கெஞ்சி பிழைக்கும் தமிழினத்துக்கு குடியரசு தினம் ஒரு கேடா?

இம்மாதிரியான ஒரு நிலை தமிழினத்துக்கு எப்போதும் வந்ததில்லை, இதற்கு முன் எத்தனையோ சோதனைகள் வந்திருந்த போதும் அந்த நேரத்தில் இனப்போராட்டங்கள் நடத்த முடியுமென்ற நம்பிக்கையும் தன்னலமில்லா தலைமையும் இருந்தன.

நம் முன் இன்று இரண்டு முக்கிய விசயங்கள், இந்தியாவில் தமிழகத்தின் பங்கென்ன? தமிழகத்தில் தமிழ் இன அரசியல் எப்படியுள்ளது?

தமிழனனின் கச்சத்தீவு நிலங்களும் உடைமைகளும் இந்திய அரசினால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது மட்டுமின்றி தேவிகுளம்,பீர்மேடு, கோலார், சித்தூர், திருப்பதி என கர்நாடகா, கேரளா, ஆந்திரம் என சுற்றியுள்ள அனைத்து பிற தேசிய இன மாநிலங்களுக்கும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

நிலம் மட்டுமின்றி நீர் ஆதாரங்களும் இயற்கை அளித்த நிலக்கரி தமிழ்நிலத்தின் தாது வளங்களும் இந்தியாவினால் சுரண்டப்படுகிறது.அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போதும் இந்திய அரசிடம் கெஞ்சல், இன்று தமிழினம் அழிக்க உதவிசெய்யாதே என்றும் வெறும் கெஞ்சல்.

தண்ணீருக்கு கெஞ்சல், மீனவர்களை கொல்வதை தடுக்க கெஞ்சல், பெரியாறு அணைக்கு கெஞ்சல், கண்ணகி கோவில் வழிபாட்டுரிமைக்கு கெஞ்சல்,கெஞ்சுவதும், பிச்சையெடுப்பதும், கோரிக்கை வைத்துமே ஒரு தமிழ் தேசிய இனம் வாழும் இலட்சணத்துக்கு குடியரசும் சனநாயகமும் தான் ஒரு கேடா?

இதற்கு முன்பு இந்திய அரசில் எந்த வலுவும் பிடியுமில்லாமல் இருந்த நிலை, ஆனால் எந்த தேசிய கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் இப்போது இந்திய அரசின் உச்சிகுடுமியே தமிழகத்தின் கையில், ஆனால் ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்படும் இன அழிப்பை தடுக்க இந்திய தலைமைக்கு எந்த அழுத்தத்தையும் தர சுயநல தமிழக தலைமைகள் தயாராக இல்லை.முன்பு தமிழினம் அழிவை எதிர்நோக்கிய போதெல்லாம் குறைந்தது போராடமுடியுமென்றும் அதற்கான போர்வாளாக தமிழின தலைமைகள் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் இன்றோ தமிழின தலைமைகள் துரு பிடித்த போர்வாள்களாக பயனற்று உள்ளன. தம்மால் முடிந்த ஒரு அழுத்தத்தை தம் தயவால் இருக்கும் அரசுக்கு தமிழினத்துக்காக தரமுடியாத சுயநல தலைமைகள்.

தமிழினத்துக்கு எதிரான தலைமைகளும் கட்சியும் எப்போதும் ஏதோ ஒரு பெயரில் இருக்கவே செய்யும், அதை எதிர்க்க சுயநலமில்லா, புள்ளை குட்டிகளின் பதவிக்காக கோமணத்தையும் கழற்றி தராத, அதிகாரத்துக்காக தம் இனத்தை அழிவை தடுக்காத தலைமையை தேர்ந்தெடுப்போம், துரு பிடித்த போர்வாள்களை தூக்கி எறிவோம்.

அடப்போய்யா லூசு குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்னு நாலு படம் போட்டிருக்காங்க, நடிகைகளின் சிறப்பு பேட்டிகள் டிவியில் அதை பார்ப்போமான்னா இல்லாம சும்மா கத்திக்கினு.... வந்தே மாதரம்....

34 பின்னூட்டங்கள்:

said...

ஜெய் ஹிந்த்!!!
நான் தேசபக்தர் வடிவேலுவோட பேட்டி பாத்துக்கிட்டு இருக்கேன்...

said...

”நான் ஏன் இந்தியன் அல்ல?” விரைவில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்குமென்று நினைக்கிறேன்.

கையறு நிலை என்பது இதுதானோ?

said...

//ஜெய் ஹிந்த்!!!
நான் தேசபக்தர் வடிவேலுவோட பேட்டி பாத்துக்கிட்டு இருக்கேன்...
//
நமீதா பேட்டி இல்லையாங்க?

//ஜேகே - JK said...
”நான் ஏன் இந்தியன் அல்ல?” விரைவில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்குமென்று நினைக்கிறேன்.

கையறு நிலை என்பது இதுதானோ?
//
நான் அல்ல, நாம் ஏன் இந்தியன் அல்ல? அப்படின்னு எழுத வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்...

said...

குழலி,

உங்களின் விரக்தி புரிகிறது.ஆனால் இதற்கு நாம் தான் காரணம்.பெரியார்,அண்ணா பெயரை
வைத்து நடத்தும் கட்சிகள் எல்லாம் குடும்ப அரசியல்,
குடும்ப டிவி, கல்லூரிகள் என்ற வியாபாரத்தில் நுழைந்து
சொகுசு காண்கிறார்கள்.

