அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை திமுகவினரின் நிலபறிப்பு ரவுடியிசம்

ஒவ்வொரு முறை திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவிற்கு ஆதரவாகவும் வைக்கப்படும் ஒரு முக்கிய விமர்சனம் திமுக வந்தால் ரவுடியிசம் தலைதூக்கிவிடுமென்பது, என்னமோ அதிமுகவிலோ பிற கட்சிகளிலோ ரவுடிகளே இல்லாத மாதிரி, அப்போதெல்லாம் எதிர்வாதமாக வைப்பதென்னவோ திமுக காலத்தில் என்கவுண்டர்கள் செய்யப்பட்ட ரவுடிகளின் எண்ணிக்கை அதிமுக காலத்தில் செய்யப்பட்ட என்கவுண்டர்களை விட அதிகம், என்கவுண்டர்கள் மீதான கடும் விமர்சனமிருந்தாலும் திமுகவினர் காலத்தில் ரவுடியிசம் என்று சொல்வதெல்லாம் பார்ப்பன சதி, எட்செட்ரா எட்செட்ரா என நம்பியிருந்தவர்களில் நானும் ஒருவன்.

முதலில் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மீதான நிலபறிப்பு ஆட்கடத்தல் மோசடி வழக்கு, 50 கோடி சொத்தை ஆட்டைய போட நினைத்த அமைச்சர், தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய எதிர்தரப்பு(தகவல்கள் எல்லாம் அவர்கள் எந்த வம்புதும்புக்கும் போகாதவர்களாகவே தெரிகின்றது)அதை தொடர்ந்து அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்ததாக வீரபாண்டி ஆறுமுகம் மீதான நிலபறிப்பு மோசடி , வழக்கு, அதை எதிர்கொள்ள பேரம்பேசப்பட்டது, இரு அமைச்சர்கள் விசயத்தில் எதிர்தரப்பால் மிரட்டல்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போன வாரம் நக்கீரனில் திமுக எம்.எல்.ஏ வும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருமான செங்குட்டுவன் 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை அடியாட்கள் துணையோடு 23 இலட்சத்திற்கு ஆட்டைய போட்டுள்ளார் என குற்றசாட்டு.


வலைப்பதிவிலும் கூட கோ.ராகவன் சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள் அவரது சொந்தக்காரர்கள் நிலத்தை பெரிய இடத்து பேரன்கள் ஆட்டையை போட்டது பற்றி இப்படி எழுதியுள்ளார்
...
சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.

காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.
...


அமைச்சர்கள் 50 கோடி ரூபாய் நிலத்தை ஆட்டைய போட்டால் எம்.எல்.ஏ 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்துள்ளார்கள், இதெல்லாம் கோடி ரூபாய் விசயங்கள் மேலும் அமைச்சர் எம்.எல்.ஏ க்கள் தொடர்பானவை எனவே பத்திரிக்கையில் வந்துள்ளன.

ஆனால் கவுன்சிலர் தொடங்கி இன்னும் ந.செ., கி.செ, வ.செ என திமுகவின் ஏதோ ஒரு 'செ'வை போட்டுக்கொண்டு நடுத்தரவர்கத்தினர்கள் சிறுக சிறுக சேர்த்து ஒரே சொத்தாக இருக்கும் சில இலட்ச ரூபாய் வீட்டு மனைகளை ஆட்டையை போட ஆரம்பித்துள்ளனர், காவல்துறைக்கு சென்றால் கேஸ் கொடுக்க 5,000 ரூபாயில் ஆரம்பித்து ஒரு 20ஆயிரம் ரூபாய் செலவுக்கு பின் திமுக கவுன்சிலர்கள் முன்னிலையில் ஒரு முப்பது பேருடன் கட்டைப்பஞ்சாயத்து நடக்கும், பிறகென்ன கால்வாசிக்கும் குறைவான சொற்ப விலையில் நிலத்தை பறிகொடுத்து அந்த நடுத்தர வர்கத்தினர் மேலும் தொல்லைகள் வராமல் இருந்தால் போதும் என நொந்து வருவார், இவைகள் எல்லாம் எங்கோ கேள்விப்பட்டோ பத்திரிக்கையில் படித்தோ சொல்லவில்லை, எனக்கு தெரிந்த இடங்களிலேயே நடந்துள்ளது. மேற்கொண்டு வேறு தளங்களில் பிரச்சினையை எடுத்து செல்ல உதவ தயாராக இருந்தும் அவர்கள் போதுங்க இதற்கே ரொம்ப பிரச்சினையாகிவிட்டது சனியன் இதோட போனா போதும் என்று அவர்கள் எதற்கும் தயாராக இல்லை.

