பாப்பாபட்டி, கீரிப்பட்டி சமத்துவப் பெரியார்
உள்ளாட்சி தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஒரு அச்சம் மேலோங்கியது, சுழற்சி முறையில் தலித் மற்றும் பெண்கள் தொகுதி ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே, அதன் பின் அந்த தொகுதி பொதுத்தொகுதியாக மாற்றப்படும், ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற பஞ்சாயத்துகள் தலித்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் நடப்பதும் உடனே தலைவர் ராஜினாமா செய்வதுமாக நாடகம் நடந்து கொண்டிருந்தது, பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த கிராம ஊராட்சிகள் பொதுத்தொகுதியாக்கப்பட்டால் ஆதிக்க சாதி வெறி வெற்றிபெற்றது போலாகும், மேலும் இது மாதிரியான ஆதிக்க சாதி வெறி மேலும் பல கிராமங்களில் தொடரும் என்ற அச்சமே அது, ஒரு முறை கிராமத்தின் வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்ற தலித் பதவியேற்று சில நாட்களில் அந்த கிராமத்தில் ஏற்பட்ட மின் அழுத்தத்தினால் சில வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள் சேதமடைய "அய்யோ அவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள், சாமி குத்தமாயிடுச்சி" என்று குரல்கள் எழுந்து ராஜினாமா நாடகமும் நடந்தேறியதாக பத்திரிக்கைகளில் படித்தேன், ஆனால் இந்த தொகுதிகளை பொதுத்தொகுதியாக்கமல் முதல்வர் கருணாநிதி மீண்டும் தலித் தொகுதியாகவே தொடர உத்தரவிட்டார், இது தொடர்பான என் நன்றியை பாப்பாபட்டி, கீரிப்பட்டி - முதல்வர் கலைஞருக்கு நன்றி என்ற பதிவில் தெரிவித்திருந்தேன்.
இந்த முறை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் ஊராட்சி தலைவர்கள் பதவியில் தொடரவைக்க அரசு கடும் முயற்சி எடுத்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம், குறிப்பாக இந்த தேர்தலுக்கு தடையாக இருந்த பலரையும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தடைகளை நீக்கி தேர்தல் சுமுகமாக நடைபெற வைத்தது மாவட்ட நிர்வாகம் , முதல்வர் கருணாநிதி இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தியதும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.
இந்த தலித் ஊராட்சி தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது, இவர்களை சென்றவாரம் சென்னைக்கு அழைத்து "சமத்துவ பெருவிழா" என்று ஒரு பாராட்டுவிழாவும் நடந்தது, இதை வெறும் சாதாரண விழாவாக எண்ணமுடியாது, இந்த விழா சொல்லும் செய்தி இப்படியான பாப்பாப்படி, கீரிப்பட்டிகள் இனி தமிழகத்தில் உருவாக முடியாது, அப்படி உருவாக்க முயற்சித்தால் அதை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது என்று கூறும் விழாவாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமா அவர்களால் முதல்வர் கருணாநிதிக்கு "சமத்துவப் பெரியார்" என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் தலித் தொகுதியாக மாற்றப்பட்ட திருச்சி திருவெரும்பூர் அருகிலுள்ள கூத்தப்பார் என்ற ஊராட்சியில் தலித்களால் மனுத்தாக்கலே செய்யமுடியவில்லை, வரும் டிசம்பர் மாதத்தில் நடக்கப்போகும் உள்ளாட்சி இடைத் தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டுமென்பதற்கான எச்சரிக்கையாக இந்த விழா உதவும் என நம்புகிறேன்.
ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான இந்த வெற்றிக்கு காரணமான முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவிக்கின்றேன்.
மக்களின் ஆதிக்க சாதி வெறி மனம் மாறி இந்த தேர்தல் நடந்திருந்தால் முழு மகிழ்ச்சியடைந்திருக்கலாம், அரசாங்கத்தின் அழுத்தத்தினாலே நடந்திருக்கும் இந்த மாற்றம் முழு மகிழ்ச்சியை தரவில்லையென்றாலும் மக்களின் ஆதிக்க சாதி வெறி மன மாற்றத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளாகுமோ?