இதில் ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், இத்தனை
வருட கலைஞர் ஆட்சியில், வரலாற்றில் இடம் பெரும் அரிய
பணியைச் செய்திருக்கலாம்.

ஆனால் துரதிட்டவசமாக, அவர் பெயர்" கலைஞர் டி.வி" ஓனர்
என்றுதான் வரலாறு சொல்லப்போகிறது.

மனதை மாற்றிக்கொண்டு "இந்தி" யனாக மாறப்பாருங்கள்.

said...

நாம் புலம்புவதை நிறுத்தி விட்டு ஏன் இப்படி ஆகி விட்டோம் என சிந்திக்க வேண்டும்.

ஓட்டு அரசியல் தான் இதற்கு காரணம் என சொல்ல முடியும். திமுக ஓட்டு அரசியலுக்காக எதையும் செய்யக்கூடிய கட்சியாக மாறியது தான் காரணம். 1967ல் ஆட்சியைப் பிடிக்க பொய்ப் பிரச்சாரத்தை தொடங்கிய கட்சி திமுக. ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி என்று அப்பொழுது அண்ணாதுரை வாக்குறுதி தந்தார். கருணாநிதி ஒரு படி மேலே சென்று இதை நிறைவேற்றவில்லை என்றால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றார். அண்ணா மறைந்தார். கருணாநிதி நிறைவேற்ற வில்லை. கருணாநிதியின் மொத்த வடிமும் பொய், சுயநலம், பதவி ஆசை தான் என்பதை ஆரம்ப காலம் தொட்டு இன்று வரைக்கும் பார்க்க முடியும். பதவி ஆசையின் மறுபெயர் கருணாநிதி தான். அவரால் முதலமைச்சர் என்ற நாற்காலி ஆசையை எப்பொழுதும் விட்டு விட முடியவில்லை.

பெரியாரின் கொள்கைக்கு விரோதமாக ஓட்டு பொறுக்கும் அரசியலில் குதிக்க அண்ணா முடிவு செய்தார். அது தான் திராவிட இயக்கத்தின் முதல் சறுக்கல். அண்ணாவின் உடனடி மறைவும், கலைஞரின் தலைமையும் திராவிட இயக்க அரசியலை என்றோ அழித்து விட்டது. மிச்சம் மீதி இருந்த சொச்சமும் இப்பொழுது போய் விட்டது.

கருணாநிதியை அவருடைய அரசியலுக்காக அல்லாமல் அவரின் எதிரி அரசியலை எதிர்ப்பதற்காக நாம் ஆதரித்து கொண்டிருந்தோம். அது தான் நாம் செய்த தவறு.

மீண்டும் தமிழனின் தலைமையை மீட்க வேண்டும் என்றால் நாம் ஓட்டு அரசியலை எதிர்த்தாக வேண்டும். ஓட்டு பொறுக்கும் எல்லா கட்சிகளையும் எதிர்க்க வேண்டும்.

அது தவிர நமக்கென வலுவான ஒரு பத்திரிக்கை வேண்டும். இன்றைக்கு தமிழனின் "மிகப் பெரிய" பலவீனம் அது தான். தமிழனின் எதிரிகள் நடத்தும் பத்திரிக்கையை தமிழன் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்முடைய எதிரிகளாக பாக்கிஸ்தான் தான் சித்தரிக்கப்படுகிறது. சிறீலங்கா நேச நாடு.

said...

முகு கலைஞர் மட்டுமல்ல மருத்துவர் இராமதாசும் தாம் செய்ய இயன்ற அளவிற்கு செய்யவில்லை... அதிகாரத்தில் இருக்கும் இருவருமே காலைவாரி விட்டுவிட்டார்கள்...

Priority Politics என்பது முக்கியம் அரசியல் மட்டுமல்ல எதிலும் நிலைத்து நிற்க நீக்கு போக்கான முறை முக்கியம் ஆனால் எதற்கு எதை விட்டு கொடுக்க்கிறார்கள் என்பது மிக முக்கியம், இங்கே தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் போது இவர்கள் வேறு எதற்காக காத்திருக்கிறார்கள்??

said...

//அது தவிர நமக்கென வலுவான ஒரு பத்திரிக்கை வேண்டும். இன்றைக்கு தமிழனின் "மிகப் பெரிய" பலவீனம் அது தான்.
//
சசி மிகச்சரி.... ஆனால் ஒரு விசயம் சொல்லட்டுங்களா, தயாநிதி மாறன் பிரச்சினை எழுந்த போது தினகரன் பத்திரிக்கையை வாங்குவதை எத்தனையோ பேர் நிறுத்தினார்கள்... கண்கள் பனித்து இதயம் இனித்த பின் அவர்களெல்லாம் தினகரன் வாங்க ஆரம்பித்தார்களா என கேட்க வேண்டும், இப்படித்தான் தலைமை மீதான வெறித்தனமான பிடிப்பு...

said...

//"கெஞ்சி பிழைக்கும் தமிழினத்துக்கு குடியரசு தினம் ஒரு கேடா?"//

யாரு கெஞ்சராங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்! இன்று தமிழ் எம்.பி இருக்கும் நிலையில் மிரட்டியே எதை வேண்டுமென்றாலும் வாங்க முடியும் இந்தியாவில்! அப்படி வாங்கியது தமிழகத்துக்கே தெரியும் குறிப்பா ஐ.டி, போக்குவரத்து என எல்லா சில்லை தேரும் மந்திரி பதவிகளுட்பட.... சில விசயங்கள் நம்க்கெதற்கு என்று விட்டுவிடுவது அதில் ஈழம், காவேரி, முல்லை பெரியார் அடங்கும்.. அதற்கு காரணம் இந்திய அரசு அல்ல, தமிழக தலைவர்கள்/மந்திரிகள் என்பது உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை! இந்தியவில் இன்று நடப்பது கூட்டாட்சி தனி கட்சி ஆட்சியில்லை! அந்த கூட்டணியில் தி.மு.க, பா.ம.க என பல கட்சிகள் அங்கம், கேட்டால் தான் எதவும் நடக்கும் சும்மா சீன் வேலைக்கு ஆகாது!

//அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போதும் இந்திய அரசிடம் கெஞ்சல், இன்று தமிழினம் அழிக்க உதவிசெய்யாதே என்றும் வெறும் கெஞ்சல்.//

அன்று கட்ச தீவு தாரை வாக்கப்பட கூடாது என்று எம்.ஜி.ஆர் / எஸ்.எஸ்.ஆர் எதிர்த்த போது... தண்ணியில் மிதக்கும் இடத்துக்கு, தண்ணியில் மிதக்கும் ஆளுங்க கேள்வி கேட்கிறாங்க என்று கொச்சை படுத்தியது இன்றைய தி.மு.க, தி.மு.க ஓ.கே சொன்ன தால் தான் கட்ச தீவு இலங்கைக்கு தரப்பட்டது என்பது சரித்திரம்! மாநில அரசு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் தந்திருக்க முடியாது!!! இது தான் உண்மை!! சோ, கட்ச தீவு பிரச்சனைக்கு காரணம் யார் என்று நீங்களே சொல்லுங்க!

said...

பாரத் மாத்த்த்தாக்க்கீ ஜெஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!

பாரத் மாத்த்த்தாக்க்கீ ஜெஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!

பாரத் மாத்த்த்தாக்க்கீ ஜெஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!

பாரத் மாத்த்த்தாக்க்கீ ஜெஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!

மாமா பிஸ்கோத்து!

said...

கேட்கப்பட வேண்டிய கேள்வி தான் ?

இந்தியா ,இந்தியன் என உருகுபவர்களைத்தான் கேட்கவேண்டும்

said...

ஐ வீ த பீப்புள் வந்தாச்சி...

//யாரு கெஞ்சராங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்! இன்று தமிழ் எம்.பி இருக்கும் நிலையில் மிரட்டியே எதை வேண்டுமென்றாலும் வாங்க முடியும் இந்தியாவில்!
//
இரண்டு விசயம், ஒன்று தேசிய அளவில் தேசிய கட்சிக்கு பெரும்பாண்மை இல்லாததால் மட்டுமே இன்று தமிழகத்திற்கு கிடைத்துள்ள அரசியல் முக்கியத்துவம், ஏனெனில் இதற்கு முன் தேசிய கட்சிகளுக்கு தனிப்பெரும்பாண்மை இருந்த போது ஒரே ஒரு கேபினேட் மந்திரி கூட தமிழகத்துக்கு கிடையாது, இதே போல நாளை காங்கிரசுக்கோ , பாஜகவுக்கோ தனிப்பெரும்பாண்மை கிடைத்தால் தமிழகத்துக்கு இந்திய அரசியலின் பங்கு முட்டையோ முட்டைதான்... இது இந்தியா என்கிற கான்செப்ட்டில் உள்ள பிரச்சினை....இது எப்போதும் உள்ள பிரச்சினை...

இன்றைக்கு எந்த தேசிய கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாததால் இந்திய அரசியலில் தமிழகத்துக்கு ஒரு தற்காலிக முக்கியத்துவம் உள்ளது, இதை சரியாக பயன்படுத்தாமல் சுயநலத்துக்காக தமிழக தலைமைகள் பயன்படுத்திக்கொள்வது தற்போதைய பிரச்சினை...

எனவே இரண்டையும் ஒரே பிரச்சினையாக பார்க்க கூடாது... இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள்... மீண்டும் அழுத்தி சொல்ல விரும்புவது என்னவெனில் இன்றைக்கு இந்திய அரசியலில் தமிழகத்துக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம் வெறும் தற்காலிகமானதே....

said...

ஓட்டு அரசியல் இல்லை என்றால் அய்யா வீரமணி போல் ஒட்டுண்ணி அரசியல் நடத்தி இருப்பார்கள்.

அதிகார அரசியலை பொறுத்த வரை தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான். தேன் கையில் படாத வகையில் வழிமுறை அமைய வேண்டும். அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து தர வேண்டும்.

மித மிஞ்சிய அதிகாரம் ருசித்தவனை நாடே பற்றி எரிந்தாலும் பிடில் வாசிக்கத் தூண்டும். சட்ட மன்றத் தீர்மானம் கண்டுகொள்ளப் படவில்லை என்றால் தனிநாடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது தானே?

அண்டை நாடுகளுக்கு, நம்மை விஞ்சி இலங்கைக்கு உதவுவார்கள் என அஞ்சும் நாடு, தன் சொந்த குடிமக்களின் குரலைக் கேட்க மறுக்கிறது. நாமோ இன்று இப்படம் கட்டக் கடைசி என்ற வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றுகிறோம். காசுமீரிகளுக்கு இருக்கும் உணர்வு நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை.

உள்ளம் இனிக்கவும், கண்கள் பனிக்கவும் கருணாநிதிக்கு மட்டுமே கைகூடும். அவருக்கு உள்ளக் குமுறல்கள் உறைப்பதற்கு நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?

said...

