தலைவர்களும் தொண்டர்களும் வெவரமாத்தானே இருக்கானுங்க முத்துகுமரா
முத்துக்குமரா போயும் போயும் இந்த ஈன தமிழினத்துக்காக உயிர்விட்டாயே, ஏதோ உணர்ச்சிவசப்பட்டு தெளிவில்லாமல் லூசுத்தனமாக எரித்துக்கொண்டாய் என்று திட்டிக்கொண்டே தான் உன் கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன், பாதி படிக்கையிலேயே தெரிந்து போனது நீ தெளிவில்லாமல் எரித்துக்கொள்ளவில்லை, அரசியல், சமூகம் உலக வரலாறு என அத்தனையும் தெரிந்தே இருந்திருக்கிறாய் என்று.
தலைவன் கேட்கிறான் நான் ஆட்சி இழந்தால் நாளையே தமிழீழம் கிடைத்துவிடுமா என்று, தொண்டன் கேட்கிறான் நான் பதிவு போட்டா நாளைக்கே தமிழீழம் கிடைக்குமா என்று, நாளையே தமிழீழம் கிடைக்குமென்றால் நான் கத்திக்கொண்டே இருக்க தயார் என்கிறான், இப்படிபட்ட வெவரமான தலைவனும் அந்த தலைவனுக்கேற்ற வெவரமான தொண்டனும் வாழ்கிற நாட்டில் உனக்கு மட்டும் ஏனடா இப்படி கேட்க தோன்றவில்லை, இந்த தலைவனும் தொண்டனும் நாளை கேட்பார்கள் நீ செத்து போனதால் தமிழீழம் கிடைத்துவிட்டதா என்று?
மத்தியில் ஆட்சியின் பங்களியாக இருந்து கொண்டே எல்லா கேபினேட் முடிவுகளுக்கும் தலையாட்டி கொண்டு இங்கே வந்து அறிக்கையில் சத்தத்தையும் பேட்டிகளில் உணர்ச்சி கூச்சல் போடும் தலைவர்கள் தான் தமிழை பாதுகாக்க போகிறாராம் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காண்பிக்கும் தமிழ் பாதுகாவலர். எவ்வளவு வெவரமா இருக்காங்க பாருடா முத்துகுமரா.
எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம். உன்னை ஓரிருநாளில் புதைச்சிருவாங்க, அப்புறம் அடுத்த வருசம் எவனாவது நினைவு வைத்திருந்தால் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தோட ஒரு நினைவு அஞ்சலி வரும், அதுக்கு பின் அதுவும் நின்னு போயிரும்....
ஆனால் உன்னை போன்ற உணர்வாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் தானடா, உன்னை போன்ற உணர்வோடு ஆழ்ந்த அறிவும் எழுத்தாளுமையும் உடையவர்கள் இலட்சத்தில் ஒருத்தன் தானடா, அடையாளத்திற்காக தமிழை பயன்படுத்தி அதில் பணத்தையும், புகழையும் அறுவடை செய்யும் தலைவர்களும், எழுத்தாள தொண்டர்களும் உள்ள கூட்டத்தில் உன் போன்றவன் கோடியில் ஒருவன் தானடா? ஏன்டா போய்விட்டாய்?
உன் மரண செய்தியை கூட மழுங்கடித்தது கலைஞர் டிவி, ஹிந்து வோ செய்தியாக கூட போடவில்லை, மற்றவர்களும் லேசாக காண்பித்தன. போதும்டா முத்துகுமரா போய்ட்டு வா... ஆனால் ஒன்று எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம்.
முத்துகுமாரின் கடைசி கடிதம் "விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... " படிக்க இங்கே செல்லுங்கள்
4 பின்னூட்டங்கள்:
அன்பரே,
என் கண்கள் குளமாக உள்ளது.... எத்தனை மனிதர்களுக்கு அவர் போல் சிந்தனை வரும்?? எத்தனை மனிதர்கள் அவர் போல நிஜமான மனிதர்???
அவர் விதி அவ்வளவுதான் என்பதல்ல நம் முடிவு... உங்களிடமும், என்னிடமும் மற்றவர் இடமும் உள்ளது ஒரே ஒரு கடைசி துருப்பு சீட்டு... ஆம், வரும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சீட்டு. அதுவரை யாரும் எதுவும் புடுங்க கூட முடியாது என்பதே உண்மை.
நன்றி
தமிழ் உதயன்.
//எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம்//
இந்த நிலை மாறும்.இப்போது வேறு ஏதும் கூறும் மனநிலையில் இல்லை.
திரு முத்துக்குமார் அவர்களின் தியாகத்திற்கு கண்ணீருடன் தலைவணங்குகிறேன்,
தமிழன் இனியாவது திருந்த வேண்டும் நம்முடைய நண்பன் யார் எதிரி யார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், பார்பனர்களை அடியோடு விலக்க வேண்டும்,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்த தமிழகமும் புறக்கணிக்க வேண்டும், ஒட்டு பொறுக்க வரும் பொருக்கி அரசியல்வாதிகளை பிய்ந்த செருப்பால் அடித்து விரட்ட வேண்டும், குறிப்பாக காங்கிரஸ்கார பொறுக்கிகள் மீது மலத்தை கரைத்து ஊற்றவேண்டும், ஈழத்தில் சிங்களனுடைய துப்பாய்கிக்கும் அவனுடைய ஆண்குரிக்கும் நல்ல பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன அதை விளக்கு பிடித்தும் கூட்டிக்கொடுத்தும் இந்தியா தனது சிறப்பான பங்களிப்பை செய்துகொன்ன்டிருக்கிறது முதலில் தமிழர்கள் இந்துயாவைப் புறக்கணிக்க வேண்டும், பலஸ்தீன மக்கள் மீதும் ஆப்கன் மக்கள் மீதும் இந்தியாவுக்கு உள்ள கரிசனம் தமிழர்கள் மீது மட்டும் ஏன் இல்லை என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும், பிரான்சில் தலைக்கவசம் கட்டயமாக்கப்ட்டவுடன் தன் இனத்திற்கு வக்காலத்து வாங்க இங்கிருந்து தலைதெறிக்க ஓடிய சொறிநாய் மன்மோகன் தமிழக மீனவர்கள் சிங்கள சிப்பாய்களால் கொல்லப்படும்போது மட்டும் மவுனம் சாதிப்பது ஏன் அதற்க்கு உறுதுணையாய் இருக்கும் தமிழக அரசியல் தருதலைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே,
மும்பை தாக்குதலை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு செல்லாத இந்திய கிரிகெட் அணி இலங்கைக்கு மட்டும் எப்படி சென்றது, எதற்காக இந்த பாரபட்சம் இங்கு கொல்லப்பட்டது மனித உயிர்கள் என்றால் அங்கு கொல்லபடுவதும் மனித உயிர்கள் தான், இப்போதாவது திருந்துங்கள் தமிழர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படிக்கு
கோகுலகிருட்டிணன்
கருணாநிதியை இதில் இனி நம்பி பயன் இல்லை.. மருத்துவர் அய்யா அவர்களே நீங்களாவது மத்திய அரசில் இருந்து வெளி வரலாம், உங்கள் மகன் அன்புமனியை பதவி விலக சொல்லலாம்.. இந்த பிரச்சனையில் தீவிரமாக இருக்கும் நீங்கள் இந்த விஷயத்தில் மட்டுமெ ஏன் இப்படி கள்ள மவுனம் சாதிக்கனும்?
Post a Comment