அரசியல்வாதிகள் அரசு நிலத்தையும் பொறம்போக்கு நிலத்தையும் தான் ஆக்கிரமிப்பார்கள் என்றிருந்தது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பணக்கார தனியார் நிலங்கள், பிரச்சினைக்குறிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது ஆனால் இப்போது கருணாநிதியின் திமுக ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை எந்த வில்லங்கமும் இல்லாமல் பக்கா டாக்குமெண்ட்டுகளோடு இருக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளனர்.

50கோடி சொத்தை 5 கோடி செலவு செய்தாவது காப்பாற்றிடலாம் என்பவர்கள் வழக்கு பத்திரிக்கை என செல்கிறார்கள், 5 இலட்ச ரூபாய் சொத்துக்கு வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த, அதுவும் சத்தம் போட்டு சாபம் கொடுக்க முடியாமல் வாய்க்குள்ளேயும் வீட்டுக்குள்ளேயும் வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த சாதாரண நடுத்தரவர்கத்தின் சேமிப்பு நிலங்களை பிடுங்கி தின்னும் இந்த பிணம் தின்னும் ஈனத்தொழிலுக்கு
இவர்கள் எல்லாம் ஏதாவது -----(Fill in the blanks).

ஆனாலும் என்ன பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவினரின் இந்த ரவுடித்தனத்தையும் மறைக்கலாம் வாங்க....

22 பின்னூட்டங்கள்:

said...

இதுல ஒரு பெரிய கொடுமை என்னன்னா, எல்லா அரசியல்வாதிகளும் இப்படி எதையாவது செஞ்சு பொழப்பை ஓட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...

பா.ம.க உட்பட.....

said...

நிலப்பறிப்பு பற்றி நீங்க சொன்னது எல்லாம் ஓக்கே, இதுல பார்ப்பனியம்/எதிர்ப்பு என்று கொண்டு வந்ததில், பதிவின் நோக்கம் காத்துல பறக்க ஆரம்பிச்சுரும் பாருங்க...

said...

அப்படியே பண்ருட்டிக்கு அப்பால வேல்முருகன் வகையறா போடும் ஆட்டைகளையும் எழுதவும்...பிளீஸ்...

எந்த அதிமுக, திமுக, பாமக, விசி, பிஜேபி, காங்கிரஸ் கண்டாரஓழிகள் ஆட்சிக்கு வந்தாலும், சாரி...மினிமம் எம் சி ஆகிவிட்டாலே போதும். அவர்கள் போடும் ஆட்டைகள் அசாதாரணம். அதனால லூஸ்ல விடுங்க சார்...

அப்புறம், இந்த தடவை எப்படியும் காங்கிரஸ், திமுக, பாமகவுக்கு எலெக்ஷன்ல இருக்கு ஆப்பு. எந்த கூட்டணில தைலாபுரத்தார் சவாரி?

said...

அடடே நான் பாமக காரனாச்சே, நல்ல வேளை ஞாபகப்படுத்திட்டிங்க...

//அப்புறம், இந்த தடவை எப்படியும் காங்கிரஸ், திமுக, பாமகவுக்கு எலெக்ஷன்ல இருக்கு ஆப்பு. எந்த கூட்டணில தைலாபுரத்தார் சவாரி?
//
ஆமாம் இல்லை, இன்னும் தைலாபுரத்தார் கோபாலபுரமா? இல்லை போயஸ் தோட்டமான்னு சொல்லலையே,

ஓ... அதுக்குள்ள அவசரப்பட்டுட்டேனா? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி தைலாபுரத்தார் போயஸ் தோட்டம் பக்கம் போயிருந்தா இந்த பதிவை போட்டிருக்கலாம், கோபாலபுரத்துல ஜாயிண்ட் அடிச்சிருந்தா போடாம மூடிக்கிட்டிருந்திருக்கலாம் இல்லையா அதுவும் சரிதான்... மாம்ஸ் நல்லா பாரு ஸ்மைலி போடலை...

அப்புறம் பாலா, என்னங்க நாங்கெல்லாம் எல்லாத்தையும் அதுல ஆரம்பிச்சி அதுல தான் முடிப்போம்...

said...