//மாநில அரசு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் தந்திருக்க முடியாது!!! இது தான் உண்மை!!
//
ஜெய்... மாநில அரசு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் தந்திருக்க முடியாது என்பது தவறு...

தமிழ்வெளிக்கு சுபவீ அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து

http://interviews.tamilveli.com/2008/11/subavee-interview.html

இந்திராகாந்தி சீரிமாவோவும் சேர்ந்த ஒருவருக்கொருவர் ஆன அந்த சந்திப்பில் கச்சத்தீவை கொடுப்பது என்ற முடிவு ஏற்படுகின்றது, அது தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றது அப்போது தமிழக அரசு அதை எதிர்க்கிறது, கலைஞர் தலைமையிலான அரசு அதை எதிர்த்து சட்டமன்றத்திலேயே தீர்மாணம் இயற்றுகிறது.

ஆனால் தமிழக அரசினுடைய அதிகார எல்லை என்ன என்பதை நாம் அறிவோம், அந்த காரணத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எதிர்ப்பை செலுத்த முடியவில்லை

----

ஜெய் இது தான் உண்மை, கலைஞர் அரசு அன்று தீர்மாணம் இயற்றியும் வாரி கொடுக்கப்பட்டது... இதை தான் இந்திய தேசிய கான்செப்ட்டில் உள்ள தவறு என்கிறேன்....

கலைஞர் கூட்டணிக்காக அரசியல் அழுத்தம் தராமல் விட்டது சுயநல தவறு... முன்னது பெர்மணன்ட் தவறு... இரண்டாவது சுயநல தலைமையின் தவறு... இரண்டாவது தவறை தலைமையை மாற்றுவதன் மூலம் செய்ய முடியும் தமிழனால் ஆனால் முதல் தவறை இந்திய பேரரசின் கீழ் இருந்தால் தமிழனால் மாற்ற முடியாது

said...

தி.மு.க ஓ.கே சொன்ன தால் தான் கட்ச தீவு இலங்கைக்கு தரப்பட்டது என்பது சரித்திரம்!

*******

இது தவறு.

திமுக எதிர்த்தது. நாடாளுமன்றத்தில் திமுக எதிர்த்தது.

இது குறித்த விபரங்களை இந்தச் சுட்டியில் படிக்கலாம். திமுக எதிர்ப்பையும் மீறி தான் நடுவண் அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது. இன்று வரை தமிழக மீனவன் கொல்லப்படுவதையும் கண்டு கொள்ளாமல் உள்ளது

http://www.dravidaperavai.esmartdesign.com/

said...

குழலி, நீங்க கொடுத்த சுட்டியிலிருந்து தான் ..

//மேலும் கூடுதலாக அன்றைக்கு இந்திரா காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் கூடுதலாக அழுத்தத்தை தரமுடியவில்லை ஆனாலும் கூட அன்றைக்கு கச்சத்தீவை கொடுப்பதை எதிர்க்கத்தான் செய்தார்கள், அதையும் தாண்டி இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது, அது நமக்கு பெரிய இழப்புதான்கிட்டத்தட்ட//

இன்று ஈழத்துக்கு போடும் அதே நாடகம் தான் அன்றும் தி.மு.க போட்டிருக்கு என்று தோன்றுகிறது! அன்று முதல் இன்று வரை ஒரே சீன் தான் என்று நான் கருதுகிறேன்! தவறிருந்தால் திருத்தவும்...

said...

//கருணாநிதியை அவருடைய அரசியலுக்காக அல்லாமல் அவரின் எதிரி அரசியலை எதிர்ப்பதற்காக நாம் ஆதரித்து கொண்டிருந்தோம். அது தான் நாம் செய்த தவறு.
//
//நம்முடைய எதிரிகளாக பாக்கிஸ்தான் தான் சித்தரிக்கப்படுகிறது. சிறீலங்கா நேச நாடு.
//
சசி சொன்ன இவை இரண்டுமே முக்கியமான பாயிண்டுகள் !!!

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம். இத்தனை தமிழக மந்திரிகள் இருந்தும், உருப்படியாக எதுவும் கிழிக்காதது, அதாவது அவர்கள் வழி நடத்தும் அமைச்சகம் வாயிலாக.

நாம் கிண்டல் செய்யும் லாலு ரயில்வேயை லாபம் தரும் ஒன்றாக மாற்றியிருப்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.

எ.அ.பாலா

said...

குழலி,

கொஞ்சம் பொறுங்க..

ஜெயா டிவியில் சிங்களத்துக் குயில் பூஜாவின் பேட்டியை ரசித்துக் கொண்டிருக்கிறேன்..))))))))))))

முடிச்சிட்டு வரேன்..

said...

கச்சத்தீவை விடுங்க..

இன்னிக்கு மேட்டருக்கு வாங்க..

ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட துறைகளை தராததால் எமது அமைச்சர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் நடுராத்திரில சோனியாவை தூங்கவிடாம செஞ்ச ஐயாவுக்கு..

ஈழ விவகாரத்தில் சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்காவிடில் நாளையே மத்திய அரசு கவிழும்னு சொல்றதுக்கு எவ்வளவு நேரமாகும்..?

எல்லாம் பேப்பர்ல மட்டும் கையெழுத்த வாங்கி டிராம போடத் தெரிஞ்சவருக்கு.. அதை நிஜமாக்கத் தெரியாதா..?

உங்க தலைவர் ராமதாஸோ ராஜினாமா கடிதத்தையே கண்ணுல காட்டாம நான் டெல்லிலேயே கொடுத்திருவேன் என்று சொல்லிவிட்டு இன்னிக்கு வரைக்கும் எழுதறதுக்கு வெள்ளை பேப்பர் கிடைக்காம அல்லாடிக்கிட்டிருக்காராம்.. என்ன கொடுமை இது..?

