பெரியார் படத்திற்கு சில யோசனைகள் - இட்லிவடையை தொடர்ந்து

இட்லிவடை பெரியார் படத்திற்கு என சில யோசனைகள் கொடுத்த துக்ளக்கிலிருந்து எடுத்து போட்டுள்ளார், அதில் போட்ட பின்னூட்டம் சற்று பெரிதாகிவிட்டது, அதனால் பதிவாகவும் இங்கே...

இட்லிவடை இவ்வளவு தூரம் பெரியார் பட இயக்குனருக்கு எடுத்துகொடுத்துள்ளீர் என் பங்குக்கு நானும் எடுத்து தருகிறேன், இப்படியெல்லாம் காட்டுமிராண்டி மொழி என தமிழை திட்டிய பெரியார் அறிமுகப்படுத்தியது தான் இன்றைய தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம், தமிழ் என்ற இந்த காட்டுமிராண்டிகளின் மொழியில் அச்செழுத்து சீர்திருத்தத்தை பெரியார் அறிமுகப்படுத்துவதற்கு முன் "லை" இப்படி இருந்ததல்ல, அது எப்படி இருந்தது என்றால் பாலச்சந்தரின் "வானமே எல்லை" சுவரொட்டியையோ பழைய துக்ளக், கல்கியையோ பார்க்கவும்(கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவர்களும் பெரியார் உருவாக்கிய தமிழ் அச்செழுத்து சீர்த்திருத்தத்தை ஏற்றுகொண்டார்கள் என நினைக்கின்றேன்), பெரியார் கூற்றுப்படி நல்ல விடயங்களுக்காகவும் அச்சு நவீனத்துவத்துக்குமான மாற்றத்தை மொழியில் ஏற்காதவர்களின் மொழி காட்டுமிராண்டிகளின் மொழி "வானமே எல்லை" படம் வெளிவந்தபோது இந்த கூற்றுப்படி பாலச்சந்தர் காட்டுமிராண்டி, துக்ளக்கும் கல்கியும் நீண்ட நாட்களுக்கு இதை ஏற்காததால் அவர்களும் அவர்கள் எழுதிய தமிழும் காட்டுமிராண்டி, இதே மாதிரி நீங்கள் ஒரு பதிவிட்டபோதும் நான் இதே மாதிரி பெரியாரின் அச்செழுத்து சீர்திருத்தத்தை எழுதியிருந்தேன், உங்கள் பதிவின் செய்தி சேவையினால் அதை தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை, இந்த பதிவை குறித்து வைக்க வேண்டும், மீண்டும் இதே மாதிரி நீங்கள் பதிவிடுவீர் அப்போது எனக்கு CTL-C , CTL-V செய்தால் போதுமானதாக இருக்கும், புதிதாக தட்டச்ச தேவையில்லை...

பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பெரியார் சொன்னது போலத்தான் இருக்கும், திருக்குறளுக்கு பிந்தைய காலகட்டத்தில் வெளியான தமிழிலக்கிய நூல்களில் பெரும்பாலானவை போர் பரணிகளும், அரசர்களுக்கு தட்டிய ஜால்ராக்களும், சைவ,வைணவ மதமென்று பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்கிய படைப்புகளாகவும் தானிருந்தன, பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பிறகெப்படி இருக்கும்? அப்படித்தானிருக்கும்.? பார்ப்பனிய அதிகாரத்துவத்தை எதிர்க்கும் பெரியாரின் குரல் இப்படி தான் இருக்கும், கருத்தளவில் இப்படி எதிர்த்த இதே பெரியார் இதே தமிழ் மொழி நவீனத்துவமடையவேண்டுமென்று அச்செழுத்து சீர்திருத்தம் செய்திருக்கிறாரென்றால் அவர் தமிழ் மொழியை கேவலமாக நினைத்தவரா என்பது புரியும்...

அது சரி தமிழ் என்றால் பலர் உணர்ச்சிவயப்படவும் சிலர் எரிச்சலடையவும் காரணமென்ன?

தமிழ்- முகமூடி, குழலி பதிவுகளை முன்வைத்து என்ற பதிவில் எழுத்தாளர் மாலன் சொல்லியிருப்பதிலிருந்து சில வரிகள் கீழே...

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

கம்பன், பாரதி, பாரதிதாசன், ஜீவா ஆகியோரிடம் காணப்படும் அதிகார எதிர்ப்பு நிலைகளுக்கும் ஒரு முக்கிய காரணியாக தமிழுணர்வு இருந்திருக்கிறது.

தமிழுக்கு ஐம்பெரும் காப்பியங்களைத் தந்த சமண பெளத்த சமயங்கள், ஒரு வித சமநிலைச் சமூகத்தை விரும்பின. நிறுவனமாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் கல்வி வழங்கல், வைதீக சமயங்கள் பெண்களுக்கு அளித்திருந்ததைவிட சற்று மேம்பட்ட நிலையை அளித்தல் இவை அவற்றின் இந்த விழைவுகளுக்கு உதாரணங்கள். ஆனால் அவை தங்களது தமிழ் ஆர்வத்தை உணர்வு நிலையில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அறிவார்ந்த நிலையிலேயே வெளிப்படுத்திக் கொண்டன. தமிழர்களிடையே இந்த சமயங்கள் பெரும் செல்வாக்குப் பெற இயலாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

அரசியல் வரலாற்றின் வெளிச்சத்தில் பார்த்தால், களப்பிரர்களுக்கு எதிராக சைவர்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், இன்று பிற்பட்டோருக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களும் எழுப்பும் கலக்க்குரலின் அடையாளமாகத் தமிழ் உணர்வு இருந்து வருகிறது.


