தமிழை வாழ வைத்தவர்களை அழித்த பின் மறைக்க நடத்தப்படும் செம்மொழி மாநாட்டு படங்கள்...

என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன் தமிழ்பெயர் என்ற பெயரில் ஆகாஷ்ம், ரமேஷும், சுரேஷும் கொட்டிக்கிடந்தது அந்த புத்தகமெங்கும் ஆனால் அட்டையில் சொன்னது அழகிய தமிழ் பெயர்கள் என்று. இணையமெங்கும் தேடினேன், இங்கும் இதே கதைதான்... இந்நிலையில் நிதித்துறை.காம் என்றொரு வலைத்தளம் தேடலில் சிக்கியது பல்லாயிரக்கணக்கான தனித் தமிழ் பெயர்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கென தொகுத்து வைக்கப்பட்டிருந்தது... டியூப்லைட் முழுக்க உபயம் பெயர் எழுதும் கடைசியாக சிறிய அளவில் குறிக்கப்பட்டிருந்தது அவர்களின் நிதி நிர்வாக தளமென்று.... தமிழ் பல்கலைகழகங்கள் இதை செய்யவில்லை, தமிழ் தமிழ் என சொல்லி இன்னும் பல யுகங்களுக்கு சொத்தும் அதிகாரமும் சேர்த்த ஈனத்தலைவர்களும் அவர்களின் அடிவருடிகளும் செய்யவில்லை இதை... ஆனால் அவர்கள் செய்திருந்தார்கள் அந்த 5 வருடங்களில்... அவர்களைப்போலவே தற்போது அந்த தளமும் இயங்கவில்லை, அதை படி(காப்பி) எடுத்தும் வைக்கவில்லை.. யாரேனும் படி எடுத்து வைத்திருந்தால் மீண்டும் இணையத்தில் ஏற்றி வையுங்கள்... உங்களுக்கு புண்ணியமாக போகும்.

இடையறாத போராட்டத்தில் இழந்து போன இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்காமல் விட்டுப்போன தமிழ் இலக்கண இலக்கியங்களை தாய் தமிழகத்திலிருந்து புலமைபெற்ற ஆசிரியர்களை தருவித்து கற்றுக்கொண்டனர் அந்த ஐந்த ஆண்டுகளில்... அவர்கள் வீழ்ந்த பின் வெகு சன ஊடகங்களில் பெயர்பலகையெங்கும், அரசு எங்கும் அதிகாரமெங்கும், பள்ளியெங்கும் அந்த தரணியெங்கும் அவர்கள் தனித்தமிழ் வளர்த்திருந்த செய்தி வெளியானபோது வீழ்ந்தது அவர்கள் மட்டுமல்ல தமிழும் சேர்ந்தே வீழ்ந்தது என்று புரிந்தது... அந்த மாநிலம் முழுக்க தமிழ் வளர்த்த அவர்கள் எங்கே... சன் , ரெட்ஜெயண்ட்ஸ் மூவிஸ், நைன் க்ளவுட்ஸ் கிரியேஷன்ஸ் என்று தமிழ் தாத்தாவின் பேரன்ஸ்கள் தமிழ் வளர்க்க செம்மொழி மாநாடு நடத்தும் இவர்கள் எங்கே...

அவர்கள் ஆண்ட போது அந்த மண்ணில் கசிப்பு(சாராயம்) இல்லையாம், ஆனால் இங்கோ டாஸ்மார்க் சாராயத்துக்கு செம்மொழி மாநாட்டின் 5 நாளில் மூன்று மாத விற்பனையை பெற வேண்டுமாம் சேல்ஸ் டார்கெட் வைக்கிறார்கள்...

அன்று யாழிலே நடந்த உலகத்தமிழ் மாநாடு, அதை சீர்குலைக்க சிங்கள அரசும் தமிழ் துரோக கைக்கூலிகளும் முயற்சிகள் எடுத்த போதும் மாநாட்டில் வரிசையாக வந்து "தள்ளாடாமல்" எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல் கலந்து கொண்டார்கள்... இன்றும் செம்மொழி மாநாட்டில் கோவை மாநகரமே டாஸ்மார்க்கின் சேல்சினால் தள்ளாடுகிறதாம்...


வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டுமென்று சொல்லி சொல்லியே வீழ்த்திட்டானுங்களேயா தமிழையும் தமிழனையும்...














