தமிழை வாழ வைத்தவர்களை அழித்த பின் மறைக்க நடத்தப்படும் செம்மொழி மாநாட்டு படங்கள்...
என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன் தமிழ்பெயர் என்ற பெயரில் ஆகாஷ்ம், ரமேஷும், சுரேஷும் கொட்டிக்கிடந்தது அந்த புத்தகமெங்கும் ஆனால் அட்டையில் சொன்னது அழகிய தமிழ் பெயர்கள் என்று. இணையமெங்கும் தேடினேன், இங்கும் இதே கதைதான்... இந்நிலையில் நிதித்துறை.காம் என்றொரு வலைத்தளம் தேடலில் சிக்கியது பல்லாயிரக்கணக்கான தனித் தமிழ் பெயர்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கென தொகுத்து வைக்கப்பட்டிருந்தது... டியூப்லைட் முழுக்க உபயம் பெயர் எழுதும் கடைசியாக சிறிய அளவில் குறிக்கப்பட்டிருந்தது அவர்களின் நிதி நிர்வாக தளமென்று.... தமிழ் பல்கலைகழகங்கள் இதை செய்யவில்லை, தமிழ் தமிழ் என சொல்லி இன்னும் பல யுகங்களுக்கு சொத்தும் அதிகாரமும் சேர்த்த ஈனத்தலைவர்களும் அவர்களின் அடிவருடிகளும் செய்யவில்லை இதை... ஆனால் அவர்கள் செய்திருந்தார்கள் அந்த 5 வருடங்களில்... அவர்களைப்போலவே தற்போது அந்த தளமும் இயங்கவில்லை, அதை படி(காப்பி) எடுத்தும் வைக்கவில்லை.. யாரேனும் படி எடுத்து வைத்திருந்தால் மீண்டும் இணையத்தில் ஏற்றி வையுங்கள்... உங்களுக்கு புண்ணியமாக போகும்.
இடையறாத போராட்டத்தில் இழந்து போன இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்காமல் விட்டுப்போன தமிழ் இலக்கண இலக்கியங்களை தாய் தமிழகத்திலிருந்து புலமைபெற்ற ஆசிரியர்களை தருவித்து கற்றுக்கொண்டனர் அந்த ஐந்த ஆண்டுகளில்... அவர்கள் வீழ்ந்த பின் வெகு சன ஊடகங்களில் பெயர்பலகையெங்கும், அரசு எங்கும் அதிகாரமெங்கும், பள்ளியெங்கும் அந்த தரணியெங்கும் அவர்கள் தனித்தமிழ் வளர்த்திருந்த செய்தி வெளியானபோது வீழ்ந்தது அவர்கள் மட்டுமல்ல தமிழும் சேர்ந்தே வீழ்ந்தது என்று புரிந்தது... அந்த மாநிலம் முழுக்க தமிழ் வளர்த்த அவர்கள் எங்கே... சன் , ரெட்ஜெயண்ட்ஸ் மூவிஸ், நைன் க்ளவுட்ஸ் கிரியேஷன்ஸ் என்று தமிழ் தாத்தாவின் பேரன்ஸ்கள் தமிழ் வளர்க்க செம்மொழி மாநாடு நடத்தும் இவர்கள் எங்கே...
அவர்கள் ஆண்ட போது அந்த மண்ணில் கசிப்பு(சாராயம்) இல்லையாம், ஆனால் இங்கோ டாஸ்மார்க் சாராயத்துக்கு செம்மொழி மாநாட்டின் 5 நாளில் மூன்று மாத விற்பனையை பெற வேண்டுமாம் சேல்ஸ் டார்கெட் வைக்கிறார்கள்...
அன்று யாழிலே நடந்த உலகத்தமிழ் மாநாடு, அதை சீர்குலைக்க சிங்கள அரசும் தமிழ் துரோக கைக்கூலிகளும் முயற்சிகள் எடுத்த போதும் மாநாட்டில் வரிசையாக வந்து "தள்ளாடாமல்" எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல் கலந்து கொண்டார்கள்... இன்றும் செம்மொழி மாநாட்டில் கோவை மாநகரமே டாஸ்மார்க்கின் சேல்சினால் தள்ளாடுகிறதாம்...
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டுமென்று சொல்லி சொல்லியே வீழ்த்திட்டானுங்களேயா தமிழையும் தமிழனையும்...
தமிழையும் தமிழரையும் வாழவைத்த அந்த தரணியெங்கும் சிங்களமும் அவன் சிதைக்கும் தமிழும் தட்டியிலிருக்க... தமிழையும் வாழவைக்காமல் தமிழரையும் வாழவைக்காமல் எம்மொழியே செம்மொழியே என்று ஏனடா தட்டி வைக்கிறீர்கள்..
வரிசை வரிசையாய் உங்கள் வண்டிகள் புத்தம் புதுசாய்... மாநாட்டுக்கா? மாநாட்டின் அலங்கரிக்கப்பட்ட நாடக மேடையை காணவா? அதோ அவர்களின் சொந்த வண்டிகள் மண்மூடி சிதைந்து கிடக்க அதன் உரிமையாளர்கள் பிச்சைக்காரர்களாய் முகாம்களில்