நடிப்புல நம்ம நடிகர் திலகத்தை மிஞ்சிவிட்டார்கள் இன்றைய அரசியல் திலகங்கள்.

ஆனாலும் நான் பொறுப்பான இந்தியன் குழலி..

12 மணிக்குத்தான் எந்திரிச்சேன்..

said...

//மீண்டும் அழுத்தி சொல்ல விரும்புவது என்னவெனில் இன்றைக்கு இந்திய அரசியலில் தமிழகத்துக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம் வெறும் தற்காலிகமானதே....//

இந்த தற்காலிகமானதே எத்தனை வருடம் என்று சொல்ல முடியுமா?? எனக்கு தெரிந்து சுமார் பத்து ஆண்டுகள், அதாவது பி.ஜே.பியுடன் ஐந்து ஆண்டுகள், இப்ப காங்கிரஸுடன் ஐந்து ஆண்டுகள் என லேடஸ்ட் கதைகளை மட்டும் வைத்து பார்த்தால்... வி.பி.சிங் காலத்து நேஷனல் ஃப்ரண்டு ஆட்சி மற்றும் சில கூட்டணி ஆட்சிகள் கணக்கு சேர்க்காமல்... எனக்கு தெரிந்து இனியும் இந்தியாவில் இதுபோலவே கூட்டணி ஆட்சிக்கே வாய்ப்புக்கள் அதிகம்! நம்மாளு எப்படியும் அந்த (அது எதுவாயினும்) கூட்டணியில் தி.மு.க ஒரு பங்கு வகிக்கும் என்பது நிச்சயம்! 10 ஆண்டுகள் உங்களுக்கு தற்காலிகமா தெரியதா தல??

said...

ஜாக்கிரதை! பெரும் அண்டப்புளுகுகளை கட்டவிழ்த்துவிட்டு புலம்பெயர் தமிழர்களிடம் கொள்ளையடிக்க தயாராகிறார்கள் புலி முகவர்கள்!!

- கனடா கந்தசாமி

‘cartoon-1ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சுட்டுக்கொல சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்’ ‘பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்!!’ ‘கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால், 1500 இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!’ ‘புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்!!!!’ ‘சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என வந்த 3000 இந்திய இராணுவத்தினர், திரும்பி போகாமல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து வன்னியில் புலிகளுக்கு எதிராக போரிடுகின்றனர். அவர்களில் சிலரும் கல்மடுக்குள உடைப்பின்போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!!!.’

என்ன இது! ஒரே அதிரடி செய்திகளாக இருக்கின்றன என அதிர்ந்து போய்விட்டீர்களா? இது எமது ‘தேசியத்தலைவர்’ வே.பிரபாகரன் அவர்களின் செல்லப்பிராணிகளால், ஜனவரி 24ந் திகதி கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளாகும். இந்த வதந்திகளை பரப்புவோர் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்னவென்பதும் ஒன்றும் புரியாத புதிரல்ல.

புலிகள் கடைசியாக வன்னியில் சேடமிழுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, தமது இறுதிமூச்சை விடுவதற்கு முன்னர், இந்த மாதிரியான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களை வலையில் வீழ்த்த வகுக்கப்பட்ட தந்திரம். ஆனால் இவர்களது கவலை புலிகளின் துக்ககரமான முடிவைப்பற்றியதல்ல. புலிகளின் பெயரால் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலராகவும் ஈரோவாகவும் பிராங்காகவும் வகைதொகையில்லாமல் கொள்ளையடித்து ருசி கண்டவர்கள், இனிமேல்அதற்கு வழியில்லாமல் போகப்போகிறதே என்ற ஏக்கத்தில், கடைசித்தடவையாக பொய்புரட்டுகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களிடம் அடிக்கக்கூடியதை அடிக்கும் முயற்சியே இது.

முன்பு வசூலாகும் பணத்தில் 20 முதல் 25 வீதம்வரை கமிசனாகபெற்ற புலி முகவர்கள், இப்பொழுது புலிகள் கணக்கு கேட்கும் நிலையில் இல்லாத கையறு நிலையை பயன்படுத்தி, வசூலிப்பதை முழுவதுமாக தமது பைக்குள் போடும் துணிச்சலால் வந்த வினை இது. ஆனால் ‘பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லு’ என்பதை கூட மறந்துவிட்டனர்.

கல்மடுவிலுள்ள 10 ஏக்கர் மத்திய வகுப்பு திட்டத்திலுள்ள, 500 ஏக்கர் வயல் காணிக்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்யும் ஒரு சிறியகுளத்தை உடைத்து, 1500 இராணுவத்தினரை நீரில் மூழ்கடித்துள்ளதாக ‘அப்பாவித்தனமாக’ கதை அளந்துள்ளனர்! இவர்களின் அண்டப்புழுகுகளால் ‘தலைவர் உள்ளுக்கை விட்டுத்தான் அடிப்பார்’ (அது என்ன அடி என்பது தலைவருக்கு தான் வெளிச்சம்!) என்ற மாஜையில் மயங்கிக்கிடந்த கனடா வாழ் சருகுபுலிகள் எல்லாம் களிப்படைந்து பல இடங்களில் ‘தண்ணிப்பார்ட்டி’ வைத்துக்கொண்டாடினார்களாம். இந்தபார்ட்டிகளில் சருகுபுலிகளின் வெற்றிப்போதை தலைக்கேறியதால், அதை மேலும் ஏற்றுவதற்காக, விஸ்கி போத்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளித் தீர்த்தனராம்!