தமிழையும் தமிழரையும் வாழவைத்த அந்த தரணியெங்கும் சிங்களமும் அவன் சிதைக்கும் தமிழும் தட்டியிலிருக்க... தமிழையும் வாழவைக்காமல் தமிழரையும் வாழவைக்காமல் எம்மொழியே செம்மொழியே என்று ஏனடா தட்டி வைக்கிறீர்கள்..






















இல்லாத தெய்வங்களுக்கு இங்கே வரிசையாக காவல்காக்கும் சிலைகள், ஆனால் அங்கேயோ உயிர்கொடையளித்த காவல்தெய்வங்கள் துயிலுமிடமே சிதைக்கப்பட்டு கொள்ளை போகிறது...



வரிசை வரிசையாய் உங்கள் வண்டிகள் புத்தம் புதுசாய்... மாநாட்டுக்கா? மாநாட்டின் அலங்கரிக்கப்பட்ட நாடக மேடையை காணவா? அதோ அவர்களின் சொந்த வண்டிகள் மண்மூடி சிதைந்து கிடக்க அதன் உரிமையாளர்கள் பிச்சைக்காரர்களாய் முகாம்களில்














நம் பிள்ளைகள் இங்கே கும்மியடிக்க செத்துபோன இந்த பிள்ளைகளுக்கு இந்நேரம் தெவசமே கொடுத்திருப்பார்கள்

வாழிய செம்மொழி... வாழ்க செம்மொழி காவலர்கள்

42 பின்னூட்டங்கள்:

ரவி said...

பேச்சற்று போகவைக்கும் பதிவு !!

வால்பையன் said...

அதையெல்லாம் மறைக்க தான் இதை செய்கிறார்கள். நீங்க திரும்பவும் ஞாபகபடுத்துனா மட்டும் தமிழனுக்கு சொறனை வந்துருமா!
அதுவும் கழக கண்மணிகளுக்கு!?

Anonymous said...

உன்மை எழுதியதற்க்கு கோடி நன்றிகள்

TAMIL said...

உன்மை எழுதியதற்க்கு கோடி நன்றிகள்

வேல்பாண்டி said...

http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.html

குழலி, மேலே உள்ள இணைப்பில் அந்த 46 ஆயிரம் பெயர்கள் உள்ளது. என் மகளுக்கு பெயர் தேடும்போது மிகவும் உதவிய தளம்.

palPalani said...

ரொம்ப கொடுமை சார்!

கரிகாலன் said...

தமிழினத் துரோகி கருணாநிதியால் நடத்தப்படும் செம்மொழி கூத்தைக்கண்டு இனமானமுள்ள தமிழர்கள் உண்மையில் மனஉளச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் கருணாநிதி போன்றவர்கள் தமிழினத்தின்மீது தொடர்ந்து ஆளுமை செலுத்தப்படுவது தமிழினத்திற்கு வெட்கக்கேடு.

பதி said...

குழலி,

இணைப்பு இங்கே உள்ளது http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.html

Anonymous said...

என்ன செய்ய ,,பெருமூச்சு மட்டுமே மிச்சம்

கோவி.கண்ணன் said...

//அந்த மாநிலம் முழுக்க தமிழ் வளர்த்த அவர்கள் எங்கே... சன் , ரெட்ஜெயண்ட்ஸ் மூவிஸ், நைன் க்ளவுட்ஸ் கிரியேஷன்ஸ் என்று தமிழ் தாத்தாவின் பேரன்ஸ்கள் தமிழ் வளர்க்க செம்மொழி மாநாடு நடத்தும் இவர்கள் எங்கே...//

நைட் கவுன், நைன் க்ளவுன்ஸ் என்கிற பேரை யாராவது பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் அதையும் பேரன்க்ள் பதிவு செய்துவிடுவார்கள்.

*****

என்னுடைய கண்றாவிக் கவிதை

உண்மைத்தமிழன் said...

சூடு, சொரணையுள்ளவங்ககிட்ட பேசலாம்..!

இவங்ககிட்ட முடியுமாண்ணே..!

We The People said...

tamil thatha vazhga vazhgannu kovai makkal vazhthuvathu ungalukku porukkalaiyaa

ப்ரியன் said...

