தமிழ்மணத்தில் சன்,ஜெயா செய்திகள்

லக்கிலுக்கின் உள்ளாட்சித் தேர்தல் - கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் பத்ரியின் உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் பதிவை படிக்கும் போது சில இடங்களில் சன் மற்றும் ஜெயா செய்திகள் பார்ப்பது போல இருந்தது....லக்கியும் பத்ரியும் இப்படி சொல்வதற்காக என் மீது வருத்தம் வந்தாலும் வரலாம், ஆனால் பதிவுகளை படிக்கும் போது இப்படியானதொரு எண்ணம் எனக்கு வந்ததை மறுப்பதற்கில்லை.

பத்ரியின் பதிவிலிருந்து

பார்வையாளர்கள் பலதரப்பட்டனராக இருந்தனர். "மிடில் கிளாஸ் மைலாப்பூர் மாமாக்கள் கூட்டம்" என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மதிமுகவின் வைகோ, பாஜக இல.கணேசன் இருவரும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தனர். வைகோவின் தொண்டர்கள் பெரிய அளவில் இருந்தனர். வேறு சில அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர் என்று நினைக்கிறேன்.

லக்கிலுக்கின் பதிவிலிருந்து

பாரதிய வித்யா பவன் அரங்கினுள் நுழைந்ததுமே "தாம்ப்ராஸ்" மீட்டிங்குக்கு வந்துவிட்டோமோ அல்லது துக்ளக் ஆண்டு விழாவுக்கு வந்துவிட்டோமோ என்று சந்தேகம் ஏற்பட்டது. Audience அந்த ரேஞ்சில் இருந்தார்கள். பார்வையாளர்களில் நிறைய பேர் ரிட்டையர்டு கேசுகள். வெள்ளை முடியுடன் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் வந்திருந்தார்கள். நெற்றியில் பட்டை அடித்த கோஷ்டியும், நாமம் போட்ட கோஷ்டியும் அதிகமாகத் தெரிந்தது.

ஜெயா மற்றும் சன் செய்திகள் பார்த்த மாதிரி இருக்கின்றதா? லக்கிலுக்கிற்கு ஏற்கனவே திமுக முத்திரை இருக்கின்றது, அதே சமயம் பத்ரியின் 2006 உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பான பதிவுகளையும் அவரின் பின்னூட்டங்களையும் படித்த போது அவர் ஒரு திசையில் சற்று சாய்ந்துள்ளதாகவே என்னளவில் தோன்றுகின்றது.

இந்த கூட்டம் தொடர்பான பத்திரிக்கை செய்தியையோ அல்லது இந்த இரு வலைப்பதிவர்களின் பதிவுகளை தவிர மற்ற வலைப்பதிவர்கள் பதிவை இன்னும் படிக்கவில்லை.

இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தால் கூட்டத்தில் நான் கேட்க நினைத்த கேள்விகள் இங்கே



1. மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இத்தேர்தல் நடக்காமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டுமென்று குறிப்பிடுவது கொஞ்சமே கொஞ்சம் மீதியிருக்கும் மாநில அதிகாரங்களையும் பறிப்பது போலாகாதா, மாநில தேர்தல் ஆணையும் தவறு செய்கிறது என்பதற்காக அதன் அதிகாரத்தை பிடுங்கி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் மத்திய தேர்தல் ஆணையமும் அதையே செய்தால் அதன் அதிகாரத்தை பிடுங்கி எதனிடம் அளிப்பது? இன்றைய மத்தியதேர்தல் அதிகாரிகள் பக்க சார்பில்லாமல் இருக்கிறார்கள், வருங்காலத்தில் பக்க சார்புள்ள அதிகாரங்கள் வந்தால் என்ன செய்யமுடியும்? அதற்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் குறுக்கீடற்ற அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும் என்கிறேன் நான்.


2. மேயர், மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி தேர்தல்முறை வந்தால் வன்முறை குறையும் என்பது எப்படி சாத்தியம், 2001ல் மேயர் தேர்வுக்கு நேரடி தேர்தல் முறை இருந்தும் சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை நடந்ததே.

