மாபலி விருந்து அழைப்பு! - இனத்துரோகியின் செம்மொழி மாநாடு

மாபலி விருந்து அழைப்பு! - மாலதி மைத்ரி கவிதை

ன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருந்தை வழங்குபவர்கள்

ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.

குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!

நன்றி
ஆனந்தவிகடன்

எம் இனத்தை கொன்றவர்களுக்கு உதவியாகவும் அவர்களின் நாற்காலிக்கு வலிமையூட்டியும் இருந்த இனத்துரோகி தன் மேலிருக்கும் நம் இனத்தின் இரத்தத்தை கழுவ எடுக்கும் இந்த செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்...

ஓணாண்டி புலவர்கள் துரோகியை வாழ்த்திப்பாடட்டும், என்ன செய்ய அவர்களுக்கும் பிழைப்பு என்று ஒன்றுள்ளதே...

6 பின்னூட்டங்கள்:

said...

போகிற போக்கில் பலிபீடத்துக்கருகில் உடந்தையாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவையும், கொலைபாதகத்தை முன்னின்று செய்து அதை வெளியே சொன்னதற்காக உலகமா நீதிபதி நோத்தாப்பய -வால் தூக்குத் தண்டணையை இலவசமாய் பெற்ற சரத் பொன்சகா, ஒட்டுமொத்த இனத்தை அழிக்க கட்டளையிட்ட மகிந்த, நோத்தாப்பய,பசில் ராசபக்‌ஷேக்களையும், இந்து இராம், சோ,விஜய் நம்பியார், நாராயணன்,சிவசங்கர் மேனன், சிதம்பரம்,(அந்த ரா உள்வாளி பாதர அழைச்சிருக்காங்களே) ஆகியோரை அழைக்காத்தற்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்!
:(

said...

///////மாபலி விருந்து அழைப்பு! - இனத்துரோகியின் செம்மொழி மாநாடு"////////////


x
x
x
x
x

said...

I am also joining with you ignoring செம்மொழி மாநாடு.

said...

படத்துல கருப்பு கண்ணாடி மிஸ்ஸிங்.
:)

said...

மஞ்சள் துண்டு காணொம்?

said...

முத்தமிழ் வித்தகர் தமிழின காவலர் தானை தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க! இப்படி சொல்லி திரியும் கூட்டம் லட்ச கணக்கில் இருக்கும் போது, என்ன கவிதை இது? கவிஞர் கனிமொழி கருணாநிதி எழுத்துற கவிதையை பதிவேற்றுங்கள். ப்ளீஸ்.