பல்லாண்டு வாழ்க
உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்
நீ இருக்கவேண்டும்
சிலரின் எரிச்சலுக்காகவேனும்
பில்லி சூனியம் வைத்து
கொல்லமுடிந்திருந்தால்
கொன்றிருப்பார்கள்
உன்னை!
சத்ருநாச யாகம் செய்து
கொல்லமுடிந்திருந்தால்
கொன்றிருப்பார்கள்
உன்னை!
அதிகாரம் கையிலிருந்திருந்தால்
அடித்தே
கொன்றிருப்பார்கள்
உன்னை!
எதுவுமே பலிக்கவில்லை
பாவம்
எண்ணுகிறார்கள் நீ
சாகவேண்டுமென
நீ சாகவேண்டுமென
நினைப்பவர்கள் சிலர்
நீ வாழவேண்டுமென
நினைப்பவர்களோ
சில கோடி
உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்
அதற்காகவே
நீ
வாழ்க பல்லாண்டு
பின்குறிப்பு:
மனவிகார பின்னூட்டங்கள் வெளியிடப்படாது, அதற்கு வேறு இடம் பார்க்கவும்
30 பின்னூட்டங்கள்:
//நீ வாழவேண்டுமென
நினைப்பவர்களோ
சில கோடி//
குழலி,
சில கோடிகளில் ஒருவனாக உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.
கலைஞர் என்ற அரசியல்வாதியோடு எமக்கு கோபங்கள் ஏமாற்றங்கள் உண்டு .ஆனால் அவர் யாருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்ரு தெரிய வரும் போது ,அவர் வாழ வேண்டும் என்று மனமார நினைக்கத் தோன்றுகிறது.
எம்மை வாழவிட விரும்பாதார் உம்மை வாழ்க்கூடாது என நினைப்பதாலேயே ,வாழ்க நீ கலைஞர் ஐயா!
//கலைஞர் என்ற அரசியல்வாதியோடு எமக்கு கோபங்கள் ஏமாற்றங்கள் உண்டு .
//
எனக்கும் தான் ஜோ
//ஆனால் அவர் யாருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்ரு தெரிய வரும் போது ,அவர் வாழ வேண்டும் என்று மனமார நினைக்கத் தோன்றுகிறது.
//
வழிமொழிகிறேன்...
"பகவானை வேண்டினேன்
கருணாநிதியை படுக்க
போட்டுடுத்து" என
கொழுப்பில் பேசிய
சங்கரன்களேயே நாங்கள்
உயிரோடு பார்த்துக்கொண்டிருக்கும்
போது இப்ப என்ன அவசரம்
இருந்து விட்டு சாகு
இன்னும் சில நூற்றாண்டு.
வெறும் வாழ்த்துதல் மட்டும் போதாது குழலி! பொது மக்களுக்கான அவரது உழைப்பையும் தமிழுக்கான சேவைகளையும் நாம் உள்வாங்கிக் கொண்டு செயல் பட்டால் மட்டுமே நமது வாழ்த்து பயனளிக்கும்.
வணக்குவோம் வாழ்த்துக்களுடன்.
தோழன்
பாலா
தமிழ் கூறும் நலுலகில் சாகவரம் பெற்றவர் அவர் !
அவரை நெருப்பு தீண்டமுடியும், ஆனால் இறப்பு தீண்டுமா ?
உடல் இறப்பில் இல்லை மரணம் என்று
சொல்கிறதே மதங்கள் !
அவரை அரசியல்வாதியாக மட்டும் பார்த்து, அவர் இறக்கவேண்டும் என்னுபவர்களின் இறுகிய
மனங்கள் இறக்கட்டும் !
ஜோவின் கருத்தையே வழி மொழிகின்றேன்.
நன்றி.
//உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்
நீ இருக்கவேண்டும்
சிலரின் எரிச்சலுக்காகவேனும்//
குழலி அய்யா,
ஆமாம் அய்யா, கருணாநிதியை கண்டாலே எரிச்சல் அடைவார்கள் கலைத்தாய் போன்றவர்கள்.ஆகையால் அதற்காகவாது அவர் நூறு வருடங்கள் வாழ இறவனை வணங்குகிறேன்.
பாலா
கருணாநிதி என்னும் அரசியல்வாதியின் செயல்கள் அனைத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் கலைஞர் என்னும் மனிதன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என விரும்பும் தமிழன் நான்.