பின்குறிப்பு:
இந்த நான்கு ஊராட்சிகளும் ஏற்கனவே பத்து ஆண்டுகள் தலித் தொகுதிகளாக இருந்தன, ஆதலால் இப்பொழுதே இவைகளை மீண்டும் பொதுதொகுதிகளாக மாற்ற வேண்டும், தலித் தொகுதிகளாக அவை தொடரக்கூடாது என்று என்று சில மனுக்கள் நீதிமன்றங்களிலே தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, இந்த நான்கு தொகுதிகளும் பொதுத்தொகுதிகள் ஆக்கப்பட்டால் வேறு எந்த நான்கு தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கப்படும் எண்று அரசாங்கத்திடம் நீதிமன்றம் கேட்டுள்ளது, பத்து ஆண்டுகளாக தலித்கள் இந்த ஊராட்சியின் தலைவராக செயல்பட முடியத போது அதற்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் இப்போது நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளார்கள், இவர்களின் ஆதிக்க சாதிவெறி மனம் மாறுமா?
22 பின்னூட்டங்கள்:
கருணாநிதிக்கு பாராட்டுகள். இந்த ஆட்சியின் குறிப்பிடத் தகுந்த சாதனைகளில் இதனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அந்தந்த நிலைகளில் ஆதிக்க சாதிகள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவே முயற்சிகள் மேற்கொள்கின்றன. மக்கள் மனம் மாற வேண்டும்.
//இந்த நான்கு ஊராட்சிகளும் ஏற்கனவே பத்து ஆண்டுகள் தலித் தொகுதிகளாக இருந்தன, ஆதலால் இப்பொழுதே இவைகளை மீண்டும் பொதுதொகுதிகளாக மாற்ற வேண்டும், தலித் தொகுதிகளாக அவை தொடரக்கூடாது என்று என்று சில மனுக்கள் நீதிமன்றங்களிலே தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, இந்த நான்கு தொகுதிகளும் பொதுத்தொகுதிகள் ஆக்கப்பட்டால் வேறு எந்த நான்கு தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கப்படும் எண்று அரசாங்கத்திடம் நீதிமன்றம் கேட்டுள்ளது, பத்து ஆண்டுகளாக தலித்கள் இந்த ஊராட்சியின் தலைவராக செயல்பட முடியத போது அதற்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் இப்போது நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளார்கள், இவர்களின் ஆதிக்க சாதிவெறி மனம் மாறுமா?//
கேட்கப்படவேண்டிய கேள்வியும்,குறிப்பிடவேண்டிய கருத்துகளும் இது.
குழலி நியாயமான கேள்வி இது.
பதிவுக்கும், படத்துக்கும் நன்றி குழலி. இந்தத் தேர்தலும், விழாவும் உள்ளாட்சி அமைப்பு அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்று நம்புவோம். முதல்வருக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் பாராட்டுக்கள்.
உண்மையாக மகிழ்சியான நிகழ்வு.
// இந்த விழா சொல்லும் செய்தி இப்படியான பாப்பாப்படி, கீரிப்பட்டிகள் இனி தமிழகத்தில் உருவாக முடியாது, அப்படி உருவாக்க முயற்சித்தால் அதை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது //
இதை ஆதிக்க சாதி வெறி மனிதர்கள் உணர வேண்டும்.
நன்றி
வசந்த்
நல்ல பதிவு நல்ல கேள்விகள்.
இந்த முறை தேர்ந்தெடுத்த தலித் ஊராட்சி தலைவர்கள் தங்கள் பணியை முழு பதிவிகாலமும் செய்ய அரசு பக்க பாலமாக இருக்க வேண்டும்.
Well done CM ..
மேலே ஆதிக்க சாதி, ஆதிக்க சாதி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிப்பிடும் குழலி, அவை என்ன என்ன சாதி என்பதையும் குறிப்பிடுவாரா?!
அருமையான கேள்வி குழலி :), அசத்திட்டீங்க, இதுநாள் வரை நீதிமன்றம் செல்லாத அவர்கள் இப்போது ஏன் செல்லவேண்டும்? நல்ல கேள்வி, இதற்கு சமுதாயம் பதில் சொல்லுமா????
ஸ்ரீஷிவ்...
இது ஒரு சமுக மலர்ச்சி அல்லாவா ???
சென்னை வன்முறை குறித்து கூட்டம் போட்டவர்கள் இது குறித்து பேசாதது ஏன் ???
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் !!!!
//மேலே ஆதிக்க சாதி, ஆதிக்க சாதி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிப்பிடும் குழலி, அவை என்ன என்ன சாதி என்பதையும் குறிப்பிடுவாரா?!
//
பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் பிறன்மளை கள்ளர் என்று நினைக்கின்றேன், மற்ற தொகுதிகளில் யாரென்று தெரியவில்லை, தலித்களின் மீது இவர்கள் அரசியல் ஆதிக்கம் செலுத்தும் போது இவர்கள் ஆதிக்க சாதி, இவர்களின் மீது வேறு யாரேனும் சமூக மற்றும் கல்வி மறுப்பு, மதம் போன்றவைகளில் ஆதிக்கம் செலுத்தினால் அவர்கள் ஆதிக்க சாதி இவர்கள் ஒடுக்கப்படும் சாதி.