அதுசரி இப்போது புரிந்திருக்குமே தமிழென்றால் சிலருக்கு உணர்ச்சிப்பெருக்கும், சிலருக்கு வயிற்றெரிச்சலும் உருவாவதன் காரணம்.

சரி இந்த பின்னூட்டத்தினால் ஏதோ நீர் புரிந்துகொள்வீரென்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்லை, ஏனென்றால் இதே மாதிரி ஏற்கனவே ஒரு பதிவிலும் சொன்னது தானே இது, ஆனாலும் ஏன் எழுதுகிறேனென்றால் உம் மாதிரியான ஆட்கள் தொடர்ந்து இயங்கும் போது (எதற்கு எதிராக இயங்குகிறீர்கள் என்பது சொல்ல தேவையில்லை) எம் மாதிரியான ஆட்களும் தொடர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

பின்குறிப்பு:துக்ளக் 'சோ' எழுத அதை எடுத்து பதிவில் போடும் இட்லிவடை போன்றோர்களின் இது மாதிரியான சேவை நிச்சயம் தேவை, இப்படியெல்லாம் அவர்கள் கூறவில்லையென்றால் இந்த பதிவிற்கு வேலையில்லாமல் போயிருக்கும், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது மட்டுமே தெரிந்திருப்பவர்களுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு சிலருக்காவது பெரியாரின் தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம் பற்றிய தகவல்கள் தெரியவந்தால் அதற்கு முழு காரணம் 'சோ' மற்றும் இட்லிவடை....

இட்லிவடை தேவை உமது சேவை

பிற்சேர்க்கை


"லை" என்று எழுதியதால் தமிழ் எப்படி வளர்ந்தது என்று விளங்கவில்லை. என்று பின்னூட்டத்தில் கேட்டு பெரியாரை பற்றியும் அவரின் சேவையை பற்றியும் மேலும் அறியும் ஆர்வமுடன் முத்துக்குமரன் வினவியதிற்கான பதிலை பதிவிலும் சேர்க்கிறேன்.

மேலே உள்ள படம் "வானமே எல்லை" திரைப்படத்தின் விளம்பரப்படம் இருக்கும், அதில் "லை" என்ற எழுத்தை பாருங்கள் "ல"க்கு மேலே ஒரு சுழி, இரண்டையும் ஒரு 'S' சேர்த்திருக்கும், இப்படி லை,னை,ரை வரிசை எழுத்துக்களும் முன்பு புழக்கத்தில் இருந்தன.

,
அதே போல அருணாச்சலம் படத்தின் பெயரை அந்த "ணா"க்கு பதில் 'ண'க்கு கீழே ஒரு படகு மாதிரி வந்திருக்கும், இப்படியான எழுத்துக்கள் தமிழ் மொழி அச்சில் பயன்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது.

இது மாதிரியான எழுத்துக்களுக்கு கால் போட்டதாலும் முன்புறத்தில் கொம்பு போட்டதாலும் சில எழுத்துக்களை மீண்டும் வெவ்வேறு எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தலாம், இது தான் பெரியார் அறிமுகப்படுத்திய அச்செழுத்து சீர்திருத்தம், இதற்கு பின்பு அச்சில் தமிழ் எளிமையானது.

இட்லிவடையின் சேவை போலவே முத்துக்குமரன் புராணத்தின் சேவையும் எங்களுக்கு மிக்கத் தேவை.

நன்றி

34 பின்னூட்டங்கள்:

said...

அவ்வளவு தூரம் லை னை, ணை என்ற எழுத்துக்களை சீர்திருத்துவதைப் பற்றிப் பேசிய அதே ஈ.வே.ரா அவர்கள்தான் தன் கடைசி நாட்கள் வரை தன் கைப்பட எழுதியதில் பழைய முறையையே பாவித்து வந்தார். கம்பாசிட்டர்கள்தான் அவற்றைத் திருத்த வேண்டியிருந்தது. ஆக, சினிமாவில் சத்யராஜ் இவ்வாறு பழைய முறையில் அந்த எழுத்துக்களை அவர் எழுதி வந்ததையும் காண்பிக்கலாம்.

தன்னை நாடி வந்த வறிய புலவர் ஒருவரிடம் பாலறுந்தக் கொடுத்து விட்டு அவரிடம் தமிழ்ப்புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள் எனக் கூற கதிரேசன் என்னும் பெயருடைய அந்த ஏழைப்புலவர் மனம் நொந்து "உம்மிடம் போய் வந்து நின்றேனே" எனக் கூறிவிட்டு தன் தொண்டையில் விரலை விட்டு முழுக்க வாந்தியிட்டு, மறம் பாடி விட்டு சென்ற நிகழ்ச்சியைப் பற்றி பெரியார் பிற்காலத்தில் எழுதும்போது கதிரேசன் என்னும் வாயாடிப் புலவர் என்று குறிப்பிட்டு தன் தமிழ்பற்றையும் வெளிப்படுத்தினார் என்பதையும் இப்படத்தில் காட்டுவார்கள என நம்புவோமாக.

இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அரிய தகவல்கள். தெரியாத விஷயங்கள். மிக்க நன்றி குழலி.

said...

I like this post....

said...