3. மேயர், மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி தேர்தல்முறையின் மிகப்பெரிய குறைபாடாக உள்ளாட்சி மன்றத்தலைவர் ஒரு கட்சியாகவும் மற்றைய பெரும்பாலான உறுப்பினர்கள் பிற கட்சிகளாகவும் இருந்த நிலையில் நிறைய உள்ளாட்சி மன்றங்களில் எந்த ஆக்கப்பூர்வமான வேலையும் நடைபெறவில்லையே, கிட்டத்தட்ட எல்லா தீர்மாணங்களும் உள்ளாட்சி மன்றங்களில் தோற்கடிக்கப்படனவே, இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய என்ன ஆலோசனை கூறுகின்றீர்கள்

4. மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி முறையில் தேர்ந்தெடுப்பது போலவே முதல்வர், பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்வு முறையும் நேரடி முறைக்க மாற்ற பரிந்துரைப்பீர்களா?

5. இது மாதிரியான ஒரு கூட்டம் 2001 உள்ளாட்சி தேர்தல் வன்முறையை கண்டித்து நடந்ததா? எனக்கு தெரிந்து நடக்கவில்லை...

கடைசி மற்றும் முக்கியமான கேள்வி

6. இந்த மாதிரியான தேர்தல் வன்முறையில் மக்களின் பங்கு என்ன? 2001ல் இப்படியான ஒரு தேர்தல் வன்முறை நடந்திருந்த போதும் மீண்டும் அது மாதிரியான தேர்தல் வன்முறை செய்ய எப்படி ஆளும் கட்சிக்கு தைரியம் வந்தது? ஒரு வேளை மக்களின் மறதி தான் இதற்கான காரணமோ? இந்த மாதிரியான வன்முறைகளுக்கு மக்கள் எப்படியான எதிர்வினையை காட்ட வேண்டும்? ஒரு வேளை 2001 தேர்தல் வன்முறையின் போதே இப்படியானதொரு கூட்டம் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் 2006ல் இந்த ரீ-ப்ளே நடக்காமல் இருந்திருக்குமோ?

24 பின்னூட்டங்கள்:

said...

குழலி!

ரொம்பத்தான் குறும்பு :-)

said...

குழலி, 'சன்'னும் வேண்டாம், 'ஜெயா'வும் வேண்டாம்! இன்றைய சூழலில் நமக்குத் தேவை நடுநிலையான 'மக்கள்':-)

said...

இருவரின் பின்னூட்டத்தையும் பார்க்கும்போது இருவருமே ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்ட மாதிரித்தான் தெரிகின்றது....

//குழலி, 'சன்'னும் வேண்டாம், 'ஜெயா'வும் வேண்டாம்! இன்றைய சூழலில் நமக்குத் தேவை நடுநிலையான 'மக்கள்':-) //
ஹி ஹி மக்கள் நடுநிலையானு தெரியலை,வெளிநாட்டில் இருப்பதால் மக்களோடு தொடர்புகொள்ளும் வாய்ப்பில்லை, மக்கள் எப்படி நடுநிலையாக இருக்க முடியும்?

said...

ஓய் வெண்குழல் விளக்கு :-) அவர் சொல்வது மக்கள் தொலைக்காட்சியை :-)

பி.கு : விளியை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ளவும் :-)

அடச்சே... எதிர்க்கட்சியா இருந்தா எத்தனை ஸ்மைலி போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கு? :-)

said...

குழலி!

நான் திமுக சார்பு வலைப்பதிவராகவே அறியப்பட்டிருக்கிறேன். உண்மையும் அதுவே. என் வலைப்பூவை வாசிப்பவர்களும் அதை தான் விரும்புகிறார்கள்.

ஆனால் பத்ரி அதிமுக சார்பு பதிவாளர் அல்ல. ஆரம்பத்தில் நானும் அதுமாதிரி நினைத்து அவரை சீண்டியிருக்கிறேன். அவரை NDTV என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :-)

said...

நீங்களா?

:-)))))))))))))))

said...

குழலி,

நீங்க சொல்லுங்க என்ன செய்தால் நல்ல இருக்கும் என்று? சன், ஜெயாவையும் விடுங்க.

