தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள்

கிளிநொச்சி விழுந்துவிட்டது, தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள் மிச்ச சொச்ச தமிழனையும் அழிச்சி முடிச்சிடுங்க...

உலக தமிழினத்தின் ஒரே தலைவருக்கும், தமிழ்பாதுகாவலருக்கும் இன்னுமொரு தர்ம சங்கடம் வரக்கூடாது...

தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள் மிச்ச சொச்ச தமிழனையும் அழிச்சி முடிச்சிடுங்க...

16 பின்னூட்டங்கள்:

said...

//உலக தமிழினத்தின் ஒரே தலைவருக்கும், தமிழ்பாதுகாவலருக்கும் இன்னுமொரு தர்ம சங்கடம் வரக்கூடாது//

பிரபகரனையா சொல்லறீங்க??

said...

:(

said...

//உலக தமிழினத்தின் ஒரே தலைவருக்கும், தமிழ்பாதுகாவலருக்கும் இன்னுமொரு தர்ம சங்கடம் வரக்கூடாது...
//

மரம் வெட்டி பயல்வலும் பொத்திகிட்டு தானே இருக்கானுவ, ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே தம்பி

said...

புலிகள் தவறுகள் பல செய்திருப்பினும், என்னவோ அவர்களின் தோல்வி மிகவும் வருத்தத்தைத் தான் தருகிறது..

தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல்வாதியாலும் எந்தக் காலத்திலும் ஈழத்தமிழருக்கு (உருப்படியான!) ஒரு எழவு பயனும் இருந்ததில்லை என்பது தான் யதார்த்தம் :-(

said...

திரு. குழலி,

ஈழ விடுதலைப் போர் முற்றுப் பெறவில்லை.

நான் விடுதலைப் புலிகளின் கண்மூடித்தனமான ஆதரவாளனும் இல்லை.

எனினும் தற்சமயம் அவர்களைப் போன்று ஈழவிடுதலைக்காக சமரசமின்றி களத்தில் நிற்பவர் யாருமில்லை என்றும் நம்புகின்றேன்.

இச்சமயம் திரு. சசி அவர்களின் பதிவில் இட்ட இப்பின்னூட்டத்தை தங்களின் பதிவிலும் தங்களின் கரிசனம் கண்டு பதிவு செய்ய விரும்புகிறேன்.

அன்புடன் ... வளர்



//ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் பாலான தங்களின் அக்கறைகளும் கரிசணையும் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.

எனினும், போர் குறித்த தங்களது மதிப்பீடுகளும் அலசல்களும் பாரிய தவறான விளைவுகளை விளைவிக்கக்கூடியவை என்று கருதுகிறேன்.

சென்றமுறை ஸ்டாலின்க்ராட் தற்காப்புப் போருடன் நீங்கள் ஒப்பிட்டு எழுதியதே தவறென்று குறிப்பிட்டிருந்தேன. எங்ஙனம் என்பதை விரிவாக விளக்க நேரமில்லை.

சிங்கள ராணுவம் தோல்வியின் விளிம்பில் இருப்பதாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய செய்திகள் தற்சமயம் வந்துபோதும் எனக்கு அக்கருத்தில் பெருத்த மாற்றங்கள் ஏதுமில்லை.

கிளிநொச்சியைக் 'கைப்பபற்றியதாகச்' சொல்லும் சிங்கள அறிவிப்பு அம்முயற்சியில் எத்துனை புலிகளை வீழ்த்தியது, எத்துனை வீரர்களை இழந்தது என்பதான விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை.

புலிகள் எந்த இழப்பும் இல்லாமலே கிளிநொச்சியை மட்டுமல்ல அதைச் சுற்றியுமுள்ள பல பகுதிகளையும் விட்டு விலகியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இதுவே சென்ற முறை நீங்கள் இப்போரை ஸ்டாலின்க்ராடுடன் ஒப்பிட்டதற்கு மறுப்பாக அமையும்.

நான் அறிந்த அளவில் இப்போரின் சில தந்திராபோய யுத்திகளைப் பேச விரும்பவில்லை.

தற்சமயம் நம்மைப் போன்றவர்கள் ஈழப் போரில் புலிகளின் போர் தந்திரங்கள் குறித்து வெளிப்படையாக பேசாது அரசியல் உத்திகள் சார்ந்து நீங்களும் நானும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து விவாதிப்பதும் செயலில் இறங்குவதும் மட்டுமே நடைமுறை அரசியலுக்கு உகந்தது என்று கருதுகிறேன்.

