சிங்கப்பூரில் மணற்கேணி வெற்றியாளர்களுடன் மே 22 அன்று திறனாய்வு கூட்டம்
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர்.
அரசியல் / சமூகம் பிரிவில் திரு.தருமி அவர்கள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் கட்டுரை முதலிடம் பிடித்தது
தமிழ் அறிவியில் பிரிவில் திரு.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) - தேவன் மாயம் அவர்களும்
தமிழ் இலக்கியம் பிரிவில் திரு.பிரபாகர் அவர்களின் தமிழர் இசை தொடர்பான கட்டுரையும் வெற்றிபெற்றனர்
மணற்கேணி 2009 போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்
வெற்றியாளர்கள் மூவரும் மே22 முதல் மே 29 வரையான நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
நாளை (சனிக்கிழமை மே 22 அன்று மாலை 5மணி அளவில் வாசகர் வட்டத்தில் சிங்கை வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் வெற்றியாளர் கட்டுரைகளின் மீதான திறனாய்வு கலந்துரையாடல் நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் உள்ள பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இடம் : தக்காளி அறை(Tomato Room) அங் மோக்கியா நூலகம்
நேரம் : மாலை 5:00 மணி
நாள் : சனிக்கிழமை, மே 22 - 2010
மணற்கேணி வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு. பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்கின்றனர்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment