பதிவர் ஜோக்ஸ் அண்ட் பஞ்ச்ஸ்

பல மர்ம முடிச்சிகளோடும் சற்றும் எதிர்பாராத திடுக்கிடும் திருப்பங்களோடும் இடைவேளை விட்டு பிறகு மீண்டும் ஓடிக்கொண்டிருக்கும் பதிவர் சண்டையின் போது சிலரின் பஸ்ஸ்ஸ், டிவிட்டர், ஜிடாக் ஸ்டேட்டஸ் மெசேஜ் கமெண்ட்டுகள் மற்றும் சில ஜோக்குகள் உங்கள் பார்வைக்கு....

நானும் ஏற்கனவே இம்மாதிரி சீரியசான சீரியல் சண்டை போட்டுள்ளதால் எனக்கும் அந்த வலிகளும் எரிச்சலும் தெரியும், ப்ளீஸ் இது சும்மா லைட்டாக்குவதற்க்கே, யாரையும் புண்படுத்த அல்ல...

1.பாலபாரதி: வஜ்ரா வண்டி, RPF, போலிஸ் கமிஷனர்கிட்டலாம் சொல்லியாச்சு ஏற்பாடெல்லாம் முடிஞ்சிருச்சி?


குழலி: எதுக்கு தல?

பாலபாரதி: எதுக்கா அட அதாங்க ஜூன் 5 பதிவர் சந்திப்புக்குதான்

2.மனைவி: வாக்கிங் போறேன் ஜாக்கிங் போறேன்னு அஞ்சாம் தேதி மட்டும் மெரீனா பக்கம் போயிறாதிங்க

கணவர் : ஏன் டியர்?

மனைவி : அங்க தான் பதிவர் சந்திப்பு நடக்கப்போவுதாம்...

3. ஜ்யோராமும் பைத்தியக்காரனும் சேர்ந்தா?
உலகப்படம்

பிரிஞ்சா ?
கலகப்படம்

4. ஏய்ய்ய்ய்ய்ய் இதுவரைக்கும் நீ பாத்தது மொழி விளையாட்டு.. இனிமே நீ பாக்கப்போறது கிழி விளையாட்டு

5. ஜூன் 5 மெரீனாவில் வலைப்பதிவர் சந்திப்பு - டாக்டர் புரூனே SMS

குழலி: டாக்டர் ஒரு சந்தேகம், வலைப்பதிவர் வினவு வருவாரா?

6. செல்லமுத்து குப்புசாமி ஜிடாக் மெசேஜ்

இன்னும் ஒரு வாரம் பதிவர் சண்டை ஓடினாலே சாதிவாரி கணக்கெடுப்பு முடிஞ்சுரும் போல

மிச்சம் மீதி ஜோக்ஸ் பஞ்ச் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க...

10 பின்னூட்டங்கள்:

said...

//ப்ளீஸ் இது சும்மா லைட்டாக்குவதற்க்கே, யாரையும் புண்படுத்த அல்ல...//

ஹி ஹி கம்பெணிக்கு ஆள் இல்லாம இருந்தேன்! "வாங்க" வாங்க:))

said...

//ஹி ஹி கம்பெணிக்கு ஆள் இல்லாம இருந்தேன்! "வாங்க" வாங்க:))
//
எனக்கு ஏகப்பட்ட பதிவர்களோட வாய்க்கா தகராறு, அதனால சூடானா சுலுக்கெடுத்துடுவாங்க எல்லாம்...

said...

//இன்னும் ஒரு வாரம் பதிவர் சண்டை ஓடினாலே சாதிவாரி கணக்கெடுப்பு முடிஞ்சுரும் போல//

இதான்பா டாப்பு :))))

said...

//2.மனைவி: வாக்கிங் போறேன் ஜாக்கிங் //

ரெண்டு மனைவியா? அவ்வ்வ்

said...

//பல மர்ம முடிச்சிகளோடும் சற்றும் எதிர்பாராத //

ஒவ்வொரு முடிச்சா அவிழ்ப்பதால் யாரை முடிச்சவிக்கி என்று கூப்பிடுவது?

said...

ஜோ ரசித்ததை நானும் ரசிக்கிறேன்!

மற்றபடி எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு...!

ஆனா இதுக்கு இல்லையோன்னு(இல்லாம செய்யிறாங்கன்னு) நினைக்கத் தோணுது!

said...

ஏற்கனவே சொன்னதுதான்.. மறக்காம ராயல்டி அனுப்பிருங்க..

said...

அடப்பாவி மக்க...!

said...

//குழலி: டாக்டர் ஒரு சந்தேகம், வலைப்பதிவர் வினவு வருவாரா?
//

illa avar perla vera yaravathu varuvaangala

said...

//6. செல்லமுத்து குப்புசாமி ஜிடாக் மெசேஜ்

இன்னும் ஒரு வாரம் பதிவர் சண்டை ஓடினாலே சாதிவாரி கணக்கெடுப்பு முடிஞ்சுரும் போல//

அப்போ இந்த சண்டையே இந்திய அரசின் சதி தானா? ;))