கட்சத்தீவு மீட்பு - உச்சநீதிமன்ற நோட்டிஸ் - நன்றி செல்வி.ஜெயலலிதா


கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது, முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலே இம்மாதிரியான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது...

கச்சத்தீவின் ஒப்பந்த நடைமுறைகளை இலங்கை அரசு சரியாக பின்பற்றாததினால் உலக நீதிமன்றத்தின் படியேறி கச்சத்தீவை திரும்பவும் பெறும் வாய்ப்பிருந்தாலும் தமிழனை கொல்லும் இலங்கை அரசுக்கு பொருளுதவி, இராணுவ உதவிகளும் மட்டுமின்றி ஆட்காட்டி வேலையையும் செய்து வரும் தமிழர் விரோத மத்திய அரசு(அதில் பங்களித்துக்கொண்டிருக்கும் தமிழர் கட்சிகளையூம் சேர்த்ததே மத்திய அரசு) கச்சத்தீவை மீட்கும் எந்த முயற்சியையும் எடுக்குமா என்பது சந்தேகமே...

இலங்கை பத்திரிக்கையில் வெளிவந்துள்ள இந்த செய்தி இன்னும் எந்த இந்திய ஊடகங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் வெளிவராதது இந்த பிரச்சினையில் எவ்வளவு அலட்சியமாக இந்திய தமிழ் ஊடகங்கள் நடந்து கொள்கிறது என்பது தெளிவாகிறது.

மீனவன் செத்தாலும் ஈழத்தவன் செத்தாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.... தமிழர்களின் நிலத்தை தமிழர்களை இந்தியர்கள் இலங்கைக்கு வாரிவழங்கியதிலிருந்தே தமிழ்மண்ணின் மீதான இந்தியர்களின் எண்ணம் புரிந்ததே

இந்த பிரச்சினையை உச்சநீதிமன்றம் எடுத்து சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் மத்திய அரசிற்கு கட்சத்தீவை மீட்கும் நடவடிக்கைக்காக நோட்டிஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றி

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அண்ணா நாமம் வாழ்க, புரட்சிதலைவர் புகழ் ஓங்குக.

உண்மைத்தமிழன் said...

இந்திரா காந்தி வாழ்க.. சிரிமாவோ பண்டாரநாயகா வாழ்க.. கலைஞர் வாழ்க.. எம்.ஜி.ஆர்.வாழ்க.. ராஜீவ்காந்தி வாழ்க.. ஜெயவர்த்தனே வாழ்க.. பிரேமதாசா வாழ்க.. சந்திரிகா குமாரதுங்கா வாழ்க.. நரசிம்மராவ் வாழ்க.. வாஜ்பாய் வாழ்க.. அத்வானி வாழ்க.. மன்மோகன்சிங் வாழ்க..

ஜெயலலிதா ஒழிக..

ரவி said...

அண்ணா நாமம் வாழ்க, புரட்சிதலைவர் புகழ் ஓங்குக.

ரவி said...

//அண்ணா நாமம் வாழ்க, புரட்சிதலைவர் புகழ் ஓங்குக.///

ரவி said...

அண்ணா நாமம் வாழ்க, புரட்சிதலைவர் புகழ் ஓங்குக.

ரவி said...

அண்ணா நாமம் வாழ்க, புரட்சிதலைவர் புகழ் ஓங்குக.

Sanjai Gandhi said...

என்னாது அண்ணா நாமமா? அவரு பகுத்தறிவுவாதின்னு இல்ல சொன்னாங்க? பகுத்தறிவுவாதி எதுக்கு நாமம் எல்லாம் போட்டாரு? அந்த நாமத்துக்கு எதுக்கு வாழ்க போடனும்?


அளவில்லா ஐய(ங்ககார)த்துடன்
நான் கடவுள்.

Anonymous said...

'Madaraasi Madam' on Eezham Tamils
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=28059