குழலி , அத்தளத்தை முன்பு எப்போதோ முழுவதுமாய் தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன்.இப்போது என்னுடைய இணையதளத்தில் மீண்டும் ஏற்றியுள்ளேன்.

http://priyanonline.com/?page_id=516

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நமக்குப் புரிந்தது. பேராசிரியர் சிவத்தம்பிக்குப் புரியவில்லையே! என்ன? நிர்ப்பந்தமோ?

தமிழன்-கோபி said...

எரிந்து கொண்டிருக்கும் வீட்டில் எவனோ யாகம் வளர்ப்பது போல உள்ளது இந்த செம்மொழி மாநாடு. அவனவன் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் நிலையில் இப்போ
இந்த மாநாடெல்லாம் அவசியமா ?

தமிழ் அறிஞர்களே வாருங்கள் வந்து நம் முதல்வருக்கு மிச்ச மீதி ஏதும் புகழ் பாட வார்த்தைகள் இருந்தால் பாடிவிட்டு செல்லுங்கள் .


ஒரு படித்த முதல்வன் வருவான்... அவன் முதல்வனுக்கு உரிய வேலைகளை மட்டும் பார்ப்பான் ... அரசு ஊழியர்களை வேலை பார்க்க வைப்பான். அனைத்தையும் கணினி மயம் ஆக்குவான். ஊழலை கண்காணிக்க காமிரா பொறுத்த உத்தரவிடுவான் ... தமிழ் நாட்டை மற்றொரு ஜப்பானாக மாற்றுவான்...மதுரை மலேசியாவாக மாறும் .. சாலைகள் உயர்தர அழகு பெரும்.சென்னை சிங்கபூராக மாறும். சாலைகள் அனைத்தும் கச்சிதமாக சிக்னல் விளக்குகளுடன் வழி விடும். தமிழர் வாழ்க்கை பாதுகாப்பானதாக மாறும் . கோவில்கள் மேம்படுத்தப்படும் . தமிழ் மென்பொருட்களுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கும் ...கல்வி கணினியில் தமிழில் ஒளிரும். அந்த முதல்வன் மகளுக்கு Twitter இல் காலை வணக்கம் சொல்வான். பொதிகை தொலைகாட்சியில் மக்கள் குறை தீர்ப்பான் .... இலங்கைக்கு பாலம் அமையும்...

தமிழ் மொழி மாற்றம் பெரும்.. சில வார்த்தைகள் தேவை குன்றி அதிகாரத்தில் இருந்தே நீக்க வேண்டி வரும்...அந்த வார்த்தைகள் பிச்சை, வறுமை, இலவசம், லஞ்சம்...

அரசியல் ஒரு கார்பரேட் வேலை போல மாறும்.அன்று இந்த ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒழிந்துவிடும்...அன்று பாடுவோம் நாங்கள் செம்மொழியான தமிழ் மொழியாம் என்று ....


http://4questions4u.blogspot.com

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழனும், அவனது மொழியும் பனை நாட்டில்(ஈழத்தில்) சிதைக்கப்பட்டிருப்பது தாய்த் தமிழகத்து தா(த்)தாவுக்கு தெரியாமலா இருக்கும்!?

அது தமிழக மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்று கருணாநிதி நடத்தும் மாநாடு ஒரு இருட்டடிப்பின் உச்சம். அதற்கு அவருக்குத் தேவைப்பட்டது ஈழத்து பிராண்டட் வயதான அனைவராலும் அறியப்பட்ட இலக்கியவாதி!

கா.சிவத்தம்பியை வைத்து காரியத்தை செய்கிறார் தமிழர்களுக்கு!
துணைக்கு மந்திரம் ஓத தினமணி வைத்தியனாதன்(இவர் வரமாட்டேனுட்டாராம், மல்லுக்கட்டி அழைச்சிருக்காங்க),தினமலர் கிருட்ஷ்ணமூர்த்தி, இந்து ராம், நித்தியானந்தா வீடியோவை இணையத்தில் விட்டு சந்தா பெற்று பிழைக்கும், ஜெகத் கஸ்பார் என்னும் ரா உளவாளியை கட்டுரை எழுத வைத்துப் பிழைக்கும் நக்கீரன் கோபால்...இன்னபிற அல்லக்கைகள்...! பிரியாணிக்கு அலையும் பிராய்லர் கோழைகள்! ஓணாண்டி ஜிங்குஜா பிராண்ட் இலக்கிய வியாதிகள்....!

இவங்க குடும்பமே பெரிய ஜயண்டாமே! அதான் இவங்க தமிழ வாழ வைத்த வண்டவாளமா இல்லை தண்ட’வாளமா?(ரயில் வராதப்ப தல வச்சு படுத்தது)

Unknown said...

யாருக்கும் அடங்காமல், யாரையும் மதியாமல், இவ்வுலகில் அனைவரையும் பகைத்து, வளர்த்த மார்பில் பாய்ந்து,எந்த தீர்வுக்கும் ஒப்பாமல்,எந்த சமரசத்தையும் ஏற்காமல்,செருக்கோடு திரிந்து, சகோதர யுத்தம் செய்து, பலரை கொன்றழித்து,தன்னவரே தூரோகியானதால்---- இனபலியானது! இந்த கொடுமைக்கு உம் தலமையும்,துப்பாக்கியை நம்பிய உம் மக்களே காரணமேயன்றி, இந்தியத் தலைவர்களோ/மக்களோ காரணமில்லை!
"துன்பியல்" சம்பவர்த்திற்குப் பின், இந்திய மக்களால், கைவிடப்பட்டீர்!
எம் நாடு தனி! எம் வழி தனி! உங்களுக்காக,சில காலம் கண்ணீர் வடிக்கலாமே யன்றி, எக்காலமும் நினைத்து மருக எங்களுக்கு அவசியமில்லை!
மேலும், இது போன்று எம் நாட்டையும், எம் தலைவர்களையும் தூற்றுவதால், மேலும் உம் மேல் வெறுப்பு தான் வளரும்!
" தீதும் நன்றும் பிறர் தர வாரா"

Anonymous said...

தமிழைக் கொன்று கொள்ளிவைத்தவர்கள் இன்று தமது தேவைக்காக நாடத்தும் செம்மறி மாநாடு. தமிழையே அவமானப்படுத்தும் அரசியல் வியாதிகளை இனியாவது அடையாளம் கண்டு கொள்வார்களா? தமிழர் விழித் தெழுவார்களா? யாழ்.

கிடுகுவேலி said...

சிவத்தம்பி அய்யாவின் அரங்கேறும் ஆசை கண்டு அகத்துள் அவமானப் படுகிறேன். ஆசைகளைத் துறக்கும் அனுபவ வயதில் அல்லல்பட்டு நிற்கும் ஒரு இனத்தில் இருந்து அகம்பாவத்தின் விளைவாக நடக்கும் ஒரு மாநாட்டுக்காக நடுநாயகமாக இருக்கும் அய்யாவை நினைத்து வெட்கப்படுகிறேன்.வேதனைப்படுகிறேன்.
இரண்டு முறை மாநாட்டுக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதற்கு மன்னிப்போ வேதனையோ அல்லது எதுவித சமரசமும் இல்லாத நிலையில் அய்யாவின் அரங்கேறும் ஆசை அருவருப்பாக உள்ளது.

செங்குருதியில் தோய்ந்து அது காயாமல் இருக்கும் ஒரு இனத்தின் மொழிக்கு எடுக்கும் விழா எனும் போது கண்ணீர்தான் மிச்சம்...!!!

குழலி / Kuzhali said...

வாங்க ரம்மி...

//இது போன்று எம் நாட்டையும், எம் தலைவர்களையும் தூற்றுவதால், மேலும் உம் மேல் வெறுப்பு தான் வளரும்!
//
எம் நாடு, எம் தலைவர்கள் ஹா ஹா ஹா அப்போ நான் யாரு ராசா? நானும் தமிழகத்திலே பிறந்து தமிழகத்திலே வளர்ந்து தமிழகத்திலே படித்து பிழைப்புக்காக வெளிநாட்டில்வேலை செய்கிறேன்... அப்போ நான் யாரு ரம்மி ராசா? ஆனால் இந்த மானங்கெட்ட நாட்டில் பிறந்ததற்க்கு வெட்கப்படுகிறேன்... எம் நாடாமே எம் நாடு? ஹா ஹா ராசா ரம்மி ராசா தமிழனாக பிறந்திருப்பாயே யானால் அது நிச்சயம் உம் நாடு அல்ல... நீவிர் அங்கே இரண்டாமிடத்தில் தான்... அது அவர்கள் நாடு... அந்த தேசத்திலே நீ அடிமை ராசா அடிமை...