ரவி... எல்லா பரதேசிகளும் இப்படித்தான் மிரட்டல் பிச்சையெடுக்குறானுங்க, இந்த வாட்டி மேட்டர் வேற, இவ்ளோ நாளும் நில ஆக்கிரமிப்பு எல்லாம் அரசு நிலம், பொது நிலம், பொறம்போக்கு, கோயில் நிலம், வில்லங்கமான தனியார் நிலங்கள் என கொஞ்சம் மத்தியதர வர்கத்துக்கும் ஏழைகளுக்கும் பிரச்சினயில்லாம இருந்தது, ஆனால் இப்போ ஒன்னியும் செய்ய இயலாத மிடில் கிளாஸ் மடியில் கைவைச்சிருக்கானுங்க, வில்லங்க நிலத்தை ஆட்டைய போட்டது போக இப்போ பக்கா டாக்குமெண்ட் இருந்தும் ஆட்டைய போடுறானுங்க.... அதான் முக்கிய வித்தியாசம்...

said...

நான் ஒன்னும் சொல்லலை ஷாமியோ! நாம் ஏதாவது சொன்னா இங்கே பின்னூட்டமிடும் பலருக்கு பிடிக்காது அப்புறம் சகிக்கல என்று சொல்லுவார்கள் அப்புறம் நான் டென்ஷன் ஆகனும் அதனால பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடய ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

:(((((((((

said...

யோவ் வீ த பீப்புள் உன்னை யாரு ஓய் இங்க வர சொன்னது? ஏன் எனக்கு ரிவிட் அடிக்கனுமா உம்மால?

said...

என்ன தல பண்ணறது மக்கள் பிரச்சனைன்னு எங்க பார்த்தாலும் தானா உள்ள வந்திடறேன் ...

ஐ அம் ஷாரி

said...

குழலி,
இப்போது மிடில்கிளாஸ் மற்றும் ஏழைகளின் நிலங்கள் மீது கட்சிகளின் பார்வை திரும்பவில்லை. 25, 30 வருடங்களுக்கு முன்பே, எனக்குத் தெரிந்து ஆரம்பித்துவிட்டது. வேண்டுமானால், விகிதம் குறைவாக இருந்திருக்கலாம். பணம் என்று வந்துவிட்டால், ஏழை - பணக்காரன், கோயில் நிலம் போன்ற அம்சங்கள் அடிபட்டு போய்விடும்.

நான் சிறுகுழந்தையாக இருந்த போது எனது அம்மாவின் நகைகளை விற்று ஒரு சிறுநிலம் வாங்கியிருந்தோம். அதை பஞ்சாயத்துவைத்து அன்றைய அதிமுக அமைச்சர் (இன்றைய திமுக அமைச்சர்) வாங்கவில்லை. ஆனால், மறைமுகமாக எங்களையே அடிமாட்டு விலைக்கு விற்க வைத்துவிட்டார். சுற்றியுள்ள அனைத்து பிளாட்டுகளையும் வாங்கிவிட்டார். அதாவது, நாங்கள் எங்கள் இடத்துக்கு போகவேண்டுமானால், ஹெலிகாப்டரில்தான் போகவேண்டும். எனது பெற்றோரே சென்று அவரிடம் பத்திரத்தை கொடுத்துவிட்டு அடிமாட்டு விலையை வாங்கிவந்தனர். அதன் சாபத்தையும் வயிற்றெரிச்சலையும் இன்றும் அந்த அமைச்சர் என் அம்மவிடம் வாங்கிகொண்டு இருக்கிறார்(ன்).

இது முடியும் பிரச்சனை அல்ல. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, ஊதிப்பெருக்கப்பட்ட ரியல் எஸ்டேட் போன்றவை நடுத்தரவர்கத்தை துரத்தி அடிக்கின்றன. :-(

said...

எக்ஸ்கியூஸ்மீ..

இந்தப் பதிவைப் போட்டது காட்டான் குழலியா..?

அல்லாட்டி யாராவது மண்டபத்துல எழுதிக் கொடுத்ததை வந்து காப்பி பேஸ்ட் பண்ணிட்டு கமெண்ட்ஸ்களுக்கு மட்டும் பொறுப்பா பதில் சொல்றாரா..?

தைலாபுரத்துக்காரருக்கு இது தெரியுமா..? டேஞ்சராச்சே..

said...

