கலாச்சார பாசிஸ்ட்களின் டிவியில் சாருநிவேதிதா

ஒன்னுமில்லை சாருநிவேதிதா மக்கள் தொலைகாட்சியில் வரும் புத்தாண்டு தினத்தன்று காலை பத்து மணிக்கு சாரு நிவேதிதா, தமிழ்ச் சமூக, கலாச்சார, இலக்கியச் சூழல் பற்றிப் பேசுவார் என்று அவர் தளத்தில் அறிவுப்பு வந்துள்ளது...

பாமக வின் கொள்கைகள் தாலிபான் கொள்கைகள் என்றும் மருத்துவர்.இராமதாசு அவர்களின் குடி பற்றிய எதிர்ப்புக்கும் இன்ன சில கொள்கைகளுக்கும் கலாச்சார பாசிஸ்ட்(மிகசரியாக இந்த வார்த்தையை சாரு பயன்படுத்தினாரா என்று நினைவில்லை ஆனால் அவர் இணையத்தில் நேரமெடுத்து தேடினால் கிடைக்கும் எந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று) என்றும் கூறியவர்களின் இடத்திலேயே சென்று பேசப்போகிறார், என்ன பேசியிருக்கிறார் என்ற ஆவலுடன் பார்க்க உள்ளேன்...

சிங்கையில் மக்கள் தொலைகாட்சி வருவதில்லை எனவே யாராவது அன்பு நண்பர்கள் பதிந்து வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சி

17 பின்னூட்டங்கள்:

said...

யோவ் மொதல்ல காசு கட்டிட்டு தளத்தைப் போய் பாருங்க...

said...

சிங்கத்தை சிங்கத்தின் குகையிலேயே சந்தித்து, பாசிசத்தை கைவிடுமாறு அறிவுறுத்தியிருப்பாரோ ;)

said...

பாமகவைப் பற்றிய சாருவின் கருத்துகளோடு எனக்கு உடன்பாடுண்டு. அதனால் நானும் பார்க்க ஆவலாயிருக்கிறேன் :)

said...

//பாமகவைப் பற்றிய சாருவின் கருத்துகளோடு எனக்கு உடன்பாடுண்டு. அதனால் நானும் பார்க்க ஆவலாயிருக்கிறேன் :)
//
உங்களுக்கெல்லாம் பாமகவைப் பற்றிய சாருவின் கருத்துகளோடு உடன்பாடில்லைன்னா தானுங்கோ ஆச்சரியமே....

உங்க லெவல், சாரு லெவல்லாம் வேற நீங்கலாம் பாலியல் சொதந்திரம் பற்றி பேசும் லெவலுக்கு போயிட்டிங்கோ.... அதனால உங்களுக்கு அப்புடித்தான் தோணும்...

எங்க(மக்கள்) பிரச்சினைகளே வேற.... எங்க(மக்கள்) பிரச்சினை மொதல்ல குடி, குடியெல்லாம் ஒங்களுக்கு கொண்டாட்டம் எங்களுக்கு அது நோய், அப்புறம் சாதி பிரச்சினைகள், கல்வி விழிப்புணர்வு பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகள்... எங்க மக்கள் இதெல்லாம் முடிச்சிட்டு அப்புறமாத்தான் பாலியல் சொதந்திரத்துக்கு வரமுடியும், இம்புட்டு பிரச்சினையும் முடிச்சிட்டு பாலியல் சொதந்திரத்துக்கு வரதுக்கு இந்த ஜென்மத்துல நேரமிருக்காதுன்னு நெனக்கிறேன்

said...

//சிங்கத்தை சிங்கத்தின் குகையிலேயே சந்தித்து, பாசிசத்தை கைவிடுமாறு அறிவுறுத்தியிருப்பாரோ ;)
//
ஹா ஹா

said...

தங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்த போதிலும் என் முதல் பின்னூட்டம் இதுவே :)

சாருவின் எழுத்திலேயே நிறைய வணிகத்தன்மை உண்டு. அவர் இணைய தளத்திலும் செட்டியாருக்கு விளம்பரம் உண்டென்பதை அனைவரும் அறிவர்.

கீழே விழுந்து பல்லை உடைத்துக் கொண்டதைக்கூட “பெயர்” எடுக்க ஒருவர் [யார் என்பதையும் பலரும் அறிவர்] அடித்து உடைத்ததாக பிரச்சாரம் செய்யத் தயங்காதவர்.