ஈழப் போரின் தந்திரோபாயங்கள் குறித்து எழுதி எனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வது சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தை உஷார் படுத்தும் காரியமாக அமையும். அதைத் தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் தவிர்க்கக் கோருகிறேன்.

அரசியல் ரீதியாக ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் எம்மைப் போன்றவர்கள் என்னவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அமெரிக்காவில் இருக்கும் நீங்கள் (ஈழத் தமிழரல்லாத நீங்கள்) என்ன செய்வது என்பது குறித்து உரையாடுவதும் செயல்படுவதுமே இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.

பரிசீலிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்

வளர் ...//

said...

வளரின் கருத்தையும் எழுத்தையும் ஆதரிக்கிறேன்.
போராளிகளும்,படைத்தளங்களும் அப்படியே உள்ளது அகலக் கால் வைத்துள்ளவர்களுக்குத்தான் ஆபத்து.
விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் என்ன செய்ய முடியும்,செய்கிறோமா என்று கவணித்துச் செய்வதுதான் கடமை.

said...

//பிரபகரனையா சொல்லறீங்க??
//
யோவ் வீ த பீப்புள் நக்கலா, உலக தமிழினத்தின் ஒரே தலைவரை நோக்கு தெரியலையா? நாசமா போனவனே, பார்ப்பன அடிவருடியே... போதுமா...

said...

//மரம் வெட்டி பயல்வலும் பொத்திகிட்டு தானே இருக்கானுவ, ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே தம்பி
//
பதிவைப்பாருடா பாடு அவங்களையும் சேர்த்து தான் சொல்லியிருக்கேன்

டேய் அனானி பாடு... மரம்வெட்டிங்க கிடக்கட்டும் உங்க "ஆள்கொளுத்தி" தானே ஒலகதமிழினத்தின் ஒரே தலைவருருருரு... என்ன புடிங்கிட்டாரு??

said...

//தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல்வாதியாலும் எந்தக் காலத்திலும் ஈழத்தமிழருக்கு (உருப்படியான!) ஒரு எழவு பயனும் இருந்ததில்லை என்பது தான் யதார்த்தம் :-(
//
இல்லை பாலா... உதவியாக இருந்தார்கள்... இப்போ சொத்து செட்டில்மெண்ட்டில் ஆரம்பித்து மந்திரி பதவி டிவி இன்னும் எவ்வளவோ இருக்கே... இன்னொருத்தருக்கு இப்போ தான் லேசா அதிகாரம் கிடைச்சிருக்கு... இதெல்லாம் விட்டுட்டுபோக என்ன கிறுக்கா புடிச்சிருக்கு... ஈழத்தமிழனுக்கு நாலு மந்திரிக்காக துரோகம் செய்தவனுங்க தமிழ்நாட்டு தமிழனுக்கு 6 மந்திரி பதவிக்காக துரோகம் செய்வாங்க...

said...

//ஈழ விடுதலைப் போர் முற்றுப் பெறவில்லை.
//
ஆம் வளர்மதி, ஒரு விடுதலைப்போராட்டம் ஒரு நகரோடு நிற்காது... ஆனால் பதவிக்காக கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நடந்து கொண்டு தமிழ் அரசியல்வாதிகளை கண்டால் எரிச்சலாக இருக்கிறது....

said...

//குழலி - ஆம் வளர்மதி ஒரு விடுதலைப்போராட்டம் ஒரு நகரோடு நிற்காது... //
உங்கள் போராட்டம் தொடர போகிறது.
பின்பு எதற்காக கலைஞரை திட்டுறீங்க?

said...

ஐயா! ஈழத்திலிருந்து ஓரு பின்னூட்டம். யார் யார் எப்படித்தான் என்னத்தை சொன்னாலும் புலிகள்தான் எங்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை வீண்போகாமலிருக்க தயவுசெய்து இறைவனை மன்றாடுங்கள்.

said...

நட்டநடுநிலைவியாதியாகிய நீங்கள் ஏன் பாமக பயிர் மட்டும் விளைவிக்கிறீங்க?

said...

//
பதிவைப்பாருடா பாடு அவங்களையும் சேர்த்து தான் சொல்லியிருக்கேன்//

இங்க பார்றா ரோசத்த மரம் வெட்டி நாய்களுக்கு இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல

said...

//நட்டநடுநிலைவியாதியாகிய நீங்கள் ஏன் பாமக பயிர் மட்டும் விளைவிக்கிறீங்க?//

இந்த *பய நடுநிலைவாதியா கலிகாலம்டா

said...

ஃபிலடெல்பியாவிலிருந்து பின்னூட்டம் போட்ட பாடு... மூடிக்கிட்டு போடா...