"என் பக்தி சுத்தமானதா இருந்தா கருணாநிதிக்கு ஏதாவது ஒடம்புக்கு வரணும்னு பிரார்த்தனை செஞ்சேன். அதேமாதிரி படுக்கப்போட்டுடுத்து" என வாக்கு அருளிய காமகேடியின் காலை கழுவி குடிப்போரிடம் என்ன எதிர்பார்க்க முடியும். உஞ்சவிருத்திகளின் உண்மை சொரூபம் இதன் மூலமாவது வெளிப்படுகின்றதே என்று சந்தோஷப்படுங்கள். அப்படி பேசிய காமகேடி இப்போது கொலை வழக்கில் இருந்து வெளியே வர கலைஞர் காலை நக்குகிறான். அதே போல் தனக்கு எதாவது தேவை எனில் கலைஞரே நீர் பல்லாண்டு காலம் வாழ்க என இதே பூணூல் மேனிகள் சொல்லும்.
சிலருடைய "பரம்பரை எதிரிகளின்" நலனுக்கு அவர் "அரண்" போல இருப்பதால்தான் அந்த சிலருக்கு "அரி"க்கிறது போல!
வாழட்டும் அவரும் பல்லாண்டுகள்!!!
வாழ்த்துக்களுடன்,
அருட்பெருங்கோ.
வஞ்சப்புகழ்ச்சியோ என்று என்று நினைத்தேன்.
இல்லை இது நஞ்சப்புகழ்ச்சி.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஏகாந்த புகழ்ச்சி.
அய்யா! அவர்களிடமும் அதிகாரமிருந்தது அடித்தே கொல்லவில்லையே!!
ஆயினும்,
அவர் போன்ற நல்தமிழ்க்கலைஞர் வாழ்வதில் எனக்கும் விருப்பம் தான்.
கலைஞர் என்ற அரசியல்வாதியோடு எமக்கு கோபங்கள் ஏமாற்றங்கள் உண்டு .ஆனால் அவர் யாருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்ரு தெரிய வரும் போது ,அவர் வாழ வேண்டும் என்று மனமார நினைக்கத் தோன்றுகிறது.//
ஜோ,
வழக்கம்போல்..
" டிட்டோ "
கலைஞர் - வாழும் சகாப்தம், அவரை பற்றி பேச யாருக்குத் தான் தகுதியுண்டு, எம்.ஜி.ஆர் என்ற மாஸ் அபீலை எதிர்த்து அரசியல் பண்ண யாராலும் முடியாது, வேறு ஒரு ஆளாக இருந்தால் திமுக வை கலைத்து விட்டு அப்பொழுதே அதிமுக வில் இணைந்திருப்பார்கள், சிறையில் அடைக்கப் பட்ட போது சிறையை பற்றி நினைக்காமல் கட்சியை பற்றி கவலைப் பட்டு கடிதம் எழுத யாரால் முடியும், இந்த வயதிலும் யாராவது இறந்து விட்டால் உடனே சென்று மரியாதை செலுத்தும் ஒரு குணம் போதுமே, சிலையை உடைத்த போது நெஞ்சில் தானே குத்தினாய் என்று கவிதை எ௯ழுதி (பதிலுக்கு குத்தியதாகவும் எடுத்துக் கொள்ளலாம் குத்திய இடத்தில் கவிதை மருந்திட்டு கொண்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்)பதிலடி கொடுக்க யாரால் முடியும், விமர்சனம் பார்க்காதது அல்ல, போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், வாழ்ந்து விடு பல நூற்றாண்டு என கடவுள் நம்பிக்கை இல்லாத நான் விரும்பும் தலைவருக்கு நான் நம்பும் கடவுளிடம் வேண்டுகிறேன், நாகூர் இஸ்மாயில்
வாழ்க என்று வஞ்சப்புகழ்ச்சி செய்தால் ஒழிக என்பதுதானே மறைமுக பொருள். அவர் இல்லையென்று சொல்கிறார்.
உங்கள் கவிதை உண்மையிலேயே வஞ்சமில்லாமல் வாழ்கவென வாழ்த்துவதால் நானும் இணைந்து வாழ்த்துகிறேன்.