அப்படிப்பட்டவர், மக்கள் தொலைக்காட்சியில் பேச ஒப்புக்கொண்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

உங்கள் பின்னூட்டமின்றில் எனக்கு மாறுபாடான கருத்தொன்றும் உண்டு.

”குடி ஒரு கொண்டாட்டம்” என்பதெல்லாம் அரசியல் களத்தில் ஒழுக்கம் குறித்து காங்கிரஸ் இயக்கமும், பின் எம். ஜி. ஆரும் எடுத்த அதன் பின் முக்கியமாக மா. லெ குழுக்கள் வைத்த மிகக் கடுமையான ஒழுக்கவாதத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு கருத்தியல் - வாழ்வியல் நோக்கு.

இதை அதன் எல்லைகளுக்கு அப்பால் நீட்டித்ததால் பாதிப்பிற்குள்ளானவர் பலர் என்பதை அனுபப்பூர்வமாகவே உணர்வேன்.

அந்த அளவில் இன்றைக்கு அதை மட்டுப்படுத்தவேண்டும் என்ற கருத்து உண்டு.

மற்றபடி, அது அவரவர் விருப்பம் சார்ந்த தேர்வாக வரும்போது, அதை ஒழுக்கம் சார்ந்து நோக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புவேன்.

மற்றொன்று, குடி - வகைகள் என்று வரும்போது இன்று தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள கள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியும், Indian Made Foreign Liquor மட்டுமே அனுமதிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழும்.

அத்துடன் இணைந்த கேள்வி, அடித்தட்டு மக்களுக்கு குடிப்பழக்கம் - அதாவது, நமது பழங்குடி வாழ்வு, பாரம்பரிய மரபு சார்ந்த குடிவகைகள் என்றுமே பிரச்சினையாக இருந்ததில்லை. உடல் ஆரோக்கியத்திற்கோ பொருளாதார நலத்திற்கோ கேடாகவும் இருந்ததில்லை.

இன்றைய முதலீட்டிய பொருளாதார நுகர்வுக் கலாச்சாரத்துடன் இணைத்துப் பார்த்தாலே தற்காலத்திய குடிப்பழக்கத்துடன் இணைந்து எழும் பிரச்சினைகளை சரியான கோணத்தில் விமர்சிக்க முடியும் என்று தோன்றுகிறது.

மற்றபடி, குடிப்பழக்கம் சிலருக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சிலருக்கு பிரச்சினை என்று பொதுவாக கருதுவது விஷயங்களை சரியான கோணத்தில் புரிந்துகொள்ளவோ, வாழ்வியல் மாற்றுகளை முனவைக்கவோ உதவாது என்றும் கருதுகிறேன்.

நன்றிகள்.

said...

//தங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்த போதிலும் என் முதல் பின்னூட்டம் இதுவே :)
//
நன்றி, ஜ்யோவ்ராமும் இப்போதான் முதல் முறை என நினைக்கிறேன்...

//அவர் இணைய தளத்திலும் செட்டியாருக்கு விளம்பரம் உண்டென்பதை அனைவரும் அறிவர்.//
அவருக்கும் மாசம் அம்பதாயிரமோ ஒரு இலட்சமோ சம்பளம் வந்தா கொள்கை பிடிப்போட இருக்கலாம், வெறும் கொள்கையை மட்டும் வச்சிக்கிட்டு என்ன செய்யறது.

கொள்கைக்காக தினகரன் நடத்தினார் கே.பி.கந்தசாமி அவர்கள் என்ன ஆச்சி நட்டம் தான் ஆனது, அதே பேரன்கள் எடுத்து சும்மா தூள் கிளப்புலையா....

இப்போ ப்லாக்கில் எழுதுவதே வணிகமயமாகிப் போயிருக்கு இதுல நீங்க வேற இந்த புண்ணாக்கை பேசிக்கிட்டிருக்கிங்க...

//அது அவரவர் விருப்பம் சார்ந்த தேர்வாக வரும்போது, அதை ஒழுக்கம் சார்ந்து நோக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புவேன்.
//
என்ன செய்ய எங்களுக்கும் ஆசைதான் அதை விருப்பம் சாந்ததாக வைக்க வேண்டுமென, ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகமாக எங்கள் மக்களிடம் இருப்பதால் அதை ஒழுக்கம் சார்ந்தோ அல்லது என்ன எழவோ செய்து ஒழித்தால் போதும்....

said...

