரக் கூடும்.ஆனால் பயணத்தின் மனநிலையில் ராஜாவை துரத்துவது அவருக்கு எரிச்சலை தருவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

said...

Sir

Do you have any info on this:
http://www.inneram.com/2010111611938/rajas-resignation-and-dmk-vips