இந்த கொயபல்ஸ் மோசடிக்கும்பலில் உள்ள பலரின் பெயர்களில்தான், ஐரோப்பாவிலும் கனடாவிலும் புலிகள் ஏராளமான வர்த்தக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த பேர்வழிகளில் பலர் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பமான உடனேயே, தமது பெயரிலிருந்த புலிகளுக்கு சொந்தமான வியாபாரங்களை விற்றுவிட்டு, பெரும் தொகை பணத்துடன் வேறு நாடுகளுக்கு இடம் மாற ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலர்முதல்தடவையாக வியாபாரத்தில் நஸ்டக்கணக்கு காட்டி, புலிகளுக்கு கணக்குவிட ஆரம்பித்துவிட்டனர். புலிகளே பெரும் கொள்ளைக்காரர்கள் என்பதை புரிந்து வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் பார்த்திருந்த இந்தப் பெருச்சாளிகள், புலிகளின் கொள்ளைகளுடன் ஒப்பிடுகையில், தமது ‘சிறு கொள்ளை’ அவ்வளவு மோசமானதல்ல என்ற நினைப்புடனேயே இந்த கைங்கரியங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனவேவருங்காலத்தில் இன்னும் என்னென்ன வெடிகளை வெடித்து, மக்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தப்போகிறார்களோ தெரியவில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலோர், கடந்த 25 வருடங்களாக தமது மூளையை கழற்றி புலிகளிடம் அடகு வைத்துவிட்டு வந்திருக்கையில், அடகு கடைக்காரர்களுக்கு மட்டுமின்றி, அதற்கு துணைநின்ற தரகர்களுக்கும்கொண்டாட்டத்துக்கு மேல் கொண்டாட்டம் தான் போங்கள்!

said...

// இன்று வரை தமிழக மீனவன் கொல்லப்படுவதையும் கண்டு கொள்ளாமல் உள்ளது//

தமிழகத்து மீனவர்களைக் கொல்வதற்கு இந்தியக் கடற்படைதான் காரணம். தமிழக-ஈழ கடல் போக்குவரத்தினை ஆபத்து மிக்கதாகத் தமிழக மீனவர்கள் நினைக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். மீனவர்களின் நடமாட்டங்களை இலங்கையரசுக்குச் சுட்டிக் காட்டுவதும், கொல்லத் தூண்டுவதும் இந்தியக் கடற்படையே.
இடவொதுக்கீட்டுக்கு எதிரான "மாணவாள்" போராட்டம் "பற்றியெரிந்த"போது நாடே அலறுவதைப் போன்ற பிம்பம் காட்டப்பட்டது. ஏன் இன்று தமிழக மாணவர்கள் முழுமையும் போராடும்போது 'இந்தி'ய ஊடகங்களுக்குக் கண் தெரியவில்லையா?
ஒவ்வொரு தேசிய இனத்தையும் ஒடுக்கி, அவற்றைச் சுரண்டுவதுதான் இந்தியாவின் தேசியக் கொள்கை. அந்தக் கொள்கைக்குக் கூட்டிக் கொடுப்பவர்கள்தான் நம் மாநில அரசியல்வாதிகளும், ஊடகங்களும். கூட்டிக் கொடுப்பவர்கள் தங்களுக்கான ரொட்டித் துண்டுகளோடு நிறைவடைந்துவிடுவார்கள். ஆனால் மக்களது போராட்டம் ஓயப்போவதில்லை.

said...

**கலைஞர் மட்டுமல்ல மருத்துவர் இராமதாசும் தாம் செய்ய இயன்ற அளவிற்கு செய்யவில்லை... அதிகாரத்தில் இருக்கும் இருவருமே காலைவாரி விட்டுவிட்டார்கள்...**

உண்மை!
நெருக்கடியான நேரத்தில் கூட வெறும் வாய்ச்சொற்களால் காலத்தை வீண்டித்தார்கள்! வீண்டித்து ஏமாற்றி வருகிறார்கள்!

said...

நாடு ,குடியரசு ,ஒருமைப்பாடி இதிலெல்லாம் நம்பிக்கை இழந்து ரொம்ப நாளாச்சு

said...

//தண்ணீருக்கு கெஞ்சல், மீனவர்களை கொல்வதை தடுக்க கெஞ்சல், பெரியாறு அணைக்கு கெஞ்சல், கண்ணகி கோவில் வழிபாட்டுரிமைக்கு கெஞ்சல்,கெஞ்சுவதும், பிச்சையெடுப்பதும், கோரிக்கை வைத்துமே ஒரு தமிழ் தேசிய இனம் வாழும் இலட்சணத்துக்கு குடியரசும் சனநாயகமும் தான் ஒரு கேடா?
//

வேதனையான வினா!

செயலலிதாவோடு போட்டி போட்டு
தமிழினத்தை தமிழ்நாட்டிலும்
ஒழித்துக் கட்டிவருகிறார் கருணாநிதி.

தமிழ்ச் சித்தாந்தங்கள் இவர்களால்
தவிடு பொடியாக்கப் பட்டிருக்கிறது.

மீட்கவேண்டிய பெரும் சுமை
தமிழ்க் குமுகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

said...