அ.முத்து பிரகாஷ் said...

நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான். ஒத்துக்குறேன் ...
ஆனாலும் ...
...
செம்மொழி வாழ்த்துக்கள் !
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_24.html

Anonymous said...

-உ-/~=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=~//=#”டாக்குட்டர் கயவாளி” நடாத்தும் இது, %”செம்பழி” மாநாடு..,_’தன்னினம்’ என்று கூறிவந்த ஏமாளித் தமிழினத்தை அங்கே இலங்கையின் ஈழத்தில் அளிச்சுப்போட்டு, இங்கே “பேய்”த்-தமிழ்நாட்டின் கொங்குத் தலைநகரின்கண் அத் தீராப் பழியை மறச்சுப் “பேர்காக்க,-மேலும் பேர்வளர்க்க,அதைப் பிறங்கடைகட்கு(வாரிசுகட்கு)ஈந்துவிட்டுப் போக/இருக்க..” நடாத்தும்:-அக் கொடுங்கோற் பழியைச் செம்மையாக்கி(!)க் காட்டி அரசாண்டு தொடர்ந்துங் ”காசு பார்க்க”ப் போடப்படும்:- பரமாண்டத் தெருக்கூத்தே யன்றி வேறில்லை../~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|சிவ**சிவ=|

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

@ குழலி ,

கண் கலங்கிவிட்டது.. தமிழனுக்கு இனி என்ன இருக்கிறது?

//
//இது போன்று எம் நாட்டையும், எம் தலைவர்களையும் தூற்றுவதால், மேலும் உம் மேல் வெறுப்பு தான் வளரும்!
////

பொறம்போக்கெல்லாம் தலைவன்... பொறுக்கி தின்பவன் வாழ்வதெல்லாம் ஒரு நாடு...

நானும் பச்சை தமிழ் நாட்டு தமிழன் தானுங்க..

ஜோதிஜி said...

சிலருக்கு குற்ற உணர்ச்சியாவது வருமா?

Anonymous said...

//என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன்//

சரி, மகனுக்கு என்ன பேர் வச்சிங்க?

கோவி.கண்ணன் said...

தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
தமிழை வாழ வைத்தவர்களை அழித்த பின் மறைக்க நடத்தப்படும் செம்மொழி மாநாட்டு படங்கள்... - 25/27
Who Voted?குழலி / Kuzhali

********

உங்கள் கருத்து பரவலாக அனைத்துப் பதிவர்களையும் சேர்ந்திருக்கிறது. பாராட்டுகள்

கோவி.கண்ணன் said...

//. நீவிர் அங்கே இரண்டாமிடத்தில் தான்... அது அவர்கள் நாடு... அந்த தேசத்திலே நீ அடிமை ராசா அடிமை...//

ரம்மி சார் தினமலரின் தீவிர விசிறி, விசுவாசி. அவருடைய பொது அறிவு தினமலர் கொடுத்த நன்கொடை. தினமலர் கருத்து எதிராக யாராவது எழுதினால் பொங்கிடுவார்.

Anonymous said...

//சிவத்தம்பி அய்யாவின் அரங்கேறும் ஆசை கண்டு அகத்துள் அவமானப் படுகிறேன்.//

பதிவர்கள் சிலரே அங்கு சென்று அதை பெருமையுடன் எழுதியுள்ளார்கள். அதைக் கூட இங்கு தட்டிக் கேட்க ஆளில்லை.

தமிழன் இதை விட அதிகம் கேவலப்பட்டுவிட முடியாது.

கனத்த மனதுடன்
ஒரு தமிழன்

சீனு said...

:(

அன்புடன் நான் said...

மனம் கனக்கிறது.

(கனக்கும் மனமிருப்பவர்களுக்கும் மானமிருப்பவர்களுக்கும்)

Jerry Eshananda said...

ஐயோ.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

நிச்சியமான் உண்மை. இவர்களெல்லாம் வாய்க்கரிசியை எடுத்து பொங்கி தின்பவர்கள்.

முகவை மைந்தன் said...

என்னுயிர்தோழன்ல வரும் 'வரலாறு எல்லாத்தையும் மன்னிச்சிரும்னு சொல்லிட்டாரு'ன்ற உரையாடல் ஏனோ வடிவேலுவையும் நினைவு படுத்துகிறது :-(

Anonymous said...