விமர்சனங்கள் இருக்கட்டும்...போராடு போராடு வாழ்வில் இறுதி வரை போராடு. முன்னேறு முன்னேறு முடியும் வரை முன்னேறு என்ற வாழ்வினை வாழ நினைக்கும் இளைஞர்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு நல்ல பாடம்!
வாழட்டும் அவர் பல்லாண்டுகள்!!!
"வாழும் தமிழே" வாழ்க பல்லாண்டு
குழலி,
என்ன திடீர்னு ஒரே உணர்ச்சிமயமா இருக்குது இங்கே? ஒன்னும் புரியலையே!
கலைஞருக்கு பிறந்த நாளா? 1983 இல் சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது, கிண்டியில் நடந்த 60வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்குப் போயிருக்கிறேன். அது கோடையில் தானே நடந்தது?
பாலா மாதிரி அங்கத ராமுடுகளைப்பற்றிப் பின்னூட்டம் ஒன்று திராவிடத்தமிழர்கள் பதிவில் போட்டேன் - அதை தனிமனித அட்டாக் என்று நினைத்து பின்னூட்டத்துக்குத் தடைபோட்டுட்டாங்க போல. இங்கே நான் அதை எழுதினாலும் குழலியும் நாகரீகம் கருதி வெட்டிடுவாரு போல. இந்தமாதிரி வாழைப்பழத்தில் ஊசி ஏத்தற ஆளுகளைப்பற்றி எழுதற ஒழுக்கமான பின்னூட்டங்களை தணிக்கை செய்யும் உங்களை மாதிரி ஆசாமிகளும் போய் புனித பிம்ப இமேஜுக்குள் பொதக்குனு விழுந்து தொலையாதீங்க - பாக்கறத்துக்கு சகிக்காது. கருணாநிதி சாகணும்னு கூசாமல் எழுதித் தள்றதெல்லாம் எதுக்கு? கருணாநிதியை வலைப்பதிவில் ஆதரிப்பவர்கள் கூட ஆதரவை விமர்சனத்துடனேயே வைக்க, அதிமுகவுக்கு கண்மூடித்தனமா காவடி தூக்கும் ஜால்ராக்குஞ்சுகள் அனைவருக்கும் இமெல்டா மார்க்கோஸ் லேடி போல்பாட் ஜெயலலிதாவின் அக்கிரமங்கள், அதிகாரத் திமிர் இதெல்லாம் கண்ணிலேயே தெரியாமல் போய், சோ ராமசாமிதான் தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர், ஆத்தா மகமாயிதான் மேரிமாதா என்ற மாதிரி மொண்ணையாகத் துதிபாடல் பாடுவதென்ன? இவர்களது ஜெயலலிதா ஆதரவும்கூட வெளிப்படையாக இல்லாமல், கருணாநிதி தாக்குதல் என்ற ரீதியிலேயே வரும் - திராவிடக் கட்சிகளை எதிர்க்கிறேன் என்று இந்தக் குஞ்சுகள் செய்வதெல்லாம் கருணாநிதியை எதிர்ப்பது மட்டுமே - அம்மா குருவாயூருக்கு யானை கொடுத்ததாலும் எம்ஜியார் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குப் போனதாலும் கருணாநிதி மஞ்சள் துண்டு போடுவதாலும் திராவிடக் கட்சிகளின் ஆணிவேரே ஆடிவிட்டது, எல்லாம் கப்சா என்பவர்களுக்கு, இந்துமதத்தில் முனியப்பனும் சடையாண்டியும் அய்யனாரும் உள்ளே வந்ததால் அதன் ஆணிவேர் ஆடுகிறதா என்று கேட்டால் மட்டும் அடடே இந்துமத விரோதி சந்துல புகுந்து ஓடு நீ என்று துரத்தித் துரத்தி அடிப்பார்கள். கருணாநிதி செத்து, தமிழக அரசியல் முழுதும் செயலலிதா கண்ட்ரோலில் வந்துவிட்டால் அவங்களுக்கு அல்வா கிடைச்ச மாதிரியும் ஆச்சு. இங்கே வலைப்பதிவுல எழுதற உங்களை வன்னிய ராமதாஸ் ஆதரவு, மரவெட்டின்னு குத்து குத்துன்னு குத்தறானுகளே, எம்ஜியார் தெய்வத் தலைவர், அவர் ஏழையளுக்கு