பெயரில்லாமல் வந்து கதை எழுதியிருக்கும் கந்தசாமிக்கு...
சும்மா புலிகளை எதிர்ப்பதற்காக நீங்கள் காசு வாங்கியுள்ளாய் என நான் செர்லவில்லை. இப்படி கதை புலி கட்டுவதானால் அவர்களின் இணையத்தளங்களில் ஒன்றில் கூட வரவில்லை இந்த செய்திகள். ஏயையா இப்படி ஈழத்தமிழர் அழியும் போது உங்களின் நக்குகிற விசுவாசத்தை காட்டுகிறீர்கள். அது சரி வாங்குற காசுக்கு நக்கத்தானே வேணும். இந்த உளவியல் யுத்தத்திற்கு காரணம் புலிகள் அல்ல. மாறாக மக்களின் மனதில் ஒரு சந்தோசத்தை ஏற்படுத்தி பின் அது பொய்யாகும் போது மனச்சோர்வை ஏற்றபடுத்தவே என 24மணி நேரத்துற்குள் புலிகள் சொல்லிவிட்டார்கள். ஆனால் காட்டுத்தீபோல பரவிய இந்த வதந்திக்க அடுத்ததாக இந்த வதந்தியை பரவிட்ட நீங்கள் யார் என்று இப்போது சந்தேகிக்ப்படவேண்டியுள்ளது. எங்கள் மக்களின் குருதியில் பிழைப்பு நடத்தும் நீஙக்கள் வார்த்தையால் விபரிக்கமுடியாத கேவலமானர்கள்.

said...

ஆங்கில புத்தாண்டு அன்னிய கலாசாரம் என்று புத்தாண்டு நேரத்தில் பதிவு.
ஈழதமிழர் சாகும்போது பொங்கல் ஒரு கேடா என்று பொங்கலன்று பதிவு
தமிழ் புத்தாண்டு,தீபாவளி அன்றும் இதெல்லாம் பண்டிகையே இல்லை என்று பதிவுகள்
குடியரசு தினத்துக்கும், சுதந்திர தினத்துக்கும் இதே மாதிரி முகாரி ராகங்கள்.

உங்க புலம்பல்களை எல்லாம் எவனாவது கண்டுக்கிறானா? இல்லை நீங்க பதிவு போட்டதுக்காக குடியரசு தினத்தையோ, தீபாவளி. பொங்கலையோ எவனாவது கொண்டாடாம இருந்தானா? நீங்கல்லாம் ஏன்யா இப்படி பண்டிகையன்னிக்கு புலம்பிகிட்டு திரியறீங்க?

said...

//தமிழினத்துக்கு எதிரான தலைமைகளும் கட்சியும் எப்போதும் ஏதோ ஒரு பெயரில் இருக்கவே செய்யும், அதை எதிர்க்க சுயநலமில்லா, புள்ளை குட்டிகளின் பதவிக்காக கோமணத்தையும் கழற்றி தராத, அதிகாரத்துக்காக தம் இனத்தை அழிவை தடுக்காத தலைமையை தேர்ந்தெடுப்போம், துரு பிடித்த போர்வாள்களை தூக்கி எறிவோம்//

Easier option would be to throw out the failed LTTE leadership and bring some fresh blood there.

Leadership change is required in LTTE not in TN.

said...

என்ன கொடுமை குழலி. வீதி ப்யூப்பிள் என்றும் பாலா போன்றவர்கள் பின்னூட்டம் போட்டு நாம் பதிவெழுத வேண்டிய நிலை. இவனுங்களாம் இதுக்கு முன்னாடி சோ, ஜெயலலிதா, ராம் ஆகியோரையும் ஈழ விவகாரத்தில் இதுமாதிரி திட்டி இருபானுங்களா. ராமதாஸ் கருணாநிதி என்றதுமே வரிஞ்சுகிட்டு வாரானுக.

கருணாநிதி கும்பல் பேசாமல் பாப்பான்களிடமே ஆட்சியையும் கட்சியையும் கூட்டி கொடுத்துட்டு போவலாம்.

said...

ஈழம் பற்றி கவிதை
எழுதியுள்ளேன்!!
நேரமிருப்பின்
கருத்துரை
தரவும்

அன்புடன்
தேவா....

said...

//இத்தனை
வருட கலைஞர் ஆட்சியில், வரலாற்றில் இடம் பெரும் அரிய
பணியைச் செய்திருக்கலாம்.

ஆனால் துரதிட்டவசமாக, அவர் பெயர்" கலைஞர் டி.வி" ஓனர்
என்றுதான் வரலாறு சொல்லப்போகிறது.//
முகு இது சூப்பர் பஞ்ச் ஆக இருக்கே, இதை நான் என் கட்டுரையில் பயன்படுத்திக்கொள்கிறேனே....

said...

Voting For ADMK is தமிழின எதிரிக்கான வோட்டு

Voting For DMK is தமிழின துரோகத்துக்கான வோட்டு

Voting For தமிழர் Munnani is தமிழின எதிர்காலத்துகான வோட்டு
What’s happening currently in Eelam and dumped reaction in Tamil Nadu will have very serious impact in the Self Determination and Self Respect Of Tamils.

We can see that existing Dravidian parties are either supportive to Sri Lankan government or mute spectator of the happenings.

ADMK is Thamizhinna Ethiri
DMK is Thamizhina Throogi

Suitable Alternate front need to be formed and this is the NEED of this Hour. This alone will safe guard and protect the Tamils in this venomous world. And Tamils will have some one to raise and openly speak up Tamils Issues, else there won’t be any one to raise the voice of Tamils in Political arena.

• ADMK is Anti-Tamil, shell we don’t waste our time in discussing about it. But at least 60% of ADMK voters will (Note : Not Jaya’s Supporters or followers) support the cause of Tamils in Sri Lanka.

• DMK has back stabbed Tamils and become as a Power Addict and Slave of Congress. Karunanithi’s focus is only to protect the Wealth and to ensure smooth Power transition to his entire FAMILY. We can’t trust DMK further as the Pole Ship of Tamils.

• The Second Line DMK leaders and Leader-in-Lines never ever spoke about the recent carnage in Sri Lanka and voiced their support. M K Stalin speaks about only the Fund allotted to the Local Bodies and Women Self Help Groups. He can only become a good Manager / Administrator but NOT as a Leader, who takes brave decisions and take control of situations. He never ever demonstrated his voice / leadership skills on Tamils affairs. Same is the case of Azhagiri, he may bring victories on vote based politics, but still he need to prove his capabilities as a Tamil Leader.

• If any suitable alternative is shown, at least 75% of DMK voters / supporters will switch side at this movement based on the sufferings of Tamils in Sri Lanka and DMK’s inactiveness and back stabbing. (Note : NOT Karunanithi’s supporters or followers).

• Congress will face the worst decline of his voters and apparently 20 to 25 leaders alone will be there in each assembly constituencies, Congress is getting seats only because of alliance with Dravidian Parties.

• Other National Parties are not having enough support bases and not represent the average Tamils.

Now, the Only alternate is to bring the like minded parties in Tamil Nadu under one front for Supporting the Self Determination of Eelam Tamils and seek the Tamils support in the forth coming Parliament Election.

Hope Sonia is in revenge mood and his Son Rohul who’s projected as next Congress Leader will follow the same. Hence to counter this, bringing all like minded political parties and Leaders under single front is Need of the Hour.

This alone should be the Single Point Agenda and No ego should surface between them.

MDMK , Thirumavalan’s DPI, PMK, CPI, and small parties & groups like TR and others can form a viable alternative and contest the elections, keeping Sri Lankan Tamil issue as Single Point Agenda under the banner Tamilar Munnani.

By putting right candidates in very important constituencies, definitely this Tamilar Munnani can with at least 20 to 25 seats.

Very Important: Need to deploy high profile and popular candidates in Congress Leader’s constituencies to ensure that they are defeated.

Thirumavalavan – Chidambaram
Vijaya TR – Mailaduthurai (Mani Shankar)
Director Seeman – Sivagangai (P Chidamparam)
Actor Sathiyaraj – Erode (EVKS Elangovan)
Kaivijar Thamarai – Kovai (Prabu / SRB)
Kolathur Mani – Salem (KV Thangabalu)

If the above person’s are really interest in Tamils welfare, they should NOT keep away from contesting the elections.

If they get Peoples mandate, who else will question the Support for Sri Lankan Tamils.

Voting ADMK Alliance is Thamizar Ethirikanna Votu
Voting DMK Alliance is Thamizar Throogathukanna Votu
Voting for Tamilar Munnani is Thamizhar Ethirkalathukana votu

said...

இத்தனை
வருட கலைஞர் ஆட்சியில், வரலாற்றில் இடம் பெரும் அரிய
பணியைச் செய்திருக்கலாம்.

ஆனால் துரதிட்டவசமாக, அவர் பெயர்" கலைஞர் டி.வி" ஓனர்
என்றுதான் வரலாறு சொல்லப்போகிறது.//

said...

////உங்க புலம்பல்களை எல்லாம் எவனாவது கண்டுக்கிறானா? இல்லை நீங்க பதிவு போட்டதுக்காக குடியரசு தினத்தையோ, தீபாவளி. பொங்கலையோ எவனாவது கொண்டாடாம இருந்தானா? நீங்கல்லாம் ஏன்யா இப்படி பண்டிகையன்னிக்கு புலம்பிகிட்டு திரியறீங்க?////

யாரும் கண்டுக்கலையா? அதான் நீ பொச்சரிப்பு தாங்காம கெளப்பி கைல பிடித்துக் கொண்டு வந்துவிட்டாயே மிஸ்டர் கொண்டை! உம்ம மாதிரி இருட்டு குசு விடும் இம்சைகளுக்குத்தான் இப்பதிவு! இம்மாதிரி பதிவுகளால் ஆசனவாய் எரிந்து வாய் வழியாய் புகை யாருக்கு வரும், யாருக்கு வந்து கொண்டிருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும்!! கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு???

இன்னைக்கு இல்லான்னாலும் என்னைக்காவது ஒருநாளைக்கு இருக்குடி உங்களுக்கு!!! அன்னைக்கு உங்க அகுல் பிகில் வாங்கி டகுல் டப்பா டான்ஸ் ஆடத்தான் போகுது!!! வாழ்த்துக்கள்!!!!

said...

அனானி சமூகம் அவர்களுக்கு,
//என்ன கொடுமை குழலி. வீதி ப்யூப்பிள் என்றும் பாலா போன்றவர்கள் பின்னூட்டம் போட்டு நாம் பதிவெழுத வேண்டிய நிலை. இவனுங்களாம் இதுக்கு முன்னாடி சோ, ஜெயலலிதா, ராம் ஆகியோரையும் ஈழ விவகாரத்தில் இதுமாதிரி திட்டி இருபானுங்களா.
//
ஒவ்வொரு பிரச்சினையிலும் என் நிலைப்பாடு சரியா அல்லது கருத்து இப்படி இருந்தா ஓக்கே என்று உங்க மாதிரி ஆட்கள் கிட்ட சர்டிபிகேட் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.

அப்புறம், அப்படியே சற்று மரியாதையாக பேசவும் கத்துக்கிட்டு வரவும். நன்றி.