இன்றைக்குத் தமிழ் நாட்டிலே ஒரே இடத்தை எத்தனை பேர் திருட்டுப் பட்டாக்கள் போட்டு விற்கின்றார்கள் என்பது கின்னஸ் பதக்க அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.
இதற்குக் கிராம அதிகாரிகள் முதல்,அரசியலில் உள்ள அத்தனை அசிங்கங்களும்,கட்சி வேறு பாடின்றி உடந்தையாக இருந்து பகல் கொள்ளையடிக்கிறார்கள்.
பணக்காரர்களின் ஆசைக்கும்,அநீதிக்கும் அளவே இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புழல் ஜெயில் கட்டினால் கூட இடம் போதாது இவர்களை அடைக்க.
திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற வரிகள் தான்
முனுமுனுக்க வேண்டியுள்ளது.

said...

பாமக தலைவர் கோ.க.மணியோட சம்பந்தி வலசை சந்திரன் என்ற அதிமுக நபர் 1000 ஏக்கர் நிலத்தை ஆட்டையப் போட்டுள்ளது தெரியுமா?

கோ.க.மணியோட மகன்,மாமனார் குடும்பத்துடன் சிங்கப்பூர்,மலேசியா ஹனிமூன் வந்தது தெரியுமா?

அய்யா ராமதாசுக்கு சிங்கப்பூரில் பினாமி இருப்பது தெரியுமா?

அந்தப் பினாமியுடன் வலசை சந்திரன் தான் ஆட்டயப்போட்ட நிலத்தை விற்பது தொடர்பாக பேசியது தெரியுமா?

அரசியலில் முதல் அரிச்சுவடியே மற்றவர்கள் பொருளை ஆட்டையப்போடுரதுதான்.

கள்ள ஓட்டால்,கடமை,கண்ணியம் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் கழகக்கண்மணிகளுக்கு இதெல்லாம் சாதாரணம்.

வன்முறைக்கு வரைவிலக்கணம் வரைந்த திரு.மு.க.கட்சியினருக்கு இதுவெல்லாம் ஒரு இழுக்கா?

வாழ்க தமிழகம்!வளர்க தமிழர்!(மு.க.)

said...

//பாமக தலைவர் கோ.க.மணியோட சம்பந்தி வலசை சந்திரன் என்ற அதிமுக நபர் 1000 ஏக்கர் நிலத்தை ஆட்டையப் போட்டுள்ளது தெரியுமா?
//
மன்னிக்கவும் தெரியலை, இப்போ தெரிஞ்சிக்கறேன் சொல்லுங்க...//அய்யா ராமதாசுக்கு சிங்கப்பூரில் பினாமி இருப்பது தெரியுமா?
//
தெரியாது... நீங்க சொல்லுங்க யாருன்னு தெரிஞ்சிக்கறோம்.

//அந்தப் பினாமியுடன் வலசை சந்திரன் தான் ஆட்டயப்போட்ட நிலத்தை விற்பது தொடர்பாக பேசியது தெரியுமா?
//
பினாமியையே தெரியது, அப்புறம் எங்கே இது தெரியபோகுது, கொஞ்சம் விலாவரியா சொல்லுங்களேன் தெரிஞ்சிக்கறேன்.

//கோ.க.மணியோட மகன்,மாமனார் குடும்பத்துடன் சிங்கப்பூர்,மலேசியா ஹனிமூன் வந்தது தெரியுமா?
//
யோவ் கடுப்பேத்தாத, தெரியுமா தெரியுமான்னு மத்ததெல்லாம் கேட்ட அது கூட ஓகே... ஹனிமூனுக்கு போனதெல்லாம் தெரியுமா தெரியுமான்னு கேட்கிற, என்கிட்ட சொல்லிட்டா வந்து ஹனிமூன் போறாங்க?

//அரசியலில் முதல் அரிச்சுவடியே மற்றவர்கள் பொருளை ஆட்டையப்போடுரதுதான்.
//
அது சரி..... ஆட்டைய வேணாலும் போடுங்க மாட்டைய வேணாலும் போடுங்க... அரசாங்க சொத்தையோ வில்லங்க இடத்தையோ பொறம்போக்கு நிலத்தையோ என்ன இழவை வேண்டுமானாலும் ஆட்டைய போடுங்க, பாவம் மிடில் கிளாஸ் அவங்களை விட்டுடுங்க...

said...

ஆனாலும் என்ன பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவினரின் இந்த ரவுடித்தனத்தையும் மறைக்கலாம் வாங்க....///

பார்ப்பனீய எதிர்ப்பு திமுகவினரின் ரவுடித்தனத்தை எதிர்க்க மட்டுமே என்று சொன்னதன் மூலம் பெரியாரையே நீங்கள் அவமதிக்கிறீர்கள்.

said...

புதுவையும் விதி விலக்கல்ல.. கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த ரவுடியிசத்தில் இறங்கி விட்டன..