நல்லது பண்ணார், சினிமாவுல கீழ உளுந்த கெளவியத் தூக்கி விட்டாருன்னு படிச்சும் மொண்ணைப்பாண்டி மாதிரிப் பேசறவங்களை டிப்பிக்கல் மத்திய/தென் தமிழ்நாட்டுத் தேவமார் பேச்சுன்னு யாராவது ஜாதி சொல்லித் திட்டறானுகளா? சங்கராச்சாரியாரைக் கைது செஞ்சு போட்டப்ப உள்ள போட்டவங்களைத் திட்டுனவங்களை விமர்சிச்சா என்னா விரோதின்னு சொல்லி நிறுத்தி வச்சு சவுக்கால அடிப்பாங்கன்னு (இதையும் திரிப்பாங்க பாருங்க வழக்கம்போல - ராமதாசு அய்யா தானே சவுக்கால அடிக்கச்சொன்னாருன்னு ;-)) உங்களுக்குத் தெரியாதா? வாயைத் திறந்தால் ஆயிரம் புழு கொட்டுறமாதிரி வார்த்தைக்கு வார்த்தை விஷம், திசைதிருப்பல், பொய் - இந்த மாதிரி காமெடியனுகளின் பின்னூட்டத்தை அனுமதித்து உங்களின் நடுநிலைமையை நிலைநிறுத்திக்கோங்க நீங்க, இந்த மாதிரி காமெடி ராசுகளைப்பற்றிய விமர்சனத்தை நாங்க எழுதினால் மட்டும் வெட்டிருங்க!! நல்ல நியாயம்தான் போங்க குழலி.
கலைஞர் போட்டோ போட்டு அவரை வாழ்த்தி எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பை வைத்துப் புரட்சி செய்திருக்கின்றீர்கள்!
//கலைஞர் போட்டோ போட்டு அவரை வாழ்த்தி எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பை வைத்துப் புரட்சி செய்திருக்கின்றீர்கள்!//
அதுவே இந்தி ரீமேக் படம் தான் .ஆமா எம்.ஜி.ஆருக்கு 'புரட்சி நடிகர்'- ணு பேர் குடுத்ததே கலைஞர் தான் .தெரியுமா ஐயா?
//உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்
நீ இருக்கவேண்டும்
சிலரின் எரிச்சலுக்காகவேனும்//
குழலி, இந்த வரியை படித்த உடனேயே மிகுந்த உணர்ச்சி மேலிட்டுவிட்டது. தமிழகத்து பெரும் அரசியலின் சாரம்சத்தை ஒருவரியில் சொல்லியிருக்கிறீர்கள். எல்லா ஏமாற்றங்களையும் மீறி இன்னும் ஆதரிப்பது இதற்காகத்தான். தேர்தல் முடிந்த பின்பு எழுதிய என் பதிவில் இதை சொல்லியிருப்பேன். நன்றி!
நீங்கள் இந்த பதிவை எழுதியதற்கான (வலைப்பதிவில்) உந்துதல் என்ன வென்று நான் வாசிக்கவில்லை. அது இல்லாமலேயே சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் பலரை முன்வைத்து இந்த பதிவின் உணர்வை அடையமுடிகிறது.
//அது சரி எங்கே பிடிச்சே கலைஞர் கண்ணடிக்கும் படத்தை.//
அது Ptosis.
http://en.wikipedia.org/wiki/Ptosis_%28eyelid%29
கலைஞர் இன்னும் நூற்றாண்டுகள் வாழட்டும்!
"சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
போராடும் வரை நீ மனிதன்"
என்ற கலைஞரின் நண்பரின் கவிதைக்கு வாழும்
உதாரணம் கலைஞரே... அவர் வாழட்டும் இன்னும் நூறாண்டு..
குழலி,
கவிதையெல்லாம் எழுதுவீங்களா?நல்லா இருக்கு...கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் பல பிடிக்காவிட்டாலும், அவர் ஜெயாவுக்கு எவ்வளவோவோ பரவாயில்லை என்பதே என் கருத்து.
உழைப்பின் உதாரனமாய் வாழும் அவர் வாழட்டும் பல்லாண்டு.