//துக்ளக் 'சோ' எழுத அதை எடுத்து பதிவில் போடும் இட்லிவடை போன்றோர்களின் இது மாதிரியான சேவை நிச்சயம் தேவை, இப்படியெல்லாம் அவர்கள் கூறவில்லையென்றால் இந்த பதிவிற்கு வேலையில்லாமல் போயிருக்கும், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது மட்டுமே தெரிந்திருப்பவர்களுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு சிலருக்காவது பெரியாரின் தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம் பற்றிய தகவல்கள் தெரியவந்தால் அதற்கு முழு காரணம் 'சோ' மற்றும் இட்லிவடை....

இட்லிவடை தேவை உமது சேவை//

ரிப்பீட்டே... கோடானு கோடி நன்றிகளும்! :)

said...

எல்லாம் சரி குழலியாரே. அவரு ஏன் காட்டுமிராண்டி மொழின்னு சொன்னாரு. அதையும் உங்க பாணியிலே 'விளக்குங்களேன்'.

said...

சென்ற பதிவில் கூறியது போல நிறைய gelusil ஸாப்பிடும் கூட்டம் வேறு என்ன செய்யும். ஊடகங்களில் எதை எதையோ எழுதி தங்கள் அரிப்பை தணித்துக் கொள்கிறார்கள். பெரியார் மத பக்தர்களை விட அதிகம் பெரியாரை நினைத்துக் கொண்டிருக்கும் இவர்களை வாழ்த்துவோம். பெரியாருக்கு இலவச விளம்பரம் தரும் புனித பிம்பங்கள் வாழ்க.

said...

என்னோட + குத்து !
:)

said...

//At 2:09 AM, dondu(#4800161) said…

அவ்வளவு தூரம் லை னை, ணை என்ற எழுத்துக்களை சீர்திருத்துவதைப் பற்றிப் பேசிய அதே ஈ.வே.ரா அவர்கள்தான் தன் கடைசி நாட்கள் வரை தன் கைப்பட எழுதியதில் பழைய முறையையே பாவித்து வந்தார். கம்பாசிட்டர்கள்தான் அவற்றைத் திருத்த வேண்டியிருந்தது. ஆக, சினிமாவில் சத்யராஜ் இவ்வாறு பழைய முறையில் அந்த எழுத்துக்களை அவர் எழுதி வந்ததையும் காண்பிக்கலாம்.

தன்னை நாடி வந்த வறிய புலவர் ஒருவரிடம் பாலறுந்தக் கொடுத்து விட்டு அவரிடம் தமிழ்ப்புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள் எனக் கூற கதிரேசன் என்னும் பெயருடைய அந்த ஏழைப்புலவர் மனம் நொந்து "உம்மிடம் போய் வந்து நின்றேனே" எனக் கூறிவிட்டு தன் தொண்டையில் விரலை விட்டு முழுக்க வாந்தியிட்டு, மறம் பாடி விட்டு சென்ற நிகழ்ச்சியைப் பற்றி பெரியார் பிற்காலத்தில் எழுதும்போது கதிரேசன் என்னும் வாயாடிப் புலவர் என்று குறிப்பிட்டு தன் தமிழ்பற்றையும் வெளிப்படுத்தினார் என்பதையும் இப்படத்தில் காட்டுவார்கள என நம்புவோமாக.

இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு இராகவன் என்கிற ஆதிக்க கருதில் ஊறிய பெரியவரே (இப்படி அழைக்க விருப்பமில்லை)! பெரியாரை நீங்கள் கொச்சைப்படுததுவதால் பெரியார் செய்த பணி கழங்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரியார் ஒரு விடுதலை வீரன்! பெரியார் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்றும் தமிழர்களில் பெரும்பான்மை அடிமைகளாக இருந்திருப்பார்கள்! நாங்கள் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகம். இந்த வலி உங்களுக்கு புரியாது! உங்களது இந்த தூண்டுதல் (!) பெரியாரை பற்றி அதிகமாக பேச வைக்கும்!

தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டுவந்தது பெரியார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அது நீங்கள் உட்பட. வழக்கமான உங்கள் திசைதிருப்பல் நாடகங்களால் ஒரு விடுதலை வரலாற்றை மறைக்க இயலாது!

அன்புடன்
திரு

said...

//மாயவரத்தான்... said...
எல்லாம் சரி குழலியாரே. அவரு ஏன் காட்டுமிராண்டி மொழின்னு சொன்னாரு. அதையும் உங்க பாணியிலே 'விளக்குங்களேன்'.//

இதுக்கு குழலி தான் விளக்கணுமா? உங்களைப் போல பல ஆட்கள் கேட்ட கேள்விக்கு பதில் கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் வந்திருக்கிறத மட்டும் வசதியா படிக்காம போயிடுறீங்களே. எல்லா பிற்போக்கு 'உண்ணியப்பத்தையும்' தேடி படிக்கிறவங்க அதையும் படிச்சு உண்மைய தெரிஞ்சுக்கலாமே!

ஸ்மைலி போட்டுக்கிறேன் :)))))

said...

உள்ளேன் அய்யா!

said...

ayyoo விட்டுப்போச்சு.. :-)))))

said...

குழலி,
அருமையான பதிவு.மிக்க நன்றி!

தமிழை பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது தமிழின் தொன்மையையும் ,அதே நேரத்தில் பழம் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல் நவீன உலகிற்கேற்ப புதுமைகளை உள்வாங்கிக் கொள்ள தவறினால் அதற்கு ஏற்படப் போகும் நிலையையும் பெரியார் அக்கறையோடு சொல்லியிருக்கிறார் என்பது தான் என் புரிதல் .அதனால் தான் வெறும் வாய் பேச்சோடு நிற்காமல் எழுத்து சீர்திருத்ததை அவரே செய்து காட்டினார்.