அனேகமாக ஆள் பலமும் அதிகாரமும் இருந்தால் போதும்.. எங்கும் இது நிகழும் போலும்..


- பாதிக்கப்பட்டவன்..

said...

//புதுவையும் விதி விலக்கல்ல.. கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த ரவுடியிசத்தில் இறங்கி விட்டன..
//
புதுவையும் விதிவிலக்கல்ல என்றல்ல, ஆரம்பமே புதுவைதான், திமுக ஜானகிராமன் ஆட்சி காலத்தில் ப்ரெஞ்ச் குடியுரிமை பெற்ற ஆனால் பாண்டியில் வாழாமல் அவ்வப்போது வந்து போகும் சொல்தா பங்களாக்களை போலி பத்திரம் வைத்து ஆக்கிரமிக்க ஆரம்பிச்சது தான் ஆரம்பம், அதற்காக ப்ரெஞ்ச் காலத்திலிருந்த ஒரிஜினல் அதாவது மூல ரெக்கார்டுகளை ரிஜிஸ்டர் ஆபிஸிலிருந்து திருடியது வரை இதற்கு ஆரம்பம் பாண்டிச்சேரிதான்

said...

// மதிபாலா said...
ஆனாலும் என்ன பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவினரின் இந்த ரவுடித்தனத்தையும் மறைக்கலாம் வாங்க....///

பார்ப்பனீய எதிர்ப்பு திமுகவினரின் ரவுடித்தனத்தை எதிர்க்க மட்டுமே என்று சொன்னதன் மூலம் பெரியாரையே நீங்கள் அவமதிக்கிறீர்கள்.
//
அடேடே யாரது மதிபாலாவா? ஓ போனவாரம் சும்மா டமாஷில் திமுக கொள்கைகள் எனஒரு 12 பாயிண்ட் போட்டு தமாஷ் செய்த மதிபாலாவா?

அதெப்படி பதிவு தலைப்பை பார்த்தூட்டு ஜூடானா எப்புடி? எதிப்பவன் எல்லாருக்கும் வழக்கம் போல கலீஞர் கவிதை எழுதற மாதிரியோ பூணுல் போட்டு உடற மாதிரியோ போட்டுடலாம் எனக்கும் என்ன நான் பார்ப்பனன் அல்ல, இல்லைன்னா என்ன அதான் பார்ப்பன அடிவருடி பட்டம் இருக்கே கொடுத்துட்டா போச்சி...

என்னது பெரியாரை நான் கேவலப்படுத்திட்டனா? என்ன கொடுமை மதிபாலா அய்யா?

said...

//என்னது பெரியாரை நான் கேவலப்படுத்திட்டனா? என்ன கொடுமை மதிபாலா அய்யா?
//
என்ன கொடுமை இது குழலி ? ;-)

said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரனமப்பா.. :))

சசிகலா அதிகாரப் பூர்வமாக ஆரம்பித்து வைத்த ”கலாச்சாரம்” இது :))

இதைப் போய் பெரிசா எடுத்துகிட்டு :))

said...

100 100 உண்மைதாங்க ரெண்டு கட்ச்சியும் கொள்ளை அடிக்கிறதுல ஒற்றுமையா இருப்பாங்க

said...

// எனது பெற்றோரே சென்று அவரிடம் பத்திரத்தை கொடுத்துவிட்டு அடிமாட்டு விலையை வாங்கிவந்தனர். அதன் சாபத்தையும் வயிற்றெரிச்சலையும் இன்றும் அந்த அமைச்சர் என் அம்மவிடம் வாங்கிகொண்டு இருக்கிறார்(ன்).//

ஆட்டைய போடுபவ்ர்கள் எண்ண ஒரு திருக்குறள்:

"அல்லற்பட்டு ஆற்றாது அழுத
கண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை ".

one day they will all realize, but may be too late!!

said...

புதுவையில் சில பெரிய புலிகளின் வாரிசுகளின் துணையோடு இனும் இந்த அபகரிப்பு ஜோராக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
(உதாரணம்: முன்னால் முதல்வரின் ஊரு அறிந்த செல்ல மகன்).. ஆனால் இப்பொது இந்த புடுங்கி தினும் வேலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.ஆனால் புதுவையில் என்ன ஒரு பெரிய அராஜகம் நடந்தாலும் அந்த அளவுக்கு வெளியே FOCUS ஆவது இல்லை..
இப்படி சொத்து சேர்த்து என ஆகா போகிறதோ.
பிணத்தில் வாயில் இருக்கும் அரிசியை கூட விட மாட்டார்கள்..