சரி அவர்கள் மீது சமூக, மத உரிமை மறுப்பு, கல்வி மறுப்பு(முன்பெல்லாம் நேரடியாக, இப்போதோ மறைமுகமாக) செய்பவர்கள் யாரென்று மாயவரத்தான் சொல்வாரென எதிர்பார்ப்பதில் தவறெதுவும் இல்லையே?
இந்த அடுக்குமுறை தானே வர்ணாசிரமத்தை வாழவைக்கிறது இத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக, ஆங்காங்கே உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள் வர்ணாசிரமத்தின் காவல்நாய்களாகத்தானே உள்ளார்கள். வர்ணாசிரம காவல்நாய்களாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களும் மிகபிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அடித்துக்கொள்ள வர்ணாசிரம அடுக்கில் உச்சத்தில் இருப்பவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
//ஆதலால் இப்பொழுதே இவைகளை மீண்டும் பொதுதொகுதிகளாக மாற்ற வேண்டும், தலித் தொகுதிகளாக அவை தொடரக்கூடாது என்று என்று சில மனுக்கள் நீதிமன்றங்களிலே தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது,//
குழலி
அடேங்கப்பா நீதித் துறையின் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டு இந்த வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் இதைப் போய் குறை சொல்கிறீர்களே அய்யா?
நீங்கள் யாரென்று சொல்லாமல் விட்டாலும் அவர்கள் யார் என ஊர் உலகத்துக்குத் தெரியாதா?
இந்த முக்கியமான நிகழ்வை ஆவணப்படுத்தியதற்கு நன்றி!
/ திருச்சி திருவெரும்பூர் அருகிலுள்ள கூத்தப்பார் என்ற ஊராட்சியில் தலித்களால் மனுத்தாக்கலே செய்யமுடியவில்லை,/
இந்த ஊரில் மனுதாக்கல் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணம் வேறு. தலைவருக்கு ஒரு தலித்தை கிராமத்தார் நியமித்து விட்டனர். அதாவது ஒரு ஐந்தாண்டுக்கு ஒரு குடும்பத்தை (பட்டப்பெயர் வகையில்) சேர்ந்தவர் என்பது அவர்களது வழக்கம் இந்த முறை வரவேண்டிய அந்த குடும்பத்துக்கு வேண்டிய தலித்தை அவர்கள் நியமித்து விட்டனர். வார்டு உறுப்பிணர்கள் தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால்தான் தேர்தல் நடத்த முடியவில்லை என்று நான் கேள்விப்பட்டேன்.
தகவலுக்கு மிக்க நன்றி என்னார் அய்யா, கூத்தப்பார் கோவிலுக்கு என் பள்ளிபருவத்தில் வந்திருக்கின்றேன், அந்த கோவிலின் பராமரிப்பை கண்டு வியந்தேன், கூத்தப்பாரை சேர்ந்த சில குடும்பங்கள் திருவெரும்பூரில் என் சொந்தக்காரர் வீட்டின் அருகில் குடியிருந்தனர், கூத்தப்பாருக்கு அப்போதே(1988-89) அடிதடி ஊர் என்ற பெயர் இருந்ததே, இன்னமும் அந்தப் பெயர் இருக்கின்றதா?
//இந்த ஊரில் மனுதாக்கல் செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணம் வேறு.
//
பத்திரிக்கைகளில் வந்த செய்தியை நம்பி எழுதியது இது...
Kuzhali,
En rendavadhu pinnootathai veliyadadharku kandangal??:) I think you don't want create more problems right?:}} any way continue..
//தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் ஊராட்சி தலைவர்கள் பதவியில் தொடரவைக்க அரசு கடும் முயற்சி எடுத்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்//
நிச்சயமாக பாராட்டத்தக்க நிகழ்வு குழலி. பகிர்ந்ததற்கு நன்றி.
மாநகராட்சிக் கரும்புள்ளியைக் கண்டித்த வேகம் இதைப்பாராட்டுவதில் பலருக்கு இல்லாதது வருத்தத்தையே தருகிறது.
நல்ல முயற்சி. இது முழு Termக்கு இருந்தா நல்லது. பார்ப்போம்...
//பத்திரிக்கைகளில் வந்த செய்தியை நம்பி எழுதியது இது...//
என்னை சொல்லி சொல்லி, நீங்களே பத்திரிக்கை செய்திக்கு பலி ஆயிட்டீங்களே குழலி...
தேர்தல் நடத்தியதுடன் இல்லாமல் வென்றவர்களை அழைத்து விழா நடத்தியது நல்ல அணுகுமுறை.
இது மேலும் இவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும் மாவட்ட அரசாங்க அமைப்புகளின் நல்ல ஆதரவும் கிடைக்க வழி செய்யும்.
முதல்வருக்கு நன்றி!!
கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்...
வை.கோ,ராமதாசு,ஜெயலலிதா,விஜயகாந்த்,இல.கணேசன் போன்றோருக்கு நிச்சயம் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
யாரும் வந்தார்களா குழலி?
http://tamiloviam.com/unicode/11020601.asp
தராசு : பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாராட்டு ?
- மீனா [feedback@tamiloviam.com]
| Trackback | | URL |
" பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் மற்றும் அந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊர் மக்கள் ஆகியோருக்கு வருகிற 13ஆம் தேதி சென்னையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது." இதுதான் தற்போது செய்தித்தாள்களில் இடம்பிடித்து வரும் முக்கிய விஷயம்..
மேற்கண்ட நான்கு பஞ்சாயத்துக்களிலும் குறிப்பிட்ட ஜாதியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக பல ஆண்டுகளாக தலைவர் தேர்தலை நடத்த முடியாமல் இருந்து வந்த நிலை மாறி சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நான்கு தலித் பஞ்சாயத்துக்களின் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. இதில் நான்கு பஞ்சாயத்துக்களுக்கும் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பும் முடிந்துள்ளது.
பல ஆண்டுகளாக செயல்படாமல் கிடந்த இந்த பஞ்சாயத்துக்களுக்கு உயிர் கொடுத்துள்ள நான்கு பஞ்சாயத்துக்களின் தலைவர்களுக்கும், இதற்குக் காரணமாக அமைந்த ஊர் மக்களுக்கும் பாராட்டு விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். மேலும் 13ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த விழாவில் கருணாநிதி, ஸ்டாலின், கிருஷ்ணசாமி, ஜி.கே.மணி உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்களாம்.
இந்தச் செய்தியைப் படித்த பிறகு அழுவதா, சிரிப்பதா என்று நிச்சயம் சிந்திக்கும் திறன் உள்ளவர்கள் குழம்பியிருப்பார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஓட்டுப் போடுவது குடிமக்கள் அனைவரது கடமையாகும். ஒட்டுப் போடாமல் புறக்கணிப்பதோ அலட்சியப்படுத்துவதோ குற்றம். நம் கடமையை நாம் சரியாக செய்யவில்லை என்பதற்கான ஆதாரம். ஓட்டுப்போடாததன் மூலம் தவறானவர்கள் நாட்டை ஆள நாமே மறைமுகமாக உதவுகிறோம். அரசாங்கம் நமக்கு அதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டும் என்று தீவிரமாக எதிர்பார்க்கும் நாம் ஒரு பொறுப்பான அரசாங்கத்தையும் அமைப்பதும் நம் கடமை என்பதை நாம் எத்தனை தீவிரமாக சிந்திக்கிறோம்?
இந்த நான்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்களிடமும் இவ்வளவு நாட்களாக ஏன் தேர்தலைப் புறக்கணித்தீர்கள் என்று கேட்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தாலோ அல்லது இவ்வளவு நாட்களாக அங்கே தேர்தல் நடக்க விடாமல் தடுத்த முக்கிய புள்ளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கியிருந்தாலோ சரி.. அதை விட்டுவிட்டு இன்றைக்காவது ஒட்டுப்போட்டீர்களே என்று ஊர்கூடி அவர்களுக்கு விழா எடுப்பது எப்படி முறையாகும்? அதுவும் அடுத்த தேர்தலில் இத்தொகுதிகள் பொதுத்தொகுதிகள் ஆக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆள்வோர்கள் இந்தப் பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரியமனிதர்களிடம் அளித்ததைத் தொடர்ந்துதான் இப்போது தேர்தல் நடத்தவே சம்மதித்துள்ளார்கள் இப்பகுதி மக்கள்.
இந்நிலையில் என்னவோ பெரிய சாதனை செய்ததைப் போல முதல்வர் முதற்கொண்டு அரசே இவர்களை இப்படிப் பாராட்டினால் நாளை இன்னும் நான்கு பஞ்சாயத்துகளில் தேர்தலை வேண்டுமென்றே நடைபெறவிடாமல் செய்வார்கள்.. கண்டித்து தண்டனை வழங்க வேண்டிய விஷயத்தில் பாராட்டு விழா எடுப்பது என்பது நகைப்பிற்கு மட்டுமல்ல தீவிர சிந்தனைக்கும் ஆளாகவேண்டிய விஷயம்.