'உங்க' 'எங்க'... குழலி, நினைச்ச மாதிரியே எழுதிட்டீங்க :)

said...

//'உங்க' 'எங்க'... குழலி, நினைச்ச மாதிரியே எழுதிட்டீங்க :)
//
ஹா ஹா... நல்ல வேளை நீங்க நினைக்காத மாதிரி நான் எழுதலை....

'எங்க' வை நீங்க எப்புடி புரிஞ்சிக்கிட்டாலும் சரி.... அதைப்பற்றி நிச்சயம் எனக்கு கவலையில்லை, எங்க பிரச்சினை இப்போதைக்கு வேற... Priority Politics பற்றி உங்களுக்கு தெரியாதா என்ன? 'எங்க' Priority Politics ம் உங்க Priority Politics ம் வேற வேற...

கொஞ்சம் ஃப்ரீ செய்துகிட்டு வரேன், இன்னும் தெளிவா வேறொரு நாள் வேறொரு பதிவில் நாம நிறைய பேசலாம்....

said...

priority politics சரிதான். ஆனால், மற்றமையை விலக்கும் அரசியல்தான் பிடிக்கவில்லை.

நீங்கள் கவனித்திருக்கலாம். இந்தப் பாழாயாய்ப் போன பாலியல் சொதந்திரம் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள், அனைத்து விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்லும் ‘எங்க' மக்களுக்கான தேவைகள் வேறு என்பவர்கள் தங்களால் சகித்துக் கொள்ள (ஏற்றுக் கொள்வதுகூட வேறு விஷயம்) முடியாதவர்களை, விலக்குகிறார்கள் என்று.

ஒப்பீட்டளவில் inclusive தன்மையையே ஏற்கிறேன்.

சரி, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பேசுவோம்.

said...

// குழலி / Kuzhali said...

//தங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்த போதிலும் என் முதல் பின்னூட்டம் இதுவே :)
//
நன்றி, ஜ்யோவ்ராமும் இப்போதான் முதல் முறை என நினைக்கிறேன்...

//அவர் இணைய தளத்திலும் செட்டியாருக்கு விளம்பரம் உண்டென்பதை அனைவரும் அறிவர்.//
அவருக்கும் மாசம் அம்பதாயிரமோ ஒரு இலட்சமோ சம்பளம் வந்தா கொள்கை பிடிப்போட இருக்கலாம், வெறும் கொள்கையை மட்டும் வச்சிக்கிட்டு என்ன செய்யறது.

கொள்கைக்காக தினகரன் நடத்தினார் கே.பி.கந்தசாமி அவர்கள் என்ன ஆச்சி நட்டம் தான் ஆனது, அதே பேரன்கள் எடுத்து சும்மா தூள் கிளப்புலையா....

இப்போ ப்லாக்கில் எழுதுவதே வணிகமயமாகிப் போயிருக்கு இதுல நீங்க வேற இந்த புண்ணாக்கை பேசிக்கிட்டிருக்கிங்க...

//அது அவரவர் விருப்பம் சார்ந்த தேர்வாக வரும்போது, அதை ஒழுக்கம் சார்ந்து நோக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புவேன்.
//
என்ன செய்ய எங்களுக்கும் ஆசைதான் அதை விருப்பம் சாந்ததாக வைக்க வேண்டுமென, ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகமாக எங்கள் மக்களிடம் இருப்பதால் அதை ஒழுக்கம் சார்ந்தோ அல்லது என்ன எழவோ செய்து ஒழித்தால் போதும்....

December 25, 2008 10:09 AM
Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...

'உங்க' 'எங்க'... குழலி, நினைச்ச மாதிரியே எழுதிட்டீங்க :)//

குழலி எந்த ரீதியில் "உங்க","எங்க" என மிடில்கிளாஸ் ஒடுக்கப்பட்ட மோரான்ஸா அல்லது அபொலிட்டிக்கல் அபார்த்தீட் ஆக சொன்னாரா? அதை சுந்தர் எவ்வாறு புரிந்துகொண்டார் என்பதை அவள்கள்து மேலதிக உரையாடல்கள் மூலமே நான் கண்டு களிக்க முடியுமென்பதால்...ப்ளீஸ் டாக் பாய்ஸ்.

said...

பாஸ் தேங்க்ஸ் பார் த இன்பர்மேசன்..

said...

