யட்சினி

அவளை எனக்கு ரொம்ப காலமாக தெரியும்
அவளுக்கு கூச்சமே இருக்காது
நூறு பேர் கூட்டத்திலும் மாமா மாமா என்று
புருசனை கூப்பிடுவாள்
டிவிஎஸ்50ல் சல சலவென பேசிக்கொண்டே புருசனுடன் போவாள்
இப்போதெல்லாம் அவள் புருசனோடு பேசி யாரும் பார்க்கவில்லை

இப்போதும் கல்யாணம் காட்சிக்கு புருசனுடன் பைக்கில் போயிருக்கிறாள்
விசாரித்ததில் தான் தெரிந்தது பக்கத்து வீட்டு சின்ன பெண்ணை ஏறிவிட்டான் என்று
அழுகை, ஆர்பாட்டம், பஞ்சாயத்து எதுவுமில்லை
இப்போதெல்லாம் அவள் புருசனோடு பேசி யாரும் பார்க்கவில்லை

அன்றொரு காலை
அவள் வீட்டில் வயசுக்கு வந்த பெண் சத்தம் போடாமல் கிளம்பினால்
கண் விழித்து பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்தது
ஒருக்களித்து படுத்து கண்ணை மூடினாள்
கத்தியை தூக்கிக்கொண்டு சுற்றி சுற்றி வந்தான் புருசன்
எல்லாம் இந்த தேவடியாவால தான் என்று கையை ஓங்கி அடிக்க வந்தான்
கிட்ட வந்தவன் கையை இறக்கி பம்மி பின்னால் சென்றான்
அப்போதும் கூட அவள் பேசவில்லை.

அவள் புருசன் செத்த மறுநாள் துக்கம் விசாரிக்க போனேன்
வா புருசோத்து நல்லா இருக்கியா? என்றாள்

0 பின்னூட்டங்கள்: