ரத்தத்தை கழுவுகிறான் நரிச்சிரிப்புடன்

வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே 
வெறுப்பாய் இருக்குது தமிழே!

ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை 
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே

பார்ப்பன பரவலுக்கு எதிரானவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

சிங்கள வெறியர்களின் உச்சந்தலையில் ஓங்கியடித்தவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று

ஆரிய அதிகாரத்துக்கெதிரான
சமணர்கள் ஆயுதம் தமிழ்

சமணமுனிகளின் கொடூரத்திற்க்கெதிரான
பக்தியக்கத்தின் ஆயுதம் தமிழ்

பார்ப்பன அதிகாரத்துக்கெதிரான
ஒடுக்கப்பட்டோரின் ஆயுதம் தமிழ்

இந்திவெறியர்களின் ஆதிக்கபரவலுக்கெதிரான
தமிழர்களின் ஆயுதம் தமிழ்

சிங்களவெறியர்களின் கொடூரத்துக்கெதிரான
ஈழத்தமிழர்களின் ஆயுதம் தமிழ்

வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று

ஆனால் இன்றோ
துரோகிகள் சொல்கிறார்கள் தமிழே
நீ அவர்கள் கையிலாம்...

உன் மகன்கள் அங்கே 
அம்மணமாக்கப்பட்டு 
தலையில் சுடப்படுகிறார்கள்

உன் மகள்கள் அங்கே 
அம்மணமாக்கப்பட்டு 
இடையில் சுடப்படுகிறார்கள்

உன் மகன்கள் கருமாதியில்
உன் மருமகள்கள் தாலியறுக்க
உனக்கோ இங்கே துரோகிகள்
நடத்துகிறார்களாம்
அறுபதாம் கல்யாணம்

அதிகாரத்துக்கு அருகில்
இடம்பிடிக்க 
ஓடுகின்றதொரு கூட்டம்

புறங்கைய நக்குவதில் 
பங்கேதேனும் கிடைக்குமாயென
எச்சிலொழுக பார்க்கிறதொரு கூட்டம்

ஆனால் வெறும் பிரியாணி
துண்டுக்கே 
குலைக்கிறதொரு கூட்டம்

அந்த பிரியாணியில்
கிடக்கும் கால்களை
மெதுவாக கடியுங்கள்
அது எம் தமிழனின் கால்கள்

அந்த பிரியாணியில்
கிடக்கும் நெஞ்செலும்பை
மெதுவாக பிய்யுங்கள்
அது எம் தமிழனின் நெஞ்செலும்பு

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே 
நம்பிக்கைதுரோகி 
தம் கையிலிருக்கும் தமிழனின்
ரத்தத்தை கழுவுகிறான்
நரிச்சிரிப்புடன்

--------------------
ஏதோ ஒரு பதிவிலே படித்தேன்... கீழ்கண்ட வரிகளை
நெஞ்சை உலுக்கிய உண்மை அது

ஈழத்தில் கொல்லப்பட்ட 
தமிழர்களின் கல்லறைகளில் 
எழுதுங்கள்
இவர்கள் தாய்மொழி தமிழென்பதால் 
கொல்லப்பட்டவர்கள் என்று

11 பின்னூட்டங்கள்:

said...

Unmmai...

said...

//ஈழத்தில் கொல்லப்பட்ட
தமிழர்களின் கல்லறைகளில்
எழுதுங்கள்
இவர்கள் தாய்மொழி தமிழென்பதால்
கொல்லப்பட்டவர்கள் என்று//

அங்கிட்டும் மஞ்சள் நிறத்தில் எழுதினாலும் எழுதுவார்கள் பாஸ்.
:)

said...

ஹ்ம்!

said...

அருமையான கவிதை பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

said...

ஒரு ராவணன் படம் உருவாக்கிய அதிர்வை/பாதிப்பை கூட பதிவர்கள் மத்தியில் துரோகிகள் நடத்தும் செம்மொழி மாநாடு உருவாக்கவில்லை

said...