நீங்களும் கேள்வி மட்டும் கேட்ட எப்படி ஏதாவது சொல்யூஷன் குடுங்க தல.

ஐயா நீங்க மக்கள் தொலைக்காட்சியா மாறி பதில் சொல்லமாட்டீங்கனு நம்பலாமா ;)

said...

குழலி,
நீங்கள் யோசிக்கும் தளமும் மிகவும் முக்கியமானது. நான்கு பேர் இன்னும் நாற்பது பேரைக்கூட்டிக்கொண்டு(அதிலும் வாக்கிங் ஸ்டிக்குடன்), இந்திய அரசியலை அக்குவேறு ஆணிவேறாக மாற்றவேண்டும் என்று சூளுரைப்பது எல்லாம் காமெடி டைம் செய்தி. பத்ரியும் இதற்கு இவ்வளவு ஏன் ரியாக்ட் செய்தார் என்று புரியவில்லை.

இன்னும், ஜெய‌ல‌லிதா அர‌சில் போலிஸ் குண்ட‌ர் ப்டை போல் வேலை செய்த‌தை பார்த்து பொங்காத‌வர்க‌ளுக்கு, (ஒரு முன்னாள் முதல்வரை கைது செய்யும்போது உட்பட கவனித்தில் கொண்டால்) , க‌ருணாநிதி அரசிய‌லின் போது செலெக்டிவ் ப்ள‌ட் ப்ரெஷ்ஷ‌ர் வ‌ருவது க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து. ப‌த்ரி இனியாவ‌து இப்ப‌டி க்நீ‍ஜெர்க் ப‌திவுக‌ள் எழுத‌மாட்டார் என்று நம்புவோம். அத‌ற்காக‌ மொத்த‌ கூட்ட‌த்தையும் குறைசொல்ல‌வில்லை. ம‌திமுக‌,இல‌ கணேச‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொள்ளும்போது வ‌ழ‌க்க‌மான‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌ற் காய்ந‌க‌ர்த்த‌ல்க‌ளாக்த்தான் பார்க்க்வேண்டியுள்ள‌து.


இபோதும் ஒரு ஒப்ப‌ன் ம‌ன‌நிலையில் ப‌த்ரி இருப்ப‌தாக தெரிவதாலும், இப்ப‌டியான‌ ப‌திவுக‌ளில் எழுதும்போது மொத்த‌ வ‌ல‌துசாரி கும்ப‌ல் போல் எழுதுவ‌தில்லை என்ற‌ ந‌ம்பிக்கை இருப்ப‌தாலும் இதை எழுதுகிறேன். பிற‌ர் என்றால் எழுத‌மாட்டேன்.

said...

//ஓய் வெண்குழல் விளக்கு :-) அவர் சொல்வது மக்கள் தொலைக்காட்சியை :-)
//
பிரகாஷ் அது கூட புரியாத மக்கா நான் ஒன்னரை வருடமாக வலைப்பதிவில் குப்பை கொட்டுகிறேனே!!! அந்த மக்கள் ங்கறதை தடிக்க (Bold) செய்திருக்கிறேனே புரியலையா? அதுவுமில்லாமல் சிங்கைக்கு மக்கள் தொலைகாட்சி வருவதில்லை அதனாலேயே மக்களோடு எனக்கு தொடர்பு இல்லை என்றேன், முக்கியமா இன்னொன்றும் கேட்டிருந்தேனே "மக்கள் எப்படி நடுநிலையாக இருக்க முடியும்?"

said...

//எதிர்க்கட்சியா இருந்தா எத்தனை ஸ்மைலி போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கு? :-)
//
ஆமாம் பிரகாஷ் நீங்க எப்போ ஆளுங்கட்சியானிங்க, நான் எப்போ எதிர் கட்சியானேன்? இதை படிக்கும் போது வலைப்பதிவில் ஒன்னரை வருசம்னு காலம் தள்ளினேன்னு சட்டை காலரை தூக்கிவிட்டுக்க முடியாது போல

said...