பா.ம.கவுக்கும் தலிபான்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை...இவர்கள் இன்னும் ஆட்சியை பிடிக்கவில்லை என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்...

said...

சத்யா, நீங்க பாட் டீ யா இல்லை பொட் டீ கடை யா என்பதில் இருக்கிறது பதில் :) :)

said...

மாசம் ஐம்பதாயிரம் சம்பாதித்தால்தான் கொள்கைப்பிடிப்போடு இருப்பார்கள் என்றால் அது பிடிப்பே அல்ல.

இப்படியான கருத்து புதியதும் அல்ல.

இதற்கு நேரடியான தொடர்புடைய சிக்கலான செறிவான விவாதங்களுக்கு தற்சமயம் எனக்கும் நேரம் இல்லையெனினும் ஒன்றிரண்டு புள்ளிகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

லெனின் தமது “என்ன செய்ய வேண்டும்?” நூலில் புரட்சிகர வர்க்கமாக கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட பாட்டாளி வர்க்கத்திலிருந்து முன்னணிப் படையான கம்யூனிஸ்டு கட்சிக்கு ஊழியர்களை வென்றெடுக்க இயலாது; மத்தியத்தர வர்க்கத்திலிருந்தே ஊழியர்களை வென்றெடுக்க முடியும் என்ற கருத்தை வலுவாக வைத்திருப்பார். (அதாகப்பட்டது மிடில் க்ளாஸ் மொரான்கள்)

இதற்கு எங்கல்சின் எழுத்துக்களையும் துணைக்கழைத்திருப்பார்.

(லெனினின் “அரசும் புரட்சியும்” நூலை பொட்டப் புள்ளைகளை டாவடிப்பதற்காக மட்டுமே கக்கத்தில் தூக்கித் திரிந்த கழிசடைகளுக்கு இவையெல்லாம் அவசியமில்லாமல் இருக்கலாம்.)

இதன் மையச் சரடாக ஓடுவது, நீங்கள் குறிப்பிடுவதற்கு ஒப்பானது.

அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் புரட்சிக்கர கட்சிகளில் இணைந்து வேலை செய்ய முடியாது. அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கைப் போராட்டமே பிரச்சினையாக இருக்கும்போது 'புரச்சி'க்காக எப்படி வேலை செய்வது என்ற கேள்வி.

தமிழக/இந்திய சூழலில் லெனினின் இந்த நோக்கை விமர்சனமின்றி பின்பற்றியதன் பாதக அம்சம் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைமையிலிருந்து ஊழியர்கள் வரை பாப்பாரக் கோட்டையாக மாறிப்போவது நிகழ்ந்தது.

லெனின் அத்தகைய கருத்தை முன்மொழிந்த போதிலும் நடைமுறையில் அவ்வப்போது தமது கட்சியில் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவும் செய்தார். அங்ஙனம் இருப்பதை உறுதியும் செய்து கொண்டார்.

நமது சூழலில் ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து ஊழியர்களை அதிக அளவில் சேர்ப்பதை, அவர்களைத் தமது களமாகக் கொள்வதை கம்யூனிஸ்டு கட்சிகள் கவனத்தில் கொண்டிருந்தால் பல கருத்தியல் நடைமுறை தவறுகளை தவிர்த்திக்கலாம் என்பது எனது கணிப்பு.

தற்சமயம் சில மா - லெ குழுக்கள் மட்டுமே இத்தகைய புரிதலுக்கு வந்திருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலித்துகள் மத்தியில் பணியாற்றிய காலங்களில் அதன் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் மிகுந்த வேகமும் நேர்மையும் இருந்ததையும் கவனிக்கலாம்.

ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு முதலில் அவர்களுக்கு நிறைய வசதிகள் வேண்டும் என்ற கருத்தையும் கொள்கைப் பிடிப்போடு இருக்க 'ஐம்பதாயிரம்' இருந்தால் முடியும் என்பதையும் இதோடு இணைத்து யோசிக்க வேண்டுகிறேன்.

கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பது வாழ்க்கைத் தேர்வும் தெளிவும் சம்பந்தப்பட்டதே. சிறு சமரசங்கள் எந்நாளும் சாத்தியமே. ஆனால், சில விஷயங்களைப் பெற வேண்டுமானால் சிலவற்றை இழந்தே ஆகவேண்டும் :)

மற்றது, குடி சமாச்சாரம்.