//புறங்கைய நக்குவதில்
பங்கேதேனும் கிடைக்குமாயென
எச்சிலொழுக பார்க்கிறதொரு கூட்டம்//


எல்லா அரசியல் கட்சியையும், ஒரே பாராவில் தாக்கிட்டிங்க!

said...

அருமை. செம்மறி ஆட்டு கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் அரைகுறைகளுக்கு ஒரு காப்பி அனுப்புங்கள்.

said...

"ஒரு ராவணன் படம் உருவாக்கிய அதிர்வை/பாதிப்பை கூட பதிவர்கள் மத்தியில் துரோகிகள் நடத்தும் செம்மொழி மாநாடு உருவாக்கவில்லை"

அட தரித்திரம் புடிச்சவனே,

பதிவர்னா பெரிய லவுடாவா? இல்ல பதிவர்னா உன்ன மாதிரி எணைய பொரட்சியாளய்ங்க மட்டுந்தான்னு நெனைச்சியா.

ஒங்க மேதாவித்தனத்தையும், பொச்சரிப்பையும் காட்டுறதுக்கு இப்ப இந்த இடம் சிக்கியிருக்கு.இதத் தவிர சமூகத்துக்கு என்ன சேவ செஞ்சுட்ட.

மரம்வெட்டி மரந்தாவப்போறானேன்னு நாண்டுக்கிட்டு சாகப்போறியா? இல்ல
ஒங்ப்பன், ஒங்காத்தா செத்துப்போயிட்டாளேன்னு உண்ணாவெரதம் இருந்து உசுர விடப்போறியா.

பொழுது போகலைன்னு கிறுக்கறத தவிர ஒரு பொச்சும் செய்யப்போறதில்ல.

உலகம் ரொம்ப பெருசு.

said...

வாங்க ஒரிஜினல் மனிதன்... ஹா ஹா வந்துட்டிங்களா? ஆமா பதிவை ஒரு பெயர்லயும் பின்னூட்டத்தை இன்னொரு பெயர்லயுமா ம்ம் கலக்குங்க.... சரி மாநாட்டுல பிரியாணியில் லெக்பீசா கிடைக்குதான்னு பாருங்க ஆமா கட்சி மாநாட்டுக்குலாம் ப்ரீயா பிரியாணியும் குவார்ட்டரும் தருவாங்க இதுக்கு 30 ரூபாய் காசுவாங்கறாங்களாமே... ம்ம்ம் தலைவன் சொன்னா 'பீ'யைக்கூட திங்கிற உம்மை மாதிரி ஆட்கள் இருக்கும்போது மஞ்சுத்துண்டு காரங்களுக்கு என்ன பிரச்சினை... என்னது மரம்வெட்டி மரம்தாவறாரா தாவிட்டு போகட்டும்... என்னையும் என்ன உங்க பிரியாணி குஞ்சு மாதிரி தலைவனுக்காக 'பீ' திங்கிறவன்னு நினைச்சியா? ஆமாம் மத்தவன்லாம் பதவிக்காகவும் பணத்துக்காகவும் கூவுறான் நீங்கலாம் ஏன் சும்மாவே கூட்டிக்கொடுக்கற மாமா வேலை பார்க்குறீங்க?

said...

ஈழத்தில் கொல்லப்பட்ட
தமிழர்களின் கல்லறைகளில்
எழுதுங்கள்
இவர்கள் தாய்மொழி தமிழென்பதால்
கொல்லப்பட்டவர்கள் என்று//

கல்லறை இருந்திருந்தால்
எழுதியிருக்கலாம்
கள்வர்கள் பிழைக்கட்டும்

said...

'ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் கல்லறைகளில் எழுதுங்கள் இவர்கள் தாய்மொழி தமிழென்பதால் கொல்லப்பட்டவர்கள் என்று'

கொடுமையான உண்மை அய்யா.
எனது பெயர் 'எல்லாளன்'என்பதற்க்காக
14 வயது சிறுவனாக இருந்தும் அடிமேல் அடி அடித்தார்கள் அன்று.இவர்கள் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே தீரவேண்டும்