மாயவத்தான் போன்றவர்கள் தாங்கள் நினைக்கிற அர்த்தத்தில் தான் பெரியார் சொன்னார் என்று நினைத்தால் ,அதற்காகவேனும் பெரியாரை புகழ்ந்து விட்டு போகட்டுமே ? எதற்கு வந்து நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டும்?

said...

Is the christian tamil literature and islamic tamil literature any
different.Are you willing to extend the same criticism to them.

said...

//எல்லாம் சரி குழலியாரே. அவரு ஏன் காட்டுமிராண்டி மொழின்னு சொன்னாரு. அதையும் உங்க பாணியிலே 'விளக்குங்களேன்'//

மாயவரத்தான் அய்யா,

இதை விளக்க ஷெர்லக் ஹோல்ம்ஸ் தேவையில்லை.
தந்தையாருக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த கும்பல் வீரமணி,லக்கி,குழலி டைப் ஆசாமிகள் தான்.இவர்களைப் போன்றவர்களின்,பேச்சையும், செயல்களையும் பார்த்து கரும் பாறையே நொந்து போய் சொன்ன வார்த்தைகள் இது.கரும்பாறை சொன்ன ஓரிரு சரியான கருத்துக்களில் இதுவும்
ஒன்று.

பாலா

said...

குழலி,

மருத்துவரை ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள். தீடீர் என்று பல தமிழ்குடிதாங்கிகள் கிளம்புகின்றன!!!!.

அவரு தமிளதான சொன்னாரு. அவார்களுக்கு ஏன் வலிக்குது??

said...

லை என்று எழுதியதால் தமிழ் எப்படி வளர்ந்தது என்று விளங்கவில்லை. எனக்கு தெரிந்து பெரியார் நடத்திய அச்சகத்தில் பழைய "லை" தேய்ந்துவிட்டதால், அவர் கஞ்சர் என்பதால் "இனிமே லை னே போடு' என்று அச்சடிப்பவர்க்கு சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது மெய்யோ பொய்யோ ஆனால் லிபி என்பது வெறும் குறியீடு தான் அதை எப்படி சொன்னால் என்ன என்ற அவர் புரிதலை ரசிக்கிறேன் ஆனால் அது முன்னேற்றம் அல்ல, கழக்த்தார் கிண்டிய மற்றொரு அல்வா தான் என்பதை தவிர சொல்வதற்க்கு ஒன்றுமில்லை. உண்மையில் தமிழ் வள்ர்த்த உவேசா போன்றோரை இருட்டடிப்பு செய்து தமிழ் காவலர்களாக தங்களை முன்னிறுத்தி வயிறு வளர்ப்பவர்கள் தான் தமிழின துரோகிகள். சத்தியமாக இந்த பதிவை படிப்பவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு தமிழ் தாத்தாவை தெரிந்திருக்காது என்படிலிருந்து கழகத்தினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டை தெரிந்துக்கொள்ளலாம். கழகம் வளர்தது தமிழை அல்ல காழ்ப்புணர்வை மட்டுமே. ஆனால் பெரியார் முன்வைத்த கருத்துகளில் சத்து இருந்தது, ஆனால் கழகத்தின அதை கொண்டு தங்கள் குடும்பங்களை வளர்த்துக்கொண்டனர். அவ்வள்வே.

said...

//லை என்று எழுதியதால் தமிழ் எப்படி வளர்ந்தது என்று விளங்கவில்லை. எனக்கு தெரிந்து பெரியார் நடத்திய அச்சகத்தில் பழைய "லை" தேய்ந்துவிட்டதால், அவர் கஞ்சர் என்பதால் "இனிமே லை னே போடு' என்று அச்சடிப்பவர்க்கு சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். //
இது, இது நடந்திருக்க வாய்ப்பு அதிகம்...அவருடைய அன்றைய கழகத்தினர் மற்றும் இன்றைய வழித்தோன்றல்கள் பூனைகட்டிய குரு மாதிரி செய்து, மேலும் பெரியாரது உண்மையான மொழிப்பற்றினை (அதாவது காட்டுமிராண்டி என்ற பதத்தினை) மறைக்க இதனை சீர்திருத்தமாக கொண்டிருக்கலாம்...ஹா ஹா ஹா

என்ன?, உவேசா-வா?, மூச், பேசப்படாது, அவர் பார்ப்பனர் அவரெங்கெ தமிழ் வளர்த்தார்....நாங்கள் வளர்க்கும் பார்தீனியம் பற்றி தெரியுமா அவருக்கு....அவரென்ன குறளுக்கு விளக்கம் எழுதினாரா, இல்லை தொல்லாகப்பிய பூங்கா அமைத்தாரா, அல்லது தன் பெயரையாவது தமிழ்படுத்திக்கொண்டாரா?....யாரை காட்டுகிறாய் உதாரணம்?, எவரிடம் எதிர்பார்க்கிறாய் உண்மை....ஹாஹாஹா

said...

குபாரா தெரியுமா?, தேவன் பற்றி அறிவீரா?, தீபம் பார்த்தசாரதி என்று ஒருத்தர் இருந்தது தெரியுமா? இல்லை கல்கியாவது படித்ததுண்டா....அவர்களேல்லாம் சமஸ்கிருதம் வாசித்தவர்கள், ஆனால், தமிழில் எழுதியவர்கள்....படிங்களைய்யா, படிங்க....முதலில்.

said...