அவர் இறக்கவேண்டும் என நினைப்பவர்கள் தங்களின் கேவலமான மனத்தினை வெளிக்காட்டிக்கொன்டார்கள்.. எந்த நிலையிலும் திமுக ஆதரவு நிலை பதிவர்கள் யாரும் ஜெயா இறக்க வேண்டும் என நினைத்துக்கூட பார்த்த மாதிரி தெரியவில்லை.
//இவர்களது ஜெயலலிதா ஆதரவும்கூட வெளிப்படையாக இல்லாமல், கருணாநிதி தாக்குதல் என்ற ரீதியிலேயே வரும் - திராவிடக் கட்சிகளை எதிர்க்கிறேன் என்று இந்தக் குஞ்சுகள் செய்வதெல்லாம் கருணாநிதியை எதிர்ப்பது மட்டுமே -//
இது உண்மையென்றே நான் வாசித்த வலைப்பதிவுகள் சொல்லுகின்ற்ன.. காரணம் என்ன குழலி?
டாக்டர் கலைஞரை இதுவரை புரளிகளால் 5 முறை சாகடித்திருக்கிறார்கள். சாபம் விட்டிருக்கிறார்கள். யாகம் வளர்த்திருக்கிறார்கள். சூனியம் வைத்திருக்கிறார்கள்.
காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் வாழ்க!!!
குழலி, இப்பதிவை முதலில் பார்த்தமாத்திரத்திலேயே பின்னூட்டமிட சோம்பியிருந்துவிட்டேன். குறைந்தபட்சம் ஒரு சிரிப்பானாவது இட்டிருக்கலாம். பரவாயில்லை, something is better than nothing. உங்களுடனும், இதில் பின்னூட்டமிட்ட அனைவருடனும் சேர்ந்து அவரை நானும், அவருடைய அரசியலில் முழு உடன்பாடில்லையெனினும், வேறு பல காரணங்களுக்காக, வாழ்த்துகிறேன்.
எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது அண்ணா சாலையில் இருந்த கலைஞரின் சிலை (தமிழர் தலைவர் வீரமணியால் நிறுவப்பட்டது) அதிமுக வெறியர்களால் உடைக்கப்பட்டது. அவர்கள் கடப்பாரையால் உடைத்தபோது எடுத்த புகைப்படம் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளியானது....
அந்தப் புகைப்படத்தை முரசொலியில் போட்டு போட்டோவுக்கு கலைஞர் கொடுத்த Caption (என் நினைவில் இருந்து எழுதுகிறேன். Exact ஆக இல்லையென்றால் மன்னித்து விடுங்கள்)
ஏவியவர்
எள்ளி நகையாட
அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை
நெஞ்சிலே தான் குத்தினான்
வாழ்க! வாழ்க!
கருணாநிதியின் பல அரசியல் சமரசங்களுடனும், தன்னலத்துடனும் உடன்பாடு இல்லாவிட்டாலும்
"உன் இருப்பே பலருக்கு எரிச்சலைத் தருமென்றால் இன்னும் நூறாண்டு என்ன பல நூறாண்டுகள்" வாழவேண்டும்.
//Parama Pitha said...
தமிழ் நாட்டில், உண்மையான நல்ல தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை - சாதுரிய வார்த்தைகளால், ஊடக கவர்ச்சியால், சமூக பிரிவினைவாத அரசியலால் தானே நிரப்பியாதாக எண்ணிக் கொள்ளும் நபரைப் பற்றியும், அதில் ஏமாந்து மயங்கும் தொண்டர்கள் பற்றியும் ஒரு எடுத்துக் காட்டாக இந்த பதிவு நிலைத்திருக்க வேண்டும்
//
பரமபிதா இந்த பதிவெழுதி மூன்றாண்டுகளுக்கு பின் இந்த பின்னூட்டம் இடுகிறேன்... நீங்கள் இந்த பதிவெழுதியபோது இட்ட இந்த பின்னூட்டத்தை அலட்சிய படுத்தினேன், ஆனால் இன்றைக்கு கருணாநிதி என்கிற தமிழின துரோகியின் துரோகம் புரிந்த பின் இந்த பின்னூட்டமும் புரிகிறது... கருணாநிதி ஒரு இனத்துரோகி என்பது எனக்கு புரிந்தது போல எல்லோருக்கும் புரியும் நாளே தமிழின விடுதலையின் முக்கிய நாள் ஆகும்
Post a Comment