//நீங்களும் கேள்வி மட்டும் கேட்ட எப்படி ஏதாவது சொல்யூஷன் குடுங்க தல.
//
ஜெய் பேசாம என்கிட்ட ஆட்சியை குடுத்துடுங்க, உங்களை காவல்துறை மந்திரியாக்கிடுறேன் அவ்ளோதான் இப்போதைக்கு :-) ஓகே நோ ஜோக்ஸ்,

இப்போதைக்கு ஒன்றும் சரியாக தோன்றவில்லை, யோசித்து பிடிபட்டால் சொல்கிறேன்

said...

//இன்னும், ஜெய‌ல‌லிதா அர‌சில் போலிஸ் குண்ட‌ர் ப்டை போல் வேலை செய்த‌தை பார்த்து பொங்காத‌வர்க‌ளுக்கு, (ஒரு முன்னாள் முதல்வரை கைது செய்யும்போது உட்பட கவனித்தில் கொண்டால்) , க‌ருணாநிதி அரசிய‌லின் போது செலெக்டிவ் ப்ள‌ட் ப்ரெஷ்ஷ‌ர் வ‌ருவது க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து.
//
இதெல்லாம் சகஜம் தானே, முத்து தமிழினி அடிக்கடி சொல்வார், கருணாநிதி பற்றி பேசும்போது மட்டும் 1967 சர்க்காரியா கமிஷன் என்று நினைவுக்கு வரும், ஜெவை பற்றி பேசும்போது 2001 கூட நினைவுக்கு வராது, தமிழக அரசியலில் சில எதிர்ப்புகளின் பின்புலத்தையும் அதன் பின்னனியையும் பார்க்கும் போது பயங்கர கொடுமையாக இருக்கிறது.

said...

//நீங்களா?

:-)))))))))))))))
//
நானேத்தான் ? ஏன் ஆச்சரியப்பட இதில் என்ன இருக்கு?

said...

"பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்வு முறையும் நேரடி முறைக்க மாற்ற பரிந்துரைப்பீர்களா?"

இதுக்கு இல.கணேசன் உடனே சரின்னு சொல்லிடுவாரே!

said...

இந்தியாவில் கள்ள ஓட்டு மற்றும் வன்முறை என்பது வாலாயமான ஒன்று.இந்திய மக்கள் இதற்கு பழகிவிட்டார்கள் என்றுதான் எனக்குப்படுகிறது. இதற்கு மாற்று சரியான சீர்திருத்த முறைஒன்றுதான். எனக்குப் பட்ட வழிமுறை ஒன்றினை ninaithau.blogspot.com ல் காணலாம்.

said...

//மாநில தேர்தல் ஆணையும் தவறு செய்கிறது என்பதற்காக அதன் அதிகாரத்தை பிடுங்கி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் மத்திய தேர்தல் ஆணையமும் அதையே செய்தால் அதன் அதிகாரத்தை பிடுங்கி எதனிடம் அளிப்பது?//

ஐ.நா சபை கிட்ட தான்!

நான் தெரியாமத்தான் கேக்கிறேன்! இப்போ மாநிலத்தில திமுக ஆட்சிங்குறதால காங்கிரஸ் குறை சொல்லலாம் .மாநிலத்திலயும் மத்தியிலயும் காங்கிரஸ் (அல்லது வேற ஏதோ ஒரே கட்சி) ஆட்சியில இருக்கும் போது இப்படி நடந்தா ,அதிகாரத்த மத்திய தேர்தல் ஆணையத்துக்கு மாற்றினா சரியாப் போயிடுமா ? ஆகா! மத்திய தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் பெற்ற அமைப்புங்க அப்படீம்பாங்க..மாநில தேர்தல் ஆணையத்தையும் அதே போல வச்சிருக்க வேண்டியது தானே?

எல்லாம் அவங்கவங்களுக்கு சாதகமா நடக்குற வரைக்கும் சரி!

said...

//மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி முறையில் தேர்ந்தெடுப்பது //

இதனால ஊர்பாசம் உள்ள கட்சி சார்பில்லாத தன்னார்வலர்கள் வரமுடியாது என்பது வருத்தமான விசயம்தான். முதல்வர், பிரதமர் அளவுக்கு இல்லன்னாலும் இந்த மாதிரி அடிப்படை கட்டமைப்புகளில் கட்சி சார்பில்லாத தனி நபர்களின் பங்களிப்பு அவசியமானது.

said...

குழலி நீங்கள் பா.ம.க ஆதரவு வலைப்பதிவாளர் என அறியப்பட்டிருந்தாலும் உங்களது கருத்துக்கள் ஓரளவு திறந்த மனத்துடனேயே உள்ளன. நடுநிலை என்பது எதுவும் இல்லையெனினும், குறைந்தபட்சம் நீங்கள் மற்றும் லக்கி போன்று எதிரணியினர் நடந்துகொள்வதில்லை என்பதே உங்களுக்கும் அவர்களுக்குமான வித்தியாசம். இதே வித்தியாசத்தை திமுக மற்றும் அதிமுக இடையேயும் பார்க்கலாம்.

said...

//குறைந்தபட்சம் நீங்கள் மற்றும் லக்கி போன்று எதிரணியினர் நடந்துகொள்வதில்லை என்பதே உங்களுக்கும் அவர்களுக்குமான வித்தியாசம். இதே வித்தியாசத்தை திமுக மற்றும் அதிமுக இடையேயும் பார்க்கலாம்.//

நன்றி தங்கவேல். திராவிடத் தமிழர்கள் யாரும் இதுவரை தங்களை "நடுநிலை" என்று அறிவித்துக் கொண்டது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் பாதை இருந்தாலும் திராவிடம் என்ற உணர்வே எங்களை ஒன்று சேர்க்கிறது. இதுவே எங்கள் பலம் என்று நினைக்கிறேன்.

நடுநிலை என்று அறிவித்துக் கொண்டு ஒரு சார்பாக பேசும்போது தான் இமேஜ் கண்டபடி டேமேஜ் ஆகிறது :-)

said...

பரவாயில்லைங்க.

நீங்க எழுதுனதுக்கு தனித்தனியா பதிவு போட்டு அதை list ல ஏத்துறதுக்கு பதிலா பின்னூட்டத்துலயே முடிச்சுட்டாங்க

ஆமா, குழலி, நீங்க எந்த TV ::))))))))

சென்ஷி

said...

//ஜெய் பேசாம என்கிட்ட ஆட்சியை குடுத்துடுங்க, உங்களை காவல்துறை மந்திரியாக்கிடுறேன் அவ்ளோதான் இப்போதைக்கு :-) ஓகே நோ ஜோக்ஸ், //

என்னை வச்சு காமெடி கீமிடி ஒன்னும் பண்ணலையே?!! இல்ல இதுலயும் ஒரு உள்குத்து இருக்கா?? ஐயோ வர வர தமிழ்மணத்துல ஒன்னும் பிரிய மாட்டிங்குதே!!??

said...

குழலி நீங்கள் பா.ம.க ஆதரவு வலைப்பதிவாளர் என அறியப்பட்டிருந்தாலும் உங்களது கருத்துக்கள் ஓரளவு திறந்த மனத்துடனேயே உள்ளன. நடுநிலை என்பது எதுவும் இல்லையெனினும், குறைந்தபட்சம் நீங்கள் மற்றும் லக்கி போன்று எதிரணியினர் நடந்துகொள்வதில்லை என்பதே உங்களுக்கும் அவர்களுக்குமான வித்தியாசம். இதே வித்தியாசத்தை திமுக மற்றும் அதிமுக இடையேயும் பார்க்கலாம்.


எதிரணியினர்- Who are they

said...

//எதிரணியினர்- Who are they //

aariyarkal?

said...

//icarus prakash said...
ஓய் வெண்குழல் விளக்கு :-) அவர் சொல்வது மக்கள் தொலைக்காட்சியை :-)

பி.கு : விளியை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ளவும் :-)

அடச்சே... எதிர்க்கட்சியா இருந்தா எத்தனை ஸ்மைலி போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கு? :-)
//
ravi I thought you are smart? But so sorry you are same like icarus prakash:-))hey .. hey. oaky escape*!@..