//லை என்று எழுதியதால் தமிழ் எப்படி வளர்ந்தது என்று விளங்கவில்லை.
//
என்னங்க முத்துக்குமரன் புராணம், மேலே பாருங்க, டோண்டு அய்யாவுக்கே புரிந்துவிட்டது, பின்னூட்டத்தில கூட அச்செழுத்து சீர்திருத்தத்தை பெரியார் கையெழுத்தில் கடைபிடிக்கவில்லை என்றுதான் கூறியுள்ளார், அவருக்கோ அச்செழுத்துக்கும் பழக்கத்தில் வரும் கையெழுத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் உங்களுக்கோ சுத்தம்.... ம்....

சரி சொல்றேன் கேளுங்க, இந்த சுட்டியில் வானமே எல்லை படத்தின் விளம்பரப்படம் இருக்கும், அதில் "லை" என்ற எழுத்தை பாருங்கள் "ல"க்கு மேலே ஒரு சுழி, இரண்டையும் ஒரு 'S' சேர்த்திருக்கும், இப்படி லை,னை,ரை வரிசை எழுத்துக்களும், அதே போல அருணாச்சலம் படத்தின் பெயரை இந்த சுட்டியில் பாருங்க, அந்த "ணா" 'ண'க்கு கீழே ஒரு படகு மாதிரி வந்திருக்கும், இது மாதிரியான எழுத்துக்களுக்கு கால் போட்டதாலும் முன்புறத்தில் கொம்பு போட்டதாலும் சில எழுத்துக்களை மீண்டும் வெவ்வேறு எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தலாம், இது தான் பெரியார் அறிமுகப்படுத்திய அச்செழுத்து சீர்திருத்தம், இதற்கு பின்பு அச்சில் தமிழ் எளிமையானது.

முத்துக்குமரன் புராணம் இந்த விடயத்தில் உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமென்பதைவிட ஏதாவது விமர்சிக்க(இது விமர்சனம் மாதிரி தெரியவில்லை ஏச்சு மாதிரி தெரிகின்றது) வேண்டுமென்றே உள்ளீர்கள் மாதிரி தெரிகின்றது. இப்போ பாருங்க நீங்க வந்து என்னமோ எப்படி வாழ்ந்ததுனு கேட்கப்போக இந்த நான் அதை விளக்க இது தெரியாத இன்னும் சிலர் இன்னும் அதிகமாக பெரியாரை தெரிந்து கொள்ளப்போகிறார்கள், உங்களைப்போன்றோரின் சேவை எங்களுக்கு மிக்கத் தேவை.

நன்றி

said...

There is more to Tamil than devotional literature.There were many texts on astronomy,mathematics,
medicine etc.Most of them were
lost over the years.But not all
was lost.What did Periyar or DK
do to revitalise this knowledge.
Did he ever acknowledge their relevance.
Has Periyar ever accepted or acknowledged the positive contributions
of brahmins to Tamil.

said...

ரவி ஸ்ரீனிவாஸ் உங்க பின்னூட்டம் இடம் மாறி வந்துவிட்டதோ, இட்லிவடைபதிவில் போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கே போட்டுவிட்டீர்கள் போல :-)

said...

ரவியின் நகைச்சுவையை ரசித்தேன் :) ரொம்ப தான் சிரிக்க வைக்கிறார் ரவி.

said...

// டோண்டு அய்யாவுக்கே புரிந்துவிட்டது //


பாயிண்ட புடிக்கறதில கில்லாடியா நீரு :))))

ஆமாம் சமச்கிருக்கர்கள் (சம்ச்கிருத்த்தை காதிலிப்பவர்கள் னு அர்த்தம். தனிமனித தாக்குதல்னு நெனச்சிராதீக) பலரை இன்னும் இங்கே காணோமே?

said...

"டோண்டு இராகவன் என்கிற ஆதிக்க கருதில் ஊறிய பெரியவரே (இப்படி அழைக்க விருப்பமில்லை)!"

ஈவேரா என்பவர் மேல் கண்மூடி நம்பிக்கை வைத்திருக்கும் திரு என்பவரே, ஈவேரா கதிரேசன் என்னும் அந்த வறிய புலவரை அவமானம் செய்ததை சௌகரியமாக ஒதுக்கிவிட்டீர்ரே? வெறுமனே கஞ்சத்தனத்துக்காக லை னை எல்லாம் போட்டவரை தமிழ் சீர்த்திருத்தவாதி என்று கூறும் உங்கள் அறியாமைதான் சிரிப்பை வரவழைக்கிறது.

பிள்ளையார் சிலைகளை உடைத்தார், தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள்.

"ராமாயணம், கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம்" ஆகிய மூன்று நூல்கள் என்று கூறிய பகுத்தறிவு பகலவனுக்கு ராமாயணம் என்று தனியாக ஒரு நூல் இல்லை, என்பதுகூடத் தெரியவில்லை. அவ்வளவுதான் பொது அறிவு.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தபால் கார்டு காலணாவுக்கு விற்றது இப்போது அரையணாதான், ஆகவே ஊதிய உயர்வு அந்த முப்பது ஆண்டுகளில் இரட்டிப்பாக இருந்தால் போதும் என்று திருவாய் மலர்ந்தருளியவரின் பொருளாதார அறிவுதான் என்னே?

