திமுக தலைவர் பதவி பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டதுஇன்று திமுக தலைவர் பதவி வழக்கம் போல பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டது...

என்ன இருந்தாலும் திமுக வின் உட்கட்சி சனநாயகம் சும்மா தூள் தான், இதே பாருங்க அதிமுகனா பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமா செல்வி ஜெயலலிதாவுக்கு, பாமக தலைவர் பதவி முதலில் தீரன் அப்புறம் கோ.க.மணி அது யாரா இருந்தாலும் மருத்துவரய்யா கை காண்பிப்பவருக்கு தான், ஆனா பாருங்க திமுக தான் உட்கட்சி சனநாயகத்தை பேணும் ஒரே கட்சி, கலைஞரை எதிர்த்து தலைவர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யலைன்னா கலைஞர் என்னங்க செய்வார்... எப்படியோ உட்கட்சி சனநாயகத்தை காப்பாத்திட்டாங்க...

ஆமாம் மூணு வருசம் முன்னால தலைவர் தேர்தல் அன்னைக்கு அறிவாலயம் பரபரப்பா இருந்ததாமே? சேலம் வீரபாண்டியாரால... இன்னைக்கு ஒன்றுமில்லையா?

படிக்க தட்ஸ்டமில் செய்திகள்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவராக 10வது முறையாக முதல்வர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக அன்பழகனும், புதிய பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக உள்கட்சித் தேர்தல்கள் நடந்து வருகின்ரன. இன்று தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகன், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களில் மட்டும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடியது. கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அதில், தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக அன்பழகன், பொருளாளராக ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மூன்று பேருக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதிக்கும், அமைச்சர் அன்பழகனுக்கும், மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.

பின்னர் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக முன்னணியினர், இயக்குநர் பாக்யராஜ், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று மூன்று தலைவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், அமை‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி ஆ‌கியோ‌ர் கா‌லி‌ல் ‌விழு‌ந்து ஆ‌சி பெ‌ற்றா‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன்.

6 பின்னூட்டங்கள்:

said...

//கா‌லி‌ல் ‌விழு‌ந்து ஆ‌சி பெ‌ற்றா‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன். //

ஹிஹி.. பெரியாரின் கொள்ளுப் பேரன்.. :)))

said...

அவர் அவர்கள் அவர்கள் அவர்களின் சொந்த கொம்பேனி பற்றி மட்டில் கவலைப்பட்டால் நன்றாக இருக்கும்...

இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு விப்ரோவை குறை சொல்வது சரியல்ல...

said...

//இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு விப்ரோவை குறை சொல்வது சரியல்ல...
//
விப்ரோவில் வேலை செய்துகொண்டு இன்போசிஸை குறை சொல்வது தப்புதான், ஆனா பெரச்சினை என்னன்ன இன்போசிஸ் ஆளுங்க இன்போசிஸ் மட்டும் தான் ஒசத்தி, இன்போசிஸ்க்கும் மட்டும் தான் கொளுகை இருக்கு, இன்போசிஸை சிஇஓ வா இன்போசிஸ்ல வேலை செய்யற யார் வேணா வரலாம்னு ஜல்லிஅடிக்கும் போது தான் இன்போசிஸை விப்ரோல வேலைபாக்குறவன் கிழிக்கிறான்...

அண்டர்ஸ்டேண்ட்!!??

said...

//திமுக வின் உட்கட்சி சனநாயகம் சும்மா தூள் தான்//

சனநாயகம்னா என்னன்னு தெரியாத மரம் வெட்டி பயல்களுக்கு இதெல்லாம் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி புதுசா தானே தெரியும்

said...

ஜால்ராவுக்கு என்னை அழைக்காமல் பதிவு போட்டதை வண்மையா கண்டிக்கிறேன் :)))))))))))))))

said...

//விப்ரோவில் வேலை செய்துகொண்டு இன்போசிஸை குறை சொல்வது தப்புதான், ஆனா பெரச்சினை என்னன்ன இன்போசிஸ் ஆளுங்க இன்போசிஸ் மட்டும் தான் ஒசத்தி, இன்போசிஸ்க்கும் மட்டும் தான் கொளுகை இருக்கு, இன்போசிஸை சிஇஓ வா இன்போசிஸ்ல வேலை செய்யற யார் வேணா வரலாம்னு ஜல்லிஅடிக்கும் போது தான் இன்போசிஸை விப்ரோல வேலைபாக்குறவன் கிழிக்கிறான்...//

குழலி நீங்க எங்கயோ போயிட்டீங்க!!

அப்ப! இந்த பதிவுக்கும் ஒரு ஜால்ரா போட்டாச்சு ;) நாளைக்கு வரலாறு நம்ம தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு தான் ஹீ! ஹீ!!!