காலனிய காலத்திற்கு முந்தைய வாழ்வில் குடிப்பழக்கம் இன்றுள்ளது போல் பொருளாதார வாழ்வையே பாதிக்கும் விசயமாக இருந்ததில்லை.

கள் நமது வாழ்வின் மிகச் சாதாரணமான சொல்லப்போனால் ஆரோக்கியமான பானமாகவே இருந்தது/இருந்தும் வருகிறது.

1998 - ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.

அ. மார்க்சோடு மிகவும் நெருக்கமாக இருந்த காலம். ஒருமுறை அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார். மேலைத் தஞ்சைப் பகுதி. மறுநாள் அதிகாலை விவசாயக் கூலிகள் வரிசையில் வந்து நின்று தென்னங்கள் வாங்கி குடித்துவிட்டு சொம்புகளில் வாங்கியும் சென்றதைக் கேட்டேன்.

விசாரித்ததில், அவர்களது காலை ஆகாரமே அதுதான் என்று அ. மா விளக்கினார். 10 மணியளவில் சொம்பில் வாங்கிச் செல்லும் கள்ளை குடித்து விட்டு மீண்டும் வயலில் இறங்குவார்கள் என்பதையும் சொன்னார்.

கள் போதை தரும் பானமாக மட்டுமல்லாமல் உணவாகவும் இருந்ததை அன்று கண்டேன்.

கீழைத் தஞ்சையிலும் அவ்வழக்கம் உண்டு என்பதை எனது நண்பனும் தலித் கவிஞராக அறியப்பட்டவருமான தய். கந்தசாமி சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் கோவையில் (என்று நினைவு) கள் இறக்குவதன் மீதுள்ள தடையை நீக்கக் கோரி போராட்டம் ஒன்றும் நடந்தது.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் கள்ளச் சாராய மரணங்கள் அதிகம் இருந்ததில்லை; வட மாவட்டங்களில் அதிகம் இருந்தது என்பதோடும் இதை இணைத்துப் பாருங்கள்.

காரணம் இங்கு கள் மீதான தடை கறாராக இருந்தது.

எம். ஜி . ஆர் ஆட்சிக் காலத்திலிருந்து கள்ளச் சாராய மரணங்கள் தொடர் செய்தியாக இருந்த காலம் 70 - கள் மற்றும் 80 - களின் இறுதி வரை இருந்தது.

இக்காலப் பகுதியில் வடமாவட்டங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சுவது முதலில் வன்னியர் சமூகத்தினரிடமும் பின்னர் படிப்படியாக தலித் சமூகத்தினரிடமும் நகர்ந்தது.

இந்த இழப்புகள் கொடூரமானவை என்பதிலும் அவை அரசின் மறைமுக/நேரடி கொள்கைகளோடு சம்பந்தப்பட்டவை என்பதிலும் எந்த மறுப்பும் இல்லை.

Indian Made Foreign Liquor ஐ தடை கூட செய்ய வேண்டாம். கள் மீதான் தடையை நீக்கிவிட்டு, அதை ஒழுங்குபடுத்தினால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

குடிப் பழக்கம், போதை தரும் பானங்கள், 'வஸ்து'க்கள் நாகரீக காலத்திற்கு முற்பட்டிருந்தே இருந்து வருகிறது. அதை ஒழித்து கட்டுவது என்பது விருப்பமாகவும் கற்பனையாகவுமே இருக்கமுடியும்.

சரியான - ஆரோக்கியமான வழிகளில் அதை regulate செய்வது பற்றி யோசிப்பது, வழிகளை உருவாக்குவதுமே சாத்தியம் என்பது என் எண்ணம்.

நேரம் வாய்க்கும்போது உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அவசரமில்லை :)

said...

ஒரு விளம்பரம்... ஹி...ஹி.. (கரகாட்டக்காரன் செந்தில் பாணியில் படிக்கவும்) :)

said...

எது விளம்பரம் எது செய்தி ...

எதை செந்தில் கவுண்டமனி பாணியில் படிக்கவேண்டும் ... அனானி பன்னாடை விளக்குமா?

குழலி அவரது பார்வையில் சில விஷயங்களை எழுதுகிறார்.

அதை மறுக்க முடியாத, தன் பெயரில் தன் கருத்தை சொல்ல முடியாத அனானி பன்னாடையின் பின்னூட்டத்தையெல்லாம் நீங்கள் வெளியிட வேண்டுமா குழலி ?