ஈவேராவுடைய பல அபத்தங்களைப் பட்டியலிட இடம் தரும் இந்தப் பதிவை நானும் வரவேற்கிறேன்.

இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html


அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னதாகூட வைத்துக்கொண்டாலும் , அவர் தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று பார்க்க வேண்டும் . இதை ஒரு சாக்காக கூறும் சில சாக்கடை மனதுடையோர் உண்மையிலேயே தமிழர்களை யார் காட்டு மிராண்டிகள் போல நடத்தினர் என்று கூற வேண்டும் நான் மட்டுமே இறைவனிடம் பேச தகுதி கொண்டவன் என்ற ஆணவ செருக்கு யாருக்கு இருந்தது ராமனுக்கு கதையில் உதவியாத சொல்லப்படும் தென்பகுதியை சேர்ந்த மக்களை கூட குரங்குகள் ஆகி விட்டனர் . சமஸ்கிரதம் மட்டுமே தெய்வ மொழி என்றனர். என்னால் மட்டுமே கல்வி கற்க முடியும் என்று ஏமாற்றி நம்மை காட்டிலும் மேட்டிலும் அலைய விட்டனர் . இப்படி காட்டு மிராண்டி போலவும் ஆட்டு மந்தை போல பாப்பான் ஊதிய கொள்ளியவாய் பிசாசு வேதத்திற்கு தலையாட்டியவர்களை வேறு எப்படி சொல்வது?

said...

குழலி,
தமிழ் பற்றி பெரியாரின் கட்டுரைகள் இரண்டை என்னுடைய பதிவில் இட்டிருக்கிறேன். பெரியார் ஆதரவாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பெரியாரின் மூலக்கட்டுரைகளைப் படித்து தமிழ்/தமிழர்கள் குறித்த அவருடைய ஆதங்கங்களை, அக்கறையை புரிந்துகொள்ளலாம்.

http://kumizh.blogspot.com/2005/03/1_30.html

http://kumizh.blogspot.com/2005/04/2.html

தொடர்புள்ள இன்னொரு பதிவு
http://kumizh.blogspot.com/2005/04/1_24.html

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று குறிப்பிட்டதும், நா. கதிரைவேற் பிள்ளை பற்றிய குறிப்பும் இக்கட்டுரைகளில் உள்ளன. டோண்டு ராகவன் அப்போது ஆரம்பித்து அரை அரையென்று அரைத்துக்கொண்டிருப்பதில் கதிரைவேற் பிள்ளை கதிரேசன் ஆனதைத் தவிர வேறென்று நடக்கவில்லை.

பின்குறிப்பு: அநாமதேயங்களை அனுமதிக்கும் பதிவுகளில் பின்னூட்டமிடுவதில்லை என முடிவுசெய்துள்ளேன். ஆகவே இதுவே இங்கு கடைசி பின்னூட்டமாக இருக்கும்.

said...

உண்மையில் இந்த விளக்கம் நான் அறியாததுதான். நன்றி. ஆனாலும் பெரியார் புதிதாக எழுத்துக்கட்டைகள் வாங்க கஞ்சப்பட்டுக்கொண்டு புத்திசாலிதனமாக சமாளித்தார். ஆனால் அவர் பத்திரிக்கைகளை படிப்பவர்கள் மட்டும் இந்த எழுத்துக்கு பழகவேண்டியிருந்தது. ஆனால் இதை ஒரு புரட்சி என்று கூறி எல்லோரும் இப்படி தான் எழுத வேண்டும் என்று (பள்ளிகளில் சொல்லி தருவது மூலமாக) நிர்பந்த படுத்தியதில் தமிழ் விசேஷமாக வளர்ந்துவிட வாய்ப்பில்லை. இது வெறும் அரசியல் "stunt". இவ்வளவு பெரிய அச்சகம் நடத்துவோருக்கு கொஞ்சம் அதிகமான எழுத்து வடிவங்களை வைத்துக்கொள்வதில் என்ன கஷ்டம் வந்து விடப்போகிறது. கண்டிப்பாக பெரியாரே கூட இந்த கூத்தை "வெங்காயம்" என்றே கூறியிருப்பார். மாறாக என்னுடைய சிறிய அறிவுக்கு எட்டிய வரை பெரியார் தமிழ் வளர வேண்டும் என்று வேறு எதுவும் சொல்லவில்லை மாறாக தவக்களைதனத்தை விட்டு ஆங்கிலமே பிரதானமாக படிக்க சொன்னார். திராவிட (முன்னேற்ற கழக) மாயை . இவர்கள் ஆட்சி நடத்துவதை விட காட்சி நடத்துபவர்கள் என்பது சற்று ஆராய்ந்து பார்த்தால் தெரிகிறது. இந்த எழுத்து சீர்திருத்தன் அக்மார்க் அல்வா என்று சொன்னதில் மாற்றம் இல்லை.

said...

// இந்த எழுத்து சீர்திருத்தன் அக்மார்க் அல்வா என்று சொன்னதில் மாற்றம் இல்லை.
//
நன்றி, இதை செய்தது பெரியார் என்பதால் உங்களுக்கு அல்வாவாக தெரிவதில் வியப்பொன்றுமில்லை... இருந்திவிட்டு போகட்டும்....

said...

kuzhali,
ithai seerthirutham endru ellam periyar sollave illai..enaku therindha varai DMK karargal thaan ithai apdi parapi (nirbandam) vittargal. Periyar avar achagathuku selavillamal budhisalithanamaga samalithar. Intha mathiri pala alwakkal kazhagam kindi thandhirukirathu. Thiruvalluvar silai matroru udaranam.yaro oru pennin oviyathai bharathidasan oru murai thaadi veithu valluvar ipdi thaan irundhu irupar endru vilayataga solla, ippozhu makkal panathil kodigalil oru thanda silai. thirumbavum solgiren ivargal nadathuvathu aatchi illai kaatchiye. naan emara thayaraga illai.

said...