அன்பால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற காந்தியம் தேவைதான். ஆனால் அரசாங்கம் தேவையான நேரத்தில் தேவையான கண்டிப்புடன் இருந்தால் தான் நாடு நாடாக இருக்கும். படையெடுத்து வரும் பக்கத்து நாட்டை காந்தியத்தால் அல்ல நம் படைபலத்தால் தான் அடக்க முடிந்தது. எல்லையில் செய்யும் அதே வேலையை தேவையான விஷயத்திற்காக நாட்டிற்குள்ளேயும் செய்தால்தான் நாடு நாடாக இருக்கும். அதை விடுத்து இப்படி பாராட்டுவிழா நடத்திக் கொண்டிருந்தால் ஒரு பாப்பாபட்டி இல்லை.. ஓராயிரம் பாப்பாபட்டி பஞ்சாயத்துகளும் அது தொடர்பான பிரச்சனைகளும் முளைக்கும்... சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா ?
பல ஆண்டுகளுக்கு முன் துவாகுடிக்கும் கூத்தைப்பாருக்கும் சண்டை நடந்ததாம் நான் சிறுவனாக இருந்த(1962) சமயத்தில் நவல்பட்டுக்கும் கூத்தைப்பாருக்கும் சண்டை நடக்கவிருந்தது அதை வைரவன் சேர்வை என்ற DSP சமாதானப்படுத்தி விட்டார் காலங்கள் மாற மாற அவர்களும் மாறிவிட்டனர்.
//காலங்கள் மாற மாற அவர்களும் மாறிவிட்டனர்//
நல்ல விசயம் அய்யா...
இன்றைய தினமலர் செய்தி
06.பாப்பாபட்டி உட்பட 4 தனி தொகுதிகளுக்கு மாற்றாக வேறு 4 ஊராட்சிகள்: ஐகோர்ட் கிளையில் தாக்கல்
மதுரை:பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காட்சியேந்தல் ஆகிய நான்கு தனி தொகுதிகளுக்கு மாற்றாக வேறு நான்கு பஞ்சாயத்துகளை பரிந்துரைத்து மதுரை கலெக்டர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் கொட்டக்காட்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளை தனி தொகுதியாக நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனை ரத்து செய்யக்கோரியும், சுழற்சி முறையில் இவற்றை பொதுத் தொகுதிகளாக அறிவிக்க கோரியும் ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், இந்த நான்கு பஞ்சாயத்துகளும் பொதுத் தொகுதிகளாக அறிவிக்கப்படும் பட்சத்தில் இவற்றிற்கு பதிலாக வேறு எந்த பஞ்சாயத்துகள் தனி தொகுதிகளாக அறிவிக்கப்பட உள்ளன என்ற பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்படி மதுரை கலெக்டர் தாக்கல் செய்த பதில் மனு; கீரிப்பட்டிக்கு பதிலாக உசிலம்பட்டியில் உள்ள நல்லுத்தேவன்பட் டி, பாப்பாபட்டிக்கு பதிலாக பொறுப்புமேட்டுப் பட்டி, நாட்டார்மங்கலத்திற்கு பதிலாக புள்ளநேரி, கொட்டக்காட்சியேந்தலுக்கு பதிலாக அழகாபுரி ஆகிய பஞ்சாயத்துகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது கீரிப்பட்டி ஊராட்சி தலைவராக பாலுச்சாமி, பாப்பாபட்டி ஊராட்சி தலைவராக பெரியகருப்பன், நாட்டார்மங்கலம் ஊராட்சி தலைவராக கணேசன், கொட்டக்காட்சியேந்தல் ஊராட்சி தலைவராக கருப்பனும் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
கீரிப்பட்டியை பொதுத் தொகுதியாக மாற்றக்கோரி தாக்கல் செய்த தேவர்காசிமாயன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தற்போது கீரிப்பட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலுச்சாமியையும், தனி தொகுதியாக மாற்றியமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நல்லுத்தேவன்பட்டி தலைவர் மாசானத்தையும் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்க அனுமதி கோரப்பட்டது.
இம்மனுக்கள் நீதிபதிகள் டி.முருகேசன், பி.முருகேசன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் வந்தது. கீரிப்பட்டி தலைவர் பாலுச்சாமி, நல்லுத்தேவன்பட்டி தலைவர் மாசானம் ஆகியோர் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Post a Comment