க்ரீமிலேயர் வரையறை என்ன? பொருளாதார நிலை க்ரீமிலேயரை தீர்மாணிக்கின்றதா? ஏற்கனவே பலமுறை தேய்த்து விளக்கி சலித்து போனது புரியவேண்டாமென்று இருப்பவர்களுக்கு விளக்கி கிழிக்கத்தேவையில்லை, ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியாமல் இருப்பது தான் கொடுமை, விளக்கமாக பின்னொரு நாள் க்ரீமிலேயர் பற்றி எழுதுகிறேன் அதற்கு முன் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்கலாம் சோதனை முறையில். இதை வலியுறுத்தி முன்பு நான் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாக
செல்லா சொல்வது போல நாங்கள் என்று வந்துவிட்டால் கலைஞர் ராமதாஸ் குழந்தைகள் தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். அதுவே உங்களுக்கு என்று வந்தால் கோயிலில் மணியாட்டும்ஏழை அம்பிகள் தான் தெரிகிறார்கள்.
பொருளாதாரம் க்ரீமிலேயருக்கு அடிப்படையாக இருக்கக்கூடாது, க்ரீமிலேயர் பற்றிய உயர்சாதியினரின் கூச்சலுக்கு அடிப்படை காரணம் இடஒதுக்கீட்டை முழுமையாக ஒழிப்பதுவே, அதே மாதிரி இடஒதுக்கீட்டை ஒருதலைமுறை பயன்படுத்தினால் அவர்களின் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஒயின்ஷாப்பில் ஊற்றிக்கொடுக்கும் அரசாங்க வேலை இடஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டால், 'டி' கிரேட் பியூனாகவும், கிளார்க்காகவும் இடஒதுக்கீட்டால் பெற்றுவிட்டால் அவர்கள் பிள்ளைகள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியில்லையா? கலைஞருக்கும் இராமதாசுக்கும், பிற்படுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ், தாசில்தார்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்?
படிக்காத, கல்வி விழிப்புணர்வு இல்லாத குடும்பத்திலிருந்து ஒரே தலைமுறையில் ஹைஜம்ப் அடித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இயலாது, படிப்பறிவில்லாத குடும்பத்திலிருந்து கிளார்க்காகவும், 'டி' கிரேட் பணியாளர்களாகவும் வெளிவருவார்கள் (என் தந்தை தலைமுறை இப்படித்தான் பெரும்பாலும் ), அதிலிருந்து அடுத்த தலைமுறை தான் அடுத்த உயர்கல்வி நிலைக்கு கொண்டு சேர்க்க முடியும், உயர்சாதியினர் இடஒதுக்கீட்டிற்கே ஆப்பு வைக்கும் எண்ணத்தில் தான் இதை தடை செய்ய சொல்கின்றனர், ஒயின்ஷாப்பில் ஊற்றிகொடுக்கவும், 'டி'க்ரூப் கிளார்க்காக்வும் தலைமுறையை நிறுத்திவிட்டு அய்யோ பாருங்கள் இடஒதுக்கீடு கொடுத்தும் ஐஐடியில் இத்தனை இடம் காலியாக இருக்கின்றது, கல்லூரி ட்ராபவுட் இத்தனை என்று ஓலமிட்டு இடஒதுக்கீட்டினால் பலன் இல்லை என்று மொத்த இடஒதுக்கீட்டிற்கும் ஆப்படிக்க நினைக்கின்றனர். பொருளாதாரத்தை க்ரீமிலேயருக்கு அளவுகோலாக கொள்ளச்சொல்லும் உயர்சாதி ஏழைப்பங்காளர்கள் முதலில் அவர்கள் சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு வழிவிடட்டும், எப்படியா? கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்
உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்
1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.
இடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.
க்ரீமிலேயர் தொடர்பான ஆலோசனைகள்
1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.
2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் ?
க்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்?
இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....
இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.
உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.
பிற்சேர்க்கை:
ஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்
தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
http://www.annauniv.edu/tnea06/rama21.doc
CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,
31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)
20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)
18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)
இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.
வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.
அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.
உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...
http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?
அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.
எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.
தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.
பின்னூட்டத்திற்கு இங்கே சுட்டவும்