பெரியாரின் அச்செழுத்து சீர்திருத்தத்தினால் பெற்ற பெரும் நன்மையை எவர் உணர்ந்துள்ளாரோ இல்லையோ, இன்று கணினியில் தமிழைப் பயன் படுத்தும் நாம் உணர்ந்திருக்கிறோம். இதைப் பெரியார் செய்தார் என்பதால் ஏற்க மறுக்கும் மனங்களுக்கு இது குறித்து என்ன சொன்னாலும் உறைக்கப் போவதில்லை.

'கன்னடம்', 'வெங்காயம்' என்று புலம்புவதிலேயே அவர்கள் பொழுது கழியட்டும்.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் அந்தப் பகுத்தறிவு ஆதவனை மறைக்க இயலாது.

said...

"தமிழை காட்டுமிராண்டி மொழி என்று குறிப்பிட்டதும், நா. கதிரைவேற் பிள்ளை பற்றிய குறிப்பும் இக்கட்டுரைகளில் உள்ளன. டோண்டு ராகவன் அப்போது ஆரம்பித்து அரை அரையென்று அரைத்துக்கொண்டிருப்பதில் கதிரைவேற் பிள்ளை கதிரேசன் ஆனதைத் தவிர வேறென்று நடக்கவில்லை"

வறிய நிலையில் பசியோடு வந்த புலவரை அவமதித்தது ஒரு விதத்தில் கொலையே. அதை நீங்கள் பெரியார் செய்தார் என்பதற்காக நியாயப்படுத்தக் கூட செய்யலாம். ஆனால் இம்மாதிரி நடந்து கொண்டது பண்புள்ள செயலா என்பதைக் கூறுங்கள். அதே காட்சி அப்படியே பெரியார் படத்தில் வந்தால் பார்ப்பவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள் என்பதையும் கூறிவிடுங்கள்.

ஆக அம்மாதிரி பெரியார் கையால் அவமானப்பட்டது கதிரேசன் என்றதற்கு இல்லை கதிரைவேற்பிள்ளை என்று குறிப்பிட்டு விட்டால் நியாயமாகிவிடும் என்பது என்ன பகுத்தறிவின் கீழ் வருகிறது என்பதையும் கூறிவிடுங்கள்.

நீங்கள் சுட்டிய பதிவுகளிலேயே நான் எழுப்பிய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.

1. 1965-ல் அவரது ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்த நிலை. நினைவு கொள்ளுங்கள் அந்த ஆண்டு ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்த எவருமே ஹிந்திக்கு ஆதரவாளர்களே. அது புரிய வேண்டுமானால் 1965 ஜனவரி 26ம் தேதியின் முக்கியத்துவம் தெரிந்திருக்க வேண்டும்.
2. மற்ற இடங்களில் தமிழை அவர் புகழ்ந்து பேசியிருப்பார் என்று அப்பதிவுகளில் கூறப்பட்டதற்கு ஆதாரம் கேட்டேன். அதையும் நீங்களோ உங்கள் நண்பர் குழாமோ தரவில்லை.
3. பெண்ணுரிமை அவ்வளவு பேசிய அவர், உத்தமப் பெண்ணான தன் முதல் மனைவியை தம் ரௌடி நண்பர்களை விட்டு கோவிலுக்கு செல்லும்போது கேலி செய்வித்ததை உங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்தக் காட்சி கூட ராஜசேகரன் அவர்கள் தனது படத்தில் சேர்க்கலாம்.

இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

குழலி அவர்களுக்கும் அரிய தகவல்கள் பல அளித்த ஏனைய அன்பர்களுக்கும்,

பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்திருத்தம் பற்றி நிறைய தகவல்கள் அறிய முடிந்தது. நன்றி!

தமிழ் லிபியானது பலப்பல வடிவ மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இன்றும் பழைய ஓலைச் சுவடிகளில் உள்ள எழுத்து வடிவமும் தற்போதைய புழக்கத்தில் இருக்கும் எழுத்து வடிவமும் நிறைய மாற்றங்கள் கொண்டது.

பெரியார் அறிமுகப் படுத்திய எழுத்து சீர்திருத்தம், தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கியது. குறிப்பாக குழலி உதாரணத்துடன் குறிப்பிட்டிருக்கும் 'ஆ'காரம் மற்றும் 'ஐ'காரம் ஒரே வடிவத்தில் புழக்கத்தில் இல்லை. 'வா' என்ற எழுத்தும் 'னா' என்ற எழுத்தும் வெவ்வேறு வடிவத்தில் இருந்ததை ஒரே வடிவத்தில் வழங்க ஒரு முன்மாதிரியாக இருந்தார். அது அச்சுத் தொழிலுகு மட்டும் அல்ல நம் போன்ற சாதாரணர்களுக்கும் தமிழ் எழுத்துக்களை பாவிப்பதற்கு இலகுவாக இருக்கிறது.

அந்த சீர்திருத்தங்களில் இன்னொரு அம்சம் முக்கியமானது. தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் 'உ'காரம் மற்றும் 'ஊ'காரம் வெவ்வேறு வடிவங்களில்தான் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவைகளையும் மாற்றினால் அச்சு எழுத்துக்களில் எந்த வித புதிய பயன்களும் (benefits) இல்லை. ஏனென்றால் 'துணை' எழுத்துக்களை re-use செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. தேவையான அளவு மட்டுமே மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

இந்த இடத்தில் தி. ராஸ்கோலு அவர்களின் பின்னூட்டம் எனது கவனத்தை கவர்ந்தது.
//
தி.ராஸ்கோலு said...
பெரியாரின் அச்செழுத்து சீர்திருத்தத்தினால் பெற்ற பெரும் நன்மையை எவர் உணர்ந்துள்ளாரோ இல்லையோ, இன்று கணினியில் தமிழைப் பயன் படுத்தும் நாம் உணர்ந்திருக்கிறோம்.
//

கணினி பயன்பாடில் இந்த சீர்திருத்தங்கள் நிச்சயம் உதவியாகத்தான் இருந்தன. துணை எழுத்துக்களை re-use செய்வது என்பது மிகப் பெரிய சாதகமான அம்சம்தான். ஆனால் அச்செழுத்துக்கள் அளவுக்கு உதவியதா என்பது சந்தேகம்தான். 'கை'அல்லது 'னை' என்ற எழுத்தை நாம் சேமிக்கும் பொழுது அது 'கூ' அல்லது 'வூ' என்ற எழுத்து எடுத்துக் கொள்ளும் இடத்தையே எடுத்துக் கொள்கிறது. வடிவ ஒருங்கிணைப்பு (standerdisation) இங்கு பெறுமளவிற்கு உதவி செய்யவில்லை.

Unicode என்று அழைக்கப்படும் ஒருங்குறி அமைப்பில் தமிழுக்கு 128 நிலைகளை அளித்திருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247; வடமொழி எழுத்துக்களையும் சேர்த்து 313; (தகவல்களில் பிழையிருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்). ஆகவே உயிர்மெய் எழுத்துக்கள் கூட்டெழுத்துக்களாகத்தான் (combination of characters) சேமிக்க முடியும்.

இதனால் என்ன தீங்கு (demerits)? தமிழ்த் தகவல்கள், கட்டுரைகள் போன்றவற்றை சேமிக்கும் பொழுது அதிக இடம் எடுத்துக் கொள்கின்றது. தேவ நாகிரி லிபியில் (devanaagiri script) வழங்கப் படும் மற்ற மொழிகளான ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை 500 எழுத்துக்களுக்கு மேல் புழங்குகின்றன. குறைந்த எழுத்து வடிவங்களைக் கொண்ட தமிழ் மொழி கணினி பயன்பாட்டில் அடையக்கூடிய பலன்களை இன்னும் அடையவில்லை என்றுதான் தோன்றுகிறது. இதற்குண்டான ஒரு தீர்வு இங்கே இருக்கிறது.

தலைப்பை விட்டு வெகுதூரம் விலகிவிட்டேனோ? எழுத்து சீரமைப்பு விவாதம் நடைபெற்றதால் இதையும் சேர்த்து பின்னூட்டமாக இட்டு விட்டேன். தகவல் பிழையிருப்பின் மன்னிக்கவும்.

said...

பெரியார் தமிழ் என்று கூறி அரசியல் செய்பவர்களை சாடினார். மக்களை தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் படிக்க சொன்னார். அவர் எதிர்த்த விஷயங்களை தங்கள் இலாபத்திற்காக அரசியல் வாதிகள் அவர் கொள்கைகளாக பரப்புவதில் இருக்கும் உள்நோக்கத்தை புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் பொய்யான "propaganada" என்று நான் சொன்னால் பெரியாரை எதிர்ப்பவன் என்றூ முத்திரை குத்துவது எனக்கு புரியவில்லை. நான் ஏற்றுக்கொள்ளாத பல கருத்துக்களை பெரியார் சொல்லியிருந்தாலும் அவர் கொள்கை பற்றுடையவர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர் பெயரை வைத்து அரசியல் நடத்தும் கட்சியினரை தான் ஏளனம் செய்கிறேன். அவர்கள் கிண்டி தரும் அல்வாக்களை நடுநிலையுடன் பார்த்தால் சுலபமாக தெரிந்துவிடும். பெரியார் ஒரு காலத்திலும் மொழியை தமிழ் மொழி வளர வேண்டு என்றெல்லாம் சொல்லவே இல்லை. முடிந்தால் அவர் எழுத்துக்களை கொண்டு நான் தவறு என்று சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் என்னை.

said...

Periyar wanted Tamil People to improve their knowledge to progress in sceintific thinking and research.Saying the same 'Kalthondri Manthondra.."was not going to improve Tamil language or Tamil people.At the same time it was Periyar who organised Thirkkural conferences and propagated Thirukkural.It was Periyar who published translations of Bertrand Russell,Ingersol,Ammbedkar and many progressive thinkers in Tamil and sold them at every one of his meetings at subsidised price.All the important scientific and rational progresses were published by him in "kudiarasu" in Tamil.He castigated Tamil scholars for not keeping up with the advancing world and having debates on Kambaramayanam,Kannagi and Madhavi.He was the beacon to make lot of writers bring works in modern Tamil instead of the 50-80% sanscrticised Tamil of those days.His change in letters was to make it easier for composing people in Viduthalai working at night in dark rooms with one low watt bulb.