யாருக்கும் அடங்காமல், யாரையும் மதியாமல், இவ்வுலகில் அனைவரையும் பகைத்து, வளர்த்த மார்பில் பாய்ந்து,எந்த தீர்வுக்கும் ஒப்பாமல்,எந்த சமரசத்தையும் ஏற்காமல்,செருக்கோடு திரிந்து, சகோதர யுத்தம் செய்து, பலரை கொன்றழித்து,தன்னவரே தூரோகியானதால்---- இனபலியானது! இந்த கொடுமைக்கு உம் தலமையும்,துப்பாக்கியை நம்பிய உம் மக்களே காரணமேயன்றி, இந்தியத் தலைவர்களோ/மக்களோ காரணமில்லை!
"துன்பியல்" சம்பவர்த்திற்குப் பின், இந்திய மக்களால், கைவிடப்பட்டீர்!
எம் நாடு தனி! எம் வழி தனி! உங்களுக்காக,சில காலம் கண்ணீர் வடிக்கலாமே யன்றி, எக்காலமும் நினைத்து மருக எங்களுக்கு அவசியமில்லை!
மேலும், இது போன்று எம் நாட்டையும், எம் தலைவர்களையும் தூற்றுவதால், மேலும் உம் மேல் வெறுப்பு தான் வளரும்!

யூர்கன் க்ருகியர் said...

வெந்து நொந்து போகிறேன்

தென்னவன். said...

/*
என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன் தமிழ்பெயர் என்ற பெயரில் ஆகாஷ்ம், ரமேஷும், சுரேஷும் கொட்டிக்கிடந்தது அந்த புத்தகமெங்கும் ஆனால் அட்டையில் சொன்னது அழகிய தமிழ் பெயர்கள் என்று. இணையமெங்கும் தேடினேன், இங்கும் இதே கதைதான்... இந்நிலையில் நிதித்துறை.காம் என்றொரு வலைத்தளம் தேடலில் சிக்கியது பல்லாயிரக்கணக்கான தனித் தமிழ் பெயர்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கென தொகுத்து வைக்கப்பட்டிருந்தது... டியூப்லைட் முழுக்க உபயம் பெயர் எழுதும் கடைசியாக சிறிய அளவில் குறிக்கப்பட்டிருந்தது அவர்களின் நிதி நிர்வாக தளமென்று.... தமிழ் பல்கலைகழகங்கள் இதை செய்யவில்லை, தமிழ் தமிழ் என சொல்லி இன்னும் பல யுகங்களுக்கு சொத்தும் அதிகாரமும் சேர்த்த ஈனத்தலைவர்களும் அவர்களின் அடிவருடிகளும் செய்யவில்லை இதை... ஆனால் அவர்கள் செய்திருந்தார்கள் அந்த 5 வருடங்களில்... அவர்களைப்போலவே தற்போது அந்த தளமும் இயங்கவில்லை,*/

ஒரு நல்ல தமிழ் பெயர் தேடும்போது இதை நானும் உணர்ந்தேன்.

குழலி / Kuzhali said...

//சரி, மகனுக்கு என்ன பேர் வச்சிங்க?
//
பரிதி

அஹோரி said...

கொடுமை.
குஸ்கா தின்ன போன பயல்கள் திரும்பி வந்து இதற்கும் எதாவது காரணம் சொல்லுவார்கள்.

"உழவன்" "Uzhavan" said...

//நிதித்துறை.காம் //
 
இதை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கலாம் :-)

முனைவர் இரா.குணசீலன் said...

http://gunathamizh.blogspot.com/2009/11/blog-post_15.html

Anonymous said...

//பரிதி//
நல்ல பெயர். ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்க ஏன் ஆயிரம் பக்க அகரமுதலியை நாட வேண்டும்? புரியவில்லை.

எல்லாளன் said...

ஈழத்தமிழர் நாம் அழியவும் மாட்டோம்,தமிழையும் சக தமிழனையும் அழியவிடமாட்டோம்.சகஉதிரமே உம்மைபோல் தமிழ்நாட்டு சகோதரர்கள் இருக்கும் வரை எம் சோர்வுகள் சூரியனை கண்ட பனியாய் ஓடும்.தமிழ் வெல்லும் தமிழன் வெல்வான்.நாம் ஊற்றிய இரத்தம் வீண் போகா.ஈனர்கள் அழிந்தே போவார்.